சிறுகதை: புகைப் போக்கி
– சாலமன்
சாதி உணர்வுக்கும் வர்க்க உணர்வுக்கும் இடையே நிலவும் முரண்பாட்டை எளிய நிகழ்வுகளின் வழி கதையாக்கியிருக்கிறார் சாலமன்.
இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: https://t.co/kmRWTWfCpC
@beemji@bhaskarvasugi@NeelamBooks@Neelam_Culture@NeelamSocial
#Neelammagazine #December2025
சென்னை மாநகராட்சியைச் சேர்ந்த மண்டலம் 5, 6இல் பணிபுரிந்துவந்த தூய்மைப் பணியாளர்களுக்கு 31.07.2025 நிலையிலேயே மாநகராட்சி மூலம் பணி வழங்கக் கோரி ரிப்பன் பில்டிங் வாயிலில் கடந்த 01.08.2025 முதல் 13 நாட்கள் அறப்போராட்டத்தை நடத்தினார்கள். கடைசி நாளில் காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவின்பேரில் போராட்டத்தைக் கலைத்தனர். அதற்குப் பிறகும் பல்வேறு வழிகளில் தொடர்ப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். அப்போராட்டமானது 115 நாட்களையும் தாண்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக மண்டலம் 5 மற்றும் 6ஐ சேர்ந்த நான்கு பெண் தூய்மைப் பணியாளர்கள் கடந்த வாரம் முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை நடத்திவருகின்றனர். இப்போராட்டம் அவர்களைக் கடுமையான உடல் சிக்கல்களுக்கு ஆளாக்கியுள்ளபோதிலும் 9 நாட்களைக் கடந்தும் போராட்டத்தைத் தொடர்ந்தேவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இன்றைய முதல்வர் அவர்கள் அளித்த வாக்குறுதியை அதாவது, விளிம்புநிலை மக்களுடைய மிக முக்கிய வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதென்பது பொது மக்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசு அவர்களுடைய நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்திட வேண்டும், அதுவே சமூக நீதிக்குக் கூடுதல் பலன் சேர்க்கும். மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப நோக்கத்திற்காகத் தூய்மைப் பணியாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு மறுப்பதென்பது வேதனைக்குரியது. எனவே, முதல்வர் அவர்கள் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களின் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தைச் சுமுகமான முறையில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். @CMOTamilnadu
#பொங்கல் விளையாட்டில் பிரச்சினை என்ற ஒரே காரணத்திற்காக
மணிகண்டன் என்கிற தலித் இளைஞர் காவல்துறை முன்பே சமூக விரோதிகளான
சாதி வெறியர்களால் கழுத்தறுத்து படுகொலை செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
#பெரம்பலூர்மாவட்டம்
வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் மணிகண்டனை அப்பகுதியில் உள்ள தேவேந்திரன் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்துள்ளார்.
இன்று காலை சுமார் 10.30 மணியளவில் சமாதானம் பேச காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில்,
காவல் நிலையத்தை அல்லாத வேறொரு இடத்தில் வைத்து கட்டப்பஞ்சாயத்து பேசியபோது, காவல்துறை கண் முன்னேயே கத்தியால் கழுத்தை அறுத்து படுகொலை நிகழ்ந்துள்ளது,
இது தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு @CMOTamilnadu படுகொலை செய்த கயவர்கள் அனைவரையும் #SCSTவன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவுச் செய்து உடனடியாக சிறைப்படுத்த வேண்டும்.மேலும்,இந்த சம்பவத்திற்கு பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் அலட்சியமே படுகொலைக்கு காரணம்
உடனடியாக காவல்துறையினர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டும். @Collector_Pblr
அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம். தேர்தலில் பாடம் கற்றுக் கொள்ளாத பாஜக.
கருத்தைக் கண்டு அஞ்சும் கோழைகளுக்கு அடக்கு முறையே ஆயுதம்.
அடக்குமுறையை எதிர் கொள்ளும் கூர்மையான ஆயுதமே கருத்துரிமை.
தேசம் அருந்ததிராயின் பக்கம் நின்று ஜனநாயக விரோதிகளை எதிர்கொள்ளும்.
#UAPA #ArundhatiRoy
பாளையங்கோட்டையில் உணவகத்திற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அவலம்,சக மனிதனை படுகொலை செய்யும் மறவர் சமூகத்தைச்சேர்ந்த சாதிவெறி பிடித்த குற்றவாளிகளை உடனடியாக #SCST_வன்கொடுமைதடுப்புச்சட்டத்தில் கைது செய்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு #நீதிவழங்கிடவேண்டும்.
@Collectortnv
#திருநெல்வேலியில் மீண்டும் ஒரு சாதிய தீண்டாமை படுகொலை,
#நீலம்பண்பாட்டுமையம் மிக வன்மையாக கண்டிக்கிறது!
கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை சிறையில் சாதிவெறி கும்பல்களால் படுகொலை செய்யப்பட்ட முத்துமனோவின் நண்பர்
பட்டியலின தேவேந்திர குலவேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சகோதரர் தீபக்ராஜா(1/
எம்ஜிஆர் ஒரு திராவிட icon ??
தலித் மக்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்னால் எப்படி முடியும் என்று சொன்ன எம்ஜிஆர் காவல் நிலையத்தில் பெண்களை பாலியல் வன் கொடுமை செய்த போது அந்த பெண்களை நடத்தை கெட்டவர்கள் என்று சொன்னவர் தான் ஜெயலலிதா, ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிராக என்ன இவர்கள் செய்தார்கள் என்றால் ஒன்றுமே இல்லை என்பது தான் பதில் 🤢
இந்தியாவின் கடன் ரூ.172.50 லட்சம் கோடியாக உயர்ந்தது
அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐
1947 ல் இருந்து 2014 ம் ஆண்டுவரையிலான
67 ஆண்டு காலத்தில் 14 பேர்
பிரதமர் பதவியில் அமர்ந்து நாட்டை ஆண்டுள்ளனர்.அவர்கள் ஆட்சிக்காலத்தில் வாங்கட்டப்பட்ட கடன்
ரூ.55 லட்சம் கோடி மட்டுமே
ஆனால்,பிஜேபி ஆட்சி நடக்கும் இந்த ஒன்பதரை ஆண்டில் மட்டும் வாங்கிய
கடன் ரூ.117 லட்சம் கோடி
மோடிக்கு முன்பு பிரதமராக இருந்தவர்கள் 188 பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார்கள்
அதில் 10-ஐ தனியார் மயமாக்கினார்கள்
ஆனால் பிரதமர் மோதி இந்த ஒன்பதரை ஆண்டுகளில் ஒரே ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக்கூட தொடங்கவில்லை
மாறாக பிஜேபி அரசு
23 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவிட்டது
அதோடு நிற்கவில்லை…
National Monetisation Pipeline எனும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்த திட்டத்தின் பெயரில்
மிச்சம் மீதியிருப்பதையும் தனியாருக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளனர்
ரொம்ப நன்றி ஜி 🙏🙏
#அச்சேதின் #வந்துவிட்டது
#வாழ்த்துக்கள்