கிளை செயலாளர் ADMK IT wing union President
PNp SLM & worked FA Of Yercaud Attur Gangavali ACs 2021 TN Election MSA(SunilTeam)& Same 3 AC Intern in Ipac 2019 PC
Tamil Nadu has lost the opportunity to increase their political power and its rightful share of 20 more MP seats.
We have not only lost the golden opportunity given by Honourable Prime Minister Thiru. @narendramodi Avl to
get 50% more seats ..,
but @mkstalin being a puppet and not understanding the crux of the opportunity, you blindly opposed it.
If delimitation had been done based on 2011 census, we would have lost 9 MP seats. Because of your mindless opposition to the bill, the delimitation will now be based on 2026 census and we will lose even more MP seats.
Further, in 1998, Hon’ble Puratchi Thalaivi Amma, has brought women’s reservation bill under then PM Vajpayee ji leadership. During that time, your own INDI Alliance partners ensured that the bill did not get passed. This time around, you have killed that very spirit by opposing the bill and have done greatest injustice not only to #TamilNadu but also to the women all across India.
Thiru. @mkstalin Avargale, what exactly are you celebrating? The damage you have done to Tamil Nadu’s future or the greatest opportunity that you ruined for the women empowerment ?
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK
*ஆத்தூர் ராசிவிதைகள் குழுமத்தின் திருமண நிகழ்வில்..!!*
*மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் முன்னாள் முதல்வர் மண்ணின் மைந்தர் குடிமராமத்து நாயகர் புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்..*
💐💐🙏🙏💐💐
This is so true. Allegations concerning the digital strategies of PEN Media, Aadhav Arjuna’s Voice of Common, Route Media, the war room reportedly associated with Annamalai’s wife, Congress strategist Sunil Kanugolu and PK’s I-PAC warrant an independent investigation.
Amplifying political propaganda and fan pages while suppressing factual reporting, legitimate criticism and public voices threatens democracy. Is the Cyber Crime Branch functioning independently or under political influence?
The Union I&B Minister, Central Government and Hon’ble Courts must examine these allegations.
Freedom of expression cannot be selectively protected for political convenience. Democracy belongs to the people, and governments must function according to the Constitution, not the interests of political parties and their digital propaganda machinery and to spread fake narratives.
.@AmitShah .@AmitShahOffice .@ReddySudhakar21 .@PMOIndia .@narendramodi .@EPSTamilNadu .@NainarBJP .@AshwiiVaishnaw .@NitinNabin .@rammadhav_ .@blsanthosh
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவினை அரசு செயல்படுத்த வேண்டும் என்று நான் ஏற்கனவே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த அரசிற்கு அறிவுரையாக கூறியிருந்தேன்.
அதேபோல் இன்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், தமிழக வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக திருப்பரங்குண்றம் மலைப் பகுதியின் பாதுகாப்பை சி.ஆர்.பி.எப்-வசம் ஒப்படைத்துள்ளது. அறங்காவலர் குழுவையே கலைத்து, திருப்பரங்குன்றம் திருக்கோயில் நிர்வாகத்தை மேற்கொள்ள மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்துள்ளது.
உச்சநீதிமன்றம் பயன்படுத்தியுள்ள சில சொற்களை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன்-
“Administrative Chaos, brazen and wilful disobedience, flagrant disregard, calculated affront of both Constitutional Courts”
மேலும், “The prevailing situation needed to be dealt with an iron hand, failing which it could lead to CONSTITUTIONAL CHAOS” என்று கூறியுள்ளது.
இதுபோன்ற வார்த்தைகளை ஒரு அரசு நோக்கி இவ்வளவு காட்டமாக உச்சநீதிமன்றம் தெரிவித்த வரலாறு சமீபத்தில் இல்லை.
இப்படி ஒரு அசிங்கம் நம் மாநிலத்திற்கு தேவையா? தமிழக சட்டத்துறைக்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தி உள்ள ஆச்சரியக்குறி தவெக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
சட்டம், அரசியலமைப்பு, உச்சநீதிமன்றம்- இவையெல்லாம் மாண்புக்குரியவை. அவை நீங்கள் சிறுபிள்ளைத்தனமாக விளையாடும் Windmill, Car பொம்மைகளைப் போல அல்ல என்பதை @actorvijay உணரவேண்டும்.
இனியாவது உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பினை மூத்த வழக்கறிஞர்களுடன் கலந்தாலோசித்து உரிய தீர்வு காண இந்த வாடகைக்கால் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
சார்பட்டா பீடி தாத்தா மாதிரி தான் எடப்பாடியின் அதிமுக சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிட்டு இருக்கு...
எதிர்க்கட்சியா அடிச்சு ஆட வேண்டியது திமுக தான். ஆனா ஏனோ கொஞ்சம் அடக்கியே வாசிக்குது. IT விங் உட்பட எல்லாமே அப்படி தான் இருக்கு. அது மேல அவங்க ஆட்களுக்கே செம்ம அதிருப்தி.
அதோட மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் விமர்சனங்கள் வைத்தாலும் அது பேசுபொருளா ஆகுதான்னு கேட்டா கொஞ்சம் பின்தங்கி இருக்குன்னு தான் சொல்லனும். அதுக்கு முக்கிய காரணம் அவங்களோட மானே, தேனே இலக்கண பேச்சு தான்னு சில நண்பர்கள் சொன்னாங்க.
எடப்பாடி மாறுபட்டு நிக்கிறது இங்க தான். ஈசியா மக்கள் பாஷையில அடிச்சு தூக்கிட்டு கவுண்டர் எல்லாம் செம்மையா போடுறார்.
அதோட V.S.பாபு & கள்ளக்குறிச்சி ரெண்டு விவகாரமும் அதிமுக கோர்ட்டுக்கு போனதுக்கு பிறகு தான் விஷயங்கள் வெளியே வந்தது...
சத்தமே இல்லாம சம்பவம் பண்ணிட்டு இருக்காப்ல. உட்கட்சி பஞ்சாயத்து எல்லாம் இல்லாம, IT விங் மட்டும் இன்னும் வலுவா இருந்தா சித்தப்பு செம்ம ஆட்டம் ஆடுவாப்ல போல.
அந்த உட்கட்சி பஞ்சாயத்தும் தேவை இல்லாத ஆணி தான். நீ ஆடு சித்தப்பு நாங்க இருக்கோம்னு ஆட்டம் போடுற ஆட்கள் அமைதியா இருந்தா போதும் கட்சியும் தப்பிச்சிரும்...
எடப்பாடி தன் அனுபவத்தை வேற மாதிரி யூஸ் பண்ண தொடங்கிட்டாப்ல...
திமுக இன்னும் வீரியமா, மக்களுக்கு புரியுற மாதிரியான பாஷையிலும், அவங்ககிட்ட தகவல்களை ஈசியா கொண்டு போற வேலையும் செஞ்சா டப் கொடுக்கலாம்.
அப்படி வேலையை தொடங்கினா அரசியல் களம் மாஸா இருக்கும்...
தவெக vs திமுக vs அதிமுக...
அதிரடியான ஆட்டமா இருக்கும்...
நேற்று..
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எந்தவொரு புகாரும் வரவில்லை..
இன்று..
மாவட்ட ஆட்சியரிடம் இருந்து புகார் பெறப்பட்டு தவெக சட்ட உறுப்பினர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது..
எவ்வளவு தான் சார் மாத்தி மாத்தி பேசுவீங்க?
@CMOTamilnadu.
இதுக்கு எதுக்கு சார் வெள்ளையும் சொள்ளையுமா திரியணும்?
#TVKAgainstWomen
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி,
உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு,
தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர்,
“MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்
மாநிலத் தலைவர்,
என வெளியில் தெரிந்தே
இத்தனை அழுத்தங்கள்,
இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார்,
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும்
கொடுமையை மறைக்க
எத்தனை பொய்கள்?
எவ்வளவு உருட்டுகள்?
இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
@AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?
நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற
மனநிலை தானே இது?
மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற
@actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ?
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilnadu அவர்கள்.
ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் கீர்த்தனா அவர்கள் தான் தவெக அமைச்சரவையின் Dhurandhar-ஆ?
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நீங்க முதல் நாள் போட்ட கையெழுத்தே டம்மி தானா ப்ரோ @actorvijay?
அண்ணன் Guarantee ன்னு சொன்னது போதைப் பொருளை ஒழிக்கவா? புழக்கவா ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)