காவல்துறை அதிகாரியாய் பணியாற்றி, PSG மற்றும் IIM லக்னோவில் பட்டம் பெற்ற துணிச்சலும் நேர்மையும் கொண்ட தலைவர். காவல் பணியிலிருந்து விலகி அரசியலில் தீவிரமாக நுழைந்தவர்.
பாஜகவின் மாநிலத் தலைவராகி, மக்களுக்கான மாற்றத்திற்காகத் தற்போது "We The Leaders" என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.
புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி அண்ணாமலை முன்னெடுத்துள்ள "We The Leaders" இயக்கம், வரும் சட்டமன்றத் தேர்தல்களை நோக்கிப் பயணிக்கிறது.
இளைஞர்களின் ஆற்றலையும், புதிய சிந்தனைகளையும் ஒன்றுதிரட்டி, சாமானிய மக்களின் குரலாக இந்த மக்கள் இயக்கம் களத்தில் இறங்கியுள்ளது.
வீதிதோறும் சென்று புதிய அரசியல் ஒழுங்கையும், ஆட்சி முறையையும் கொண்டுசேர்க்கும் பணியில் இளைஞர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ளனர்.
மாபெரும் அரசியல் மாற்றத்துக்கான அடித்தளம் இப்போதே போடப்பட்டுவிட்டது. #Annamalai
@annamalai_k@WTLFoundation
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் செல்வதால், நாளை, கோயம்புத்தூர், அவிநாசி, தாராபுரம் என பல பகுதிகளில், நாள் முழுவதும் ஏராளமான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு முதலமைச்சரின் பாதுகாப்பு முக்கியமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் பெயரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பான பயணத்தையும், அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் வகையில், ஒரு நாள் முழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவர்கள், வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என ஒவ்வொரு நாளும் அந்தச் சாலைகளை நம்பியிருக்கும் மக்கள், முதலமைச்சரின் சில நிமிட தேர்தல் பிரச்சாரத்துக்காகப் பாதிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களைச் சந்திப்பதற்காக செல்லும் ஒரு முதலமைச்சரின் பயணம், அதே மக்களுக்கே பல மணி நேர சிரமத்தை ஏற்படுத்துவது எந்த வகையான மக்கள் ஆட்சி?
மக்களை சந்திக்க வரும் முதலமைச்சர், முதலில் மக்களின் சிரமத்தை புரிந்துகொள்ள வேண்டும். மக்களைப் பாதிக்காத வகையில் நிகழ்ச்சிகளை அமைத்துக் கொள்வதே, நல்ல நிர்வாகத்தின் அடையாளம். தேர்தல் பிரச்சாரத்துக்காக, அரசு நிர்வாகத்தின் முழு இயந்திரமும் பொதுமக்களை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காற்று வீசும் போது தான்
மரங்களின் வேர்கள் பலப்படும்..
துன்பங்கள் சூழும் போது தான்
உன் மனதில் துணிவு வளரும்..
விழும் ஒவ்வொரு முறையும்
எழுந்து நில் மலையாய்..
உன் இலக்கை அடையும் வரை
ஓய்வெடுக்காதே அலை போல..
துணிந்து நடைபோடு,
நாளை உன் கையில்..