பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் விஸ்வநாதனுக்கு கண்டனம் கழக துணைப் பொதுச்செயலாளர் - முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கண்டனம்
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வடிவினை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கழக ஆட்சியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சி.பி.ஐ., சி.பி.எம்., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட பாஜக அல்லாத அனைத்து கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அச்சட்டம் ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு, அச்சட்டமுன் வடிவுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், புதியதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் உயர்கல்வித் துறை அமைச்சரும் – காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான திரு.விஸ்வநாதன் “ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக நீடிக்கலாம்” என்று கருத்து தெரிவித்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். மேலும் இது மாநில உரிமைகளுக்கு எதிரானது ஆகும்.
’ஒன்றிய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட ஆளுனரே பல்கலைக் கழக வேந்தராக தொடரலாம்‘ என்று பா.ஜ.க.வுக்கு ஒத்து ஊதும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஸ்வநாதனின் கருத்து பாஜக அரசின் அடிவருடியாக காங்கிரஸ் மாறிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இச்சட்டம் நிறைவேறுவதற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரே இன்றைக்கு அதற்கு எதிராக பேசுவது என்பது பதவி சுகத்துக்காக காங்கிரஸ் கட்சி தனது கொள்கையை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
Villupuram, Tamil Nadu: DMK Deputy General Secretary K. Ponmudi says, "We are not going to do anything new. This meeting has been organized on the instructions of our party leader, Thalapathy, who directed at the district secretaries meeting that the ongoing work must be carried out more speedily in the remaining days, and that this message should be conveyed to all of you..."
(19.03.2026)
🏗️ பொதுப்பணித்துறை - ரூ.1,694 கோடி
✨ பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - ரூ.1,634 கோடி
🏞️ சுற்றுலாத்துறை - ரூ.1,394 கோடி
🏅 இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை - ரூ.718 கோடி
💻 தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை - ரூ.219 கோடி
- மாண்புமிகு அமைச்சர் திரு @TThenarasu அவர்கள்
#TNBudget2026
#ஸ்டாலின்_தொடரட்டும்
தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்கிய நமது #DravidianModel அரசில், தொடர்ந்து ஐந்தாவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு @MRKPanneer அவர்கள்!
மூன்று வேளாண் சட்டங்கள் - நூறு நாள் வேலைத்திட்ட முடக்கம் என நாடு முழுக்க வேளாண் பெருமக்கள் அல்லல்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டில் அந்த இருள் பரவாதவாறு உழவர்களின் தோளோடு தோள் நின்று காத்திருக்கிறோம்.
ஐந்தாண்டுகளும் குறித்த நேரத்தில் மேட்டூர் அணையைத் திறந்து நிலம் நனைத்தது போல், திட்டங்களாலும் - சாதனைகளாலும் உழவர்களின் உள்ளங்களை மகிழ்ச்சியால் நிறைத்திருக்கிறோம்!
இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தொடங்கி, வேளாண்மையில் அறிவியலைப் பயன்படுத்துவது வரையிலான நம்முடைய முன்னெடுப்புகளால், உழவர் வாழ்வில் உதயசூரியனின் ஒளி பரவுகிறது!
#TNInterimAgriBudget
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் @mkstalin அவர்களை நேரில் சந்தித்து திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் புதியதாக கட்டப்பட்டு காணொளி காட்சி வாயிலாக திறக்கப்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறந்து வைத்தமைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
வேற்றுமையிலும் ஒற்றுமை காண வழி வகுக்கும் இந்திய அரசியலமைப்பின் உன்னததை போற்றிட, பாதுகாத்திட குடியரசு தினத்தில் உறுதி ஏற்போம்.
அனைவருக்கு இனிய குடியரசு தின வாழ்த்துகள்.!
#RepublicDay2026
1.5 லட்சம் மகளிர் சங்கமிக்கும் கொள்கைத் திருவிழா..
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பயன்பெற்ற "வெற்றி சாட்சிகள்"!
மேற்கு மண்டலத்தில் அணிதிரள்வோம். சரித்திரம் படைப்போம்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்