Europe Beach மாதிரி இருக்கு.. 3 வாரங்கள் இதைத் தொடர்ந்தால் குப்பை போடும் எண்ணமே மக்களுக்கு வராது.. கடற்கரை தூய்மைப் பணியில் பங்கேற்ற அண்ணாமலை பேச்சு!
We The Leaders
#Newstamil24x7#Tirunelveli#Annamalai
இன்று மாலை தூத்துக்குடி தெரேஸ்புரத்தில், நமது @WTLFoundation அமைப்பின் சார்பில் "சுத்தமான, வளமான தமிழகம்" இயக்கத்தில் பங்கேற்று உரையாற்றியதில் பெருமகிழ்ச்சி.
சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன், கொட்டும் மழையைப் பொருட்படுத்தாது உற்சாகத்துடன் திரண்டு வந்த சகோதர, சகோதரிகளின் உறுதியும், அர்ப்பணிப்பும், நமது இயக்கத்திற்கு மிகவும் வலு சேர்த்திருக்கிறது.
மக்களின் பங்கேற்பால் உருவாகியிருக்கும் நமது பயணத்தை இன்னும் பல மடங்கு வலுப்படுத்தி, தூய்மையான, பசுமையான, வளமான தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்குவோம். (1/2)
இன்றைய தினம் காலை, கன்னியாகுமரியில், @WTLFoundation சார்பில் "சுத்தமான, வளமான தமிழகத்தை உருவாக்குவோம்" இயக்கத்தை, கடற்கரை தூய்மைப் பணி நிகழ்வுடன் தொடங்கி வைத்தோம். ஏராளமான இளைஞர்களும், தன்னார்வலர்களும், தங்கள் குடும்பங்களுடன் உற்சாகமாக இணைந்தது மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறது. மாற்றத்தின் முன்னோடிகளாக இன்றைய இளைஞர்கள் நிற்பதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் எதிர்காலம் மீதான நம்பிக்கை மேலும் வலுப்பெறுகிறது.
இயற்கை நமக்குக் கிடைத்த செல்வம் அல்ல; வருங்கால தலைமுறையிடமிருந்து நாம் கடனாகப் பெற்றிருக்கும் பொறுப்பு. கடலைக் காப்பதும், நிலத்தைக் காப்பதும், மரங்களை வளர்ப்பதும் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் கடமையும் ஆகும்.
இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் சுற்றுச்சூழலைக் காக்கும் பணிகளில் அனைவரும் இணைவோம். சிறிய செயல்களே பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரக்கன்றையாவது நட்டு, அதை முழுமையாக வளர்க்க உறுதியேற்போம். நம் இயற்கையைப் பாதுகாப்போம்; நம் தமிழ்நாட்டை பசுமையாக்குவோம். (1/2)
"ஃபோட்டோ எடுப்பது.. தலைவரே என்று கூப்பிடுவதை விட நாம் அனைவரும் சமமாக வேலை பார்க்கணும்.." இன்றைக்கு மட்டும் வந்தோம் செய்தோம் என்று இல்லாமல்.. ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்ய வேண்டும்..!! கன்னியாகுமரி கடற்கரையில் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தூய்மை பணியினை தொடங்கி வைத்த பின் அண்ணாமலை பேச்சு..
#Kanniyakumari | #WeTheLeaders | #Annamalai | #PolimerNews
நமது தமிழகத்தை தூய்மையான மாநிலமாக மாற்றவேண்டும் என்ற உறுதியோடு “We The Leader” அமைப்பு, ஆகஸ்ட் மாதத்தை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாக முன்னெடுக்கிறது.
இம்மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட உள்ள தூய்மை மற்றும் பசுமை பணிகள் குறித்த விரிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
வாருங்கள்! ஒன்றிணைவோம்! தூய்மையான, பசுமையான தமிழகத்தை உருவாக்குவோம்!
717 டாஸ்மாக் பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகில் இருந்து மூடப்பட்டதாக முதல்வர் விஜய் சொன்னார்
ஆனால் தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகளை மூடவில்லை 👏 - @annamalai_k அண்ணா @WTLFoundation
Here’s the policy paper prepared by We the Leaders Foundation for a clean and sustainable Tamil Nadu, drawing inputs from experts in the fields of environment and health.
https://t.co/sZhjewHRWp
மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்,
தூய்மையான தமிழகம் பிறக்கட்டும்!
@WTLFoundation
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அண்ணாமலை - உற்சாக வரவேற்பளித்த We The Leader அமைப்பினர்.!
#Annamalai | #WeTheLeader |
தலைவர் அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதலின்படி, திரையுலகில் தனது கலைப்பணியைத் தாண்டி சமூக நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மறைந்த சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மரக்கன்றுகள் நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட விவேக் அவர்கள் முன்னெடுத்த சமூகப் பணிகளுக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் வழங்கும் நோக்கில் தலைவர் அண்ணாமலை அவர்கள் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவையும் பாராட்டையும் பெற்று வருகிறது.
K.Annamalai We The Leaders Foundation Vasantha Rajan Balaji Uthamaramasamy Tamil Elango E Karuppaiah Nagarajan என் மண் என் மக்கள். Amar Prasad Reddy We The Leaders - Coimbatore We The Leaders - Chennai Wetheleaders Dharmapuri Lokesh Krishnan P M Ruban SMR.VIMAL