சகோதரர் மாரிதாஸ் அவர்களின் கைதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த ஆட்சியின் பல தோல்விகளை தொடர்ச்சியாக பேசி வந்த மாரிதஸ் அவர்களை கைது செய்தால் தங்களுடைய ஆட்சிக்கு கெட்ட பெயர் வராது என நினைக்கிறதா தவெக?
லாட்டரி கும்பல் இந்த ஆட்சியை எப்படி கைக்குள் வைத்தருக்கிறது என்று பதிவிட்டதற்கா கைது ?
அல்லது அறிவிக்கபடாத தொடர் மின்வெட்டை பற்றி பதிவிட்டதற்காக கைதா ?
TVK கட்சியில் உழைத்ததற்கு கூலி தான் பாலியல் வன்கொடுமை, அதுவும் கூட்டு பாலியல் வன்கொடுமை. @TVKVijayHQ அவர்களுக்கு மிக்க நன்றி - கதறும் TVK பெண் நிர்வாகி...
@actorvijay அந்த பெண்மணி இவ்வளவு கதறுது காது கேக்கலையா 😡
YouTuber மாரிதாஸை அதிரடியாக கைது செய்த சைபர் கிரைம் போலீஸார்..! என்ன காரணம்..?
மதுரையில் உள்ள வீட்டில் இருந்து சென்னை அழைத்து வரப்படுகிறார்..?
#Madurai | #YouTuber | #Police | #Arrest | #PolimerNews
மாரிதாஸ் கைது!
@CMOTamilnadu அரசின் தவறுகளை எல்லாம் சரியாக சுட்டிக்காட்ட முடியாது, சில தவறுகளை தவறாக சுட்டிக்காட்டினால் கைதா?
அப்படியானால் ஏன் தவறு செய்கிறீர்கள்?
எனவே, @MaridhasAnswers கைது ஏற்புடையது அல்ல, இது ஒரு சர்வாதிகார போக்கு, வன்மையான கண்டனத்துக்கு உரியது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தொடர்பு குறித்து கேள்வி எழுப்பிய youtuber மாரி தாஸ் அவர்கள் கைது நடவடிக்கை குறித்தும்,
போதைப்பொருள் கடத்தல் பிண்ணனியில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் தொடர்பை அமலாக்க துறை வெளியிட்டது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என,
அதிமுக கண்டன அறிக்கை வெளியிட்டு கேள்வி!!!
தூய சக்தி அமைச்சர்களை விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்ட மாரிதாஸை தவெக காவல்துறை அவருடைய வீட்டில் புகுந்து அதிரடியாக கைது செய்தது.
கஞ்சா மாடல் தீயமுகவின் B டீம் தவெக.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறைமுகங்கள் இருக்கும் துறையை ஆதவ் அர்ஜூனாவிற்க்கு வழங்க இது தான் காரணமா ?
தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் போதை பொருள் கலாச்சாரத்துக்கு அப்போ யார் தலைவன் ?
Source : https://t.co/6lGJsCsesb
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலை தவெக அரசு செய்திருப்பதை ஜனநாயகப் படுகொலை என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?
தேசிய சிந்தனையாளரும், ஊடகவியலாளருமான திரு.மாரிதாஸ் அவர்கள் தவெக ஆட்சியின் அவலங்கள் குறித்தும் தமிழக அமைச்சர்களின் தவறான செயல்பாடுகள் குறித்தும் தனது யூடியூப் வலைதளத்தில் காணொளி வெளியிட்டதற்காக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் தலைமையிலான தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.
காவல்துறை தமிழக முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இருந்த போதிலும் சட்டம் ஒழுங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளியின் நிலையிலேயே இருக்கிறது.
தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடும், தொடர் மின்வெட்டும் மிகப்பெரிய பிரச்சனையாக மக்களை வாட்டி வதைக்கின்ற சூழலில் அதை தீர்ப்பதற்கு வழிவகை செய்வதில் கவனம் செலுத்தாமல்...
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு காரணமாகவும், அடிப்படை காரணியாகவும் விளங்குகின்ற போதைப்பொருள் பரவலாக்கலை முற்றிலும் ஒழித்து தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டி பொதுப் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல்...
தவெக அரசின் பொறுப்பற்ற ஆட்சியின் அவலங்கள் குறித்து ஆதாரத்தோடு யாராவது கேள்வி எழுப்பினால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது என்பது ஏற்கனவே திமுக ஆட்சியில் நடைபெற்ற அதிகார துஷ்பிரயோகத்தின் தொடர்ச்சியாகவே அதன் நீட்சியாகவே தவெக அரசின் நடவடிக்கைகளும் அமைந்திருப்பது அப்பட்டமான வெகுஜன விரோத செயல் என்பதே நிதர்சனம்.
கருத்து சுதந்திரமும், எழுத்து சுதந்திரமும் திமுக ஆட்சியைப் போலவே தவெக ஆட்சியிலும் ஜனநாயகப் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தேசிய சிந்தனையாளர், ஊடகவியலாளர் திரு.மாரிதாஸ் அவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
மேலும் தவெக அரசின் தவறுகளை பொதுத்தளங்களிலோ, பொதுவெளியிலோ யாரேனும் ஆதாரங்களோடு சுட்டிக்காட்டினால் அவ்விஷயம் குறித்து தமிழக முதல்வர் திரு.ஜோஸப் விஜய் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டுமே தவிர மாறாக தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள் மீதே வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து ஜனநாயகத்தை சிதைக்கின்ற செயலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்துகிறேன். @TVKVijayHQ
யூட்யூபர் திரு. @MaridhasAnswers அவர்களை கைது செய்ய காவல்துறையினர் அவரது வீட்டின் முன் குவிந்திருப்பதாக செய்திகள் வருகின்றன.
ஜனநாயகத்தில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் பாசிச திமுக அரசின்….
Wait a minute…
ஆட்சி மாறி விட்டதோ?
ஆனால், காட்சிகள் மாறாதது ஏன்?
பாசிசம், பாயாசம் என்று வாய்கிழிய டயலாக் பேசியவர்களின் ஆட்சி செய்யும் இந்த நடவடிக்கை என்ன? பாசிசமா? பாயாசமா?
நீங்களும் பிரஸ் மீட் கொடுக்கவும் மாட்டீங்க… செய்தி நிறுவனங்கள் கேள்வி கேட்டால் Black Out பண்ணுவீங்க… யூட்யூப்-ல பேசினால் கைது பண்ணுவீங்க…
What bro… It’s very wrong bro..!!
அப்படி என்ன மாரிதாஸ் பேசினார் என்று பார்த்தால், விஜய் ஒரு பொம்மை முதல்வர் என்று கூறியுள்ளார். மேலும், இன்றைய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர் @dir_ed-யால் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் Mastermind என கூறப்பட்டுள்ளது பற்றி பேசியுள்ளார்.
@AadhavArjuna அவர்களே…
ஜான் பிரிட்டோ உங்கள் உறவினர் தானே? ED ரெய்டில் 258 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது உண்மை தானே? அதில் உங்கள் நெருங்கிய உறவினர் தான் Mastermind என ED கூறியுள்ளது தானே? தமிழ்நாட்டில் உள்ள சிறு துறைமுகங்களுக்கு நீங்கள் தான் அமைச்சர் என்பதும் உண்மை தானே?
இந்த உண்மைகளை தொடர்பு படுத்தி தானே திரு. மாரிதாஸ் பேசினார்? அதில் உண்மை இல்லை என நீங்கள் நினைத்திருந்தால், அவதூறு வழக்கு தொடுத்திருக்கலாமே? அல்லது, செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கலாமே?
திரு. மாரிதாஸ் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றால் நோட்டீஸ் கொடுத்து அழைத்திருக்கலாமே? எதற்கு காவலர்களை அவர் வீட்டின் முன் நிறுத்தி கைது செய்ய துடிக்கிறீர்கள்?
அப்படி என்ன அச்சம்? மடியில் கனமிருப்பதால் வழியில் பயம் இருக்கிறதா?
ஜனநாயகக் குரலை நெறிக்க முயலும் பொய்க்கால் குதிரை அரசின் அராஜகப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
உடனடியாக திரு. மாரிதாஸ் அவர்கள் மீதான அராஜக நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
#பொய்க்கால்_குதிரை_அரசு