தமிழ்நாட்டில் இன்னொரு #CustodialDeath நடந்துள்ளது.
“இனிமேல் பொதுமக்கள் மேல் காவலர்கள் கை வைக்கவே கூடாது - முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு என தகவல்!” எனும் பொய்ச் செய்திதான் பரப்பப்படுமே தவிர, இறந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை எழவில்லை.
#Thoothukudi
NEET தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் @mkstalin அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!
ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே NEET போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!
அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக #DMK என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும்.
#BanNEET #AbolishNEET
தமிழ்நாடு முழுவதும் மாணவர்களை காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக கைது செய்துவரும் நிலையில் - ஜனநாயகன் பார்க்க சென்றிருக்கிறார் முதலமைச்சர்..
ரோம் பற்றி எரியும் போது பீடில் வாசித்த நீரோ மன்னனை த.வெ.க ஆட்சி மீண்டும் மக்களுக்கு காட்டி இருக்கிறது!
“கல்வி மட்டுமே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்” என்றார் முத்தமிழ் அறிஞர். அவரது கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ள “அருள்வான்” திரைப்படத்தில் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் “முத்துவேல்” கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் தம்பி @arulnithitamil நெகிழ்ச்சியாக இருந்தது.
இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்…
அருள்வான் திரைப்படத்தை பார்த்தபோது, நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கான பள்ளிகளை நேரில் ஆய்வுசெய்த நினைவுகள் மனதில் வந்து சென்றன.
#Education
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
கழகத் தலைவர் @mkstalin அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கழக இளைஞரணி இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இளைஞரணியின் செயலாளர் மாண்புமிகு @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலில் இளைஞரணி தம்பிகள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள். அடுத்த தலைமுறை திராவிட அரசியலின் OG-ஆக தம்பிகள் திகழ்வதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. அத்தளத்தில் தடம் பிறழாமல் நடப்போம்.
என்னை தாலாட்டியும் கண்டித்தும் செதுக்கியது இளைஞரணிதான் என்பதிலும் பேருவகை அடைகிறோம்.
@dmk_youthwing
#DMKYW #47_Years_of_DMKYW
தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள்.
ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.
இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது இந்த அரசு.
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
#Policerecruitment
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers
தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கினை நிலைநாட்ட முடியாத தங்களின் நிர்வாகத் தோல்வியை மறைக்க என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறது #SofaModel அரசு.
அதன் ஒரு பகுதியாக அவதூறு வழக்கில் முன்னாள் அமைச்சர் - மூத்த சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் @ARROffice அவர்களை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.