மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற, கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியண்ணன் அரசு அவர்களின் அன்பு மகள் அ.அமிர்தா - கி.ஜித்தேன்குமார் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்கள்.
@regupathymla@kkchellapandian@SMeyyanathan
Heartfelt birthday wishes to @RJDforIndia's National President Thiru @laluprasadrjd Avargal.
May you continue to guide India in upholding the ideals of secularism, social justice and federalism.
Wishing you good health, happiness and a peaceful life in the years ahead.
@yadavtejashwi
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார்.
இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது - இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் - பெண் கல்வி - பாதுகாப்பு – சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம் – மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசி இருக்கிறார்.
இவை எல்லாம் அவருடைய ஒரு மாத கால #SofaModel ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் Achievements-ஆ? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார்.
டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் – நமக்கெதுக்கு வம்பு என்று Silent ஆக திரும்பி இருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க Sticker ஒட்டியிருக்கிறது #SofaModel அரசு!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
#NitiAyog #DravidianModel
மின்வெட்டும், நமது 'விர்ச்சுவல் வாரியர்ஸ்'களும்!
நாள் 1: மின்வெட்டுக்குக் காரணம் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊடுருவியிருக்கும் 'கறுப்பு ஆடுகள்' தான்! (அடடா, என்ன ஒரு கண்டுபிடிப்பு!)
நாள் 2: அதிர்ச்சி..! 18 ஹார்ட் டிஸ்க்குகள் மர்மமான முறையில் திருடு போய்விட்டன! (அதனால்தான் கரெண்ட் கட் ஆகிவிட்டதோ?)
நாள் 3: அற்புதம்..! காணாமல் போன அந்த 18 ஹார்ட் டிஸ்க்குகள் திடீரென குட்டி போட்டு, இப்போது 32 ஹார்ட் டிஸ்க்குகளாகத் திரும்பக் கிடைத்துவிட்டன! (அறிவியல் அற்புதம்டா சாமி!)
நாள் 4: முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 416 பொறியாளர்களுக்கான பதவி உயர்வுப் பட்டியலில், ஏதோ கணக்கு வழக்கே இல்லாமல் 116 பேரைத் தூக்கிவிட்டு, 300 பேருக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டதாம். (ஃப்ளாஷ்பேக் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை!)
நாள் 5: இறுதியாக, உலக மகா உண்மை கண்டுபிடிப்பு... மின் கம்பியில் 'அணில்கள்' ஓடியதால் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மின்வெட்டு ஏற்படுகிறது!
நாள் 6 : இன்றைய உருட்டு
#TVKFails
கொஞ்சம் கூட கூச்சப்படாமல் மேடையில் பேசும் டம்மி முதல்வரே.. உங்க கட்சி நிர்வாகிகளால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைய நடக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிற வழிய பாருங்க. சும்மா script மனப்பாடம் பண்ணி டயலாக் பேசிட்டு திரியாதீங்க ப்ரோ.
#TVKFails
தமிழ்த்திரையுலகின் தனிப்பெரும் ஆளுமை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா சாரின் திருவுடலுக்கு நீலாங்கரையில் உள்ள அவரது இல்லம் சென்று மாலை வைத்து அஞ்சலி செலுத்தினோம்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பியவர், எப்படியும் மீண்டு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரது மரணச் செய்தி இன்று காலை பேரிடியாக வந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பாசத்திற்குரிய இயக்குநர். நம் கழகத் தலைவர் அவர்களின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர்.
எளிய மக்களின் வாழ்க்கையை – உணர்வைப் பிரதிபலித்து, தமிழ்ச் சினிமாவில் புதுப்பாய்ச்சலை ஏற்படுத்திய பாரதிராஜா சாரின் மறைவு, கலையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அரங்கிற்குள் இருந்த சினிமாவை வயல்வெளிக்கும் – கடற்கரைக்கும் – கிராமங்களுக்கும் எடுத்துச் சென்ற திரையுலக வித்தகர்.
எக்காலத்திற்கும் நிலைத்திருக்கும் படைப்புகளைத் தந்து, திறமையான கலைஞர்கள் பலரை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
பாரதிராஜா சாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் - அவரது குடும்பத்தினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
'என் இனிய தமிழ் மக்களே' என்ற மண் வாசனை மிகுந்த அவரது குரல் நம் செவிகளில் என்றுமே ஒலித்துக் கொண்டு இருக்கும்.
பாராதிராஜா சார், அவர் படைப்புகளின் வழியே என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
#Bharathiraja
மேடைப் பேச்சு ஒரு பக்கம், நிஜக் கொடுமைகள் மறுபக்கம் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குபவர்களைக் கூடவே வைத்துக் கொண்டு பேசுவது நியாயமா முதல்வர் அவர்களே? மாற்றத்தை உங்கள் கட்சியிலிருந்து தொடங்குங்கள், அதன் பின் மக்களுக்குப் பேசுங்கள்!
#TVKFails
தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து @NewsTamilTV24x7, @polimernews மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்தைப் பறிப்பது மட்டுமின்றி ஜனநாயகத்திற்கும் எதிரானதாகும்.
அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிச்சமிட்டு காட்டும் ஊடகங்களை முடக்குவதும், மாற்றுக் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் அது முன்வைக்கப்படும் தளங்களையே இருட்டடிப்பதும் தான் தவெக அரசு அளிக்க விரும்பும் மாற்றமா?
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
👇👇
வாழ்நாளில் முதன்முறையாக நேற்றிரவு 8:20 மணிக்கு எனக்கு காவல் உதவி தேவைப்பட்டது.
என் 8 வயது மகனை யாரோ இருவர் உடல் ரீதியாகத் துன்புறுத்த, சற்றுதள்ளி நடைபயிற்சியில் இருந்த நான் ஓடிப்போய் தடுத்துக் கேட்டேன்.
மின் விளக்குகளும், கண்காணிப்பு கேமராக்களும் வேண்டாமென்றே பழுதாக்கப்பட்ட அது ஓர் இருள் சூழ்ந்த விளையாட்டுத் திடல்.
ஆளரவம் பெரிதாக இல்லை. உடன் எங்களை 10-12 கஞ்சாவாசிகள் சூழ்ந்துகொண்டார்கள். 15 முதல் 20 வயது இருக்கலாம் அனைவருக்கும்.
பதற்றத்துடன் நான் என் மகனின் தோளைத் தொட, அவன் உடல் அச்சத்தில் அதிர்ந்துகொண்டிருந்தது. வேறு வழியின்றி சூழ்ந்திருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தபடியே அலைபேசியில் 100-ஐ முயற்சித்தேன்.
ஒவ்வொரு முறையும் நெடுநேரம் காத்திருந்த பின் ஓரிரு Ring ஆகி Receiver எடுத்துப் பிறகு அணைக்கப்பட்டது போல தொடர்பு அறுந்தது.
அருகில் உள்ள R6_ குமரன் நகர் காவல் நிலைய எண்ணுக்கும் முயன்றேன். உபயோகத்தில் இல்லை என்றே வந்தது.
என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற உயிர்ப்பாதுகாப்பில்லாத சூழலில் இறுதிவரை எங்களுக்கு காவல்துறை தொடர்பு கிடைக்கவேயில்லை.
அசம்பாவிதங்களின்றி நானும் மகனும் அங்கிருந்து மீண்டது பேரருள்தான். மற்றபடி நாட்டில் சட்டம், ஒழுங்கு காவல்துறை என எதுவும் இல்லை!
என..
==
இயக்குனர் ச.முரளி மனோகர் என்பவர் காவல்துறைக்கு தான் போன் செய்ததையும் ஆதாரத்துடன் பதிவு செய்திருக்கிறார்.
ஆதிக்க ஒழிப்பே, தி.மு.க.வின் திட்டம்!
- பேரறிஞர் அண்ணா.
நம் உணர்வையும்-கொள்கையையும் உள்வாங்கி உடன்பிறப்பாய் இணைந்துள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பனையூர் பாபு அவர்களையும், அவரோடு சேர்ந்து வந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் நம் அறிவியக்கத்துக்கு வரவேற்கிறேன்.
விலகி வரும்போதும் நயத்தகு நாகரிகத்துடன் அதற்கான காரணங்களை தெளிவாக எடுத்து வைத்துவிட்டுக் கழகத்தில் இணைந்திருக்கிறார் @PanaiyurBabu அவர்கள்!
இந்த மாண்பு தொடரட்டும். விலகியதாலேயே யார் மீதும் கசப்புணர்வோடு பேசவேண்டாம்.
நம் எதிர்காலத்திற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்வைத்து களப்பணியினைத் தொடர்க!
தமிழ் மண்ணின் மண்வாசனையையும், மக்களின் வாழ்வியலையும் திரையில் உயிர்ப்பித்துக் காட்டிய இயக்குநர் இமயம் திரு.பாரதிராஜா அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ் சினிமாவிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது. கிராமங்களின் உணர்வுகளையும் மனித உறவுகளின் ஆழத்தையும் தனது படைப்புகளின் மூலம் தலைமுறைகள் கடந்தும் பேச வைத்தவர்.
அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.