திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-ஆவது பிறந்தநாளில் அவரை நினைவுகூர்வதன் மூலம், அவர் தமிழ் மண்ணில் ஆற்றிய தொண்டுகளையும் நினைவுகூர்வோம்.
கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் ஆட்சி என்றாலே தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் ஓரடுக்கு, ஈரடுக்கு மேம்பாலங்களும், பெரிய பெரிய கட்டுமானங்களுமே நினைவிற்கு வரும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தின் அனைத்துப் பெருநகரங்களை ஒட்டியும் 'சிட்கோ' (SIDCO) என்று அழைக்கப்படக்கூடிய, குறைந்த முதலீட்டில் அதிகமான தொழிலதிபர்களையும், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கிய பெருமை அவரையே சாரும்.
அவரது 103-ஆவது பிறந்தநாளில், அவர் தமிழுக்கும், தமிழ் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் அவர் ஆற்றிய தொண்டினை நினைவுகூர்வோம்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,Ex.MLA,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
03.06.2026
தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளைத் திரட்ட பழனிசாமி ஒரு வலுவான கூட்டணியை கட்டமைக்கவில்லை,
தேர்தலுக்கு முன்பே கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவதாக திராவிட கட்சிகள் வாக்குறுதி அளித்திருந்தால், முடிவுகள் முற்றிலும் வேறுவிதமாக இருந்திருக்கும்.
விஜய் ஆட்சி அமைப்பதற்காக உறுதித்தன்மையற்றவர்களையும், இத்தருணத்தை பயன்படுத்தி Blackmail செய்து காரியம் சாதிக்க நினைக்கும் சந்தர்ப்பவாதிகளையும் சார்ந்து இருப்பது பேராபத்தாகவும், பல சமயங்களில் அவமானகரமாகவும் மாறக்கூடும்.
ஓரிரு இடங்களின் பற்றாக்குறையால் இன்று ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், மக்களின் பன்மடங்கு பேராதரவுடன் மீண்டும் நாளை எழ முடியும் என்ற நம்பிக்கையுடன் @TVKVijayHQ செயல்பட வேண்டும்.
2026 சட்டமன்றத் தேர்தலில் இரு திராவிட கட்சிகளையும் அடியோடு வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.!
.........................................................
பெரும்பாலான கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கி, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சற்றே ஏறக்குறைய 110 தொகுதிகளில் மகத்தான வெற்றிக்கனியை ஈட்டி, சட்டமன்றத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கும், அதன் தலைவர் தளபதி விஜய் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையே மட்டுமே நிகழ்ந்து வந்த அரசியல் மாற்றத்தை மாற்றி, அவ்விரண்டு கட்சிகளையும் அடியோடு வீழ்த்தி விஜய் அவர்கள் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மிதமிஞ்சிய ஊழல்; மது, போதை; சிறு குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், நாள்தோறும் கொலை மற்றும் கொள்ளை எனச் செயல்பாடற்ற அரசு நிர்வாகத்தின் மீது கோபங்கொண்ட இளைஞர்களும் தமிழக மக்களும் ஒரு தீர்க்கமான அரசியல் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
நல்லாட்சி அமைக்க கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை விஜய் அவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன்."
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
04.05.2026
அதிமுக கூட்டணியில் இனி புதிய கட்சிகள் வர வாய்ப்பில்லை - @EPSTamilNadu டெல்லியில் பேட்டி
அடேங்கப்பா......மெகா கூட்டணியை கட்டமைச்சு ஓய்ந்துவிட்டார் போல.....
சூழ்நிலைக் கைதிகளாக இல்லாவிடில்,தற்போது கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூட வந்திருக்காதோ?
தற்போது NDA கூட்டணிக்குள் வந்தவர்கள் கூட பாஜக முன்னெடுப்பில் வந்தவர்களே.....
ஆளும் கட்சி மீண்டும் ஆளவேண்டும் என்கிற முனைப்பில் அனைவரையும் அரவணைத்துச் செல்கிறது,
ஆனால் ஆளத் துடிக்கும் அதிமுகவோ புயல் காற்றில் உட்கார்ந்துகொண்டு பொரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
தொடர் பேச்சுதான் பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரும்...
ஆனால் ஆணவம் அழிவிற்கே வழிகோலும் என்பதுதான் உலக நியதி....
- தகவல் தொழில்நுட்ப பிரிவு
புதிய தமிழகம் கட்சி
1999-க்கும், 2025-க்கும் சில ஆண்டுகள் தான் வித்தியாசம்!
ஆட்சியாளர்களின் அணுகுமுறை ஒன்றே!
.................................................................................
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் அவர்களின் செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் பரப்புரையில் ஏற்பட்ட 41க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தையும், அதை ஒட்டி தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் வருகை, அவர்களின் கருத்துக்கள் ஆகியவற்றையும் - 1999ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மனித உரிமை மீட்புக்கான நமது தலைமையிலான புதிய தமிழகம் கட்சி போராட்டத்தில், அன்றைய தினம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கடிக்கப்பட்ட ஒரு வயதுக் குழந்தை விக்னேஷ் உட்பட 17 பேர் மரணமடைந்த சம்பவத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, ஏறக்குறைய ஒரு மாதம் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 10 கைக்குழந்தைகள், 250 பெண்கள் உட்பட மொத்தம் 627 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நமது தலைமையில் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் த.மா. க, மார்க்ஸிட் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் எனப் பல்லாயிரக்கணக்கானோருடன் காலை 12 மணிக்கு நெல்லை ஜங்க்ஷனில் கிளம்பிய பேரணி, 2 மணி நேரம் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் மாலை 2 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது.
பேரணியின் முடிவில் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க நேரம் கோரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் தனவேலும், மற்றும் டி.ஜி.பி. ராஜேந்திரனும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் இருந்துகொண்டு எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனு அளிக்கச் செல்ல ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அனுமதி மறுத்து, அற்பக் காரணத்தைச் சுமத்தி, தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுடன் துப்பாக்கிச் சூடு நடத்திக் கூட்டத்தைக் கலைத்ததோடு, கலைந்து சென்றவர்கள் தாமிரபரணி ஆற்றில் நீந்தி மறுகரைக்குச் செல்ல விடாமல், காவல்துறையினரின் லத்திக் கம்புகளால் அழுத்தியே 17 பேர் ஆற்றில் மூழ்கடிக்கப்பட்டனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள் பயணித்த சென்ற ஜீப்பின் மீது கொலைவெறித் தாக்குதலுடன், கற்களும் செங்கற்களும் குறி வைத்து வீசப்பட்டன. வீசிய கற்கள் நம் மீது படாமல் நிர்வாகிகள் அரணாகத் தடுத்து நின்றார்கள். மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் பழனி படுகாயமடைந்தார்.
இன்றைய முதலமைச்சரின் தந்தையாரே அன்றைய முதல்வர். போராட்டம் அரசுக்கு எதிரானது அல்ல; பாகிஸ்தான் பிரிவினைவாதி ஜின்னாவின் மகள் வழிப் பேரன் நுசில்வாடியாவுக்குச் சொந்தமான பிபிடிசி என்ற பன்னாட்டுத் தனியார் கம்பெனிக்கு எதிரானது. வெறும் ரூபாய் 53 தினச் சம்பளத்திற்காக 10 மணி நேரத்திற்கு மேலாகத் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்பட்டார்கள். ரூ 150 தினச் சம்பளம் மற்றும் 8 மணி நேர வேலையை உறுதிசெய்வதுமே போராட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
அன்றைய முதல்வர் நமது கோரிக்கைக்கு அப்பொழுதே செவிசாய்த்து இருந்தால், ஐந்து மாவட்டங்களில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த 5 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டிலிருந்து விடுதலைப் பெற்றிருப்பார்கள். தனியார் கம்பெனிக்கு எதிரான நியாயமான போராட்டத்தைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல், காவல்துறை உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரத்தையும் ஏழை, எளிய தொழிலாளர்களுக்கு எதிராக இரக்கமின்றிப் பயன்படுத்தி, 17 பேரை தாமிரபரணி ஆற்றில் மூழ்கடித்தார்கள். அதன் பின்னும் ஆட்சியாளர்களுக்கு அவர்கள் மனசாட்சி உறுத்தவில்லை. நாகரீகம் கருதி, வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியும் கண்டிக்கவில்லை. நம்மோடு போராட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தலைவர்களான ஐயா மூப்பனார் மற்றும் சில அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமே கடைசிவரை உடன் இருந்தார்கள். உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் தோட்டத் தொழிலாளர்கள், ஒருவர் இஸ்லாமியர்; ஒருவர் தி.க. அமைப்பைச் சார்ந்தவர்.
பேரணியின் வழிநெடுக கோஷங்கள் எழுப்பியதைத் தவிர, வேறு எந்தவிதமான வன்முறையும் நடைபெறவில்லை. எனினும், போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்ட பெண் காவலர்களிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்று ஒரு கட்டுக் கதையை இட்டுக்கட்டி, தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி, 17 பேர் உயிர்களைப் பறித்துக் கொண்டார்கள். அதில் தாக்குதலுக்கு உள்ளான பலர் இன்றும் பல பாதிப்புகளுடன் உள்ளனர். ஆனால், அடுத்த நாள் அனைத்து ஊடகங்களிலும் "வன்முறையாளர்களும் போலீஸும் மோதல்" எனப் பாதிக்கப்பட்ட நம் மீதே குற்றம் சுமத்தி செய்திகள் பரப்பப்பட்டன.
வேறு மாநிலத்தைச் சார்ந்த மருத்துவர்களை வைத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வலியுறுத்தி, பிரேதங்களை வாங்காமல் ஒரு வாரம் போராட்டம் நடத்தினோம். வேறு மாநில மருத்துவர்களை அழைக்கக்கூடாது என அரசு மருத்துவர்களைத் தூண்டிவிட்டு எங்களுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றது. ஓர் இஸ்லாமியரின் பிரேதத்தைத் தவிர, மற்ற பிரேதங்களை வாங்காமல் தொடர்ந்து போராடினோம். மாவட்ட நிர்வாகமே அவர்களை பல இடங்களில் அடக்கம் செய்தது. அரசு எவ்வளவு மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதோ, அதே வேகத்தில் நாங்களும் போராடினோம்.
ஆனால், அன்று, வேறு எந்த ஓர் அமைப்பும் குறைந்தபட்சம் மனிதநேயத்தின் அடிப்படையில்கூட அச்சம்பவத்தைக் கண்டிக்கவில்லை. மாறாக தென் மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் 17 பேர் மரணத்தைக் கொண்டாடினார்கள் எனக் கேள்விப்பட்டோம். இதையெல்லாம் எதிர்கொண்டே புதிய தமிழகம் கட்சியும், தேவேந்திரகுல வேளாளர்களும் மீண்டெழுந்தோம்.!
ஏறக்குறைய 26 வருடங்களுக்குப் பிறகு, தற்போது அதற்கு நிகரான ஒரு துயரச் சம்பவத்தை கரூரில் அரங்கேற்றியுள்ளார்கள்!
இன்று, காலத்தால் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விரும்பியோ விரும்பாமலோ, அரசியல் நிர்ப்பந்தத்தின் பேரிலாவது அனைத்து அரசியல் கட்சிகளும் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து செல்கின்றனர்.
எனினும், கரூர் வரும் அரசியல் கட்சித் தலைவர்களில் பலரும் உண்மையைக் கண்டறியவோ, நியாயத்தைப் பேசவோ மறுக்கிறார்கள். பெரும்பாலானோரின் கருத்துகள் கூட்டணிப் பாசத்தோடும், எப்படியாவது இதன் மூலமாக ஆளுங்கட்சியை நெருங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும்; சிலர் விஜய் மீதான வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பமாகவும், அரசியல் ரீதியான எதிர்பார்ப்புகளுடனுமே கருத்துகளைத் தெரிவித்துச் செல்கின்றனர்; அவர்களிடம் மனிதநேயம் வெளிப்படுவதில்லை.
நடந்த சம்பவம் துயரமானது; இதை எவரும் மறுக்க இயலாது. விஜய் கட்சியின் அமைப்பாளர்கள் அனுபவமற்றவர்கள் என்பதில் ஐயப்பாடில்லை. விஜய் ரசிகர் மன்றம் அரசியல் கட்சியாக மெதுவாக மாறிக் கொண்டிருக்கிறது. அதன் முழு வடிவம் பெறப் பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகலாம். வியூகம் வகுப்பாளர்கள் ஒரு சிலர் உள்ளனர். ஆனால், அவர்களும் கள நிலவரம் தெரியாத புதியவர்கள். விஜய் இவர்களை வைத்தே த.வெ.க கட்சி எனும் தேரை நகர்த்திச் செல்கிறார்.
தமிழகத்தில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் அவர் பின்னால் சாதி, மதம், மொழி, இனம் கடந்து ஒரு பெரிய கூட்டம் கூடுகிறது. இக்கூட்டங்கள் மூலம் அவர்களின் எண்ணத்தை உடனடியாக நிறைவேற்ற முடியுமா? என்பது வேறு விஷயம். எனினும், விஜய் கூட்டத்திற்கு வரும் அனைவரும் இம்மண்ணின் மக்கள் தானே? நமது பிள்ளைகளும் சகோதரச் சகோதரிகளும் தானே? அன்று கரூரில் விஜய் தனது பரப்புரையில் உள்ளூர் ஆளும்கட்சி பிரமுகர் உட்பட ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தல் பரப்புரைகளில் ஆட்சியாளர்களைக் கடுமையாக விமர்சிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என அண்ணா அவர்கள் கூறியதை, மேடைகளில் பேசினால் மட்டும் போதுமா? ஆளும் கட்சியை விமர்சிக்கும்போது, அதில் உள்ள நல்ல அம்சங்களையும், ஆட்சேபகரமான கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டாமா? 1967இல் ஆட்சிக்கு வந்த திமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறதா? இல்லையே! எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவால் தோற்கடிக்கப்படவில்லையா? எனவே, எல்லாச் சூழ்நிலைகளுக்கும் ஆளும் தரப்பினர் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளத் தானே வேண்டும். அதை விட்டுவிட்டு, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க நினைப்பது நியாயமா? எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு எவ்வளவு இடையூறு கொடுக்க முடியுமோ, அதைச் செய்ய முயற்சிப்பது எவ்விதத்தில் நியாயம்?
ஜனநாயகத்தின் ஆணிவேரே அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும்; ஆட்சியாளர்கள் ஒருதலைப்பட்சமாக இருக்கக் கூடாது; அரசு இயந்திரமாகக் கருதப்படும் வருவாய்த் துறை, காவல்துறைகள், மருத்துவமனை உள்ளிட்ட துறைகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்; நீதித்துறை நடுநாயகமாக இருந்திட வேண்டும் என்பதே!.
ஆனால், அண்மைக்காலமாக எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ஆட்சியாளர்கள் தங்களின் ஜனநாயகப் பங்களிப்பை மறந்து, குறுகிய நோக்கத்தோடு, கட்சி உணர்வோடு நடந்துகொள்கிறார்கள். காவல்துறை மற்றும் பிற நிர்வாக அமைப்புகள் ஆளுங்கட்சியின் அங்கமாகச் செயல்படுகின்றன.
தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கான அணுகுமுறையும் எதிர்க்கட்சிகளுக்கான அணுகுமுறையும் வெவ்வேறாக உள்ளன. அதில், ஆளுங்கட்சி தாங்கள் நினைத்தால் அரை மணி நேரத்தில், ஒரு மணி நேரத்தில் கூட ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முடியும்; பிரதமர், ஜனாதிபதி, மத்திய அமைச்சர்களுக்கு எதிராகக் கருப்பு பலூன்கள், கருப்புக் கொடி போராட்டங்களை நடத்த முடியும். ஆனால், எதிர்க்கட்சிகள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, மாநாடு ஆகியவற்றிற்குப் பெரும் போராட்டத்திற்குப் பிறகும், மட்டுமே அனுமதி பெற முடிகிறது. அதுவும் கடைசி நிமிடம் வரை எழுத்துப்பூர்வமாக அனுமதி கொடுக்க மாட்டார்கள். பெரும்பாலான நேரங்களில் நீதிமன்றங்கள் சென்றே அனுமதி பெற வேண்டும்.
செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய்க்குப் பேச ஒதுக்கப்பட்ட இடம் சரியானதுதானா? காவல்துறை நடுநிலையோடுதான் நடந்துகொண்டதா? மின்விளக்குகள் ஏன் அணைக்கப்பட்டன? அவ்வளவு பெரிய கூட்ட நெரிசலில் ஆம்புலன்ஸ் நுழைந்தது ஏன்? தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன? பத்து முதல் பதினைந்து நிமிடத்தில் 40 பேர் இறக்கும் அளவிற்கு அங்கு என்னதான் நடந்தது? போன்றவற்றிற்கு விடை கிடைக்க வேண்டும்.
இது போன்ற எண்ணற்ற கேள்விகளைத் தமிழக அரசை நோக்கி எழுப்ப வேண்டிய தமிழக அரசியல் கட்சிகள் மெழுகு பூசி, அனைத்து அம்புகளையும் விஜய் மீது பாய்ச்சுகிறார்கள்.
ஆனால், எல்லாத் தவறுகளும், 41 பேர் மரணமும் எப்பக்கமும் விலகிச் செல்லக் கூட முடியாத அளவுள்ள ஒரு குறுகலான இடம் ஒதுக்கப்பட்டதன் விளைவாகத் தானே துவங்கியுள்ளது என்பதைக் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டிக்கூட எவருக்கும் மனமில்லாதது, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் பாகுபாடு நிறைந்த அரசியல் மனநிலையைக் காட்டுகிறது. ஆட்சியும், அதிகாரமும் அந்தஸ்தும் எவருக்கும் நிதர்சனமானதல்ல; மாறிக் கொண்டே இருக்கும் என்பதை தமிழக அரசியல்வாதிகள் எப்பொழுது புரிந்துகொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை.
கீழ்கண்ட ஐயப்பாடுகளுக்கு இந்த அரசிடமிருந்து விடை கிடைக்குமா?
· வேலுச்சாமி புரம் சாலை திணிக்கப்பட்டதா? விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டதா?
· காவல்துறை அனுமதி வழங்கிய இடத்தில் தானே விஜய் பேசினார்? எனவே, கூடிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறியது தமிழக அரசு – காவல்துறையின் குறைபாடு தானே?
· கூட்டம் கூடிய இடத்தில் பாதுகாப்புப் பணிகளில் ஏற்பட்ட குறைபாடுகள் என்ன?
· விஜய் வாகனத்தை அவ்வளவு கூட்டத்தைத் தாண்டி உள்ளே செலுத்த வேண்டிய அவசியம் என்ன?
· விஜய் கட்சிக்கு என விதிக்கப்பட்ட பிரத்தியேகக் கட்டுப்பாடுகள் நியாயமானதா?
· கூட்டத்தில் தடுமாறி கீழே விழுந்தவர்களை குழந்தை, கர்ப்பிணிகள் எனக்கூடப் பாராமல் மிதித்துக் கொண்டு போகும் அளவிற்கு மனிதநேயமற்றுப் போனது ஏன்? குறைந்தபட்சம் Civic Sense இல்லாமல் போனதற்குக் காரணம் என்ன?
· எல்லாவற்றிற்கும் மேலாக, அரசு அனைத்து மக்களுக்கானது என்ற உணர்வுடன் அரசியல் பாகுபாடுகள் இல்லாமல் விஜய் நிகழ்ச்சிகளை நடத்த முழு ஒத்துழைப்பும், உரிய பாதுகாப்பும் கொடுத்திருக்க வேண்டாமா?
விஜய் கட்சி நிர்வாகிகள் முன் அனுபவம் பெறாதவர்களே.!
நல்லதும், கெட்டதும் ஒரு புள்ளியிலிருந்துதான் துவங்கும்!
கரூரில் விஜய்யை பேச அனுமதித்தது குறுகலான இடம் என்பது தானே அந்தப் புள்ளி!
ஆட்சியாளர்களின் தவறுகளை மூடி மறைத்து, புனிதப்படுத்த முடியாது; கூடாது.!
1999க்கும் – 2025க்கும் 26 ஆண்டுகள் மட்டுமே வித்தியாசம்!
ஆனால், ஆட்சியாளர்களின் அணுகுமுறை ஒன்றே.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.09.2025.
Poor strategy by Sunil Kanagalu—damaging DMK from within. DMK blindly trusts just 10-25 media people and some influencers who are only milking money from the party but don’t want them to return to power. They know how much DMK has destroyed Tamil Nadu.
https://t.co/VoZK5WQVoj
விஜய் அவர்களின் கரூர் கூட்ட நெரிசலில் - 40 பேர் மரணம்!
புதிய தமிழகம் கட்சி ஆழ்ந்த இரங்கல்!
கூட்டத்திற்கு மிகக் குறுகலான இடத்தை ஒதுக்கிய, கரூர் காவல்துறையும், தமிழக அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.!
.................................................
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களின் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் என 40-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாருக்குப் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
திரை உலகின் பிரபலம் என்பதாலும், புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாலும் அவரது நிகழ்ச்சிக்குக் கட்டுக்கடங்காத கூட்டம் சேர்வது இயல்பு. ஜனநாயகத்தில் அனைவருக்கும் கூட்டம் கூட்டுவதற்கு உரிமை உண்டு. ஆனால், தொடக்கம் முதலே விஜய் அவர்களின் கூட்டங்களுக்கு நடைமுறைக்கு ஒத்துவராத கட்டுப்பாடுகளை விதிப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
துவக்கத்தில் கரூரில் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பிறகு, வேண்டா வெறுப்பாக கரூர் - ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரம் என்ற பகுதியில், 22 அடி அகலம் மற்றும் 200 அடி நீளம் மட்டுமே விஸ்தாரணம் உள்ள மிகக் குறுகலான சாலை ஒதுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று காவல்துறைக்குத் தெரிந்திருந்தும், அக்குறுகலான இடத்தை ஒதுக்கியது ஏன்?
மேலும், அவர் நாமக்கல்லிலிருந்து கூட்ட நிகழ்வுப் பகுதிக்கு வந்தபோதே, எண்ணற்ற மக்கள் கூடியிருந்தனர். அவரது வாகனம் வேலுச்சாமிப்புரத்தின் நுழைவுப் பகுதியில் நிறுத்தப்பட்டுப் பேச அனுமதித்திருந்தால் கூட, இவ்வளவு நெரிசல் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தின் நெரிசல் நிறைந்த மையப் பகுதிக்குள் அவரது பிரச்சார வாகனத்தைச் செலுத்தச் சொல்லி, காவல்துறை நிர்ப்பந்தம் கொடுத்ததே இத்தனை பேர் மரணமடையக் காரணமாகியுள்ளது.!
கூட்ட அனுமதி வழங்குவதில், தமிழ்நாடு அரசு ஆளுங்கட்சிக்கு ஓர் அளவுகோலும், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு அளவுகோலும் கொள்ளக் கூடாது; காவல்துறை நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த உயிரிழப்புகளுக்குத் தமிழக அரசும், காவல்துறையும்மே பொறுப்பேற்க வேண்டும்.
மீண்டும் உக்ரைன் நாட்டை யுத்த களத்திற்குத் தள்ள ஜெலென்ஸ்கி - பிரிட்டன் - ஜெர்மனி - ஐரோப்பியக் கூட்டணி நாடுகள் எத்தணிக்கின்றன!
புதின் - ட்ரம்ப் எச்சரிக்கையோடு அணுக வேண்டும்.
உக்ரைன் - ஐரோப்பிய நாடுகளுக்கு உலக நாடுகளும் உரிய அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்!
முழு அறிக்கை: https://t.co/2L9HlbgRJO