சீமான் அவர்களின் பேச்சுகளில் எந்த வார்த்தையையும் சில வினாடிகளில் தேடுங்கள்.
அதே நேரத்தில் அந்த பேச்சின் சரியான நேரத்திற்கும் நேரடியாக செல்லலாம்.
தமிழ் தேசிய அரசியலை அறிய
பழைய உரைகளை மீண்டும் கேட்க, விரைவான தேடலுக்காக உருவாக்கப்பட்ட தளம்.
🌐 https://t.co/2HMjzVrhFw
#NTK
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்…..
கறவை மாடுகள் வழங்கும் திட்டம்…..
வீட்டுக்கு 5 வெள்ளாடு வழங்கப்படும்… தவெக , நிதியமைச்சர் 🤔
என்னடா பிளாக் டிக்கட் சினிமா ரசிக வெறி தற்குறிங்களா அண்ணன் சீமான் @Seeman4TN ஆடு வளர்ப்பு பற்றி சொன்னா நக்கல்மயிறு பண்ணிட்டு இப்ப எதுக்குடா உங்க ஆளுங்க ஆடு , மாடு கொடுக்கறாய்ங்க …?
இனிமே யார் ஆட்சிக்கு வந்தாலும் அண்ணன் சீமான் சொன்னதை கேட்டுத்தான் ஆட்சி செஞ்சாகணும்.
தவெக வுக்கு சொந்தபுத்தி இல்லன்னாலும் ,
சொல் புத்தி கேட்டு நடக்கறதுல நமக்கு மகிழ்ச்சிதாம்லே வர்கீஸூ….😍
@NaamTamilarOrg எனும் எல்லா உயிர்களுக்குமான கட்சி …💪👏
காவிரி நதிநீர் உரிமையின் அடிநாதம்கூட தெரியாத அடிமுட்டாள்களை முதலமைச்சராகவும், அமைச்சர்களாகவும் ஆக்கியதன் விளைவை தமிழ்நாடு எதிர்கொள்ளப் போகிறது.
கர்நாடகாவுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முதலமைச்சர் விஜய்யின் முடிவு முட்டாள்தனத்தின் உச்சம்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், காவிரி நடுவர் மன்றம் வலியுறுத்தியும் கேட்காத கர்நாடக முதலமைச்சர் சிவக்குமார், விஜய் கூறியதும் கேட்டுவிடுவாரா? சட்டத்திற்குக் கட்டுப்படாத கர்நாடக அரசு, பேச்சுவார்த்தைக்குப் பணிந்து வருமா?
காவிரிச்சிக்கலுக்குப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வை எட்ட முடியாது எனும் நிலையை எட்டியப் பிறகுதான், நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, பல கட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம்.
இவ்வளவு ஆண்டுகாலமாகப் போராடித் தக்க வைத்திருக்கும் குறைந்தபட்ச உரிமைகளையும் மொத்தமாகத் தாரைவார்க்கப் போகிறது கேடுகெட்ட தவெக அரசு.
உரிமை கேட்டு போராடும் எம்ஆர்எஃப் (MRF) தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் மக்களுக்கான மாற்றமா?
@CMOTamilnadu@TVKVijayHQ
பெரம்பலூரில் அமைந்துள்ள, எம்ஆர்எஃப் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 730 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு கடந்த 27 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் எம்ஆர்எஃப் நிறுவனம் அவர்களுக்கு உரிய ஊதியம் தர மறுத்து வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும்.
உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் பெருநிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களைத் துன்புறுத்தி அடித்து, மிரட்டும் தவெக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச்சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களைக் கூவி கூவி அழைத்து ஒப்பந்தம் போடும் தமிழ்நாடு அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?
நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா? தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் பேச்சுவார்த்தை நடத்தி நம் தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் நலன் காக்க வேண்டியது தமிழ்நாட்டு அரசின் தலையாயக் கடமையாகும்.
அதை விடுத்து, நாங்கள் மக்களை காக்க வந்த காவலர்கள், மாற்றத்தைத் தர வந்த மனிதப் புனிதர்கள் என்று தற்பெருமை பேசும் தவெக ஆட்சியாளர்கள் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு பெரம்பலூர் எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதோடு, தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் உன்ன மாதிரி பிளாக் டிக்கெட் வித்த கிராக்கி கிடையாது . உன் மேல பிக்பாகெட் கேஸ்லிருந்து என்னென்ன கேஸ் இருக்கு அதை எல்லாம் நீ எப்படி மறைச்சு நாமினேஷன் தாக்கல் செஞ்சிருக்கன்னு விரைவில் நீதி மன்றத்தில் பதில் சொல்லும் காலம் வரும் , அடக்கி வாசி , திடீர் புயல் காற்றில் கோபுரத்தில் போய் ஒட்டிக்கிட்ட குப்பைக்காகிதம் தான் நீ , அதை மறந்துடாத
நான் கல்லூரி முடித்த காலம் முதல் அறிவேன் “சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவது”. பின்னாளில் ஈழத்து போர் காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை கட்டமைத்து கொண்டிருந்தார் என நியாபகம். ஒரு முறை நான் அண்ணா காசரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 20 நாட்கள் மேலாக மதுரையில் முன்னின்று நடத்தி கொண்டி இருந்த போது - ஒரு சிறுவன் பள்ளி சிறுவன் வந்து “அண்ணே 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணே செய்கிறார் - நீங்களும் மதுரையில் உங்கள் குழுவோடு இணைந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும்” என்று. இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் சீமான் யார் என. நீ என்ன பண்ணிடு இருந்த ? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்” என வாயை போலந்து சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திறந்திருப்ப. உனக்கு எப்படி அவரை தெரியும்.
சித்தாந்தம் சண்டைகள் உண்டு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் களத்தில் யார் என கேட்கும் தகுதி எவனுக்கும் இல்லை. முதலில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டு திரிந்து - திடீரென்று அதிஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு போனவனுகளுக்கு இல்லையே இல்லை.
நாடு மக்கள் பொருளாதாரம் சித்ததம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியாட்டர் பக்கம் திரிந்தவனை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் “யார் அவர்” என கேட்க தானே செய்வீர்.. எல்லாம் இந்த மக்களை சொல்லனும்..
#சீமானுடன் எப்போது முரண்படுவோம்?
திமுக கூட தேர்தல் கூட்டணி போனால் முரண்படுவோம்.
தற்ச்சார்பு பொருளாதாரம் பேசாமல் கார்ப்ரேட்களுக்கு ஆதரவாக பேசினால் முரண்படுவோம்.
கனிம வளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாக பேசினால் முரண்படுவோம்.
அரசு பள்ளிகளுக்கு எதிராக தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக பேசினால் முரண்படுவோம்.
டாஸ்மாக் கடைகளுக்கு ஆதரவாகவும் கள்ளுக்கடைக்கு எதிராகவும் பேசினால் முரண்படுவோம்.
திராவிடமும் தமிழ்த்தேசியமும் ஒன்று என்றால் முரண்படுவோம்.
தமிழ்த்தேசிய கொள்கையிலிருந்து விலகினால் முரண்படுவோம்.
ஸ்டாலினை சந்தித்தார் விஜயை சந்தித்தார் என்பதற்கு எல்லாம் முரண்பட முடியாது
💯🤔
மதுக்கடைகளை மூடக்கோரிப் போராடிய மாணவிகள் மீது காவல்துறையை ஏவி கண்மூடித்தனமாக தவெக அரசு தாக்குதல் நடத்துவது கொடுங்கோன்மை!
@CMOTamilnadu@TVKVijayHQ
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கோடாலி கிராமத்தில் பள்ளி செல்லும் வழியில் மாணவச்செல்வங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரிப் போராடிய மாணவிகளின் கையைக் கிழித்து தவெக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆட்சிக்கு வந்தவுடன் கல்விக்கூடங்களுக்கு இடையூறாக இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் மூடிவிட்டதாகக் கூறும் தவெக அரசின் பட்டியலில் அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் இயங்கிய மதுக்கடை இடம்பெறாமல் போனது எப்படி? தமிழ்நாடு முழுவதும் இதுபோல் இயங்கிவரும் மற்ற மதுக்கடைகளை தவெக அரசு மூடப்போவது எப்போது? பள்ளி செல்வதற்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இயங்கிவரும் மதுக்கடைகளை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? கல்வி கற்பதை விட்டுவிட்டு, மதுக்கடைகளை மூட வேண்டும் என்று மாணவக் கண்மணிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்கு ஆளாக்கியது மனிதப் பேரவலம் இல்லையா? மாணவிகள் போராடும் வரை மதுக்கடைகளை மூடாமல் என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? மாணவிகள் போராடிய பிறகும், மதுக்கடைகளை மூடாமல் காவல்துறையை ஏவித் தாக்குதல் நடத்தியிருப்பது கொடுங்கோன்மை இல்லையா?
பிஞ்சு குழந்தைகளின் சின்னஞ்சிறு கைகளைக் காயப்படுத்த தவெக காவல் துறைக்கு எப்படி மனசு வந்தது? இதுதான் மக்கள் விரும்பிய மாற்றமா? இக்கொடுமைகளை நிகழ்த்தத்தான் மக்கள் உங்களை ஆட்சியில் அமர்த்தினார்களா? பெண்கள் பாதுகாப்பிற்கு சிங்கப்பெண்கள் காவல் படையை உருவாக்கிய தவெக அரசு, காவல்துறையிடமிருந்து மாணவிகளைப் பாதுகாக்க என்ன படையை உருவாக்கப்போகிறது?
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் முற்று முழுவதுமாக மூடி முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நீண்டகால முதன்மையான கோரிக்கையாகும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஒழிப்போம் என்று கூறும் தவெக அரசு, டாஸ்மாக் கடைகளில் விற்பது போதைப்பொருள் அல்லாமல் புனிதத் தீர்த்தமா? அதனை மூடுவதில் தவெக அரசுக்கு என்ன தயக்கம்? முந்தைய திமுக, அதிமுக அரசுகள் செய்த டாஸ்மாக் மது விற்பனையை தவெக அரசும் தொடர்வது வெட்கக்கேடானது. போதைப்பொருள் ஒழிப்பு நாளில் உறுதிமொழி எடுத்தால் மட்டுமே ஒழிந்துவிடாது முதல்வர் அவர்களே! டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கான உறுதியான நடவடிக்கையை எப்போது எடுப்பீர்கள்? சட்டம் ஒழுங்கை சீரழித்து, சமூகத்தின் அனைத்து குற்றச்செயலுக்கும் காரணமான மதுக்கடைகளை மூடுவதே போதைப்பொருளை ஒழிப்பதற்கான முதற்படியாகும்.
ஆகவே, அரியலூர் மாவட்டம் கோடாலி கிராமத்தில் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய மாணவிகளைத் தாக்கிய காவல்துறையினர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாணவிகளின் அறப்போராட்டத்தை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமெனவும், முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தவெக அரசின் காவல்துறை தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அன்பு பிள்ளைகள் விரைந்து நலம்பெற விழைகிறேன். கண் முன்னே நடக்கும் அநீதிக்கு எதிராகச் சிறிய வயதிலும் சமூகப் பொறுப்புணர்வோடு தீரத்துடன் போராடிய அரியலூர் மண்ணின் வீரமகள்களுக்கு என்னுடைய அன்பையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தமிழ் இறையோன், எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து, தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!
தமிழ் இறையோன் முருகப்பெருமானை மையப்படுத்தி "என்.டி.ஆர்-திரிவிக்ரம் என்ற பெயரில் ஆந்திராவில் தயாரிக்கப்படும் திரைப்படத்தில், ‘தமிழர் இறையோன்’ முருகன் வடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாவதை உறுதிப்படுத்தும் விதமாகப் படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. கலைப்படைப்பு என்ற பெயரில் அடிப்படை புரிதலற்று, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளை உண்மையெனக் கட்டமைக்க முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மூத்த தொன்ம வரலாறு கொண்ட தமிழப்பேரினம், தனக்கென்று தனித்த கலை, இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல், மெய்யியல் கோட்பாடு, இறை வழிபாடு என யாவற்றையும் கொண்டதாகும். இயற்கையை தொழுது போற்றுவதும், புகழோடு மறைந்த மூத்தோரை நடுகல்லிட்டு வணங்குவதும் தமிழரின் ஆதிமரபாகும். அதனடிப்படையில், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த தமிழ் முன்னோர்களையும், மூத்தோர்களையும் காலங்காலமாக தெய்வமாகப் போற்றி வணங்கி வருதல் தமிழரின் மெய்யியல் கோட்பாடாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே தமிழர்களின் ஐவகைத் திணை நிலங்களுள் முதன்மை நிலமாகத் திகழும் குறிஞ்சித்திணையின் தலைவன் மூத்தோன் முருகனை முப்பாட்டன் என அழைப்பதும், வணங்கிப் போற்றுவதும் தமிழரின் மரபு சார்ந்த தொடர்ச்சியான வழிபாட்டு முறையாகும்.வரலாற்றின் வீதிகளில் தொடர்ச்சியாக அடிமைப்படுத்தப்பட்டு, அழித்தொழிக்கப்பட்ட இனத்தின் மறைக்கப்பட்ட வீரவரலாற்றையும், பண்டைய அடையாளங்களையும் மீட்டெடுக்கும் பெரும்பணியைச் செய்து மீண்டெழத் துடிக்கும் நேரத்தில், கற்பனை படைப்புகள் மூலம் இதுபோன்று உண்மைக்குப் புறம்பான திரிபுகள் திணிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
தனக்கெனத் தனித்த அடையாளத்தையோ, பண்பாட்டுக்கூறுகளையோ, வழிபாட்டு முறைமைகளையோ, இறையியல் மரபுகளையோ கொண்டிராத மாற்றினங்கள் தமிழின முன்னோர்கள் சிவன், முருகன், கண்ணன், திருமால், கொற்றவை என யாவற்றையும் தங்கள் கடவுளரென திருடிச்சேர்த்துக் கொண்டனர். தமிழர்த் திணை நிலங்களின் வாழ்ந்த தெய்வங்கள் மீதும், தமிழரின் பண்பாட்டு விழுமியங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தி மொத்தமாய் அபகரித்துவிட்டனர். அதன் விளைவாக, முருகனை சுப்ரமணியனாக்கினார்கள். கண்ணனை கிருஷ்ணனாக்கினார்கள். திருமாலை விஷ்ணுவாக்கினார்கள். கொற்றவையைப் பார்வதியாக்கினார்கள். சிவனை ருத்திரனாக்கினார்கள். தமிழர் முன்னோர்களை மொத்தமாய்ப் புராணப்பாத்திரங்களாக மாற்றி நிறுத்தினார்கள். கடவுளையே கடன் கொடுத்த இனத்தின் பிள்ளைகள் நாங்கள்.
இரவலாக எங்களின் கடவுளர்களை எடுத்துக்கொண்டு போன பிறகும், இன்றளவும் முழுதாய் அபகரிக்க முடியாமல் தமிழர்களுக்கென்ற தனிப்பெரும் இறையோனாக இருப்பவர் தமிழ்க்கடவுள் முப்பாட்டன் முருகப்பெருமான். தொன்றுதொட்ட தமிழ்ப்பண்பாட்டோடு, வாழ்வியலோடு ஒன்றர கலந்த தமிழர்களின் மிக மூத்த ஆதி இறைவன் முருகப்பெருமான். அவரையும் தமிழ்ப்பேரினம் இழக்கவிட மாட்டோம். தமிழ்தான் முருகன்; முருகன்தான் தமிழ்; இரண்டும் பிரிக்க முடியாதது. தமிழர் இறையோன் முருகன் என்பது எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்த ஒன்று. முருகன் தமிழர்களின் முப்பாட்டன் என்பது அரசியல் அல்ல; அது எங்கள் பண்பாடு, வாழ்வியல்; தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், வரலாற்றை தவறாக திரித்து கட்டமைத்து இழிவுப்படுத்த எவருக்கும் உரிமை இல்லை.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுபடை உள்ளிட்ட பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், சிலப்பதிகாரம் சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், செவ்வேள், சேவலங்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அணங்கு, மலைவான், விறல்வேள், மலை உறைக்கடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்மருகன் என்று பற்பல செந்தமிழ் பெயர்களால் முருகனைப் போற்றிப் புகழ்கின்றன. மேலும், தேவாரம், திருவாசகம், திருப்புகழ் உள்ளிட்ட பற்பல பக்தி இலக்கியங்களும் தமிழ் இறையோன் முருகனை போற்றுகின்றன. சங்க இலக்கியங்களில் வேலன் வெறியாட்டு என்ற தொல்குடி மக்களின் சடங்கும் வியந்து குறிப்பிடப்பட்டுள்ளது.
குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று தமிழ் கூறும் முதுமொழியை மெய்ப்பிக்கும் விதமாகவே முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழ்நாட்டின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன. எனவே, முருகன் தமிழர்களுக்கு உரித்தான தனிப்பெருங்கடவுள் என்ற பேருண்மையை நிறுவும் வல்லமை தமிழுக்கும், தமிழர்களுக்கும் எப்போதும் உண்டு. மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கின்றேன்.
(1/2)
கன்னியாகுமரி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@DAEIndia@moefcc@byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக் கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூடிய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடைசூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் கொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்கள் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் தமிழ்நாடு அரசு – அதானியின் அல்லேரி நீரேற்றுப் புனல்மின் திட்டத்தை உடனடியாக ரத்து செய்க!
@CMOTamilnadu@drtkprabhu_TVK@CTR_Nirmalkumar@moefcc@byadavbjp
தமிழ் சமூகத்தின் நீண்ட பண்பாட்டுடன் தொடர்புடைய கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் முக்கிய அங்கமான ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களையும், அரிய உயிரினங்களையும் அழித்து, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க முயலும் தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத, சூழல் விரோத நடவடிக்கையை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்குட்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்திற்காக 25.11.2025 அன்று தமிழ் நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி ஹைட்ரோ போர்டின் லிமிடெட் (ADANI HYDRO ENERGY FOURTEEN LIMITED) நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.
கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி இலாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழ்நாட்டின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. தமிழர்களின் வாழ்வாதாரத்தை விட, கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபம் தான் இந்த அரசுக்கு முக்கியமா என்கிற கேள்வி எழுகிறது.
இந்தத் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள 337.452 எக்டேர் நிலப்பரப்பில் 228.352 எக்டேர் அரசம்பட்டு காப்புக்காடாகும். மேல் மற்றும் கீழ் நீர்த்தேக்கங்கள் அமைப்பதன் மூலம் இந்த அடர்ந்த காடுகள் நீரில் மூழ்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.
அரசம்பட்டு காப்புக்காடு வெறும் மரங்கள் நிறைந்த பகுதியல்ல; ஆயிரக்கணக்கான உயிரினங்களின் வாழ்விடமாகும். குறிப்பாக சாம்பல் இருவாச்சி, வெண்முதுகு ஆந்தை, புள்ளி ஆந்தை உள்ளிட்டப் பல அரிய பறவைகள், உலகிலேயே ஜவ்வாது மலையில் மட்டுமே காணப்படும் ஜவ்வாது இலைச்சருகு அரணை (Jawadhu leaf-litter skink), இலங்கை மரந்தாவும் பாம்பு, மலபார் குழி விரியன், எறும்புத்தின்னி, தேவாங்கு, மலபார் மலை அணில், செந்நாய், காட்டுமாடு மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டக் கரடிகள் உள்ளிட்ட பல அரிய உயிரினங்களின் புகலிடமாக இப்பகுதி விளங்குகிறது. இவ்வளவு முக்கியமான உயிரியல் வளத்தை அழிப்பது இயற்கைக்கு எதிரான வரலாற்றுப் பிழையாகும்.
அல்லேரி மலையிலிருந்து பாயும் நீரை நம்பியே மலையடிவாரப் பகுதிகளில் உள்ள ஏரிகள், கிணறுகள் மற்றும் விவசாய நிலங்கள் செழித்து வருகின்றன. புவிசார் குறியீடு (GI) பெற்ற இலவம்பாடி முள் கத்தரிக்காய் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளும் இந்த மலைகளில் இருந்து கிடைக்கும் நீராதாரத்தைச் சார்ந்தே உள்ளன.
மேலும், கீழணையிலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றிலிருந்து குழாய்கள் மூலம் நீர் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் குழாய்கள் செல்லும் வழியிலுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, ஆண்டிற்கு மிகக் குறுகிய காலமே நீர் ஓடும் பாலாற்றின் நீர்வளமும் சுரண்டப்படும் அபாயம் உள்ளது.
சூழலியல் பாதிப்பு ஒரு புறம் இருக்க, பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இத்திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. நிறுவனத்தின் இலாபத்துடன் சேர்ந்து தமிழ்நாடு அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10னைத் தாண்டும். அதே நேரத்தில், நவீன தொழில்நுட்பத்தில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் மின்கல சேமிப்பு வசதிகள் மூலம் குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது எந்த நியாயமும் இல்லை.
எனவே அல்லேரி, தென்மலை, ஆழியார் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கினாலும், மாநில வனத்துறை இந்தத் திட்டத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும்.
தமிழர்களின் மண்ணையும், மலைகளையும், நீரையும், காடுகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபத்திற்காக அழிக்க முயன்றால், அதை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி அனுமதிக்காது. இயற்கையையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் காக்க நாம் தமிழர் கட்சி மக்களைத் திரட்டி மக்களாட்சி வழியில் மாபெரும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து இந்தத் திட்டத்தை முறியடிக்கும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
தனது உடன்பிறந்த தங்கை வித்யாவின் மரணத்துக்கு இணையாகப் பாதிப்பை ஏற்படுத்தியது தங்கை அனிதாவின் மரணம் என விக்கிரவாண்டி மாநாட்டில் உருகினார் தவெகவின் தலைவர் விஜய்.
ஜூன் 17 - அனுகீர்த்தனா ( 19 வயது )
ஜூன் 19 - கோபிகா ( 19 வயது)
ஜூன் 20 - ரோஷினி ( 19 வயது)
ஜூன் 20- வெற்றியானந்தம் ( 20 )
கடந்த ஒரு வாரத்திற்குள் நீட் தேர்வால் இத்தனைப் பிஞ்சுகள் கருகியிருக்கிறது.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் இறந்தப் பிஞ்சுகளுக்கு இரங்கல் தெரிவித்தாரா? அம்மரணங்கள் குறித்து வாய்திறந்தாரா?
மேகதாது அணையை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்க தவெக அரசு கோருவது நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்து!
@CMOTamilnadu@TVKVijayHQ
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயலை எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் ஆளும் தவெக அரசின் போக்கு மிக மிகத் தவறான முடிவாகும். நடுவர் மன்றம் கோரும் திருத்தத்தை சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சியான திமுக சேர்க்கக் கோரியதும், அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டு, திருத்தித் தீர்மானத்தை இயற்றியிருக்கும் செயல்பாடு ஆளும் தவெக அரசுக்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் காவிரி நதிநீர் உரிமையில் அக்கறையோ, அடிப்படைப்புரிதலோ இல்லை என்பதையே காட்டுகிறது. இத்தோடு, கடந்த திமுகவின் ஆட்சியிலேயே நடுவர் மன்றம் கோரிக் கடிதம் எழுதப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும், நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதல்வர் விஜய்யும் கூறியிருப்பது கூடுதல் அதிர்ச்சி அளிக்கிறது. மேகதாது அணை விவகாரத்தில் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை நாடினால், அது தற்போதிருக்கும் நிலையை இன்னும் மோசமாக்கும் பேராபத்தாக முடியும் எனும் குறைந்தபட்சப் பார்வையும், தொலைநோக்குச் சிந்தனையும்கூட இல்லாது, முன்வைக்கப்படும் நடுவர் மன்றக் கோரிக்கையை மிகக் கடுமையாக எதிர்க்கிறேன்.
கீழ்ப்பாசன மாநிலங்களின் அனுமதியும், ஒப்புதலும் இல்லாது, மேல்பாசன மாநிலங்கள் அணை உள்ளிட்ட கட்டுப்பானப்பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ச்சிக்கலில் பின்பற்ற வேண்டிய விதி; சட்டம். இதனை உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டல்களும் உறுதிசெய்கின்றன. கர்நாடகத்தைப் பொறுத்தவரை எல்லா விதிகளையும், சட்டங்களையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு அடாவடித்தனம் செய்வதும், முழுக்கத் தான்தோன்றித்தனமாகச் செயல்படுவதுமானப் போக்குகளில்தான் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. கபினி அணை, ஹேமாவதி அணை, ஹாரங்கி அணை உள்ளிட்டவை யாவும் விதிகளுக்கும், சட்டத்திற்கும் புறம்பாகவே கட்டப்பட்டது. விதிகளுக்கு மாறாகவே கர்நாடகத்தின் பாசனப்பரப்பும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன் நீட்சியாகவே, தற்போது மேகதாதுவிலும் அணை கட்டி, காவிரி நதிநீர் உரிமையை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது கர்நாடக அரசு. மொத்தத்தில், தமிழ்நாட்டை மாறி ஆண்ட ஆண்ட திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் காவிரி உரிமை காவு கொடுக்கப்பட்டது என்றே கூறலாம்.
தமிழ்நாட்டு அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிப்பது ஏற்கனவே இருக்கும் விதிகளின்படியே சட்ட விரோதம்தான் எனும்போது புதிய நடுவர் மன்றம் என்பது தேவையில்லாத ஒன்றாகும். ஒருவேளை, நடுவர் மன்றம் புதிதாக அமைக்கப்பட்டால் சிக்கலை மேலும் நீட்டிக்கவும், இன்னும் பல காலம் அதனை இழுத்துக்கொண்டே போகவும் வழிவகை செய்திடும். ஒருவேளை, அந்நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மேகதாது அணை கட்ட ஒப்புதல் வழங்குமானால் சட்டப்பூர்வமாக இருக்கும் கடைசி வாய்ப்பையும் தமிழ்நாடு இழக்க நேரிடும். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில், காவிரி நதிநீர் உரிமைகளுக்கென நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு, நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு, தீர்ப்பு அரசிதழில் வெளியிடு, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆணையம் எனப் பலகட்டப் படிநிலைகளைக் கடந்து வந்திருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, 177.25 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு தர வேண்டும். அதனைத் தர மறுத்து சண்டித்தனம் செய்து வரும் கர்நாடக அரசு மழை, வெள்ளக் காலங்களில் பெய்யும் மழைநீரை வெளியேற்றும் வடிகாலாக மட்டுமே தமிழ்நாட்டை இதுவரைப் பயன்படுத்தி வருகிறது. மற்றபடி, தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய தண்ணீரை உறுதிசெய்ய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்பு என எல்லாமிருந்தும் கர்நாடக அரசு அவற்றை ஏற்க மறுத்து அட்டூழியம் செய்கிறது.
காவிரியாற்றின் `குறுக்கே அணை கட்டுவதையும் தடுக்கவும், தமிழ்நாட்டுக்கு உரிய நதிநீர் பங்கீட்டைத் தரவும் சட்டவிதிகள் வலியுறுத்துகின்றன. நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வழிகாட்டுகின்றன. இருந்தபோதிலும், அவற்றைப் புறந்தள்ளி எதேச்சதிகாரப்போக்கோடு நடந்துகொள்கிறது கர்நாடக அரசு. தமிழ்நாட்டுக்கான உரிய நதிநீர் பங்கீட்டையும், நீதியையும் உறுதிசெய்ய சட்டப்பூர்வக் காரணிகள் இருக்கின்றன. அவற்றைக் கர்நாடக அரசு ஒருநாளும் மதித்து ஏற்பதில்லை என்பதுதான் இங்கிருக்கும் முதன்மைச்சிக்கல். உண்மை இவ்வாறிருக்க, மேகதாதுவுக்கு எதிராக நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் கோரிக்கை என்பது துளியும் ஏற்புடையதல்ல; அது தேவையற்ற சிக்கலையே புதிதாய் உருவாக்கும். நடுவர் மன்றம் கோரி இயற்றப்பட்ட இத்தீர்மானம் முழுக்க முழுக்க தமிழின விரோதமாகும். அதனைக் கண்டித்து வரும் 27.06.2026 அன்று தஞ்சாவூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தலைமையில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தீர்மான நகலெரிப்புப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியும் பங்கேற்கிறது எனப் பேரறிவிப்புச் செய்கிறேன்.
ஆகவே, காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பதாகக் கூறி, நடுவர் மன்றம் அமைக்கக் கோரும் முடிவைக் கைவிட்டு, அத்தீர்மானத்தைப் பின்வாங்கி, புதிய தீர்மானத்தை இயற்ற வேண்டுமெனவும், அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி விவாதித்து, தமிழ்நாட்டுக்குரிய காவிரி நதிநீர் பங்கீட்டு உரிமையை உறுதிசெய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய சட்டப்போராட்டங்களையும், ஆக்கப்பூர்வப் பணிகளையும் தொடங்கிட வேண்டுமெனவும் தவெக அரசுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பொறுப்பேற்பு ( Accountability ) என்றால், என்னவென்றே தெரியாதா தவெகவுக்கு?
கரூர் பேரவலத்துக்கு இந்த நொடிவரைப் பொறுப்பேற்கவில்லை.
சட்டம் ஒழுங்குக்கும் முந்தைய ஆட்சியைக் கைக்காட்டியே தப்பித்துப் போக முற்படுகிறார்கள்.
கடைசியில் மின்வெட்டுக்கும் Fuse Carrier ஐ யாரோ சிலர் திருடிச் சென்று விடுவதாகவும், அதனால்தான் மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறித் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.
சென்னை எனும் இவ்வளவு பெரிய மாநகரத்தில் ஒருசில தனிநபர்கள் சேர்ந்து Fuse Carrierஐ திருடிச் சென்றுவிடுவதால் மாநகரம் முழுமைக்கும் மின்வெட்டை ஏற்படுத்திவிட முடியுமா?
இதென்ன விஜய் திரைப்படமா?
'கத்தி' திரைப்படத்தில் சிலர் விஜய்யோடு சேர்ந்து தண்ணீர் குழாய்களுக்குள் உட்கார்ந்துக் கொண்டு சென்னையை ஸ்தம்பிக்கச் செய்வார்களே, அதுபோல சிலர் Fuse Carrierஐ திருடி சென்னை மக்களையே ஸ்தம்பிக்கச் செய்ய?
சமூக வலைத்தளங்களில் கூறி வந்த ஜால்சாப்பை இப்போது சட்டமன்றம்வரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது தவெக.
மின்வெட்டுக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிந்தால்தானே தீர்வை நோக்கி நகர முடியும்; இவர்கள் சிக்கலைத் தீர்க்க எங்கு நினைக்கிறார்கள்? பொய்யை, புரட்டைச் சொல்லி மக்களை ஏமாற்றவும், மடைமாற்றவும்தானே முயற்சிக்கிறார்கள்!
பிறகெங்கு, விளங்குவதற்கு?