Happy to inform you all that our website, https://t.co/65NCGwkOH9, has been upgraded, with new features.
Do explore the new features, stay connected, and make the most of it.
ம��றுவோம், மாற்றுவோம்!
Delighted to have participated in the @IndiaToday Roundtable in Chennai today and had the opportunity to discuss the progress our We the Leaders Foundation has made over the last 2 months and the state of politics in both the centre & the state.
@Akshita_N@WTLFoundation
இன்று மாலை, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நமது @WTLFoundation சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியில், பெரும் திரளெனக் கூடி, தங்கள் அன்பையும், ஆதரவையும், சமூக நோக்கத்தையும் வெளிப்படுத்திய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், எனது மனமார்ந்த நன���றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தை அநாகரிகமாக்கும் பேச்சுகள் தொடர்ந்து அரங்கேறுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. திமுகவின் திரு. உதயநிதி ஸ்டாலினைத் தொடர்ந்து, தற்போது தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களும், அரசியல் நாகரிகத்தின் எல்லைகளை மீறி, தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களின் தாய் குறித்துக் கருத்து கூறியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
அரசியலில் இருப்பவர்கள் தங்கள் வார்த்தைகளுக்கும், செயல்களுக்கும் பொறுப்புடன் இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆட்சியின் செயல்பாடுகளைக் கேள்வி கேட்கலாம். ஆனால், ஒர���வரின் குடும்பத்தினரை, குறிப்பாக அவர்களின் தாயாரை இழிவ���படுத்தும் வகையில் பேசுவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த வகையிலான தரக்குறைவான கருத்துக்கள், முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே காலாவதியாகிப் போன அரசியல். இன்றைய தமிழக இளைஞர்களுக்கும், வளரும் நமது குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டியது இத்தகைய மூன்றாந்தர அரசியல் அல்ல.
தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் 20% முன்னுரிமை வழங்கும் வகையில், கடந்த 2010 ஆம் ஆண்டு "தமிழ்நாடு தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமைச் சட்டம்" (PSTM Act) கொண்டு வரப்பட்டது. இதன் மூலம், தமிழ் வழியில் பயின்ற இளைஞர்களுக்கு, அரசுப் பணிகளில், 20% முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது.
அரசு ஊழியர்களும், இந்தச் சட்டத்தின்படி,TNPSC மூலம் Group-I போன்ற உயர்பதவிகளுக்கு, இந்த முன்னுரிமையைப் பயன்படுத்த முடிகிறது. ஆனால்,TNUSRB மூலம் நடைபெறும் உதவி ஆய்வாளர் பணியிட நியமனங்களுக்கு, காவல்துறையில் ஏற்கனவே 5 ஆண்டுகள் கான்ஸ்டபிளாகப் பணிபுரிந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் 20% துறை ஒதுக்கீட்டில், இந்த முன்னுரிமை வழங்கப்படுவதில்லை.
உதவி ஆய்வாளர் (SI) பதவிக்கான ஆட்சேர்ப்பு என்பது நேரடி நியமனமாகவே நடைபெறுகிறது. ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த காவலர்களுக்கு துறை ஒதுக்கீட்டின் ��ீழ் 20% முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், அந்தத் துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும் தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்களுக்கு, PSTM சட்டத்தின்படிவழங்கப்பட வேண்டிய தமிழ் வழி முன்னுரிமை வழங்கப்படாதது ஒரு முரண்பாடாக உள்ளது.
கடந்த ஆண்டு, TNUSRB-ன் அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் நடைபெற்ற 1352 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்பில், 20% துறை ஒதுக்கீட்டின் கீழ் போட்டியிடும், 5 ���ண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவலர்களுக்கு PSTM முன்னுரிமை வழங்கப்படவில்லை. காரணம், "ஏற்கனவே அரசு ஊழியர்கள்" என்பதே. ஆனால், PSTM சட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இந்த முன்னுரிமை மறுக்கப்பட வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை.
இந்தச் சட்ட முரண்பாட்டை நீக்க, கடந்த ஆட்சிக் காலத்தில், 23.01.2026 அன்று, தமிழக அரசு "Tamil Nadu Bill No.4 of 2026" என்ற திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த மசோதாவி��், தமிழ் வழியில் படித்த அரசு ஊழியர்களுக்கும், உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்பில் PSTM முன்னுரிமை வழங்குவதே அரசின் நோக்கம் என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முன்னுரிமையை ஒருமுறை பெற்றவர்கள், அதைவிட உயர்ந்த ஊதியப் பதவிகளுக்கு அதனை மீண்டும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த மசோதா இன்னும் சட்டமாகாத காரணத்தால், அறிவிப்பு எண் 01/2025-ன் கீழ் உதவி ஆய்வாளர் தேர்வில் பங்கேற்ற தமிழ் வழியில் கல்வி பயின்ற காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள W.P. No.11362/2026 (Vijay & Others) வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, 28.08.2026 அன்று நடைபெறவுள்ளது.
எனவே, தவெக அரசு, தமிழ்நாடு சட்ட முன்வடிவு எண் 4/2026 மீது உடனடியாக முடிவெடுத்து, தமிழ் வழியில் கல்வி பயின்று, தமிழகக் காவல்துறையில் உண்மையாகப் பணியாற்றும் காவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை கிடைக்கும்படி, PSTM முன்னுரிமையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இன்றைய தினம் காலை, நமது மதுரையின் அடையாளமாகவும், நம் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் ஒன்றிணைந்த, புனிதமான வைகை நதிக்கரையில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தின் கீழ் தூய்மைப் பணியிலும், மரக்கன்றுகள் நடும் நிகழ்விலும் பங்கேற்றதில் பெரும் மகிழ்ச்சி.
திங்கள்கிழமை காலை என்றாலும், பெருந்திரளாகக் கூடி, முழு அர்ப்பணிப்புடன் உழைத்த தன்னார்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சமூக அக்கறையே நமது இயக்கத்தின் மிகப்பெரிய பலம்.
வைகை நதி என்பது வெறும் நதி மட்டும் அல்ல. மதுரை மாநகரின் உயிர்நாடி. பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணின் நாகரிகத்தையும், விவசாயத்தையும், ஆன்மிகப் பாரம்பரியத்தையும் தாங்கி நிற்கும் தாய். வைகை அன்னையைத் தூ��்மையாகப் பாதுகாப்பது, நம் ஒவ்வொருவரின் தார்மீகப் பொறுப்பு. ஒரு நதியைப் பாதுகாப்பது என்பது வெறும் சுற்றுச்சூழலைக் காப்பதல்ல, நமது பண்பாடு, வரலாறு, வாழ்வாதாரம் அனைத்தையும் பாதுகாப்பதாகும்.
வைகையை மாசுபடுத்தாமல் க��ப்போம். பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை நதியில் கொட்டாமல் இருப்போம். நம் குழந்தைகளுக்கும், வருங்கால தலைமுறைக்கும் தூய்மையான வைகையை விட்டுச் செல்வோம். "சுத்தமான, வளமான தமிழகம்" என்ற இலக்கை மக்கள் இயக்கமாக மாற்றி, பசுமையும் தூய்மையும் நிறைந்த தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம் என்ற அன்பான வேண்டுகோளை, மதுரை மக்களுக்கு வைத்துக் கொள்கிறேன். (1/4)
With an emphasis on spreading the importance of preserving TN’s vast coastline and protecting biodiversity, @WTLFoundation has launched the cleaning & regenerating of the 175 km coastline between Kanyakumari and Thoothukudi.
Yesterday, we inaugurated the cleaning activity in Kanyakumari, Uvari, Kulasekarapattinam & Threspuram in Thoothukudi, with thousands of volunteers participating in the coastal regeneration effort.
Hearty congratulations to Thiru Praveen Chitravel avl and Thiru Selva Prabhu Thirumaran avl on their stellar performance at the Commonwealth Games 2026, winning Silver and Bronze in the Triple Jump.
It makes every Indian, and especially all of us in Tamil Nadu, immensely proud to see two of our very own shine on the world stage. Their dedication, hard work, and relentless spirit inspire our youth. Wishing both of our champions even greater success ahead.
"பாட்டிலுக்கு ₹10 ஏன் கூடுதலாக?"... கேள்வி கேட்ட வாடிக்கையாளரிடம் மதுபாட்டிலை திரும்பப் பெற்ற டாஸ்மாக் ஊழியர்!
Kanchipuram | Viral Video | 01 July 2026
#NewsTamil24x7#Tasmac
We wish to draw the kind attention of the Hon CM of TN, Thiru @TVKVijayHQ avl, to the ground assessment conducted by We the Leaders Foundation.
We have noticed that 129 TASMAC retail shops continue to operate across TN within a 500-meter radius of educational institutions, places of worship, and bus stations.
We kindly request the immediate closure of these shops and the safeguarding of the spaces where our children learn, pray, and commute.
@CMOTamilnadu@WTLFoundation (1/2)
The Ministry of Jal Shakti in the Rajya Sabha yesterday said that in the Supreme Court Verdict dated 16.02.2018, there is no mention that the State of Karnataka has to obtain the consent of the other riparian states, namely Tamil Nadu, Kerala and the UT of Puducherry, to construct any kind of structure across the River Cauvery.
This statement only exposes that the rights of the farmers of Tamil Nadu have been discarded from consideration by the BJP-led Central Government for electoral gains in Karnataka.
I have to point out here that on 5th August 2021, former Union Minister for Jal Shakti Thiru Gajendra Singh Shekawat avl on the floor of Parliament, said that the permission to the State government of Karnataka to prepare a DPR was only conditional, and according to the Inter-State River Water Dispute Act, it is mandatory to obtain permission from all the lower riparian States (in this case Tamil Nadu) for the construction of a dam which passes Inter State.
Why is the Central Government now suddenly making a U-turn on the position it had already taken? Is expecting consistency at least on life-changing decisions of our Farmers too much to ask for?
Request the central government not to take the people of Tamil Nadu for granted and unnecessarily vitiate the brotherly relationship between the two friendly states, Tamil Nadu and Karnataka.
கடந்த 16.02.2018 அன்று, மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கிய காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பில், கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே எந்தவொரு கட்டமைப்பையும் புதிதாக ஏற்படுத்த, காவிரி நதி பாயும் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை என நேற்றைய தினம், மாநிலங்களவையில், காவிரி நதி தொடர்பாக, மத்திய நீர்வளத் துறை அமைச்சகம் அளித்துள்ள பதில் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த 05.08.2021 அன்று அன்றைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்கள், அணைக் கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க, கர்நாடக மாநிலத்துக்கு ��ழங்கப்பட்ட அனுமதி நிபந்தனைக்குட்பட்டது என்றும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு சட்டத்தின்படி, காவிரி கடைமட்டத்தில் பாயும் மாநிலங்களின், (குறிப்பாக தமிழ்நாட்டின்) ஒப்புதல் இன்றி, நதியின் குறுக்கே அணை உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க முடியாது என்றும் நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டு விவசாயிகளின் உரிமைகளையும், நலன்களையும் ���ுறக்கணித்து, மத்திய அரசு தனது முந்தைய நிலைப்பாட்டிலிருந்து திடீரென பின்வாங்கியிருப்பது, கர்நாடகத் தேர்தல் அரசியலுக்காகவா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய முக்கியமான விவகாரங்களில், மத்திய அரசு, நேர்மையாகவும், வெளிப்படையாகவும், ஒரே நிலைப்பாட்டிலும் செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது தவறா?
தமிழ்நாட்டு மக்களை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு சகோதர மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவை பாதிக்கும் வகையில் எந்த ந��வடிக்கையும் எடுக்காமல், காவிரி விவகாரத்தில் சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு செயல்படுமாறு, மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
"டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கள.. நீ எப்படி வேலை பாக்குற..?"
மாவட்ட ஆட்சியரால் பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர் மீண்டும் பணியில் இருந்ததால் சக ஊழியர்கள் அதிர்ச்சி,வாக்குவாதம்
==> தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
#Thanjavur | #Collector | #PanchayatOffice | #PolimerNews
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் (MRB) சார்பாக, சுகாதார ஆய்வாளர் (நிலை-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி, 15 நாட்களில் அவசர அவசரமாக தேர்வுகள் 07.12.2025 அன்று நடத்தப்பட்டன. இந்த கணினி வழித் தேர்வில், தேர்வு மையங்களில் விதிமீறல்கள், செல்போன் பயன்பாடு, கண்காணிப்பாளர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற முறைகேடுகள், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல புகார்களை, தேர்வு எழுதிய மாணவர்கள் முன்வைத்திருந்தனர்.
இந்த முறைகேடுகள் குறித்து, கடந்த 24.02.2026 அன்று மாண்புமிகு சென்னை உய்நீதிமன்ற மதுரை கிளை, CBCID விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தும், இதுவரை விசாரணை முடியவில்லை. இந்த நிலையில், இந்த முறைகேடுகள் நடந்த நிலையிலேயே, தேர்ச்சி பெற்றவர்கள் என்ற பட்டியலை வைத்து, தமிழக அரசு பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்பது, முற��றிலும் தவறானது.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பெயரில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தமிழக அரசு கூறலாம். ஆனால், இத்தனை முறைகேடுகள் நடந்துள்ளதன் காரணமாக, உண்மையாக கடினமாகப் படித்துத் தேர்வெழுதிய இளைஞர்கள், பாதிக்கப்பட்டுள்ளதை, உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு எடுத்துக் கூறியிருக்க வேண்டும். ஏற்கனவே CBCID விசாரணை நிலுவையில் இருப்பதையும் கூறியிருக்க வேண்டும். தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றுள்ள சூழலில், பணி நியமன ஆணை வழங்குவது, நேர்மையாகத் தேர்வு எழுதிய இளைஞர்களுக்குச் செய்யும் துரோகம் என்பதை தவெக அரசு உணர வேண்டும்.
பாதிக்கப்பட்ட இளைஞர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனில், அனைத்து தேர்வு மையங்களின் CCTV பதிவுகளையும் ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவட���க்கை எடுக்க வேண்டும். மேலும், 07.12.2025 அன்று நடைபெற்ற தேர்வை உடனடியாக ரத்து செய்து, கடுமையான கண்காணிப்புடன், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மறுதேர்வு நடத்த வேண்டும்.
அரசு வேலைவாய்ப்பில் தகுதியும், நேர்மையும் மட்டுமே முதன்மையானது. முறைகேடுகளுக்கு ஒருப��தும் இடமளிக்கக் கூடாது.
A trip to Thailand. Comes back. Creates chaos. Plays victim card.
Only aspiration is to become PM of a great nation with no proper experience or qualification.
Goes to China border. Meets people there. Comes back with a new toolkit & again starts chaos.
No love for India as he seems to have British Citizenship.
We know you are not the pap*u u look .
Love ur country (?)