Chennai, Tamil Nadu: K. A. M. Muhammed Abubacker, State General Secretary, IUML says, ''Actually, within the last two weeks, two unhappy incidents happened in the city of Chennai, one in Vadapalani and another one in Koyambedu. Two incidents, the same, happened. You see, one guy first went to Vadapalani Masjid and damaged everything, and abusive words have been used by him, even thrown the Holy Quran. The incident has been happened before one week. He has been arrested, and police officials telling they are mentally some disturbed man, so they kept in Kilpauk Mental Hospital..''
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள திரு. விஜய் அவர்களுக்கு மனிதநேயத்தையும் சமூக நீதியையும் விரும்பும் மக்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக மக்கள் அளித்துள்ள இந்தப் பெரிய பொறுப்பு, சாதாரண அரசியல் வெற்றியல்ல; மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் சுமக்கும் மகத்தான பொறுப்பாகும். அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய அரசு செயல்படும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் கல்வி, சுகாதாரம், பெண்கள் நலன், சமூக நீதி, சிறுபான்மையினர் பாதுகாப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றமான பணிகளை மேற்கொண்டது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், பள்ளிக் கல்வி மேம்பாடு, மருத்துவ சேவைகள் விரிவாக்கம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் பரவலான வரவேற்பைப் பெற்றன.
அந்த நல்லாட்சித் திட்டங்களையும் மக்கள் நலப் பணிகளையும் தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் பொறுப்பு புதிய அரசுக்கு உள்ளது. அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, தமிழகத்தின் வளர்ச்சி, சமூக நல்லிணக்கம் மற்றும் அனைத்து தரப்பு மக்களுடைய நலனே முதன்மை பெற வேண்டும்.
தமிழகம் சமூக நீதி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம் ஆகிய அடிப்படை மதிப்புகளை நிலைநிறுத்திய மாநிலமாக தொடர்ந்து விளங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.
புதிய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தலைமையிலான அரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தமிழகத்தை மேலும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
அன்புடன்
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
09/05/2026
#Vijay #TVKVijayHQ #TVKVijay
@sunnewstamil@ThanthiTV@News18TamilNadu@NewsTamilTV24x7@news7tamil@thatsTamil@PTI_News@sathiyamnews@DH_Tamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@thatsTamil@ITamilTVNews
எக்ஸிட் போல் முடிவுகளில் என்டிஏ வுக்குக் கூடுதல் ஆதரவு இருப்பதுபோன்ற தோற்றத்தைத் தனது ஆதரவு ஊடகங்கள் மூலம் பாஜக ஏற்படுத்தக்கூடும். வாக்கு எண்ணிக்கைத் தில்லுமுல்லுகளுக்கு அதைத் திரையாக்க முயற்சிக்கவும்கூடும்.
*திமுக தலைமையிலான அணி 180 இடங்களுக்கு மேல் வெல்லும்!
#WATCH | Chennai | On the announcement of dates of polls in 5 states/UTs, President of the Manithaneya Makkal Katchi (MMK), M. H. Jawahirullah says, "We are well prepared to face this election... The last regime of CM MK Stalin launched various schemes that reached each and every house of the state... We are sure to hit a double century... We had several meetings and conferences since the past 1 year and we are all geared up... MK Stalin will swear in as the CM once again..."
இன்று சென்னையில்
திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பாக சென்னையில், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பங்கேற்ற புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தலைவர் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லா MLA அவர்கள் பங்கேற்று இஃப்தார் உரை நிகழ்த்தினார்
@jawahirullah_MH@DMKITwing
இறைவன் நாடினால்..
மே 4 அன்று திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும்.
மீண்டும் திராவிட ஆட்சி தொடரும்..
ஸ்டாலின் தொடரட்டும்!
தமிழ்நாடு வெல்லட்டும்! ❤️
—————————
வழக்கறிஞர்.
புழல் ஷேக் முஹம்மது அலி
மாநில அமைப்பு செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
@DMKITwing@jawahirullah_MH
இன்று எனது பாபநாசம் தொகுதியில் உள்ள சுவாமிமலை முருகன் திருக்கோவிலில் மின்தூக்கி மக்களின் செயல்பாட்டிற்கு வந்த தருணம்
நான் அளித்த பேட்டி முதல் கருத்துகள் பகுதியில்
மின்தூக்கி குறித்த அவதூறுகளுக்கு அமைச்சர் சேகர் பாபுவின் பதிலும் கருத்துகள் பகுதியில்
#swamimalai #swamimalaimurugantemple #Papanasam
#CMOTamilnadu
#mkstalin
#pksekarbabu
யூபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களின் வரலாற்றுச் சாதனை – “நான் முதல்வன்” திட்டத்தின் வெற்றியை நிரூபிக்கும் மகிழ்விற்குரிய தருணம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கை
ஓன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி -UPSC) தேர்வின் இந்த ஆண்டின் முடிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் பெற்றுள்ள சிறப்பான வெற்றி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
அனைத்திந்திய அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே மற்றும் ஏழாம் இடத்தைப் பெற்றுள்ள ராஜா மொகைதீன் உள்ளிட்ட தேர்வானவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக முதன்முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யூபிஎஸ்சி தேர்வில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தசுமார் 60 பேர் யூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதும் மகிழ்ச்சிக்குரியது. இவர்களில் சென்னை இக்லாஸ் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற அப்துல்லாஹ் அப்ரித்தும் தேர்ச்சி அடைந்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்வை தருகிறது.
இதில் முக்கியமாக, தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” என்ற திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது, இந்தத் திட்டத்தின் செயல்திறனையும் முக்கியத்துவத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது. மாணவர்களுக்கு தரமான பயிற்சி, வழிகாட்டுதல், தங்குமிடம் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி, நாட்டின் உயரிய சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் வகையில் அவர்களை உருவாக்கும் இந்தத் திட்டம் பாராட்டத்தக்கது.
மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி . மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து தமிழ்நாட்டு மாணவர்களும் நாட்டின் நிர்வாகத் துறையில் உயர்ந்த பணிகளைச் செய்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. அவர்களின் எதிர்காலப் பயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
எம் எச் ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை
08/03/2026
#UPSC #UPSCToppers
@CMOTamilnadu@Kalaignarnews@sunnewstamil@ThanthiTV@sathiyamnews@News18TamilNadu@ZeeTamilNews@polimernews@niranjan2428@TheFederal_News@PTI_News@PttvNewsX@ITamilTVNews@velichamtvtamil@dinathanthi@DinakaranNews@maalaimalar@murasutv@AsianetNewsTM@TamilTheHindu@TheFederal_News@THChennai@NewIndianXpress@IeTamil@DeccanChronicle@SamayamTamil@thatsTamil
@SVESHEKHER இன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மயிலாப்பூரில் நடைபெற்ற இரத்ததாணம் முகாமில் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் மதசார்பற்ற நாயகன் அண்ணன் S.V.சேகர் அவர்களுடன் கலந்துகொண்டேன் ❤️
வழக்கறிஞர்.
புழல்.ஷேக்முஹம்மதுஅலி
மாநில அமைப்பு செயலாளர்
மனிதநேய மக்கள் கட்சி
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நாளில் மக்களின் உரிமை, வாக்குரிமை, வழிபாட்டுரிமை உள்ளிட்ட அரசியல் சாசனம் தந்துள்ள அனைத்து உரிமைகளையும் பாதுகாத்திட த.மு.மு.க தலைமையில் தோளில் கறுப்புத் துண்டு அணிந்து, கையில் கறுப்புக் கொடி ஏந்தி மாபெரும் கோரிக்கைப் போராட்டம் இன்று (06.12.2025) சென்னை, எக்மோர் ரமடா ஹோட்டல் எதிரில் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்டு, கண்டன உரை நிகழ்த்தினேன்.
@INCIndia@kharge@RahulGandhi@kcvenugopalmp@priyankagandhi@girishgoaINC@SurajMNHegde@Pawankhera@nivedithalva@INCSandesh@KRajuINC
#BabarMasjid
(1)