ஜெயலலிதா நல்லவங்களாம், டான்சி நிலத்தை வாங்குவது அத்தனை பெரிய குற்றம் இல்லையாம்
வேணாம்னு திரும்பிக் கொடுத்திருந்தால் கேஸே நிற்காதாம்
வாய்க்கொழுப்பிற்காகத் தான் கேஸ் போடப்பட்டதாம்
நான் சொல்லல R.S. பாரதி சார் தான் இந்த வீடியோல சொல்றார்.
அப்ப MGR இருந்த ADMK ஆட்சி மட்டுமல்ல JJ வின் ADMK ஆட்சியும் நல்லாட்சி தான்
உண்மையை நாடறிய செய்ததற்கு நன்றி R.S. பாரதி சார்
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பாவதால் அவைக்குறிப்பில் நீக்கப்படும் வார்த்தைகள் ரீல்ஸாக வருகிறது அதை சபாநாயகர் தடுக்க வேண்டும். Live ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று LOP கொறடா கூறினார்.
சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரிடியாக எந்த வித ஒளிவு மறைவு எடிட் கட்டிங் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது
இது கூடிய விரைவில் 15 நிமிடம் தாமதமாக எடிட் கட் செய்து ஒளிபரப்பப்படப் போகிறது என்று சொல்றாங்க
இது எதிர்க்கட்சியினரின் சூழ்ச்சி என்பதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா அவர்கள் தன் தலை முடியை வெட்டியதாக புடவையை இழுத்ததாக சொன்ன போதும், ஸ்டாலின் அவர்கள் சட்டையைக் கிழித்ததாகச் சொன்ன போதும் ஆதாரம் இல்லை.
ஏனென்றால் ஆளும் கட்சிகள் சட்டப்பேரவை நிகழ்வுகளை எடிட் செய்து வெளியிட்டன.
எடப்பாடி அவர்கள் ஆட்சியில் சட்டப் பேரவை காவலர்களால் ஸ்டாலின் அவர்களின் சட்டை கிழியவில்லை என்று வீடியோ வெளியிடப்பட்டும், ஆளும்கட்சி எடிட் செய்துவிட்டது என்று திமுக கூறிவிட்டது
இன்று எதிர்க்கட்சி, சட்டப் பேரவையில் ஏதாவது செய்துவிட்டு எடிட் செய்துவிட்டார்கள் என்று கூறினால் எப்படி நிரூபிப்பீர்கள் விஜய் சார்
என் கூட வேலை செய்யும் அக்காக்கள் பிக்பாஸ் 24 x 7 பார்த்துக் கொண்டே டெய்லரிங் செய்வார்கள், அதுபோல் இப்போது சட்டப்பேரவை லைவ் பார்த்துக் கொண்டு தைக்கிறார்கள்.
அந்த அளவு சட்டப் பேரவை நிகழ்வுகளையும், தங்களுக்கு எதாவது அறிவிப்புகள் வருமா என்று பார்க்கிறர்கள்
15 நிமிட Delay அந்த நம்பகத் தன்மையையும் குலைக்கும்.
இந்த 15 நிமிட Delay வைக் கைவிடுங்கள் please.
நீங்கள் நன்றாகவே செய்கிறீர்கள் விஜய் சார்
ஸ்டாலினுக்கு வழங்கி வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதுன்னு சொல்பவர்கள் , z+ பிரிவு பாதுகாப்பு என்பது z பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டுள்ளது , அண்ணா தி மு க பொதுச்செயலாளரும் சட்டமன்ற தலைவருமான எடப்பாடியாருக்கு 2025 வரை ( அப்பொழுது அவர் எதிர்க்கட்சித்தலைவர் ) கொடுக்கப்பட்ட y பிரிவு பாதுகாப்பை விட தற்பொழுது எம் எல் ஏ வாக கூட இல்லாத / எந்த வித அச்சுறுத்தலும் இல்லாத ஸ்டாலினுக்கு அதிகமாகவே பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்பதை குறிப்பிட மறுக்கிறார்கள்
தமிழக மக்கள் ஏன் பாலிமர் செய்தி தொலைக்காட்சி சேனலை விரும்புகிறார்கள் என்பதை உணர்த்தும் ஒரு பதிவு.
கொளத்தூரில் படுதோல்வி அடைந்தவுடன் அண்ணா அறிவாலயத்திற்கு வந்து கண்கலங்கிய Ex MLA மு .க ஸ்டாலினின் அந்த பழைய போட்டோ பதிவை தற்போது இசட் பிளஸ் பிரிவு வாபஸ் ஆனதை மையப்படுத்தி வெளியிட்ட செய்தியில்
மு க ஸ்டாலின் கண்கலங்கிய அந்த புகைப்பட பதிவை வெளியிட்டு தமிழக மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ள பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் நிறுவனத்திற்கு நன்றி. @polimernews
ஒரு 4 மாசத்துக்கு முன்னாடி, ஸ்டாலின்னு ஒருத்தர் இந்த லிஸ்ட்ல இருந்தாரு. இப்ப அவரை காணோம். சட்டமன்றத்துல தான் அப்பாவை காணோம்னு சொன்னாங்க. இப்ப சர்வேலயும் அவரை காணோம். So sad.. #DMK#MKStalin#TVKVijay
உதயநிதி வெற்றி பெற்றால் — அது EVM சரி.
ஆனால் ஸ்டாலின் தோல்வியடைந்தால் மட்டும் — EVM தவறா?
கொளத்தூரில் தன் தோல்வியை, அதுவும் TVK-விடம் ஏற்பட்ட தோல்வியை, ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி புலம்பல்..
வெற்றி என்றால் ஜனநாயகம்… தோல்வி என்றால் EVM முறைகேடு..
மக்களின் தீர்ப்பை இவர்கள் மதிக்கவே இல்லை.. கடவுள் என்ற நினைப்பு..
#TVK #EVM #Kolathur #Democracy
கொஞ்சம் long post தான் but interesting ...
@TVKVijayHQ@AadhavArjuna@imrajmohan@CTR_Nirmalkumar
தெரிந்து கொள்வோம் திமுக தில்லாலங்கடிகளை.. ! @arivalayam
1977 எம்.ஜி.ஆர் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே… பார்த்தீரா நடிகரின் ஆட்சியை. ‘நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று..
அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன்
' தென்னகம் ' பத்திரிகையில் 'ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சித் தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக் கணைகளை வீசி, "அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே " என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது....
" உடன்பிறப்பே பார்த்தாயா ? நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா ? மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா ? யார் இந்த மந்திரக்கோல் ? (நாஞ்சில் மனோகரன்) இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணி முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்ச ரூபாயில் பங்களா எப்படி வந்தது " என்று போட்டு தாக்கியிருந்தார்...
மீண்டும் அடுத்த நாள்
' தென்னகம் ' பத்திரிகையில்
" ஏ கருணாநிதி " என்று தொடங்கி அண்ணாநகர் வீடு பத்து லட்சமா ? விற்பதுக்கு நான் தயார், வாங்குவதற்கு நீர் தயாரா' என்று கேட்டு எழுதி கருணாநிதி சொல்வதை அபாண்டம், அண்டப் புளுகு, வடிகட்டின பொய் என எழுதியிருந்தார்...
அடுத்த நாள் முரசொலியில்
" உடன் பிறப்பே பார்த்தாயா நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது ? வீட்டை வாங்க தயாரா ? என்று கேட்கும் போதே உதிரம் கொதிக்க வில்லையா ? தோள்கள் துடிக்கவில்லையா? அனுப்பு பணத்தை... வாங்கு வீட்டை.." என்று எழுதி முடித்தார்.
அடுத்த நாளில் இருந்து தொண்டன் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தான். அனுப்பும் பணம் வந்தபடியே இருந்தது. தினசரி ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்றும் எழுதினார். தங்கள் பெயரை தலைவர் குறிப்பிடுகிறார் என்றால் தொண்டன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது ? தொடர்ந்து அனுப்பினான். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்தது, ஆனால் அதன்பின்னர் வீடு வாங்குவது குறித்து மூச்சுப் பேச்சில்லை.
சிறிது காலத்தில் அரசியல் காட்சிகள் மாறுகின்றன. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் திரும்பி வந்தார். அதே அண்ணா நகரில் ஒரு கூட்டம். கருணாநிதியும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருந்தார்கள். மைக்கை பிடித்த கருணாநிதி நாஞ்சில் மனோகரனை வானளாவப் புகழ்ந்தார். நாஞ்சிலாரைப் போல் உண்டா என்றார். கீழே அமர்ந்திருந்த திமுக. தொண்டன் வழக்கம்போல கை தட்டிக்கொண்டு இருந்தான்…
உபிகள் அசருவதேயில்லை… கை தட்டினார்கள் தட்டினார்கள்… தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்..
ஆனால் யாரும் அந்த 13 லட்சம் என்ன ஆனது என்று கேட்கவில்லை..
திமுக வரலாற்றை புரட்டி பார்த்தால் மயக்கம் தான் வரும்...
1977 எம்.ஜி.ஆர் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. திமுக தலைவர் கருணாநிதி பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். "உடன் பிறப்பே… பார்த்தீரா நடிகரின் ஆட்சியை..." "நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்" என்று...
அடுத்த நாள் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சித் தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக் கணைகளை வீசி, "அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே" என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. "உடன்பிறப்பே. பார்த்தாயா? நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல்? (நாஞ்சில் மனோகரன்) இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணி முத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல்" என்று தொடங்கி "நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து இலட்ச ரூபாயில் பங்களா எப்படி வந்தது" என்று போட்டு தாக்கியிருந்தார்.
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் "ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து இலட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா" என்று கேட்டு எழுதி கருணாநிதி சொல்வதை அபாண்டம், அண்டப் புளுகு, வடிகட்டின பொய் என எழுதியிருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் "உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்க வில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா? அனுப்பு பணத்தை... வாங்கு வீட்டை" என்று எழுதி முடித்தார்.
அடுத்த நாளில் இருந்து தொண்டன் பணம் அனுப்பிக் கொண்டே இருந்தான். அனுப்பும் பணம் வந்தபடியே இருந்தது. தினசரி ஒவ்வொருவரும் எவ்வளவு தொகை கொடுத்தார்கள் என்றும் எழுதினார். தங்கள் பெயரை தலைவர் குறிப்பிடுகிறார் என்றால் தொண்டன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது? தொடர்ந்து அனுப்பினான். பதிமூன்று இலட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்ததாக தகவல். ஆனால், முரசொலியில் அனல் பறந்த அந்த போட்டி கட்டுரை அதன்பின்னர் இல்லாமல் போனது; வீடு வாங்குவது குறித்து மூச்சுப் பேச்சில்லை.
சிறிது காலத்தில் அரசியல் காட்சிகள் மாறுகின்றன. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் கருணாநிதியின் திமுக பக்கம் திரும்பி வந்தார். அதே அண்ணா நகரில் ஒரு பொது கூட்டம். கருணாநிதியும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருந்தார்கள். மைக்கை பிடித்த கருணாநிதி, நாஞ்சில் மனோகரனை வானளாவப் புகழ்ந்தார். நாஞ்சிலாரைப் போல் உண்டா? என்றார். கீழே அமர்ந்திருந்த திமுக, தொண்டன் வழக்கம்போல கை தட்டிக்கொண்டு இருந்தான்.
உ.பி.,க்கள் அசருவதேயில்லை. கை தட்டினார்கள் தட்டினார்கள். தட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.