பழனி கோயில் நிலப் பத்திர மோசடி தொடர்பாக நேற்று நான் வெளியிட்ட பதிவில், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரின் மீதும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருந்தேன்.
ஆனால், மக்கள் தலைவர் @annamalai_k தேவையின்றி தொடர்புபடுத்தி Tvk அரசையும் அமைச்சரையும் விமர்சனம் செய்ய தொடை நடுங்கி இந்த சல்லி தன் சுய அறிப்பை வெளிப்படுத்தி உள்ளான்..
பதவி மாறலாம்...
காலம் மாறலாம்...
சூழ்நிலைகள் மாறலாம்...
ஆனால் ஒரு உண்மையான தலைவரின் தொண்டர்களின் மீது கொண்ட அன்பும், அக்கறையும், பாசமும் என்றுமே மாறாது.
"என்றும் மாறாத அன்பும் பாசமும்..."
இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற @WTLFoundation மாநாட்டில் நான் பார்த்து வியந்தது...
அரங்கிற்குள் மக்கள் வெள்ளம்...
அரங்கிற்கு வெளியேயும் மக்கள் வெள்ளம்...
எங்கு பார்த்தாலும் எழுச்சி, உற்சாகம், மாற்றத்தை விரும்பும் மக்களின் முகங்கள். மக்கள் தலைவர் @annamalai_k அவர்கள் மீது நம்பிக்கை கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் தன்னார்வமாக ஒன்று கூடி, "போதை இல்லா தமிழகம்" என்ற உயர்ந்த இலக்கிற்காக குரல் கொடுத்தது மனதை நெகிழ வைத்தது.
மாறுவோம்... மாற்றுவோம்...
போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்!
மாறுவோம்... மாற்றுவோம்!
இன்றைய தினம் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில், மக்கள் தலைவர் திரு.@annamalai_k அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் @WTLFoundation அமைப்பின் சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், வருகின்ற ஜூலை 12 (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள "போதையில்லா தமிழகம்" விழிப்புணர்வு மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
போதை இல்லா தமிழகம் உருவாக...
மாறுவோம்! மாற்றுவோம்!
#WeTheLeaders #போதையில்லாததமிழகம் #Annamalai #Oddanchatram #Pollachi #DrugFreeTamilNadu
மாற்றம் மக்களிடமிருந்து தொடங்குகிறது!
இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, கணக்கன்பட்டி ஊராட்சியில் இருந்து மக்கள் தலைவர்
திரு. @annamalai_k, IPS அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில், மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் தாமாக முன்வந்து @WTLFoundation இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இளைஞர்களின் இந்த எழுச்சியும், சமூக மாற்றத்திற்கான அர்ப்பணிப்பும் நாளைய தமிழ்நாட்டின் நம்பிக்கையாக அமையும்.
மாறுவோம்... மாற்றுவோம்!
#WeTheLeaders #Annamalai #YouthPower #TamilNadu #ChangeMakers #மாறுவோம்_மாற்றுவோம்
இன்றைய தினம் மக்கள் தலைவர்
திரு. @annamalai_k அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் தேனியில் நடைபெற்ற @WTLFoundation தலைவர்கள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டேன்.
இக்கூட்டத்தில் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கான சேவைகளை மேலும் தீவிரமாகவும் சிறப்பாகவும் முன்னெடுப்பது, புதிய உறுப்பினர்களை இயக்கத்தில் இணைப்பது மற்றும் அமைப்பை அடித்தளத்தில் இருந்து வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
மக்கள் நலனே முதன்மை என்ற எண்ணத்துடன், சேவையையும் வளர்ச்சியையும் மையமாகக் கொண்டு தொடர்ந்து பயணிப்போம்.
மாறுவோம்... மாற்றுவோம்...
வலுவான தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
#WeTheLeaders #Annamalai #Theni #TamilNaduNews
அண்ணாமலை கட்சியை விட்டு வெளியேறியது எங்களுக்கு மிகப்பெரிய இழப்புதான் ஆனால் அதை நாங்கள் வெளிப்படையாக சொல்ல மாட்டோம் - @VanathiBJP 😂🤡
"அடி வாங்கிட்டீங்க" என்ற ஒரு வார்த்தையை கூட இவர்களால் தாங்க முடியவில்லையே இந்த கட்சியை நம்பி வளர்த்த அண்ணாமலையார் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்த உழைப்பை இப்படி வீணடிச்சீங்களே அப்போ எங்களுக்கு எவ்வளவு கோவம் வரும்? 😡😡😡
@annamalai_k #Annamalai
மாறுவோம்... மாற்றுவோம்...
இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் தலைவர் திரு. @annamalai_k அவர்களின் கரங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், எனது தலைமையில் 250-க்கும் மேற்பட்டோர் @WTLFoundation இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில்,
மாவட்ட துணைத் தலைவர் –
திரு. நாச்சிமுத்து
ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய தலைவர் – குத்திலுப்பை திரு.ஆர். நாட்டுத்துரை
ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய தலைவர் – திரு.சதீஷ்
தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய தலைவர் – திரு.முருகசாமி
மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் – திரு.சம்பத்குமார்
தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் –திரு. ரவிக்குமார்
ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் – திரு.எம். குமரேசன்
ஆகிய முக்கிய மண்டல பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் தங்களது பா.ஜ.க.வின் பொறுப்புகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, We The Leaders இயக்கத்தில் இணைந்தனர்.
மேலும், அவர்களுடன் 300-க்கும் மேற்பட்ட தொண்டர்களும் பா.ஜ.க.விலிருந்து விலகி மக்கள் தலைவர் திரு.அண்ணாமலை அவர்களின் We The Leaders அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மக்களை மையமாகக் கொண்ட புதிய அரசியல் பயணத்தில் இணையும் அனைவரையும் மனமார வாழ்த்துகிறேன்.
மாறுவோம்... மாற்றுவோம்...
வலுவான தமிழகம் – வளமான இந்தியா!
பழனி,சிவகிரிப்பட்டியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடும்பன் கோயிலில் 17 பவுன் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் வெள்ளி வேல் மாயமானதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
பக்தர்களின் காணிக்கைகளாலும், நம்பிக்கையாலும் பாதுகாக்கப்பட வேண்டிய கோயில் சொத்துக்கள் மாயமாகியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, நகைகள் மாயமானதற்கான காரணத்தை கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயில்களின் நகைகள் மற்றும் சொத்துக்களை பாதுகாக்க நிரந்தரமான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்.
பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
என்றும் மக்கள் பணியில்..,
பழனி N. கனகராஜ்
We The Leaders
தவெக துவங்கிய போது பரந்தூர் பிரச்சனைக்கு விரைந்து சென்று குரல் கொடுத்த திரு.ஜோஸப் விஜய் அவர்கள்...
தமிழக முதல்வரான பிறகு கோவையில் நடந்துள்ள பெண் குழந்தை படுகொலைக்கு அமைதி காப்பது வருத்தமளிக்கிறது.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை அறவே ஒழிக்க, படுகொலைகளை தடுத்து நிறுத்த குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை வழங்குவதும், மதுவிற்பனை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை அறவே ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுப்பதும் தான் சரியான தீர்வாக இருக்கும்.
தமிழக அரசியலில் பழைய அரசியல் சிஸ்டம் எல்லாம் உடைய வேண்டிய நேரம் வந்துவிட்டது..
நாங்கள் களமிறங்கிவிட்டோம்...
“அரசியலில் விதைத்த வஞ்சகம்…
ஒருநாள் கர்மாவாக திரும்பி வந்து கணக்கை முடிக்கும்.”
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளைய தினம் நடைபெறவிருக்கிறது. தேர்தல் நாள் என்பது, நல்லாட்சியை தேர்வு செய்யும் மக்களின் சக்தியை முறையாகப் பயன்படுத்தும் நாள். ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்.
கடுமையான வெயில் நிலவி வரும் இந்த நாட்களில், பொதுமக்கள் தங்கள் வாக்குகளை காலை அல்லது மாலை நேரங்களில் பதிவு செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களால் மதிய நேரத்தில் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டியவர்கள், குடை பயன்படுத்துவது அவசியம்.
வாக்களிப்பது, ஒவ்வொரு குடிமகனின் உரிமை மட்டுமல்ல. ஜனநாயகக் கடமையும் கூட. ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்கேற்போம். தவறாமல் வாக்களிப்போம்.
பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சக்கரபாணிக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த இளைஞர் அணி மாநில சமூக ஊடகப் பொறுப்பாளர் திரு.இராச.பாரதி கண்ணன் அவர்களை கைது செய்திருப்பது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்!
தேர்தல் நேரத்தில் இப்படிப்பட்ட கைது நடவடிக்கைகள் எதற்காக? எதிர்க்கட்சியின் குரலை அடக்குவதற்கா?
ஒருவர் பேசினால், அருகில் நின்றவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்வது — இது சட்டமா? இல்லையென்றால் அதிகார துஷ்பிரயோகமா?
பழனி DSP தனஜெயன் அவர்கள் காவல்துறை அதிகாரியா? அல்லது திமுகவின் மாவட்ட செயலாளரா ?
பாரதிய ஜனதா கட்சி – அதிமுக கூட்டணியின் பிரச்சாரங்களை முடக்கவும், பயமுறுத்தவும், பொய் வழக்குகள் மூலம் கைது செய்யவும் முயலும் இந்த செயல்கள் — ஜனநாயகத்தை நேரடியாக தாக்கும் முயற்சி!
பழனி DSP தனஜெயன் போன்று திமுக தொடர்பில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாக மாற்றி, காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்ப வேண்டும்!
@TNelectionsCEO உடனடியாக தலையிட்டு நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும்!
திமுக நிழலில் இயங்கும் பழனி DSP போன்றவர்கள் தலைமையில் நடைபெறும் தேர்தல் — நியாயமானதா? சுதந்திரமானதா?