நாம் தமிழர் கட்சியில் பயணிப்பதும், அதை ஆதரிப்பதும் வெற்று அரசியல் இல்லை...
மனச்சான்றுள்ள ஒவ்வொரு மனிதனின் கடமை, அத்தியாவசிய தேவை என மக்கள் உணரும் காலம் தொடங்கிற்று!
#நாம்தமிழர்#NTKForTN
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் விளைநிலங்களை அழித்து முறைகேடாக அமைக்கப்படும் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu@TVKVijayHQ
மக்களுக்கான அரசா?
மணல் மாஃபியாக்களுக்கான அரசா?
மாவட்ட ஆட்சியருக்கு மனு சென்ற மறுநொடியே, மணல் கொள்ளை கும்பலிடம் சென்றது எப்படி?
கனிமவளக் கொள்ளையைத் தடுக்க கோரிக்கை வைத்தால், கொலை மிரட்டலா?
மணல் திருட்டைத் தடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பா��ர் அரியலூர் புகழேந்தி அவர்களுக்கு, மணல் திருட்டு கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவை என 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்படவில்லை – மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
முதல்வரே, இப்போதாவது வாய் திறந்து பேசுங்கள்.
@CMOTamilnadu
மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்!
மாற்றுவோம்! மாற்றுவோம்!
புரட்சிகர அரசியலை நோக்கி புதிய உறவுகள் இணைய விழாவிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
📅 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
🕙 காலை 10.00 மணி
📍 சென்னை (இடம் விரைவில் அறிவிக்கப்படும்)
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில், புதிய உறவுகள் இணையும் விழாவில் கலந்து கொண்டு மாற்றத்திற்கான அரசியல் பயணத்தில் இணையுங்கள்.
#நாம்_தமிழர்_கட்சி #செந்தமிழன்_சீமான் #மாற்றுவோம் #புதியஉறவுகள் #தமிழ்த்தேசிய��் #NTK
அடேய் அயோக்கிய திராவிட திருடர்களே... இதுபோல் நாளை எங்கள் வலையொளியில் உங்கள் ஈவெரா பற்றி பேசி, பதிவு செய்து, வெளியிட்டால் ரசிப்பீர்களா?
வஉசியை அவமதிப்ப��ாக நினைத்துக் கொண்டு செய்த இந்த செயலுக்கு @SunTV மன்னிப்பு கேட்க வேண்டும்!
பரந்தூரிலிருந்து புதிய வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற, தவெக அரசு இதுவரை ஒன்றிய அரசிடம் கோராதது ஏன��?
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி
@CMOTamilnadu @TVKVijayHQ
பரந்தூரிலிருந்து புதிய வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற, தவெக அரசு இதுவரை ஒன்றிய அரசிடம் கோராதது ஏன்?
@CMOTamilnadu@TVKVijayHQ
பரந்���ூரில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க முன்மொழியப்பட்ட இடத்தை மாற்றுமாறு தமிழ்நாடு அரசு, இதுவரை ஒன்றிய அரசிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி, அதிகாரத்தை அடைந்த தவெக அரசு, பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த ��டத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு கூட்டத்தொடரில் பரந்தூர் வானூர்தி நிலையம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய வானூர்தி போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் பரந்தூரிலிருந்து வானூர்தி நிலைய திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்���ை என்று தெரிவித்துள்ளது, பரந்தூர் புதிய வானூர்தி நிலைய விவகாரத்தில் தவெக அரசு இரட்டை வேடம் போடுகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
பரந்தூரில் வானூர்தி நிலையம் அமைப்பதை தவெக தற்போது ஆதரிக்கிறதா? அல்லது எதிர்க்கிறதா? எதிர்க்கிறது என்றால் இடத்தை மாற்ற வேண்டுமென்று தவெக அரசு இதுவரை ஒன்றிய பாஜக அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? முந்தைய திமுக ஆட்சியின்போது விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்கு எதிராக பரந்தூருக்கே தான் நேரில் சென்றதாவது முதல்வர் விஜய் அவர்களுக்கு நினைவிருக்கிறதா அல்லது அதுவும் மறந்து போனதா? என்ற கேள்விகளுக்கு தவெக அரசின் பதிலென்ன?
ஆகவே, பரந்தூர் புதிய வானூர்தி நிலையம் அமைப்பது குறித்த தவெக அரசின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக உரிய விளக்கமளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சிக்கு மட்டும் தான் தாவேக கட்சி ஆரம்பிச்ச காலத்துல இருந்து இப்போ வரைக்கும் அவங்களுக்கு சரியான தக்க பதிலடி கொடுத்துட்டு இருக்காங்க
ந���ம் தமிழர் ஓட கேள்விகளுக்கு பதில் சொல்ல தெரியாம சீமான் யார் அப்படின்னு கேட்கிற மனநிலைக்கு தாவேகா அமைச்சர்கள் போய்ட்டாங்க
இது வந்து சீமானின் தம்பிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி தான்
சீமான் தம்பிகள் இருக்கும் வரைக்கும் தாவேக் கட்சி சீமானின் தம்பிகளை பார்த்து பயந்து கொண்டு தான் இருக்கும்
இனி வரும் காலங்களில் தம்பிகளின் ஆட்டம் உக்கிரமா இருக்கும்