As Quoted by Marx Revolutions are the locomotives of history.Reason has always existed,but not always in a reasonable form.The philosophers have only interpreted the world in various ways,objective to change https://t.co/hy0GMY5ZtQ let's Fan the Flame Together
சென்னையில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின் போது உணர்ச்சிவசப்பட்டு இரயில் முன் பாய்ந்த மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திரு. சிவா திலீபன் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த மன வருத்தமளிக்கிறது.
அவரது குடும்பத்தினர் மற்றும் மே 17 இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
#வீரவணக்கம்
ஒன்றிய பாஜக அரசு
திணிக்கும் இந்திக்கு எதிராக-
#மே17 இயக்கத்தின் சார்பில்
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள்
தலைமையில்
இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டம் கடந்த ஒரு வாரகாலமாக
நடைப்பெற்றது.
பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தோழர் சிவா திலீபன் அவர்கள்,
திடுமென “இந்தி ஒழிக”
“தமிழ் வாழ்க”என முழக்கமிட்டவாறே
ரயிலில் பாய்ந்தார்.
பலத்த காயங்களுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
#எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
முதல்வர் அவர்களும் நேரில் சந்தித்து
மருத்துவ சிகிச்சையை சிறப்பாக செய்ய உத்தரவிட்டார்.
ஆனாலும் தோழரை காப்பாற்ற முடியவில்லை.
நேற்று இரவு தோழர் திருமுருகன் காந்தி
தொலைபேசியில் அழைத்து, அந்த துயரச்செய்தியை தெரிவித்தார்.
தோழர் சிவா திலீபன் நம்மை விட்டு மறைந்தார் என்னும் செய்தி பெரும் அதிர்ச்சியையும் மன வலியையும் தருகிறது.
இந்தி- இந்துத்துவாவுக்கு எதிரான களத்தில் வீரச்சாவடைந்த
போராளி சிவா திலீபனுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் செம்மாந்த வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
19.3.2026
"இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது. மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது."
#CMStalin | #HindiImpositionProtest
ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக இன்னொரு உயிரை தமிழ்நாடு கொடுத்துள்ளது. உயிரைக் கொடுத்து மொழியை காப்பாற்றிய மண் இது,
இன்று பல முனைகளில் நாம் இந்தி திணிப்பை எதிர்க்க முடியும், நாம் உயிரிழந்தது போதும்.
இந்த இழப்பு ஈடுசெய்யமுடியாதது.
தோழர்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
@may17iyakkam@thiruja2009
ஓராயிரம் மொழிகளை கற்றறியும் திறனுண்டு மனிதர்களுக்கு.. ஆனால் ஒருபோதும் ஒரு மொழியைத் திணிப்பதை ஏற்க முடியாது.. #மொழிப்போர்_ஈகியர் தோழர் #சிவா_திலீபன் அவர்களுக்கு செவ்வணக்கமும் அவரையிழந்து வாடும் குடும்பத்தார்கள் மற்றும் @May17Movement@thiruja2009 தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..
தோழர் சிவா திலீபன் இயற்கை எய்தினார்.
சமரசமற்ற போராளி, தமிழினப்பற்றாளர், அன்னைத்தமிழை உயிரென நேசித்தவர்,
அடக்குமுறைக்கு அஞ்சா தமிழ்த்தேசிய செயல்வீரர், பெரியாரிய சிந்தனையாளர், அம்பேத்கரிய செயற்பாட்டாளர், மார்க்சியத்தை நேசித்தவர். மேதகுபிரபாகரனின் பற்றாளர், ஈழவிடுதலை நேசன்,
மே17 இயக்கப் பொருப்பாளர்
தோழர் சிவா திலீபன் மொழிப்போர் ஈகைச்சுடரானார்.
பெருந்தீ பற்ற வைத்து தாரகையானார்.
தோழர் சிவா திலீபனுக்கு வீரவணக்கம்.
'தமிழ் வாழ்க' என்ற அவரது இறுதி முழக்கம், காலமுழுதும் நின்று ஒலிக்கும்.
சென்று வா தோழா!
நீ கொடுத்த சுடரேந்தி எங்கள் பயணம் தொடரும்.
நீ கொடுத்த துணிவைச் சுமந்து எம் போராட்டம் தொடரும்.
இறுதித்தோழன் இருக்கும் வரை
உன் கொடி பறக்கும்.
சென்று வா தோழா.
உனக்கு எம் தமிழ் வணக்கம்.
மே பதினேழு இயக்கம்
18-03-2026
21 :30
@may17iyakkam
அன்னைத் தமிழ் காக்க தன்னுயிரை ஈகம் செய்ய முன்வந்த மொழிப்போர் போராளி தோழன் சிவா திலீபன் ரயிலில் அடிப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு அறுவை சிகிச்சைக்காக A-ve வகை ரத்தம் தேவைப்படுகிறது ஆகவே அந்த நோயாளிக்கு குருதி கொடுத்து காக்க வேண்டுகிறோம்.
தோழர் சிவா திலிபன் என்கிற சிவக்குமார்
வயது 56
அனுமதிக்கப்பட்ட வார்டு அவசர சிகிச்சை பிரிவு (ICU )
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை
தேவைப்படும் குருதி A-ve
தொடர்புக்கு
9884072032
சுந்தரமூர்த்தி
கொடையாளர்கள் வரவேண்டிய முகவரி :
மதிப்பிற்குரிய
மருத்துவர் சுபாஸ் அவர்கள்(HOD)
RGGH BLOOD BANK
CHENNAI.
தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல!
இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரர் சிவா திலீபன் அவர்களையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. @Thiruja2009 அவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும்,
“பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது.
இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!
தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்!
எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்கள் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
Burkina Faso’s🇧🇫 Ibrahim Traoré: "It's not terrorism, it's imperialism. Their objective is to keep us in a permanent war, prevent us from developing, and continue to exploit our resources."
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களது வீட்டிற்கு இன்று (10-10-2025 வெள்ளிக்கிழமை) காலை நேரில் வந்த துணை காவல் ஆய்வாளர், 'தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் (டிஜிபி)' அலுவலக மின்னஞ்சலில், தோழர் திருமுருகன் காந்தி அவர்களது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அதன்பொருட்டு சோதனை செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வெடிகுண்டு பரிசோதனை குழுவினர் வீட்டில் சோதனை நடத்தினர். இதுகுறித்த புகார் மனுவை தோழரிடமிருந்து காவல்துறை பெற்றுக்கொண்டது. விரைந்து செயல்பட்ட காவல்துறைக்கும் வெடிகுண்டு சோதனை குழுவினருக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
10-10-2025
🚨 Arundhati Roy compares Gaza genocide to Sri Lanka’s slaughter of Tamils
Booker Prize–winning author Arundhati Roy has drawn parallels between the ongoing genocide in Gaza and Sri Lanka’s mass atrocities against Tamils, warning that world leaders are “watching what Netanyahu can get away with” and setting a new “bar” for state violence.
Read more ⬇️
https://t.co/08MQuw5VJf
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களது வீட்டிற்கு இன்று (10-10-2025 வெள்ளிக்கிழமை) காலை நேரில் வந்த துணை காவல் ஆய்வாளர், 'தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் (டிஜிபி)' அலுவலக மின்னஞ்சலில், தோழர் திருமுருகன் காந்தி அவர்களது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், அதன்பொருட்டு சோதனை செய்ய வேண்டுமென்றும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வெடிகுண்டு பரிசோதனை குழுவினர் வீட்டில் சோதனை நடத்தினர். இதுகுறித்த புகார் மனுவை தோழரிடமிருந்து காவல்துறை பெற்றுக்கொண்டது. விரைந்து செயல்பட்ட காவல்துறைக்கும் வெடிகுண்டு சோதனை குழுவினருக்கும் மே பதினேழு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மே பதினேழு இயக்கம்
10-10-2025
@tnpoliceoffl@chennaipolice_@ThanthiTV@sunnewstamil@News18TamilNadu@news7tamil@NewsTamilTV24x7@MalaimurasuTv@dinathanthi@DinakaranNews@IndianExpress
The hand of a sanitary worker—his skin severely damaged by constant exposure to bleaching powder, which is sprinkled along the corners of roads. Many workers suffer from chronic illnesses caused by the absence of proper protective equipment such as gloves and masks.
DMK’s neglect of sanitation workers’ protests exposes its betrayal of social-justice principles, Sujatha Sivagnanam (@sujajourno) reports: https://t.co/7sWKOI5XdY