இங்கு
என் எழுத்துக்களுக்கு
பரிதாப படாதீர்கள்
உங்களோடு உரையாடும்
என் உணர்வுகளை கவனித்து பேசுங்கள்
ஒருவேளை
நான் தவறாக கூட இருக்கலாம்
உங்கள்
சிந்தனைக்கு எட்டிய
பிறகே என்னை
தீர்மானியுங்கள்
பிறர்
சொல்வதை வைத்தல்ல ..!!
🖤
#உணர்வுகளின்_நிழல்
அழகு இளமை
என அத்தனையும்
கடந்த அன்பின் சாயல்..
நேசங்கள் ஒருபோதும்
முடிவதில்லை எல்லையில்லாமல் தொடருமே மனதோடு நிறைந்து போன
நேசம் மண்மீது வாழும் காலம் வரையிலே..
நீ வந்திருந்த அன்று
மெல்லிய மழை
எல்லோருக்கும் பிடித்தது.,
நீ அமர்ந்ததினால்
பவளமல்லி பந்தல்
மகிழ்ந்துதிர்த்த பூக்கள்
நிறம் மாறவேயில்லை..
உன் வருகை
பேரானந்தம்.,
பிறகான லய சௌந்தர்ரய
காலங்களில் லயித்து
கதைக்க வாழ்வின் புதிர்களை
விட்டு சென்றிருக்கிறாய்
கனவுகள் போல....