வெட்டப் பட்ட பிறகுதான்
அதிக வாசம் வீசுமாம்
சந்தன மரம்..!
இப்போது தான் புரிகிறது..
நீ என்னை விட்டுப்
பிரிந்த பிறகும் கூட
என் காதல் ஏன்
அதிகமாகிக் கொண்டே
போகிறது என்று..!!
பேராவூரணி பெரிய குளத்தை இளைஞர்கள் பெருமுயற்சி எடுத்து சீரமைக்க, கரைகளில் மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க தன் செலவில் வெட்டி வேர்களை வாங்கி அனுப்பி இருக்கிறார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன். ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களும் மக்களோடு இப்படி கைகோர்த்தால் மகத்தான மாற்றம் சாத்தியம்!
நாம் வாசிக்கும் செய்தித்தாளை 9 முறை மறு சுழற்சி செய்ய முடியும். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாளை மறு சுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம்!
#நம்மாழ்வார்
சுரைக்காயை காய வைத்து, அதில் சிறு துளையிட்டு மரங்களில் கட்டிவிட்டால், பறவைகள் அதில் சுலபமாகக் கூடு கட்டும். விதைக்காக விட்டு வைக்கும் சுரைக்காயை லேசாக உடைத்து விதைகளை எடுத்துக் கொண்டு கூடு கட்ட ஏதுவாக, காயை கொடியிலே விடுவது நம் வழக்கம். எல்லா உயிர்களுக்குமானது வாழ்வு!
ஒரு கீற்று தர்பூசணி சாப்பிட்டு, வீசிய மிச்சம்... "முழுப் பழத்தையே எடுத்துக்கொள்" என்பதுபோல் எங்கள் வீட்டு வாசலில் காய்த்துக் கிடக்கிறது தர்பூசணி... எதுவும் செய்யாவிட்டாலும், எல்லாம் செய்கிறது இயற்கை!
150 நாட்களில் விளையும் கேரட்டுக்கு 55 முறையும், 10 மாதங்களில் விளையும் வாழைக்கு 4 முறையும், 100 நாட்களில் பலன் தரும் திராட்சைக்கு 17 முறையும் நஞ்சு தெளிக்கிறோம். நாம் சாப்பிடுவது உணவா விஷமா என ஆராய்ச்சி நடத்தவேண்டிய அவசியம் இல்லை. விஷத்தை விதைத்து விஷத்தையே உண்ணுகிறோம்.
#MyClick
தான் பண்ணும் தவறுகளை கடவுளே காணகூடாது என கடவுளையே நடுகுளத்தில் அடைத்து வைத்து தவறுகளை தொடங்கும் சமுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்... எத்தனை பேரோட முன்னோர்கள் அத்திவரவரை பற்றி உங்களிடம் பேசினது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது... காசு.. பணம்.. துண்டு..