மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் “போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு” - மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்கப்பட்டு, 'போதை மற்றும் புகையிலையில்லா வளாகம்' விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து, போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
சென்னையில் நடைபெற்ற போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு, மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள்...
#JUSTNOW || போலீசார் லஞ்சம் கேட்டால் 78717-23000 என்ற கைப்பேசி எண்ணில் மக்கள் புகாரளிக்கலாம்..
காவல் துறையினர் தங்கள் பணிகளை செய்ய மக்கள் லஞ்சம் தரக் கூடாது - சென்னை காவல்துறை கோரிக்கை
#Chennai | #Police | #Bribe | #Complaint | #PolimerNews
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடலை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்குமுன் கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
#CMJosephVijay
அமெரிக்காவில் நடைபெற்ற 2026 செயின்ட் லூயிஸ் ரேபிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் (2026 Saint Louis Rapid & Blitz) சாம்பியன் பட்டம் வென்ற திரு.பிரக்ஞானந்தாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்ற இத்தொடரில், திரு.பிரக்ஞானந்தா, தன்னைவிட அதிக ரேட்டிங் கொண்ட அமெரிக்கா, உஸ்பெகிஸ்தான், ஜெர்மனி வீரர்களை எதிர்கொண்டு, வெற்றிவாகை சூடிசாதனை படைத்துள்ளார். சர்வதேச செஸ் அரங்கில் தான் ஒரு சிறந்த சாம்பியன் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவரைப் போன்ற இளம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச அளவில் வெற்றிபெறத் தேவையானஆதரவையும், வழிகாட்டுதலையும் SDAT வழங்கி வருகிறது. ELITE திட்டத்தின்கீழ், பயன்பெற்றுவரும் செஸ் வீரர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது பாராட்டுகள்.
#CMJosephVijay
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!
#CMJosephVijay
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் - 2026ல் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் திரு. ராஜா முத்துப்பாண்டி, திரு. பிரவீன் சித்திரவேல் மற்றும் திரு. செல்வ பிரபு ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.80 இலட்சத்திற்கான காசோலைகள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
#CMJosephVijay
இலவச மின்சாரம் 200 யூனிட் உயர்வு
500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, இலவச மின்சாரம் 200 யூனிட்டாக உயர்வு!
மக்களின் மாதாந்திர மின் செலவை குறைப்பதே அரசின் நோக்கம்.
பட்ஜெட் கூட்டத்தொடரில்
- நிதி அமைச்சர் மரிய வில்சன்.
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள் இன்று (5.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
#CMJosephVijay
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026-27
2031 ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 இலட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் (AI Skill) பயிற்சி அளிக்கப்படும்.
#TNBudget2026#TVK#CMVijay#TNGovt#TNAssembly
#ஆபாசநிதி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஆபாசமாக பேசியுள்ள ஆபாசநிதியை கண்டிக்கிறேன்.
மேடைப்போட்டு பதிலுக்கு நாங்கள் பேசினால் உங்களால் தாங்க முடியாது.
நாங்கள் பேச விரும்பவில்லை. எங்களை எங்கள் தலைவர் நாகரிகமான முறையில் வழிநடத்துகிறார்.
கண்ட நேரத்தில் இன்ஸ்டாகிராமில் கண்டதை நோண்டும் ஆபாசநிதிக்கு முதல்வரை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.
#ஆபாசநிதி
பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும் நாகரிகத்துடனும் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் இந்த பேச்சு ஏற்க முடியாதது.
ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள்!