6 மாதங்கள் ஆகி விட்டன… அடிப்படை நிர்வாகமே கேள்விக்குரியாகியுள்ளது..!
தவெக அரசு எப்போது செயல்படத் தொடங்கும்…?
முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் மக்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்…?
தமிழகத்தில் மாற்றத்திற்கான ஆட்சி என்ற முழக்கத்துடன் பதவியில் அமர்ந்த முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு தனது பதவிக்காலத்தில் ஆறு மாதங்களைக் கடந்துள்ளது. தமிழக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த அரசு, இன்று அன்றாட பணிகளை கூட செய்ய திறனற்ற அரசாக மாறி இருக்கிறது. ஆறு மாதங்கள் என்பது ஒரு புதிய அரசுக்கு நிர்வாகத்தைச் சீரமைத்துக் கொள்வதற்கான காலமாக இருக்கலாம். ஆனால், அந்தக் காலகட்டத்தில் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் புறக்கணிக்க முடியாது. அடிப்படை பணிகள் கூட நடைபெறாததால் மக்கள் இன்று பெரும் துன்பத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் முதன்மையான கடமையாகும். ஆனால், குற்றச் சம்பவங்கள் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சமும் கவலையும் கொஞ்சம் நஞ்சமல்ல. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு என்பது இந்த ஆட்சியில் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.
தீபாவளி பண்டிகை அன்று தமிழ்நாட்டில் மொத்தம் 15 கொலைகள் நடந்துள்ளதாக நாளிழ்களில் இன்று செய்தி வந்துள்ளது. தேனியில் நடுரோட்டில் பட்டாசு வெடித்ததை கண்டித்த காவல்துறை உதவி ஆய்வாளர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறியுள்ளது. இது தான் தவெக அரசின் 6 மாதகால சாதனையின் உச்சம்.
செஞ்சி சிறுமி காணாமல் சென்று ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆனா நிலையில் இன்று வரை சிபிசிஐடி காவல்துறை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றது.
தேனி மாவட்டச் சிறையில் விசாரணைக் கைதிகள் 17 பேர் காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடிய சம்பவம், புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியது, என கைதிகளை கூட பாதுகாத்து வைக்க முடியாத அவல நிலையில் தான் தவெக அரசு உள்ளது.
போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையின் செயல்பாடுகள் பெரும் கேள்வியை ஏற்படுத்துகின்றன.
அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழக அரசு எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.அரிசி விலை சுமார் 30% அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆவின் பொருட்களின் விலை உயர்வும் பொதுமக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோலவே தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே மின்வெட்டு ஏற்படுகிறது. குடியரசுத் துணைத் தலைவர் செல்லும்போது கோயில் மின்வெட்டு ஏற்படுகிறது. சரியான நிர்வாகத் திறன் இல்லாமல் வெளிச் சந்தையில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதில் மட்டும் தான் இந்த அரசு ஆர்வமாக உள்ளது. கேரள மாநிலத்தை ஒப்பிட்டு கேள்வி எழுப்பினால் தவெக அரசிடம் பதில் இல்லை.
அரசு பொறுப்பேற்ற இந்த 6 மாத காலத்தில் சுமார் 2,993 அரசு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் ஸ்தம்பித்துப் போயுள்ளன. மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. கடந்த ஆறுமாத காலத்தில் ரூ.40,000 கோடி கடன் வாங்கியதே இந்த ஆட்சியின் சாதனையாக உள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்ற வண்ணம் உள்ளன. ஆனால் இதை பற்றியெல்லாம் தவெக அரசுக்கு எந்த கவலையும் இருப்பதாக தெரியவில்லை.
பெண்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம், தொழில் முதலீடுகள் என மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அளவே இல்லை. மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அரசியல் விளம்பரங்களிலும், தேவையற்ற விவாதங்களிலும் தவெக அரசு கவனம் செலுத்தி வருவது வேதனையளிக்கிறது.
ஊழலற்ற நிர்வாகம், வெளிப்படைத்தன்மை, மக்கள் நலன் என பேசி ஆட்சியை பிடித்த முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் தமிழக மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் ஆயிரம் கேள்விகளை எழுப்புகின்றன. ஆட்சி தான் மாறியிருக்கிறதே தவிர, 6 மாதம் ஆன பிறகும் கூட காட்சி மாறவில்லை.
(1/2)
கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை அருளும் தெய்வங்களைப் போற்றும் இனிய நன்னாளில், அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியின் மூலம் அறிவிலும், தொழில் மற்றும் உழைப்பின் மூலம் பொருளாதாரத்திலும் ஒவ்வொருவரும் உயர்ந்து, வாழ்வில் வளமும் நலமும் பெற்று, நம் தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் தொடர்ந்து பங்காற்றிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கும் ஒவ்வொருவரின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் இந்நன்னாளில் போற்றி வணங்குவோம்.
அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, வளம், வெற்றி பெருகட்டும்!
@BJP4TamilNadu மாநிலத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் திரு. @NainarBJP அவர்களுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள், மனமகிழ்ச்சி ஆகியவற்றுடன், மக்கள் நலனுக்கான தனது பொதுச்சேவையைத் தொடர்ந்து சிறப்பாக ஆற்றி, வாழ்விலும் அரசியல் பணியிலும் மேலும் பல உயரங்களை அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மோடிஜி இந்த 12 வருசத்துல இப்படி பேசுனதே இல்லை..!
ஒரு புத்திசாதீனம் இல்லாத தலைவர், காங்கிரஸின் கட்டுப்பாட்டு இல்லாத தலைவர், நாட்டை அழிக்க துடிக்கிறார்.
நீங்கள் பிரதமர் நாற்காலியில் அமர விரும்பினால், முதலில் மக்களின் மனதை வெல்ல வேண்டும். பெண்களை அனுப்பி நாற்காலியை (பதவியை) கைப்பற்றுவதால் நீங்கள் பிரதமர் ஆகிவிட முடியாது.
தாய்மார்களையும், சகோதரிகளையும் இப்படி முன்னால் நிறுத்துவதற்கு உங்களுக்கு என்ன கட்டாயம் வந்தது ? நீங்கள் இந்த அளவுக்கு வலிமையற்றவர்கள் ஆகிவிட்டீர்களா?
Had a courtesy meeting with Hon’ble Union Minister Shri @PiyushGoyal ji.
It was a pleasure to interact with him and exchange views on matters of mutual interest in the service of the nation.
டெல்லியில் இன்று @BJP4India துணைத் தலைவர் மற்றும் @BJP4TamilNadu மேலிடப் பொறுப்பாளரான திரு. @rammadhav_ ஜி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து, தமிழ்நாடு பாஜக மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
அவரது அனுபவமும் வழிகாட்டுதலும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்க்கும்.
தேசமே முதன்மை என்ற உறுதியுடன், மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள் 25 ஆண்டுகளாக தொடர்ந்து ஆற்றி வரும் மக்கள் சேவையைப் போற்றும் வகையில் நடைபெறும் ‘சேவா சங்கல்ப் அபியான்’ பிரசாரத்தில் அனைவரும் பங்கேற்போம்.
அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மை மற்றும் சமூக நலன் ஆகியவற்றை வாழ்வின் நோக்கமாகக் கொண்டு, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ஜி அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் தலைமைத்துவத்தையும் மக்கள் சேவையையும் நினைவுகூர்வோம்.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, பாரதப் பிரதமர் அவர்களின் 25 ஆண்டுகால மக்கள் சேவைப் பயணத்தால் ஊக்கமடைந்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து செயல்படுவோம்.
#SevaSankalpAbhiyan
@PMOIndia@NitinNabin@BJP4India@blsanthosh@mansukhmandviya
The Union Cabinet, under the visionary leadership of Hon’ble PM Shri @narendramodi Ji, has approved 3 multitracking projects covering 14 districts across 5 states.
Adding ~656 km to the #IndianRailways network, these projects involve an estimated investment of ₹10,783 crore and are targeted for completion by 2029–30.
#CabinetDecisions
🚀 Mission Success! 🇮🇳
A proud moment for Bharat as GSLV-F17 successfully accomplishes its mission and places EOS-05 into its intended orbit.
Heartiest congratulations to the brilliant scientists and engineers of @isro for this remarkable achievement.
Under the visionary leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi ji, Bharat is scaling new heights in space exploration and technology.
பாரதப் பிரதமர் திரு. @narendramodi ஜி அவர்கள் தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானில் திருக்குறளின் சிறப்பையும், அதன் உலகளாவிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமை தரும் தருணம்.
“பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் எழுதப்பட்ட திருக்குறள், இன்றும் ஆன்மிகம், தத்துவம் மற்றும் நடைமுறை வாழ்க்கை என அனைத்து துறைகளிலும் ஆழ்ந்த உத்வேகத்தை அளிக்கிறது” என்று பிரதமர் அவர்கள் குறிப்பிட்டார்.
மேலும், திருக்குறளை உஸ்பெக் மொழியில் மொழிபெயர்க்கும் பணியை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரதமரின் அழைப்பு, உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழின் செழுமையையும், திருவள்ளுவரின் பேரறிவையும் உலகெங்கும் கொண்டு செல்லும் மகத்தான முயற்சியாகும்.
திருக்குறள் உலகப் பொதுமறை என்பதை பிரதமரின் இந்த வார்த்தைகள் மீண்டும் உலகிற்கு எடுத்துரைக்கின்றன.
அரசியலுக்காக பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடுவதா?
சென்னை நகரின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது!
கையகப்படுத்திய நிலத்தை தவெக அரசு என்ன செய்யப்போகிறது?
தமிழகத்தின் பொருளாதார, உள்கட்டமைப்பு வசதிகள் முக்கியம்!
மத்திய அரசுக்கு தவெக அரசு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும்
சென்னை விமான நிலையத்தின் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், சென்னை நகரின் வளர்ச்சியை மையப்படுத்தியும் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது . பரந்தூர் பகுதியில் முந்தைய திமுக அரசு இடத்தை தேர்வு செய்வதற்கே பல காலம் தாமதம் செய்தது. பெரும் தாமதம், நெருக்கடி, சிக்கல் என பல கட்ட தடைகளை தாண்டி விமான நிலையத்திற்கு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது.
ரூ.27,400 கோடி மதிப்பில், சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இதற்காக சுமார் 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பரந்தூரில் 2வது விமான நிலையம் அமைக்கும் பணி கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த திட்டம் கைவிடப்படுகிறது என்பது குறித்து விரிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை. முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் இந்த முடிவு என்பது முழுக்க முழுக்க அரசியல் அன்றி வேறல்ல.
தேர்தலுக்கு முன்பு பரந்தூர் பகுதிக்கு சென்ற திரு. ஜோசப் விஜய் அவர்கள், தவெக ஆட்சியமைந்தால் பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்படும் என பேசினார். எனவே பரந்தூர் விமான நிலையத்தை தவெக அரசு முழுக்க முழுக்க அரசியலாகவே பார்ப்பதாக தெரிகிறது.
பரந்தூர் பகுதியில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை தவெக அரசு என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வியும் எழுகிறது. இதற்காக செலவிடப்பட்ட இழப்பீட்டுத் தொகை என்னாகும் என்னாகும்?
தவெக அரசின் இந்த முடிவால் சென்னைக்கு புதிய விமான நிலையம் என்பது கானல் நீராகி விடும். இப்போது பரந்தூர் வேண்டாம் என்றால் தவெக அரசு என்ன செய்யப்போகிறது? வேறு இடம் என்றால் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பது பெரும் காலதாமதமாகும் என்ற கவலை எழுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் புதிய இடத்தை அடையாளம் காணுவது எப்படி? எப்போது? என்ற கேள்வி எழுகிறது.
நாடுமுழுவதும் பல நகரங்களில் புதிய விமான நிலையங்கள் அமைக்கும் பணி பெருமளவு முடிந்து வருகின்றன. சென்னையின் தற்போதைய விமான நிலையத்தின் பயணிகளை கையாளும் திறன் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. பெங்களூரு, ஹைதராபாத் என தென் மாநிலங்களில் உள்ள மற்ற பல விமான நிலையங்கள் சென்னையை முந்தி செல்கின்றன.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டால் அந்த பகுதியின் ஒட்டுமொத்த போக்குவரத்து மற்றும் வணிக வளர்ச்சியும் பெரிய அளவில் தடைபடும். மெட்ரோ ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிலையும் கேள்விக்குரியாகி விடும். பூந்தமல்லி வரை இருக்கும் மெட்ரோ ரயில் திட்டமும் பரந்தூரை மையப்படுத்தி நீட்டிக்கப்படவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
பரந்தூர் விமான நிலையத்தை முதன்மைப்படுத்தி பரந்தூர் வழியாகச் செல்லும் வகையில் சென்னை - பெங்களூர் விரைவு வழிச்சாலை உருவாக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் நிறுத்தப்பட்டால், பல கோடி மதிப்பீட்டில்
உருவாக்கப்பட்ட சென்னை - பெங்களூர் விரைவுச் சாலை மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களின் நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்களை பொறுத்தவரையில் தவெக அரசு அரசியலை விடுத்து மக்களின் நலனையும், மாநிலத்தின் வளர்ச்சியையும் மனதில் கொண்டு முதலமைச்சர் திரு. ஜோசப் அவர்கள் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடும் முடிவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழகத்தின் நலனை மனதில் கொண்டு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணிகளை மீண்டும் தொடங்கி முழுவீச்சில் நடத்தி முடித்திட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
The Government, under the visionary leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi ji, has consistently prioritized the welfare of the youth and the strengthening of India’s education system. The decision to establish fast-track courts to ensure timely justice for those affected by examination paper leaks reflects the Government’s unwavering commitment to safeguarding the integrity of the examination process and upholding the democratic spirit of the nation.