மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக, கழகத் தலைவர், திராவிட நாயகர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர், வழக்கறிஞர் திருமதி எஸ். சுகன்யா அவர்களை ஆதரித்து, இன்று கழக இளைஞரணிச் செயலாளர், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.. (1/2)
மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் இருக்கிறார்.. ஆனால் மின்சாரம் தான் இல்லை..
மின்சாரம் இல்லாததை விட,
அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில் தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது..
விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது; ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார்..
மின்வாரியத்தின் தரப்பிலோ மின் தடை என கூறப்பட்டுள்ளது..
வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டு Phase-ல வருது..
ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?
மின்வாரியத்தின் விளக்கம் சரி என்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன?
இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது..
மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை…
மின்வாரியத்தின் பதிவு எப்படிப் போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்..
த.வெ.க. ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை.
இரண்டு நாட்களுக்கு முன், மின்வாரியத் தலைமையகத்தில் முதலமைச்சர் Review செய்யவில்லை. Reels-தான் எடுத்துவிட்டு வந்திருக்கிறார் போல.
#மின்வெட்டு#PowerCut
தாராபுரத்தில் கழக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக நகர வட்டம் 23, பழைய ஹவுசிங் யூனிட் பகுதியில் திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க சார்பில் #உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குச்சேகரித்தோம்.
@salma_poet#Dharapuram4DMK#VoteForDMK#Dharapuram
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
#தாராபுரம் நகரத்திற்கு உட்பட்ட கொளிஞ்சிவாடி, நகராட்சி அலுவலக பகுதி, தேவேந்திரா தெரு, சின்னக்காளியம்மன் கோவில் பகுதி, சித்தராவுத்தன் பாளையம், பெரியகாளியம்மன் கோயில் ஆகிய இடங்களில் திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க சார்பில் கழக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா அவர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்தோம்.
மக்களின் பிரச்சனைகளை உண்மையாகவே அறிந்தவரை உங்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்திற்கு அனுப்ப #உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
#Dharapuram4DMK #VoteForDMK
#Dharapuram
பேராண்மை என்ப தறுகணொன்று உற்றக்கால் ஊராண்மை மற்றுஅதன் எஃகு.
போர்க்குரல் ஒலிப்பதென்று முடிவு செய்துவிட்டால் கோட்டையை நோக்கி நகர்வதே முறை.
நமக்கான ஊடகம் என்பது இனி நாம் நடத்தும் ஊடகம்தான் என்ற படிப்பினைத் தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தமிழ் மக்கள் ஆதரிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்
D' Nation செய்தி ஊடகத்தை இன்று தொடங்குகிறோம்.
ஆதரித்து வழிநடத்துங்கள்.
தமிழ்நாட்டை மீட்டெடுப்போம்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் @arivalayam வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா அவர்களை ஆதரித்து திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க சார்பிலும் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். இதன் தொடர்ச்சியாக அடுத்தகட்ட களப்பணிகள் குறித்து கழக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினோம்.
#Dharapuram4DMK #VoteForDMK
#Dharapuram
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்டும் தி.மு.கழகத்தின் வெற்றி வேட்பாளர் சகோதரி சுகன்யாவுக்கு ஆதரவாக மூலனூரில் இன்று வாக்குச் சேகரித்து உரையாற்றினோம்.
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை Whole Sale-ல் கொள்முதல் செய்யும் Sofa Model முதலமைச்சருக்கு தாராபுரம் தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டோம். #Dharapuram
@KN_NEHRU@mp_saminathan@V_Senthilbalaji@dmkpadhu@keprakashdmk
JUSTIN | தமிழ் மந்திரங்கள் ஓத வேண்டும் என போராடிய, சத்யபாமா உள்ளிட்ட தமிழ் ஓதுவார் குழுவுக்கு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதி மறுப்பு
#SunNews | #Madurai | #MeenakshiAmmanTemple
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் நம் உயிரணைய இயக்கத்தை உருவாக்கி, அயராத பணிகளால் தமிழ்நாட்டின் கொள்கை முகமாக மாறிய #பேரறிஞர்_அண்ணா அவர்களின் பிறந்தநாளையொட்டி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
#RememberingAnna#CNAisOurDNA
சிரித்த முகம் - சிந்தையைக் கவரும் தமிழ் – மதுரை மண்ணின் மணம் ஆகியவற்றால் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
திருக்குறளுக்கு உரை கண்டவர், புறநானூற்றுக்குப் புதிய வரிசை கண்டவர், கம்பனையும் ஆய்ந்தறிந்தவர் எனப் பண்டைத் தமிழிலக்கியத்தில் எந்த அளவுக்கு விற்பன்னராகத் திகழ்ந்தாரோ, அதே அளவுக்கு எளிய மொழியில் நகைச்சுவையாகப் பேசும் திறனும் கைவரப் பெற்றவராகப் பாப்பையா அவர்கள் திகழ்ந்தார்.
பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள். பட்டிமன்றம் என்றாலே பாப்பையாதான் எனக் கூறும் அளவுக்குத் தமிழ்நாடு மட்டுமல்லாது, உலகின் பல நாடுகளிலும் பல்லாயிரம் பட்டிமன்றங்களுக்கு நடுவராக இருந்தவர். தற்கால மதுரையின் பெருமைமிகு அடையாளமாகவே மாறிப் போனவர். பாப்பையா பரம்பரை எனச் சொல்லத்தக்க அளவுக்குத் தன்னைப் போலவே பல பேச்சாளர்களைத் தமிழுக்குக் கொடையாகத் தந்தவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் மிகுந்த அன்பைப் பொழிந்தவர் பேராசிரியர் பாப்பையா அவர்கள். கழகம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர் எங்கள் மீது காட்டும் அன்பில் எந்த மாற்றமும் இருந்ததில்லை. எப்போது சந்தித்தாலும் புன்னகையோடும் வாஞ்சையோடும் கரங்களைப் பற்றிக்கொள்ளும் அன்பிலான உறவை நாங்கள் கொண்டிருந்தோம்.
கடந்த ஆண்டு மே மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நான் மதுரை சென்றிருந்தபோது நடந்த மக்கள் சந்திப்பில் அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். சில மாதங்களுக்கு முன்புதான் துணைவியாரை இழந்திருந்த பேராசிரியரிடம், “உடல்நலனைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர் இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.
தனது அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள். பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தார்க்கும் மதுரை மக்களுக்கும் உலகெங்கும் வாழும் அவரது இரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.