செங்கோட்டையனை வெகுளியாக ஏற்றுக் கொண்டது தவெக கட்சி.
ஆனால் செங்கோட்டையன் இந்த கட்சிக்கு இது வரை பெற்று கொடுத்தது கெட்ட பெயர் மட்டுமே!
அதிமுக எனும் பாஜகவின் அங்கத்தின் ஒவ்வொரு அணுவும் தமிழகத்துக்கு எதிரானது, தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானது. பெண்களுக்கு எதிரானது. தவெக மற்றும் தமிழக அரசுக்கு எதிரானது.
வன்மையான கண்டனங்கள்!
உடனடியாக இந்த அறிவு கெட்ட தனத்தை நிறுத்த வேண்டும்!
மாநகராட்சிகளில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும்!
'தங்க மோதிரம் திட்டத்தை' மறுபரிசீலனை செய்ய வேண்டும்!
சட்டப் பேரவைக்கான மரபையும் முதலமைச்சருக்கான மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்!
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
--------------------------------
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்குத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் நிலைப்பாடு அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் ஓரிரு மண்டலங்களில் மட்டும் அத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது அதனை எதிர்த்து விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடின. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது. தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவது ஏற்புடையதல்ல. தமது உயிரைப் பணயம் வைத்து இந்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன்களுக்கு எதிரான இந்நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்து, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கும் திட்டம் தொடங்கவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தவெக'வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான இந்தத் திட்டத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் 755 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 56 சதவீத குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில் நடக்கின்றன. எஞ்சிய 44 சதவீதம் தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சாதாரண பிரசவத்துக்குக்கூட ரூ.50 ஆயிரம் முதல்
ரூ. ஒரு இலட்சம் வரையில் வசூலிக்கின்றனர். சிசேரியன் என்னும் அறுவை மூலம் நடக்கும் பிறப்பு எனில் இரண்டரை லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூல் செய்கின்றனர். கட்டணம் அதிகம் என்றாலும், ஏழை எளிய குடும்பத்தினர் கூட தாய்-சேய் பாதுகாப்புக் கருதி தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.
இந்நிலையில், தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் இந்த 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை' உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
மேலும், இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தமிழ்நாடு அரசு இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்குப் பதிலளித்துப் பேசிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மேனாள் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறுவனர் - தலைவர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT) இணைந்து 'தொல்குடி தொடுவானம்' திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 16 பழங்குடியின இளைஞர்களுக்கு "கனரக மோட்டார் வாகன" (Heavy Motor Vehicle. HMV) ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை (PSV Badge) வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சியின் வெற்றியாக கலந்துகொண்ட 16 பயிற்சியாளர்களும் பயிற்சி முடித்தவுடனேயே 100 விழுக்காடு (100%) நேரடி வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) மின்சாரப் பேருந்து (e-bus) பிரிவிலும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டப் போக்குவரத்துப் பணிமனைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்களாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கான சான்றிதழை, நேற்று (17.06.2026) சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கி வாழ்த்தினோம். இந்நிகழ்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு செயலாளர் திரு. கே. சுப்பையன், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச. அண்ணாதுரை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ஆனதும் பல சொகுசு வாழ்க்கை கிடைக்கும் என்பார்கள் ஆனால் விடுதலைச்சிறுத்தைகளுக்கு மட்டும் அதில் இருந்து விலக்கு.!
மாண்புமிகு அமைச்சர் வன்னி அரசு
நேரம் இரவு 10 மணி
🥹💙❤️
அதிகாரம் என்ன செய்யும்? 👇👇👇
’நவீன தீண்டாமைக்கு முற்றுப்புள்ளி’ பட்டியலின மக்களின் கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசுப் பேருந்து!
#Coimbatore | #Vanniarasu |
அதிகாரம் என்பது சிலரின் கைகளில் மட்டும் முடங்கிக் கிடக்கக் கூடாது; அது அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும்...
கடைசி மனிதனுக்கும் சனநாயகம் - எளிய மக்களுக்கும் அதிகாரம் 💯
தலைவர் @thirumaofficial
"ஆணவப் படுகொலை - தனி சட்டம்"
"ஆணவப் படுகொலை - தனி சட்டம் கொண்டு வர நடவடிக்கை, தனி சட்டத்தை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கொண்டு வர நடவடிக்கை.
சாதி ரீதியான பிரச்சினைகளுக்கு தனியாக காவல்துறை பிரிவு அமைக்க நடவடிக்கை"
நெல்லையில் சமூக நீதித்துறை அமைச்சர் @VanniTamizhVCK அவர்கள் பேட்டி
#Vanniarasu #politics
தோழர் வன்னியரசு அவர்களின் அமைச்சர் செயல்பாடு அற்புதம் என்பேன். யார் வேண்டும் என்றாலும் தன்னை சந்திக்கலாம் என்று எளிய அணுகுமுறையை உருவாக்கி உள்ளார். எளிய மனிதர்கள் பார்க்க வரும்போதெல்லாம் எழுந்து நிற்கிறார். பணிகளில் துரிதம். களத்திற்கு செல்கிறார்.
வன்கொடுமை சம்பவம் கேள்விபட்டு உடனே புறப்பட்டு செல்கிறார். மக்களுக்கு செய்ய வேண்டும் தோழர் என்று படபடக்கிறார்.
கடும் உழைப்பு. அண்ணல் அம்பேத்கர் வழியில் செயல்படுகிறார்.
தலித் அரசியலின் அடையாளம் . எழுச்சி தமிழர் தமிழ்நாட்டுக்கு கொடுத்த பரிசு. நம்ம வன்னியரசு.
வாழ்த்துக்கள்.
பதிவு : தோழர் எவிடன்ஸ் கதிர் 🤝💫✨
மாண்புமிகு 'சமூகநீதி துறை அமைச்சர்' அண்ணன் @VanniTamizhVCK அவர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கும் என்னுடைய கோரிக்கை..
நமக்கு கிடைத்த இந்த 5 ஆண்டு காலத்தில் முடிந்த அளவு இந்த சமூகத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் இருளர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கல்வி, பொருளாதாரத்தில் மற்றவர்களுக்கு இணையாக அவர்களும் உயர்வதற்க்கு தமிழ்நாடு எங்கும் வாழும் அவர்களை Survey செய்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன அவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@CMOTamilnadu@thirumaofficial
இன்று தலைமைச் செயலகத்தில், பழங்குடி நரிக்குறவ பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவி சீத்தா மகேந்திரன், ஜெய் சங்கர் , அனுராதா, சமூக செயற்பாட்டாளர் யா.அருள், ஆலோசகர் கீதா அம்மா உள்ளிட்டோர் என்னை சந்தித்து நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
மேலும், சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன், ஆலோசகர் கீதா, சித்தம்மா, யா.அருள் உள்ளிட்டோர் என்னை சந்தித்து, பல்வேறு மாவட்டங்களில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் நிலம், அடிப்படை வசதிகள், சாதி சான்றிதழ் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தோழர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார் மாண்புமிகு அமைச்சர் @VanniTamizhVCK அவர்கள் 🙏
இன்று தலைமைச் செயலகத்தில், பழங்குடி நரிக்குறவ பெண்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவி சீத்தா மகேந்திரன், ஜெய் சங்கர் , அனுராதா, சமூக செயற்பாட்டாளர் யா.அருள், ஆலோசகர் கீதா அம்மா உள்ளிட்டோர் என்னை சந்தித்து நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.
மேலும், சர்ப்பம் இருளர் தொழிலாளர் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மாநில தலைவர் சீனிவாசன், ஆலோசகர் கீதா, சித்தம்மா, யா.அருள் உள்ளிட்டோர் என்னை சந்தித்து, பல்வேறு மாவட்டங்களில் வாழும் இருளர் பழங்குடியின மக்களின் நிலம், அடிப்படை வசதிகள், சாதி சான்றிதழ் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.
தோழர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் உறுதி அளித்தேன்.
நம் கட்சியை குறி வைத்து சில அறமற்ற ஊடகங்களும் , பிழைப்புக்காக டிஜிட்டல்,உலகில் கவனம் பெறத் தவிக்கும் சில மூன்றாந்தர சின்ன சின்ன ஊடகவாதிகளும் தொடர்ந்து விவாதங்களை கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அண்மைகால அரசியல் முடிவுகளையடுத்து வேறெப்போதையும் விட நம் தலைவர் கட்சித்தோழர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறார் என்பதை நாடே பார்த்துக்கொண்டிருக்கும் போது விடுதலைச்சிறுத்தைகள் கட்சியில் குழப்பம் நிலவுவதைப்போலவும் , இரண்டாங்கட்ட தலைவர்கள் நம் தலைவருக்கு நெருக்கடி தருவதாகவும், மொத்தத்தில் தலைவர் கட்டுப்பாட்டில் கட்சி இல்லாததைப்போன்ற ஒரு தவறான மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
இது ஒரு இயல்பான, ஏதேச்சையான உரையாடலா அல்லது திட்டமிடப்பட்ட அரசியல் சதியா என்ற கேள்வி எழுகிறது.
இரண்டாம் நிலை பொறுப்பாளர்கள் மீது அவதூறுகளும் அபாண்டமான பொய்செய்திகளும் அதி பயங்கரமாக பரப்பப்படுகின்றன. இது கட்சி மீதான பொறுப்புணர்ச்சியா அல்லது நம்மை பலவீனப்படுத்த முனைவோரின் காழ்ப்புணர்ச்சியா என்பதை நாம் தெளிவாக புரிந்து கொண்டு களமாட வேண்டிய தருணம் இது.
தோழர் பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச் போட்டவர்கள் அதைத்தொடர்ந்து தோழர் @aloor_ShaNavas எதிராக குரைக்க தொடங்கி இருக்கிறார்கள்.
கடந்த பத்தாண்டுகளில் நாடாளுமன்றத்தில் நம் தலைவர் கர்ஜித்ததையோ சட்டமன்றத்தில் நாம் சாதித்ததையோ அல்லது தமிழ்நாட்டில் நடந்த எந்த ஆணவப்படுகொலைகளையோ கடைசி பக்கத்தில் கூட பதிவுசெய்யாத @JuniorVikatan இதழ் கரிசனையோடு முதல் பக்கத்திலேயே அல்லது நடுப்பக்கத்திலேயே தலைவர் தடுமாறுகிறார் என்பதைப்போல விஷத்தை கக்கிக்கொண்டிருக்கிறது.
உடனே சொல்லி வைத்தார்போல முகமூடியணிந்த சாதிய சனாதன சக்திகள் பக்கவாத்தியம் இசைத்து ஆர்பரித்து அணி திரள்கிறார்கள். இவர்கள் ஏதோ ஒருப்புள்ளியில் கை கோர்க்க தொடங்கியுள்ளனர் என்பதை நம்மால் தெளிவாக அவதானிக்க முடிகிறது.
1. இவர்கள் எதை நிகழ்த்த விரும்பினாலும் முதலில் அதற்கு சாதகமான ஒரு narrative வை மாய டிஜிட்டல் உலகில் கட்டமைக்கிறார்கள்.
2. பிறகு சமூக ஊடகங்களில் fake ID கள் மூலமாக அந்த உரையாடலை boost செய்கிறார்கள்.
3. இவர்கள் டார்கெட் செய்ய விரும்பும் கட்சியில் உள்ள சில அதிருப்தியாளர்களின் சமூக வலைதள பக்கங்களை ஹேக் செய்து அவர்களை மூளை சலவை செய்கிறார்கள்.
4. அவர்கள் மூலமே அக்கருத்தை பரப்பி அதை அக்கட்சியின் பெரும்பான்மை கருத்து என்பது போன்ற பொய்த்தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.
5. கூடவே கவனம் பெறத் தவிக்கும் சில மூன்றாந்தர அரைவேக்காட்டு ஊடகவாதிகளை விட்டு அதை கொஞ்சம் கூட அரசியல் நாகரிகம் இல்லாத அருவருப்பான மொழியில் youtube debate ஆக்குகிறார்கள்.
6. யாரை இவர்கள் குறி வைத்தார்களோ அவர் அமைதியாகவே இருந்தாலும் கூட அவரை கழுவி கழுவி ஊத்துகிறார்கள்.
7. எப்படியோ ஒரு மாய நெருக்கடியின் மூலம் தாங்கள் நினைத்ததை சாதித்து விட்டு அப்பழியை திமுக மீது வசதியாக போட்டு தங்கள் அரசியல் அஜெண்டாவை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். ( தேர்தலில் தோற்றுள்ள ஒரு கட்சியை தொடர்ந்து குதறுவது நம் எதிரி சாதிய சனாதன சக்திகள்தான் என்பதை மடை மாற்றம் செய்யும் ஒரு உத்தியே அன்றி வேறென்னவாக இருக்க முடியும் )
நவீன மாஃபியா கும்பலின் இந்த செயல் திட்ட சூத்திரங்களையும், அவை அரங்கேற்றப்பட்ட விதத்தையும் அண்மைகால நிகழ்வுகளோடு நடு நிலையாகயும் , பொறுப்புணர்வோடும் நாம் விருப்பு வெறுப்பின்றி பொருத்திப்பார்த்தால் இதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
வெளிப்படையாய் தெரியும் எதிரிகளை எதிர்த்து களமாட கற்றுத்தேர்ந்த சிறுத்தைகள் உதிரிகளைப்போலத்தோன்றும் நம் கொள்கைப் பகைவர்களை அடையாளம் காண்பது மிக அவசியமானது.
சாதி வெறியும் சனாதன சூழ்ச்சியும் புதிய வடிவம் எடுத்துள்ளன. நவீன social media யுகத்திற்கு ஏற்ப அவை தங்களை தகவமைத்துக்கொண்டுள்ளன.
அன்று குடிசையை எரித்தவர்கள் , இன்று நமது நம்பத்தன்மையை, நாற்பதாண்டுகால அரசியல் நன்மதிப்பை பொசுக்க கூடி விட்டார்கள்.
அன்று அவர்கள் கையில் தீ பந்தம். இன்று சோஷியல் மீடியாவும், fake Id களும், பின்புலத்தில் கார்ப்பரேட் மாஃபியாகளும்.
காலில் செருப்பு போட்டதும் ஜீன்ஸ் அணிந்ததும் அன்று அவர்கள் கண்ணை உறுத்தியது.
இன்று நம் தலைவரின் கருத்தியல் ஆளுமையும், அவர் இந்திய அரசியலில் கவனம் பெறுவதும் அவர்களின் நெஞ்சாங்குலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தோழர்களே, நம் கட்சியில் குழப்பம் நிலவுவதைப்போன்ற தோற்றத்தை உருவாக்க ஊளையிடும் இந்த youtuberகளை கவனமாக கண்காணியுங்கள்.
எல்லாமே வலதுசாரி கும்பல்கள். கடந்த எந்த காலத்திலும் எந்த ஆணவப்படுகொலையின் போதும் சிறு குரல் எழுப்பாதவர்கள்.
(1/2)