"கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு இன்று பலன் தரத் தொடங்கியுள்ளது" -செல்வப்பெருந்தகை
#SunNews | #VithyaRamraj | @SPK_TNCC
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் பல நூறு கோடி ரூபாய் அளவில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு முதலீட்டுடன், வீரர்–வீராங்கனைகளின் திறனைக் கண்டறிந்து வளர்ப்பதற்கான “திறன் முதலீடும்” இன்று பலன் தரத் தொடங்கியுள்ளது. அதன் அறுவடையாகவே நமது வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் தொடர்ச்சியாகச் சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.
வித்யா ராம்ராஜ் போன்ற நூற்றுக்கணக்கான உலகத்தரமான வீரர்–வீராங்கனைகளை தமிழ்நாடு உருவாக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் உலகத்தரமான கட்டமைப்புகளையும் உருவாக்குவது அரசின் முக்கியப் பொறுப்பாகும்.
தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இத்தகைய முக்கிய திட்டங்களை வெளியிடப்பட்ட காலத்தில், மக்களின் பிரதிநிதியாக நானும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தேன் என்பதை இன்று பெருமையுடன் நினைவுகூர்கிறேன். அன்று விதைக்கப்பட்ட முதலீடும் திறன் முதலீடும் தொடர்ந்து வளர்க்கப்பட்டு, தமிழகம் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர வேண்டும் என்பதே என் விருப்பம்.
@Udhaystalin@mkstalin@TVKVijayHQ@CMOTamilnadu@sunnewstamil@Kalaignarnews@News18TamilNadu@PTI_News@news7tamil@ThanthiTV@DinakaranNews@dinathanthi@DinamaniDaily@TamilTheHindu@the_hindu
அதாவது இந்த ஆட்சி அமைந்த நாலே மாசத்துல எல்லாம் பண்ணிக் குடுத்ததாலதான் இவங்க ஜெயிச்சாங்களாம்!! அண்ணனின் அறிவுப்பூர்வமான கண்டு பிடிப்பு!!! அண்ணனுக்கு வாழ்த்துகள்
பேசாமலே பிடிச்சி வச்ச பிள்ளையார் மாதிரி உக்காந்திருக்கார். கடல பாத்து உக்காந்தாதான் பேசறதுக்கு 'மூட்' வரும் என்கிற பொருளில்தான் பேசினார். 'மூடு,தண்ணி' என்றாலே
மண்டை முழுக்க ஆபாசம் உள்ளவர்களுக்கு
பாலியல் எண்ணம் வந்தால் அவரா பொறுப்பு?!! 🤦
தாங்கள் விரும்பிய வேறு கல்லூரியில் இடம் கிடைத்து மாணவர்கள் சேர நினைத்தால், முதலில் சேர்ந்த கல்லூரிக்குச் செலுத்திய கல்விக் கட்டணமும், மாற்றுச் சான்றிதழும் (TC) காலதாமதமின்றி வழங்கப்பட வேண்டும் எனக் கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் பயனடைந்த திருச்சியைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி அவர்கள் இன்று (26-09-2026) கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு#PowerCut
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
சில வாரங்களுக்கு முன்பு, கழக இளைஞர் அணியின் சமூக வலைதளப் பக்கத்தில் சரோஜா அவர்கள் பேசிய காணொளியைப் பார்த்தபோதே, அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
தேனாம்பேட்டையின் ஒரு சாலையோரத்தில், குடைநிழலில் அமர்ந்து பூ விற்றுக்கொண்டிருக்கும் அந்த மூதாட்டி, “எனக்கு ஒன்று என்றால் ஸ்டாலின் வருவார்… ஸ்டாலின் குடும்பம் வரும்… திமுக வரும்…” என்று அவ்வளவு நம்பிக்கையோடும் பாசத்தோடும் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ச்சியாக இருந்தது.
இன்று அவரை சந்தித்தபோது, காணொளியில் பார்த்த அதே அன்பையும் நம்பிக்கையையும் நேரிலும் உணர்ந்தேன்.
@dmk_youthwing