நாம் சிறுத்தைகள்:
பயணித்துக் கொண்டே இருப்போம்.
எழுச்சித்தமிழர் திருமா...
விமர்சனம் செய்பவர்கள் விமர்சனம் செய்து கொண்டே இருக்கட்டும்.
பறக்க நினைத்தால் பறந்து விடுங்கள்
ஓட நினைத்தால் ஓடிவிடுங்கள்
நிற்க நினைத்தால் நின்று விடுங்கள்
பேச நினைத்தால் பேசி விடுங்கள்
எழுத நினைத்தால் எழுதி விடுங்கள்
சொல்ல நினைத்தால் சொல்லிவிடுங்கள்
ஆனால் விமர்சனம் என்ற போர்வையில் நிற்பவர்களிடம் நின்று விடாதீர்கள்
அவர்கள் விமர்சனம் செய்து கொண்டு அதே இடத்தில் நின்று கொண்டு தான் இருப்பார்கள்
அவர்களால் வேறு எதுவும் சாதிக்க முடியாது
நாம் சிறுத்தைகள் பயணித்துக் கொண்டே இருப்போம். வாருங்கள் களத்திற்கு மிகப்பெரிய ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்
இந்திய அரசே!
தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கு!
மதுவிலக்கு சட்டத்தை இயற்று!
தமிழ்நாடு அரசே!
மதுக்கடைகளை இழுத்து மூடு!
#மதுவைஒழிப்போம்_மனிதவளம்காப்போம்
சமத்துவம் வேண்டும் என்று கருதுகின்ற சனநாயக சிந்தனை போக்கு, சாதி ஒழிய வேண்டும் என்ற சிந்தனை போக்கு இவை பாழ்பட்டு போகாமல் அடைகாப்பதும், அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு போய் சேர்ப்பதும்தான் இப்போதைக்கு நாம் செய்ய வேண்டிய பணி..
#முனைவர்தொல்திருமாவளவன்#விசிக
கேட்டுச்சா. தலித் பிரச்சினைய பல கோடிக்கு வியாபாரம் செய்பவனும் , களத்தில் இருந்து வேலை செய்பவரும் ஒன்று இல்லை. என்ன செய்யனும், எத செய்ய கூடாதுனு என் தலைவருக்கு அறிவுரை சொல்ல யார் நீ .
எனக்கு ஒரே ஒரு மையம் அது திருமா @thirumaofficial மையம் தான்.. வந்துடனுங்க 🤐🤐
நாடே கொண்டாடும்
"வாழை"!
கண்ணீரில்
கருக்கொண்ட காவியம்.
கலையுலகே
புருவம் உயர்த்தும்
கலைநயம்.
உழைக்கும் மக்களுக்கு
வாழைக்குலைகள் மட்டுமல்ல
வாழ்க்கையே பெருஞ்சுமை.
புளியங்குளத்தில் முளைவிட்ட
பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால்
மாரியின் வேர்களில் மார்க்சியம்.
போதாது கூலியென போர்க்குரல் வெடித்தெழும்
பொருளியல் முரண் விளக்கும்
புரட்சிகரப் படைப்பு!
வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும்
வரலாற்றுக் குறிப்பு!
விபத்தில்தான் பலி
என்றாலும்,
இது வெண்மணி வெங்கொடுமையின்
வேறொரு வடிவம்.
பச்சிளம் குழந்தை
பருவத்திலும்
குடல் முறுக்கும்
பசியடக்கி
கொடுந்துயர
தடைநொறுக்கி
வெகுண்டெழுந்து
போராடி
வெற்றி இலக்கை
எட்டித் தொட்ட
ஒரு பிறவிப்போராளியின் தன்வரலாறு.
இது மாரியின்
மழலைப்பருவ
வரலாறு எனினும்
ஒரு சமூகத்தின் உயிர்வலி!
@mari_selvaraj #Vaazhaimovie @
நாகப்பட்டினம் அருகேயுள்ள காமேஸ்வரம் என்னுமிடத்தில் அண்மையில் விசிக கொடியேற்றுவிழா நடைபெற்றது. அனுமதியின்றி ஏற்றப்பட்டதென வருவாய்த்துறை அதிகாரி வட்டாட்சியர் காவல்துறை அதிகாரிகளின் துணையோடு அக்கொடிக்கம்பத்தை அகற்றியுள்ளனர்.
அங்கே பிற கட்சிக் கொடிக்கம்பங்கள் எப்படி நிறுவப்பட்டுள்ளனவோ அப்படியே விசிக கொடிக்கம்பமும் நிறுவப்பட்டது. ஆனால், ஒரு சில அதிகாரிகள் வன்மத்துடன் விசிக கொடிக்கம்பத்தை மட்டும் அப்புறப்படுத்தியுள்ளனர்.
இச்செயலைக் கண்டித்து இன்று சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷா நவாஸ் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
#விசிக
தன் வளர்ச்சிக்கு முன் தன்னை சுற்றி இருப்பவர் வளர வேண்டும் என்று கருதும் நற்குணம் உள்ளவர், அன்பின் வழியிலே மட்டும் என்னை ஈற்கச்செய்த என் ஆருயிர் அண்ணன் @Saravanamurasu1 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️😍🔥 அண்ணா