"மாவட்டக் கழகச் செயலாளரும் ஐடி விங் நிர்வாகிகளும் என்னை தொடர்ந்து சமூகவலைதளத்தில் கொச்சைப் படுத்தினார்கள்.. அதை எடப்பாடியார் கண்டிக்கவில்லை" என்கிறார்.
அடுத்த நொடியே, "எடப்பாடியார் என்னை மரியாதையோடு தான் நடத்தினார்" எனவும் சொல்கிறார் @KMaragathamOffl
"இருக்கின்ற இடத்தில் இருந்தே இருக்கும் கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதால் எங்களை பச்சோந்தி என்றோ பயந்தாங்கொள்ளி என்றோ எண்ணி விட வேண்டாம்" என்ற மனநிலையில் அக்கா இருப்பது தெளிவாகிறது!
செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர் என மூன்று தொகுதிகளை உள்ளடக்கியது செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகம். அதன் மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் திரு திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் அவர்கள் திருப்போரூர் தவிர மற்ற இரண்டு இடங்களில் போட்டியிட்ட கழக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்த பெருமைக்குரியவர்!
அவரோடு சேர்ந்து மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியக் கழகம் முதல் கிளைக் கழகம் வரை உழைத்த நிர்வாகிகளும் கடைநிலைத் தொண்டனும் பொதுச்செயலாளரை அவமானப்படுத்தி நீங்கள் ஆடிய சுயநல ஆட்டத்தைக் கண்டு ஆற்றாமையில் வசைபாட தான் செய்வான்!
சொல்லப் போனால், "அடிக்கவே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள அலர்ற.." என்பது போல உங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாமல் வேலுமணி, சண்முகம், விஜய பாஸ்கரை தான் பெருமளவில் கண்டித்து எழுதினோம்.
ஒன்றிய பெருந்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என ஏற்றி வைத்து அழகு பார்த்த இயக்கத்தை கேவலம் லாட்டரி சீட்டு கும்பலிடம் காட்டிக் குடுத்த உங்களை திட்டுவதற்கு எல்லாம் அகராதியிலேயே வார்த்தைகள் கிடையாது!
இலவு காத்த கிளிகளாக வாழ்க்கை முழுக்க விசிலை வாயில் வைத்துக் கொண்டு ஊதிக் கொண்டே இருக்க அண்ணா திமுக காரனின் வாழ்த்துக்கள்..!
#WeStandWithEPS
#எதுவரினும்_எடப்பாடியார் 💪