திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,
இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான திரு. ராபர்ட், தலைவர் திரு. ரெக்ஸ் ஆனந்தகுமார், திரு. கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.
சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் திரு. @mkstalin ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து , மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது நீங்கள் பேசியதை எல்லாம் நீங்கள் மறந்திருக்கலாம். கேட்ட ஆசிரியர்கள் யாரும் மறக்கவில்லை @mkstalin அவர்களே...
எதிர்க்கட்சியாக வக்கனையாக பேசிவிட்டு,
ஆளுங்கட்சியான பிறகு நிறைவேற்ற வக்கில்லாமல்,
போராடும் ஆசிரியர்களை சந்திக்க தெம்பு, திராணி இல்லாத இந்த பொம்மை முதல்வருக்கு,
ஆட்சியில் இருப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?
#DMKFailsTN #ByeByeStalin
"ஊதிய முரண்பாடுகளை நீக்கிட வலியுறுத்தி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக முதலமைச்சர் அலட்சியப்படுத்துவதை கண்டிப்பதோடு - போராடுபவர்களை அழைத்துப் பேசி, சுமூகமான தீர்வுகாண வேண்டுமென வலியுறுத்துகிறேன்"
- கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிக்கை
ஜனநாயக குரலுக்கு பதிலாக தண்டனை,
நியாயக் கோரிக்கைக்கு பதிலாக பழிவாங்கல்!
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வதே உங்கள் ஆட்சியின் சமூகநீதியா?
#NewsTamil24x7JustNow | சம வேலைக்கு சம ஊதியம் தாங்க
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் திடீர் போராட்டம்
திமுக அளித்த வாக்குறுதிபடி சமவேலைக்கு சம ஊதியத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடும் இடைநிலை ஆசிரியர்கள்
#Chennai#Teachersprotest#DMKGovt #NewsTamil #Tamilnews #NewsTamil24x7
#NewsTamil24x7JustNow | போலீசார் - ஆசிரியர்கள் தள்ளுமுள்ளு
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் சென்னை மெரினா காமராஜர் சாலை ஸ்தம்பித்தது
பேரணி செல்ல முயன்ற ஆசிரியர்கள் போலீசாரை தள்ளி விட்டு சென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் தள்ளுமுள்ளு
#Chennai #Teachersprotest #DMKGovt #NewsTamil #Tamilnews #NewsTamil24x7
உரிமையைக் கேட்டால் அடக்குமுறைதான் விலையா?
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி அறவழியில் போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் 311வது வாக்குறுதியாக கொடுத்த சம வேலைக்கு சம ஊதியம் எனும் அடிப்படை உரிமைக்காக போராடிய ஆசிரியர்களைக் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றுள்ளது காவல் துறை. இது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றவது மக்கள் விரோத திமுக ஆட்சியின் வாடிக்கையாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அறவழி போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து, அடக்குமுறையைத் தொடர்ந்து செய்து வருகிறது திமுக அரசு. எனவே, கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்து, சுமூகமான தீர்வைக் காண முன்வர வேண்டும்.
#NewsTamil24x7Breaking | ஆசிரியர்கள் வலுக்கட்டாயமாக கைது
சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தை முற்றுகையிட வந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
#NewsTamil#Tamilnews#NewsTamil24x7 #TemporaryStavesProtest #PermanentJobSeeking
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, சென்னையில் இன்று போராடிய இடைநிலை ஆசிரியர்கள் மீது, திமுக அரசு அடக்குமுறையை ஏவி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பொய்யான தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்து பொதுமக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் ஆகியும், எந்த வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது. திமுக தனது தேர்தல் வாக்குறுதி எண் 311 -ல், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவோம் என கூறியிருந்ததை நிறைவேற்றக் கோரி தமிழக பாஜக சார்பில் பலமுறை வலியுறுத்தி வருகிறோம்.
மேலும், இடைநிலை ஆசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், கவன ஈர்ப்புப் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தியும், திமுக அரசு அவர்களைக் கண்டுகொள்ளாமல் வஞ்சித்து வருகிறது. தங்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் மீது, கைது நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை ஒடுக்குவதையே முழு நேரப் பணியாக செய்து வருகிறது திமுக அரசு.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளையே ஐந்து ஆண்டுகளாக நிறைவேற்றாமல், மீண்டும் ஒரு தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்குக் கூச்சமாக இல்லையா?
வேலைக்கேற்ற ஊதியம் வழங்குவதில் விடியா அரசுக்கு என்ன சிக்கல்?
சந்து பொந்துகளில் எல்லாம் சமத்துவம் பேசும் @arivalayam அரசு, சமவேலைக்கு சமஊதியம் கேட்டுப் போராடிய இடைநிலை ஆசிரியர்களின் மீது அடக்குமுறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கடந்த தேர்தலின் போது இடைநிலை ஆசிரியர்களுக்கு சமஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி எண் 311-இல் கூறியதை மறந்துவிட்டு ஆசிரியர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவரையும் சமவேலைக்கு சமஊதியம் கேட்டுப் போராடும் அவல நிலைக்குத் தள்ளுவது தான் நாடு போற்றும் நல்லாட்சியின் அம்சமா?
வீண் செலவுகளுக்கும் வெற்று விளம்பரங்களுக்கும் பணத்தை வாரி இறைக்கும் @arivalayam அரசுக்கு அரசு ஊழியர்களின் உழைப்புக்கேற்ற ஊதியத்தை வழங்குவதற்கு மட்டும் கசக்கிறதா? காலியாகக் கிடக்கும் அரசுப் பணியிடங்களைச் சொன்னபடி நிரப்பாமல், பணியில் இருப்பவர்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை விடுவிக்காமல் ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே பழுதாக்கியது தான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை.
இப்படி மக்களின் வரிப்பணத்தையும் அரசு ஊழியர்களின் ஊதியப் பணத்தையும் கொள்ளையடித்தது மட்டுமன்றி, அரசின் கஜானாவை மொத்தமாக காலி செய்த திமுக அரசை வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் துரத்தியடிக்கப் போவது நிச்சயம்!