சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் மரணத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழ்திரு. கே.கே.செல்வகுமார் அறிக்கை.
@KKSelvakumaroff#தமிழர்_தேசம்_கட்சி
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், வி.அம்மாப்பட்டி கிராமத்தில் சட்ட விரோத கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று நேரில் சென்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தினேன். பொது மக்களுக்கு இடையூறாகவும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விதமாகவும், இயங்கி வரக்கூடிய, சட்டவிரோத கல்குவாரிகளை நிரந்தரமாக மூடுவதற்கான முயற்சிகளை தமிழர் தேசம் கட்சி மேற்கொள்ளும் என உறுதியளித்தேன்!
@CMOTamilnadu
"சமூக விடுதலை அடையாமல், சட்டம் என்ன சுதந்திரம் வழங்கியிருந்தாலும் அது பயன் தராது"
என்று முழங்கி, சமூக விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்காகவும், அயராது போராடிய புரட்சியாளர், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தில் வணங்குகிறேன்!
புதுக்கோட்டை மாவட்டம்,கறம்பக்குடி வட்டம்,மலையூர் கிராமம்,பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான முத்தரையர் சமுதாய இளைஞர் முருகேசன் என்பவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்..
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியில் மள்ளர் பேராயம் முன்னெடுத்த "இலக்கு 2026" அதிகார அரசியல் கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினேன். உடன் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் அவர்களும் மற்றும் தமிழ் தேச இளைஞர் பாசறை மாநில செயலாளர் தீனா தேவேந்திரன் அவர்களும்.