அறவழிப்போராட்டத்தின் வலிமையை, ஒருங்கிணைந்த மக்கள் சக்தியின் மகத்துவத்தை டெல்லியில் விதைத்து; பல இன்னுயிர்களை உரமாக ஈந்து; ஓராண்டு காத்திருந்து, வெற்றியெனும் விளைச்சலோடு
வீடு திரும்பும் விவசாயிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தின் வாழ்த்துகள்.
#அறவழியின்_வலிமை
தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் ராகிங் (Ragging) கொடுமையானது ஒரு மாணவரைத் தற்கொலைக்குத் தூண்டியுள்ளது. தற்போது 4 மாணவர்கள் மீது வழக்கு பதிவாகியிருந்தாலும், ராகிங் எனும் வக்கிரம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படுவதோடு மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் தரப்படுவதையும் உறுதிசெய்யவேண்டும்.
புதிய சாலை உயரத்தை பழைய சாலையை விட அதிகரிக்க கூடாது என்ற தமிழ்நாடு அரசின் உத்தரவை எந்த ஒப்பந்ததாரரும் சிறிதும் மதிக்கவில்லை. @CMOTamilnadu
மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளுக்கு இது குறித்து எந்த அக்கறையும் இல்லை.
பதில் சொல்வாரா MLA @GanapathyK ?
`பேருந்துகளின் படிக்கட்டில் மாணவர்களோ, பயணிகளோ தொங்கிக்கொண்டு பயணம் செய்தால், அந்தப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என போக்குவரத்துத் துறை அறிவித்திருப்பதை மக்கள் நீதி மய்யத்தின் நம்மவர் தொழிற்சங்கப் பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
#MNM#kamalHaasan announced salary for homemakers.
Now following DMK and AIADMK,TMC promises ₹5000/PM to women of 3.5 lakh families in GOA if voted to power.
AAP recently promised Rs1000 to every woman above 18 yrs.
@ikamalhaasan is the living social reformer.
@maiamofficial
முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடிக்கடி ரெய்டு நடக்கிறது. ரெய்டு, நீதியை நிலைநாட்டவா அல்லது அவர்களை பீதியில் வைத்திருக்கவா என்பதை தொடர்நடவடிக்கை மூலம்தான் அறியமுடியும். ஊழலால் சொத்துகுவித்தோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்த அரசு தன்னை நிரூபிக்கவேண்டுமென மநீம வலியுறுத்துகிறது
காலத்தின் இயக்கத்தை வென்று, நிலைநிறுத்திவிடுகிற வல்லமையைத் தன் கவிதைகளாலும் அரசியற்கருத்துகளாலும் அடைந்தவன் என் பிரிய மாகவி பாரதி. பிறந்தநாள் வணக்கங்கள்.