தேசிய சராசரியை விஞ்சினோம்!
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்!
அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிடமே காரணம் என உரக்கக்கூறும் சுல்தான், பஹ்ரைனில் தமிழர்களுக்கு உதவுவது என மக்கள் நலப் பணியாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel
On #WorldPopulationDay, a reminder for the Union Government:
✅ Tamil Nadu leads in population control
✅ Empowers women with dignity
✅ Delivers healthcare and education for all
✅ Champions sustainable development
And yet, what do we get in return?
Fewer seats. Less funding. A voice that’s being pushed out of Parliament.
Why? Because Tamil Nadu did the right thing. And that threatens Delhi.
What’s worse — Thiru. Palaniswami and his party are standing with Delhi, not with Tamil Nadu. They’re backing Unfair Delimitation that punishes us for our progress.
But let me be clear: Tamil Nadu will not bow.
We rise together — this is Orani vs Delhi Ani.
Join #ஓரணியில்_தமிழ்நாடு
To protect our மண், மொழி, மானம்.
#FairDelimitation
இளம் தலைமுறை எவ்வித வேறுபாடும் இன்றி கல்விப் பயில வேண்டும் - ஒன்றிணைந்து வாழ வேண்டும் - சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற உயரிய நோக்கில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் மாணவ-மாணவியர் விடுதிகள் அனைத்தும் இனி '#சமூக_நீதி' விடுதிகள் என்று அழைக்கப்படும் என நமது முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அதன்படி, நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் உள்ள அரசு கல்லூரி மாணவியர் விடுதிக்கு 'சமூக நீதி விடுதி' என்று பெயர் மாற்றப்பட்டு - அதன் பெயர்ப் பலகையினை இன்று நாம் திறந்து வைத்து மகிழ்ந்தோம்.
மாணவச் செல்வங்கள் ஓரணியில் திரண்டு சமூக நீதிச் சுடரை தூக்கிப் பிடித்தால், நல்லிணக்கம் பெருகும் - சகோதரத்துவம் வளரும்!
இராசிபுரம் சமூக நீதி விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவிகளுக்கு அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்தோம்.
@SalemRRajendran@MMathiventhan@krnrajeshkumar@keprakashdmk
50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!
இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!
தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது #திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் @TThenarasu உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!
திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்!
கழக ஆக்கப்பணிகள், தேர்தல் செயல்திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க இன்று முதல் ஒவ்வொரு தொகுதியைச் சார்ந்த கழக உடன்பிறப்புகளுடன் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து உரையாட இருக்கிறார்!
#உடன்பிறப்பே_வா
The Indian Constitution mandates that #delimitation must follow the first Census after 2026. The BJP has now delayed the Census to 2027, making their plan clear to reduce Tamil Nadu’s Parliamentary representation.
I had warned about this. It is now unfolding. By siding with the BJP, Palaniswami is not just silent but complicit in this betrayal. It's now clear that he has surrendered to Delhi’s domination.
The people of Tamil Nadu are united as one in their demand for a Fair Delimitation. We need clear answers from the Union Government.
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!
#OraniyilTamilNadu #FairDelimitation #JusticeForTamilNadu
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் வருகின்ற 11ஆம் தேதி வருகை தர உள்ளார்.மற்றும் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அதனை தொடர்ந்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.இதற்காக மருத்துவக் கல்லூரி மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேற்கண்ட நிகச்சிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டேன். இந்நிகழ்வில் சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.பிரவீன் குமார் அபினபு, காவல்துறை ஆணையர் திரு.வேல்முருகன் மற்றும் கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
#Dmk #SalemCentralDmk
பெரியாரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு பிரேசில் வரை தடம் பதித்த முனைவர் ராஜப்பிரியா, கனவுகளைக் கொண்ட பெண்களுக்கு ஓர் முன்மாதிரி. சமத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட இவரது கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
Inspired by the writings of Periyar, Dr. Rajapriya charted her path to Brazil and now stands as a role model for aspiring women. Discover her journey, rooted in a deep belief in equality, in the latest episode of @PEN_Offl’s #DravidathaalNaan series. #DravidathaalNaan #DravidianModel
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி
சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்ட கழகங்களின் செயற்குழு கூட்டம் சேலம், 5 ரோட்டில் உள்ள கே.எம்.பி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் திரு.எ.வ.வேலு அவர்களின் தலைமை வகித்தார்.சேலம் நாடாளுமன்ற உறுப்பினர், சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.டி.எம்.செல்வகணபதி, மற்றும் சேலம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு.எஸ்.ஆர். சிவலிங்கம், ExMLA ஆகியோருடன் முன்னிலை வகித்தேன்.செயற்குழு கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, நகர, ஒன்றிய, பகுதி. பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற. சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட பிரதிநிதிகள், கழகத்தின் துணை அமைப்புகளான அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கீழ் கண்ட
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம்:1
.மக்களின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நம் சேலம் மாவட்டத்திற்கு 11.06.2025 புதன்கிழமை வருகை தர உள்ளார்கள். அவர் வருகை நம் மண்ணுக்கு பெருமை, அவரை சேலம் விமான நிலையம் முதல் மேட்டூர் வரை சேலம் மத்திய மாவட்டக் கழகமும், சேலம் மேற்கு மாவட்டக் கழகமும் இணைந்து "படை பெருத்ததால் பார் சிறுத்ததோ" என்று மாற்றாரும் வியக்கும் வண்ணம் பிரம்மாண்டமாக அலைகடலென ஆர்ப்பரித்து கழகத் தோழர்களும், பொதுமக்களும் சிறப்பான வரவேற்பளிப்பது என்றும், அதுபோல் சேலம் கிழக்கு மாவட்ட கழக தோழர்களும், சேலம் சேகோசர்வ் தொடங்கி சேலம் அரசு மருத்துவ கல்லூரி வரை பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க வேண்டுமென்றும்,
அனைத்து நிகழ்ச்சிகளிலும் சேலம் மத்திய கிழக்கு, மேற்கு மாவட்டக் கழக. ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள். உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் என அனைத்து அணிகளிலும் உள்ள தோழர்கள் ஒருங்கிணைந்து சிறப்பிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்:2
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர்அவர்களின் ஜூன் 3-ம் நாள் 102 வது பிறந்த நாள் விழாவினை சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மிக எழுச்சியுடன் தலைவர் அவர்களின் பிறந்த விழா கொண்டாடப்பட வேண்டுமெனவும், அதனையொட்டி சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர். வார்டு, கிளை கழகங்கள் சார்பாகவும், ஊராட்சிகள் சார்பாகவும், என்றென்றும் நம்முடன் வாழுகின்ற தலைவர்கலைஞர் அவர்களின் பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டுமெனவும் தோரணங்கள் அமைத்து, ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், மரக்கன்றுகள் நடுதல் என அனைத்து நிகழ்ச்சிகளையும் எழுச்சியோடு ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு ஒன்றிய, நகர, பேரூர் பகுதி வட்டக் கழக நிர்வாகிகள், ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் என அனைத்து அணிகளிலும் உள்ள தோழர்கள் ஒருங்கிணைந்து
இந்த நிகழ்ச்சிகளை எழுச்சியோடு, உணர்வுபூர்வமாக சிறப்பாக கொண்டாட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
#செயற்குழுகூட்டம் #Dmk
@evvelu
#DravidathaalNaan#DravidianModel பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகள், முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் எழுத்துக்களால் உத்வேகம் பெற்ற முனைவர் பிரசண்ணன், திராவிட அரசின் திட்டங்களால் முன்னேறியவர். தைவானில் தமிழ் மொழிக்கான பணிகளில் ஈடுபட்டு வரும் இவரது கதையை #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
Taiwan-based Dr. Prasannan, inspired by Peraringar Anna’s philosophy and the writings of Muthamizhil Aringar Kalaignar, is a beneficiary of Dravidian welfare schemes. Discover how he promotes the Tamil language abroad in the ‘Dravidathaal Naan’ series.
திராவிட அரசு வழங்கிய நலத்திட்டங்களால் குவைத் வரை உயர்ந்த பீர் மரைக்காயர், தமிழ் தொழிலாளர்கள், பெண்களுக்கான தூதரக உதவிகள், சொந்த கிராமத்தில் மக்கள் நல சேவைகள் என சுழன்று வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
#DravidathaalNaan#DravidianModel
திறனற்ற ஆட்சியாளர்களால் பத்தாண்டுகளாகப் பாழாய்ப் போன தமிழ்நாட்டின் நிர்வாகம் - பதவி சுகத்துக்காக நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டு, குனிந்து - ஊர்ந்து - தவழ்ந்து தன்மானமிழந்து தவித்த அவலம் - கொரோனா பேரிடர் என இக்கட்டான சூழலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியே தமிழ்நாட்டுக்கு விடியல் தரக்கூடிய ஆட்சியென நம்பிக்கை வைத்து நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையாகவும் - நேர்மையாகவும் கடமையாற்றி வருகிறோம்!
என்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களையும் முன்னிலைப்படுத்தி, "#DravidianModel ஆட்சி என்பது, ஓர் இனத்தின் ஆட்சி! ஒரு கருத்தியலின் ஆட்சி!" என நிறுவியிருக்கிறோம்.
கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் மக்கள் நலத்திட்டங்கள் தொடங்கி, மாநில உரிமைகளைக் காத்து, மற்ற மாநிலங்களுக்கும் - ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டும் ஆட்சியாக இருக்கிறது #DravidianModel ஆட்சி!
ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்; தொலைநோக்குப் பார்வையோடு இன்னும் செய்ய வேண்டிய கடமைகளையும் - திட்டங்களையும் மனதில் கொண்டு, “நாடு போற்றும் நான்காண்டு! தொடரட்டும் இது பல்லாண்டு!” என இலட்சியப் பயணத்தைத் தொடர்கிறோம்!
உங்கள் பேரன்பும் பேராதரவும் என்றென்றும் வேண்டும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு!
நாடு போற்றும் நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது! 🌄
திராவிட மாடல் 2.0 Loading! 🔥
#StalinBuildsTN
சமத்துவம், சமூகநீதி, சமதர்மம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி - ஒன்றியத்தில் கூட்டாட்சி ஆகிய அரசியல் பண்பாடுகளைக் கொண்ட மண், நம்முடைய தமிழ்நாடு. இந்த இலட்சியங்களை அடையும் பயணத்தில் நாங்கள் இருக்கிறோம். இந்தப் பயணத்தில் ஊடகங்களில் பங்கு மிகவும் முக்கியமானது.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#StalinBuildsTN
#DMK4TN
திராவிட மாடல் அரசு செயல்படுத்திய இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு அரசிடம் இருந்து தரவுகளைப் பெற்று நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு!
#DMK4TN
கழக செய்திகள், வீடியோ ஸ்டேட்டஸ்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள்!
இணையத்தின் வாயிலாக இணைந்து கழக பணியாற்றிடுவோம்! 🖤❤️
Follow @DMKITWing WA Channel: https://t.co/F41SoRxC9q
#Wing2Point0
1,244 இடங்களில் 'நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு' #DravidianModel சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள்!
இளைஞரணியால் பட்டை தீட்டப்பட்ட 186 இளம் பேச்சாளர்கள் உள்ளிட்ட 443 கழகப் பேச்சாளர்கள்.
தேர்தல் அறிக்கையில் சொன்னவை, சொல்லாதவை எனச் சொல்லித் தீராத அளவுக்குச் சாதனைகள் படைத்திருப்பதால்தான் நம்மால் இத்தனை கூட்டங்கள் நடத்த இயலுகிறது.
அனைவரையும் சுண்டி ஈர்க்கும்படி சுருங்கச் சொல்வோம்! ஏழாவது முறையும் வெல்வோம்!
#LetterToBrethren
எதேச்சதிகார ஒன்றியரசு முதல், எரிச்சல் ஏற்படுத்தும் கவர்னர்கள் வரை அனைவரும் மாநிலத்துக்கு எதிரிகளாக இருக்கிறார்கள். எனவே மாநில அமைப்பைக் காப்பதே மாநில மக்களைக் காப்பதாகும் என்பதால்தான் 'மாநில சுயாட்சி' முழக்கத்தை தி.மு.க. ஓங்கி ஒலிக்கிறது!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#ProtectStateRights