மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்கள், 'பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்ற அரசுக்கு துணை நின்ற செவிலியர்களை இனியும் போராட வைக்காமல் திமுக-வின் தேர்தல் அறிக்கை எண். 356 "ஒப்பந்த நியமன முறையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்ற கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி இருந்தார்.
இப்போது, கைக்குழந்தைகளுடன் செவிலியர்கள்
தொடர் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இனியாவது அரசு மனம் இறங்கி கொரோனா கால செவிலியர்களுக்கு மீண்டும் அரசு பணி வழங்க வேண்டுமென்ற மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக ஏற்று அவர்களை பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கொண்டாடப்பட வேண்டிய முன் களப்பணியாளர்களை; வீதியில் போராடும் நிலைக்கு தள்ளியிருப்பது வேதனைக்குரியது.
(2/2)
#கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் குடும்பத்தை மறந்து உயிரை துச்சமென மதித்து களத்தில் நின்று பணியாற்றிய செவிலியர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட போராடும் செவிலியர்களை பேச்சுவார்த்தை என்ற பெயரில் அழைத்து, 'கை கழுவி விட்டது' இந்த அரசு.
மனம் தளராமல் உயர் நீதிமன்றம் சென்று முறையிட்டு 'பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு 6 வாரத்துக்குள் அரசு பணி நியமன ஆணை வழங்க வேண்டுமென்ற' உத்தரவினை பெற்று வந்தார்கள். ஆனால், இந்த நிமிடம் வரை அரசு இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது வருத்தமளிக்கிறது.
(1/2)