பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்கள் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.
சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களுக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும்சூழலை முடக்க கபடநாடக திமுக அரசுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
@TNelectionsCEO
தற்போது எம்.ஆர்.சி நகரில் உள்ள சன் டிவி அலுவலகத்தின் தரைத்தளத்தில் முதல்வர் "கூலி" திரைப்படத்தை கண்டு களித்து வருகிறார்.
நாளைக்கு ரிவ்யூ போடுங்க சார் @mkstalin
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாமலும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியும் வரும் நிலையில், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது. பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, உலக மகளிர் தினமான இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கழக மகளிர் அணியினர் மற்றும் தோழர்கள் அறவழியில் அடையாளப் போராட்டத்தை நடத்தினர்.
தங்களுக்கான உரிமை கிடைக்காத பட்சத்தில் அதை வலியுறுத்திக் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் தமிழ்நாட்டுப் பெண்கள் இருப்பதால்தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக இந்த அறவழி அடையாளப் போராட்டமானது நடைபெற்றது. ஆனால் தமிழக மக்கள் தங்களின் தேவைகளுக்காகக் கூட போராட்டத்தை நடத்தக் கூடாது என்ற அராஜகப் போக்குடன் தமிழக அரசு, கழக மகளிர் மற்றும் தோழர்களைக் கைது செய்திருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தோழர்களையும் மகளிரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன்.
பல்லாண்டு காலமாக ரசிகராக இருந்து அதிதீவிரமாக அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு தொண்டனாக., தோழனாக சில விடயங்களை சொல்ல விரும்புகிறேன்.
இவ்வளவு நாளாக ஒருவர் பேசியது தான் மக்களுக்கு புரியவில்லை என்றால் இப்போது அவர் யார், எதற்காக வந்தார் என்பது அவருக்கே புரியாமல் பேசி வருகிறார். அவர் யாரென்று நேரடியாக சொல்ல வேண்டிய அவசியமில்லை சொல்லாமலே மக்களுக்கு புரியும்.
ரசிகர்களும், மக்களும் வாக்காளர்களாக மாறுவது அந்த நடிகரின் மக்கள் செல்வாக்கு, தலைசிறந்த கொள்கைகள், தமிழ்நாடு சார்ந்த அரசியல் முன்னெடுப்பு, மக்கள் நலன் சார்ந்த பணிகள் ஆகியவற்றை சார்ந்தது.
ரசிகர்கள் வேறு வாக்காளர்கள் வேறு என்று திடீரென போதி மரம் அடியில் அமர்ந்து ஞானம் பெற்றது போல் அறிவாலயத்தில் கலந்து கரைந்த பின் பேசி வருகிறார்கள்.
எம்ஜிஆர் ரசிகர்கள் வேறு, சிவாஜி ரசிகர்கள் வேறு., ரஜினி ரசிகர்கள் வேறு., மற்ற ரசிகர்கள் வேறு., எங்கள் தலைவரின் ரசிகர்கள் வேறு!!!
எம்ஜிஆர் அவர்களின் அரசியல் வெற்றியை சிவாஜி பெற முடியவில்லை. எம்ஜிஆர் தனது ரசிகர்களை அரசியல்மயப்படுத்தி வாக்காளர்களாக்கியது போல எங்கள் தலைவர் கோடிக்கணக்கான ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் எப்படி வாக்காளர்களாக மாற்றுகிறார் என்பதை பாருங்கள். ஒருவரது செயல்பாடுகள் தான் வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்யும்.
எந்த ஊழல் கூடாரத்துக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை எல்லாம் உடைத்து வீர வசனம் பேசி வந்தார்களோ, இன்று அதே ஊழல் கூடாரத்தில் சுயநலனுக்காக இளைப்பாறிக் கொண்டு அவர்களுக்காக டப்பிங் பணிகள் செய்து வருகிறார்கள்.
மக்களுக்காக மக்களை நம்பி உழைத்தால் என்றுமே மக்கள் ஆதரிப்பார்கள். பணி ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வந்துவிட்டு பிக் பாஸ் பணிகளை செய்து வந்தால் இந்த நிலைமை தான் ஏற்படும் என்பதை உணர வேண்டும். இனியாவது ஆளும் பிக் பாஸ்களுக்காக உழைக்காமல் மக்களுக்கு உண்மையாக உழையுங்கள்! பொது நலத்துடன் உழையுங்கள்!!
S.ரமேஷ் B.E.,
மாநில இணைச் செய்தித் தொடர்பாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.
#தமிழகவெற்றிக்கழகம்
எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே.... என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது, நீட் தேர்வு விவகாரம் சார்ந்தது.
கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?
எந்தப் பொய்யையும் சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை.
சீமானின் பச்சோந்தி குணம் !! A-Z
விஜய் நடித்த கத்தி பட விவகாரத்தில் நான் விஜயை ஆதரிக்கின்றேன் என்று சீமான் உள்ளே வந்தார்,
பிறகு பகலவன் என்ற படத்தின் கதை சொல்லி தம்பி என் இயக்கத்தில் நடிக்கிறார் என்றார்
பிறகு அந்த கதையை கேட்டு விஜய் நடிக்கல ஏன்னா நான் புலிகள், பிரபாகரன் என்று பேசி வருகின்றேன் தம்பிக்கு அதனால் சிக்கல் வந்து விடும் என்று அவர் பயப்படுகிறார் என்றார்,
அடுத்து விஜய் நடித்த தலைவா படத்திற்கு சிக்கல் வந்த போது ஆன்மையுடன் நடந்து கொள்ளவில்லை, எதுக்கு கை கட்டிக் கொண்டு போய் ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்ட நீ எல்லாம் என் தம்பியா ?? என்றார்
அந்த கடுப்பில் போய் சிம்புவை ஆதரித்து இனி சிம்பு தான் அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்க ரெண்டு பேரும் தான் இனிமே “ பத்து படம் புரட்சிகரமா எடுத்தே தீர்வோம்” என்றார்
அடுத்து விஜய் என் மேடை கருத்தை தான் மெர்சல் படத்தில் பேசி நடிக்கிறார் குறிப்பாக “ஆளப்போறான் தமிழன்” என்ற பாடல் எனக்கு எழுதியது தான் என்றார்
அடுத்து சர்க்கார் படத்தில் சிக்கல் வந்த போது எடப்பாடி கிட்ட எல்லாம் நீ போய் கெஞ்சனுமா நீ என் தம்பியாடா !? என்றார்
அடுத்து கமல் கட்சி ஆரம்பித்த போது இந்த ரஜினி கமலை வெளுக்குற வெளுல இனி சினிமா நடிகன் எவனுக்கும் கட்சி ஆரம்பிக்க எண்ணமே வரக்கூடாது, இது விஜய்க்குமா ?? என்ற போது எல்லாருக்கும் தான் என்று சொன்னார்,
இந்த சில சர்ச்சை பேச்சுக்காக விஜய் ரசிகர்கள் சீமானுக்கு கண்டன போஸ்டர் ஒட்டினார்கள்,
அடுத்த சில வருடத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்றார் அப்படியே சொல்லி சொல்லி விஜய் கட்சி ஆரம்பித்தால் என்னுடன் கூட்டனி என்று சொல்லி வந்தார்,
நடுவில் வந்த தேர்தலில் விஜய் மைக் படம் வைத்த போஸ்டர் ஒன்றை வெளியிட ஆகா என் தம்பி என்னை ஆதரித்து விட்டான் !! என்று அதை வைத்து பிரச்சாரம் செய்து கொண்டார்
அடுத்து மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் போவேன் என்றார், கூட்டனி உறுதி அண்ணன் தம்பி கூட்டனி என்றார், ஆனால் விஜய் தரப்பில் இவருக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்கவில்லை, விஜய் என்னை எதிர்த்தாலும் நான் எதிர்க்க மாட்டேன் என்றார்
இப்ப இறுதியில் சீமான் விஜய் கொள்கை அறிவித்த உடனே அதில் உள்ள பெரியார் அண்ணா திராவிட கொள்கையை கண்டு வெறுப்பில் விஜயை திட்டி தீர்த்திருக்கிறார்
இது எல்லாம் சீமானின் பச்சையான சந்தர்ப்பவாதங்கள் இனியும் இது நீளும் ..
#TVK #TVKVijay