தமிழக சட்டமன்றத் தேர்தலில் எழுச்சியுடன் முன்வந்து ஜனநாயகக் கடமையாற்றிய அனைத்து மக்களுக்கும் எனது வணக்கத்தையும், நன்றியையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் தான் இங்கு நீதிபதிகள். மக்களுக்காகத் தான் ஆட்சி. எனவே, மக்கள் வழங்கிய முடிவை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். புரட்சித் தலைவியின் வழியில், இந்தப் பின்னடைவில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.
@AIADMKOfficial தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு பிரச்சாரம் செய்த மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கும், மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய அமைச்சர்களான திரு. @PiyushGoyal, திரு. @JPNadda, பா.ஜ.க. தேசியத் தலைவர் திரு. @NitinNabin ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நம் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்த, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் திரு. @NainarBJP அவர்களுக்கும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. @TTVDhinakaran அவர்களுக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்களுக்கும்;
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் திரு. @GK__VASAN அவர்களுக்கும், புதிய நீதிக் கட்சித் தலைவர் டாக்டர் @DrACSOfficial அவர்களுக்கும், இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் @PaarivendharTR அவர்களுக்கும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @JohnPandianTMMK அவர்களுக்கும், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை டாக்டர் M. ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு, நமக்கு நிபந்தனையின்றி பேராதரவு அளித்த கட்சிகள், அமைப்புகள் மற்றும் சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கும் நன்றி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அயராது உழைத்திட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், கிளை, வார்டு, வட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த, வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியுடன் ஃபீனிக்ஸ் பறவை போல், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் புரட்சித் தலைவி அம்மாவின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் என்றென்றும் ஈடுபடும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
#AIADMK_ForeverForTN
கோவை 44 குழந்தைகள் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்:
உணவு சமைத்தது 50 பேருக்கு.
உணவு உண்டு 2 மணி நேரம் கழித்து தான் உடல் நிலை மோசமடைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
உணவு உண்ணாமல் தடுத்தோம் என்பது பொய்!
பின் எதற்கு இந்த பொய் ?
அங்கே தான் விசயமே இருக்கு..
அந்த கவுண்டம்பாளையம் பள்ளியில் தினமும் 250 குழந்தைகளுக்கு உணவு வழங்குவதாக அரசு தகவல் கிடைக்கிறது.
ஆனால் சமைப்பது 50 தான். மதிய உணவு உண்பது 50 குழந்தைகள் அளவில் தான். மற்றவர் வீட்டில் இருந்து கொண்டு வருகிறார்கள்.
சரி இதில் என்ன விசயம்?
சுமார் தினமும் 200க்கும் மேல் போலி கணக்கு.
இதில் என்ன மறைக்க இருக்கு பெரிய விசயம்?
தமிழகத்தில் 43,000 அரசு பள்ளிகளில் சுமார் 46,00,000 குழந்தைகள் தினமும் மதிய உணவு உண்பதாக கணக்கு காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில் இது 5ல் ஒரு பகுதி மட்டுமே உணவு எடுக்கிறார்கள்.
சுமார் ஆண்டுக்கு 2300 கோடி இதற்காக ஒதுக்கப்படும் நிதியில் - இந்த போலி கணக்கு எழுதி உணவு சாப்பிடாத குழந்தைகளையும் சேர்த்து எழுதுவது மூலம் ஆண்டுக்கு சுமார் 1800 கோடியை திருடியுள்ளது ஒரு கும்பல்?
ஆண்டுக்கு 1800 கோடி எனில் 5 ஆண்டுகளில் சுமார் 9000கோடி அளவிற்கு ஊழலை செய்துள்ளார் அமைச்சர் அன்பில் மகேஸ்..
வெறும் சத்துணவு மதிய உணவு திட்டத்தில் இவ்வளவு பெரிய முறைக்கேடு நடக்கிறது.
இதை மூடி மறைக்க துடிக்கிறது திமுக அரசு..
உருப்படுமா தமிழகம்...
{கவனிக்க : ஒவ்வொரு ஆண்டும் பள்ளி கல்வி துறைக்கு 48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த அமைச்சரின் ஊழல் அளவு என்ன என்பதை சிந்திப்பீர்}
வேங்கை வயல் மலம் கலப்பு, இடைக்காட்டூர் தாக்குதல், நாங்குநேரி கொடூரம் என திமுக அரசின் முகத்திரை நாளுக்கு நாள் கிழிந்து கொண்டு வருகிறது!
இந்தியாவிலேயே பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளில் தமிழகம் முன்னிலை வகிப்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் நேர்ந்த அவமானம்.
சட்டம் ஒழுங்கைச் சரியாகக் கையாளத் தெரியாமல், பட்டியலின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கும் இந்த 'பொம்மை முதல்வர்' இதற்குப் பொறுப்பேற்று வெட்கித் தலைகுனிய வேண்டும்!
விளம்பர அரசியலில் காட்டும் வேகத்தை, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் காட்டாதது ஏன்? கேடுகெட்ட திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக வாழும் சூழல் இல்லை என்பதே இன்றைய கசப்பான உண்மை!
#சமூக_அநீதி_திமுகஅரசு
#DMKFailsTN
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவாங்க .....
அந்தக் குழந்தைகள் இடத்தில் பழகும் பண்பிலே தெரியும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் உள்ள வித்தியாசம் .....
குழந்தைகளை அன்பால் அரவணைக்கும் எங்கள் தலைவர் எங்க......
குழந்தைகள் மீது சாக்லேட் வீசும் ஸ்டாலின் எங்க.....
#பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி மக்களின் எழுச்சிமிகு வரவேற்பிற்கு இடையே எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினேன்.
சமீபத்தில் நான் அறிவித்த இரு கட்ட #அஇஅதிமுக_தேர்தல்வாக்குறுதிகள் தான் இன்றைக்கு மக்களிடம் பேசுபொருளாகி உள்ளன.
அவ்வகையில், மற்றுமொரு
முக்கிய வாக்குறுதியாக,
நடைபாதையில் கடை வைத்திருப்போர் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியிருப்பின், அவை @AIADMKOfficial ஆட்சியில் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பினை மகிழ்ச்சியோடு மக்களிடையே தெரிவித்தேன்.
சமீபத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்தது போல்,
எந்த மேடையிலும், எந்த கேள்விக்கு
திரு. @mkstalin-க்கு நேருக்கு நேர் பதில் சொல்ல நான் தயார்! ஸ்டாலின் தயாரா?
"இரவினில் ஆட்டம், பகலிலே தூக்கம்" என்ற பாடல் வரிக்கு இலக்கணமாக இருப்பவர் தான் இன்றைய துணை முதல்வரான, ஸ்டாலினின் மகன்…!
இப்படிப் பட்டவர்கள் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?
மக்களை மறந்துவிட்டு, கொள்ளையடித்துக் குவிக்கும் திமுக குடும்பத்தை இன்னும் இரண்டே மாதங்களில் ஜனநாயகப்
பூர்வமாக வீழ்த்தி,
#மக்களைக்_காப்போம், #தமிழகத்தை_மீட்போம்!
@AIADMKOfficial
#ByeByeStalin
எளிய மனிதர்களை அரவணைத்துக் கொள்ளும் குணம், அவர்களின் குறைகளை பொறுமையோடு கேட்கும் பக்குவம்... இதுதான் ஒரு தலைவனுக்கு அழகு.
எங்களை காக்க யாரும் இல்லை,எங்களை காப்பாத்துங்க என ஏங்கும் விவசாயிக்கு, ஓடி வந்து கரம் கொடுக்கும் அந்த தாயுள்ளம் - அதுதான் புரட்சித்தமிழர் அண்ணன் @epstamilnadu.
நம்மில் ஒருவராய்,நம் குறைகளை கேட்பவரை தலைவனாய் பெற்றது தமிழகத்தின் வரம்.
என்றும் விவசாயிகளின் ஒரே நம்பிக்கை புரட்சித்தமிழர் அண்ணன் @EPSTamilNadu அவர்கள் மட்டுமே!