என் கணவரை விட உங்களைத்தான் அதிகம் பிடிக்கும் என கூறிய தன் ரசிகையிடம்,
உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், உங்கள் குடும்பத்திற்கான நல்லது கெட்டது எதிலும் நான் உங்களுடன் இருக்க மாட்டேன். பிள்ளைகளின் படிப்பு செலவிற்கோ, உங்களின் மற்ற பிரச்சினைகளுக்கோ நான் உங்கள் உடன் இருக்க மாட்டேன். இது அத்தனையையும் உங்களுக்கு செய்து கொண்டிருக்கும் உங்கள் கணவரைத்தான் உங்களுக்கு அதிகம் பிடிக்க வேண்டும் என அறிவுரை கூறிய நடிகர் ஷாருக்கான்.
இன்னைக்கு நாம எதோ ஒரு வகையில பயனடையிற இல்ல நமக்கு கிடைக்கிற மரியாதைகளுக்கு பின்னாடி திமுக தான் முதன்மை காரணமா இருக்கும்... அதோட 75+ வருட வரலாற திரும்பி பாத்தா இது மாதிரியான பல காரியங்கள செஞ்சதுக்காக பலனா பாராட்டுகளுக்கு பதிலா ஏளன பார்வையும், அவதூறுகளும், வெறுப்பும் தான் திமுக'வுக்கு திரும்ப கிடைச்சிருக்கு. முன்ன இந்த கட்டமைக்கப்பட்ட திமுக வெறுப்ப பத்தி நினைக்கும் போது மக்கள் காலம் போக, போக புரிஞ்சுப்பாங்கனு தோனும்... ஆனா இப்ப அந்த நம்பிக்கை இல்ல... மத்தவங்க புரிஞ்சுக்காம போனாலும் பரவால நாங்க இருக்கோம்ங்கிற மனநிலைக்கு வந்துட்டேன். 😊
விடிந்த பின்னரும் எரியும் விளக்கு யார் கண்களுக்கும் தெரிவதில்லை. 🖤❤️
இந்தியாவின், இல்லை, உலகின் ஒரே கண்ணாடி போட்ட ஹீரோ. கண்ணாடி போட்டிருந்தாலே “டூமாங்கோலி” என்றெல்லாம் கிண்டல் செய்யப்பட்ட காலத்தில் ஒரு ஆள் துணிச்சலாக கண்ணாடி போட்டுக்கொண்டே ஹீரோவாக திரைகளில் வலம் வந்தார் என்றால் அது கே.பாக்யராஜ்தான். அது மக்கள் மீதான நம்பிக்கை மட்டுமல்ல, தன் அறிவின், எழுத்தின், படைப்பாற்றலின் மீதான நம்பிக்கை. ஹீரோ எப்படி தோற்றமளித்தால் என்ன கதையும், திரைக்கதையும், வசனமும் காப்பாற்றும் என்ற துணிச்சல்.
அந்த துணிச்சலில் இருந்தே அவர் படங்களில் எல்லாம் நாம் பார்க்கும் சுய கிண்டலும் பிறக்கிறது. தூறல் நின்னு போச்சு படத்தில் பொண்ணு பார்க்க போன இடத்தில் ஒரு பாட்டி பாக்யராஜின் உருவத்தைக் கிண்டல் செய்யும். அந்த இடத்தில் டைட்டில். சுந்தரகாண்டத்தில் வண்டி இழுக்கப்போகும் ஒரு கிழவருக்கு உதவி செய்யப்போய் வண்டியோடு மேலே தொங்குவார். அதைப் பார்த்து மாணவிகள் சிரிப்பார்கள். அந்த இடத்தில் டைட்டில்.
டார்லிங் டார்லிங் டார்லிங் படத்தில் வரும் ஒரு காட்சி அல்டிமேட்.. அதில் கதாநாயகி “உன்ன லவ் பண்ண முடியாது,” என்று சொல்லிவிட, வேறு கதாநாயகனாக இருந்தால் பக்கம் பக்கமாக வசனம் பேசுவான் அல்லது கையை கிழித்துக் கொள்வான். பாக்யராஜ், “அய்யயோ அப்படிலாம் சொல்லாதீங்க. கொஞ்சம் டிரை பண்ணிப் பாருங்க,” என்பார். அதான் பாக்யராஜ்.
கதாநாயகனாக இருந்தும் இப்படி திரையில் தன்னைக் காட்டுவதற்கான துணிச்சல் இருக்கிறதே, அது பிறர் கதை, திரைக்கதை, வசனத்தில் நடிக்கும் வழமையான ‘கதாநாயகர்களுக்கு’ வராது. அவர்களுக்கு எப்போதுமே ஒரு இன்செக்யூட்டி இருக்கும். தன் வீக்னெஸ் வெளிப்பட்டுவிடுமோ என பயந்துகொண்டே இருப்பார்கள். அது பாக்யராஜிடம் துளி கூட இருக்காது.
ராசுக்குட்டி படத்திலும் வில்லன்களின் மாட்டுவண்டியை எல்லாம் கயிறு கட்டி கையால் நிறுத்தி இருப்பார். பிறகு பார்த்தால் அது மரத்தில் கட்டி இருக்கும். அதேபோல் சண்டைக்கு முன்பு வாட்ச், கண்ணாடி எல்லாம் கழட்டி பத்திரமாகக் கொடுத்துவிட்டு சண்டைபோடும் அவர் ஸ்டைலை எப்போதும் ரசிக்கலாம். என் கல்லூரி நண்பன் ஜக்கு நாங்கள் எப்போது டூர் போனாலும் பாக்யராஜ் டான்ஸ் என்ற ஒரு டான்ஸை பஸ்ஸில் ஆடுவான். அதுவே செம காமடியாக இருக்கும்.
சின்னவீடு படத்தில் தூக்கத்தில் புலம்புவதுபோல் மனைவியை ஏமாற்றுவது, முந்தானை முடிச்சில் எல்லோரும் அதிரும் வகையில் ஊர்வசி பொய் சத்தியம் போட்டு குழந்தையைத் தாண்டுவது, இன்று போய் நாளை வா பட கரக்ட் பண்ணும் காட்சிகள், தாவணிக் கனவுகளில் தியேட்டரில் நெருக்கமான காட்சிகள் வரும்போதெல்லாம் சில்லறையைக் கீழே போட்டு தங்கச்சிகளைத் தேட வைப்பது என சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றுக்கும் மேல் ருத்ரா படத்தில் ஜோக்கர் வேஷம் போட்டுக்கொண்டு அவர் செய்யும் பேங்க் கொள்ளை சீன் ஹாலிவுட் தரம்.
பாக்யராஜ் வெறும் நகைச்சுவை இயக்குனர் மட்டும் அல்ல. திரில்லரில் அசத்துவார். விடியும் வரை காத்திரு படம் எல்லாம் பல ஆங்கிலப் படங்களை விட சிறப்பாக இருக்கும். தான் இயக்குனர் ஆன பிறகும் பாரதிராஜாவுக்காக பாக்யராஜ் எழுதிய கதைதான் ஒரு கைதியின் டைரி. மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிறகு இந்தியில் அதே படத்தை அமிதாப்பை வைத்து பாக்யராஜே இயக்கி அதுவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
பாக்யராஜ் படங்களில் இன்னொரு சிறப்பான விஷயம் எந்தக் காட்சியும் எந்த வசனமும் எந்தக் கதாப்பாத்திரமும் ரிப்பீட் ஆகாது. இப்போதெல்லாம் முதல் படத்திலேயே மொத்த சரக்கும் தீர்ந்துபோய் அடுத்த படத்திற்கான கதைக்கு காற்றில் துழாவும் இயக்குனர்கள் இருக்க, பாக்யராஜோ கதைகளையும் திரைக்கதைகளையும் ஒரு ஊற்றுபோல கொடுத்துக்கொண்டே இருந்தார். அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கதைக்களம், புதிய புதிய கதாப்பாத்திரங்கள். ஆனால் எல்லாப் படங்களிலும் பாக்யராஜ் ஸ்டைல் இருக்கும். ஒரு பழைய கன்னட படத்தை ரீமேக் செய்து எங்க சின்ன ராசா என்று தன் பாணியில் எடுத்தார். அது தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் கன்னடத்தில் அன்னய்யா என ரீமேக் செய்து வெற்றி பெற்றார்கள். ரீமேக்கையே ரீமேக் செய்ய வைத்தவர் பாக்யராஜ்.
பாக்யராஜ் முற்போக்குவாதி எல்லாம் இல்லை, பிற்போக்குவாதிதான் என்றாலும் அதில் நேர்மையானவர். “என் காதலி உங்க மனைவி ஆகலாம் சாரே பச்சே உங்க மனைவி என் காதலி ஆக முடியாது,” என்ற நிலைப்பாட்டில்தான் சமீபத்தில் Dude படம் வந்தபோது கூட இருந்தார். தாலி செண்டிமெண்ட் பற்றிகூட அந்த சமயத்தில் புகழ்ந்து பேசினார். ஆனால் அவர் காலத்தை வைத்துப்பார்க்கும்போது பல இயக்குனர்களுடன் ஒப்பிட்டால் அவர் கோடி மடங்கு பரவாயில்லை.
பெண்ணை வன்புணர்வு செய்தவன்தான் அவளைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற காலத்தில் தன் ஆராரோ ஆராரிரோ படத்தில், அந்தப் பெண்ணைக் கதாநாயகன் மணந்துகொள்வதோடு, வன்புணர்வில் பிறந்த குழந்தையையும் கதாநாயகன் தனதாக்கிக் கொள்வது, அதில் வரும் கேப்டன் சொரியப்பா கேரக்டர் எல்லாம் யாருமே நினைத்துப்பார்க்க முடியாதவை. பா*ர்ப்*னியத்துக்கு எதிரானது என்பதால், அவர் பாலகுமாரனை பினாமியாகப் போட்டு எடுத்த ’இது நம்ம ஆளு’ படமும் அதே ரகம் தான். தீண்டாமையைப் பற்றி எல்லாம் தீவிரமான வசனங்கள் உண்டு. அதில் முடிவெட்டும் தொழிலாளியின் மகனாக நடித்திருப்பார்.
பாக்யராஜ் மிகவும் அண்டர்ரேட்டட் லெஜண்ட். யார் யாரையோ சார் சார் சார் என அழைத்து உச்சிமோர்ந்த தமிழ்நாடு அவரை மற்றுமொரு இயக்குனராகவே கடைசிவரை வைத்துவிட்டது. தனக்கென்று ஒரு லாபி செட் செய்து “பாக்யராஜ் சார்” ஆக பாக்யராஜுக்குக் கடைசி வரை தெரியவில்லை.
நாம் ‘சுமார் படைப்புகளை’ எல்லாம் சூப்பர் எனவும், mediocrityயை எல்லாம் தலைமேல் தூக்கிவைத்தும் கொண்டாடும் காலத்தில் வாழ்கிறோம். இப்போது புகழின் உச்சியில், சம்பளத்தின் உச்சியில் உள்ளதாகச் சொல்லப்படுகிற இயக்குநர்கள் பல பேர் பாக்யராஜிடம் கடைசி அசிஸ்ட்டண்டாகக் கூட வேலை பார்க்க லாயக்கில்லாதவர்கள். இதைப் படிக்கும் Genz இளைஞர்களுக்குக் கோபம் வரும். ஏனென்றால் மேலே நான் சொன்ன பல படங்களை, பல படங்களை அல்ல எந்தப் படங்களையுமே பல Genz இளைஞர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். ஆக, நல்ல பிரியாணியையே சுவைத்திராதவர்கள் சுமாரான தக்காளி சோற்றை எல்லாம் சூப்பர் எனக் கொண்டாடுவதில் வியப்பொன்றுமில்லை.
நான் சினிமா பார்க்க ஆரம்பித்த காலத்தில் கூட பாக்யராஜ் கிட்டத்தட்ட ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார். ஆனால் சன்டிவி, கேடிவியில் அவர் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் இப்போதுபோல் ‘தேர்ந்தெடுத்து’ பார்க்க முடியாது. சன்டிவியில் போடும் படங்களைத்தான் பார்க்க வேண்டும் என்ற நிலை என்பதால் நல்ல படங்கள் என்ற ‘நல்ல விஷயங்களும்’ எங்கள் மேல் திணிக்கப்பட்டன.
ஆனால் இந்தக்காலத்தில் Youtube, OTT மூலம் பாடல்கள், சினிமா என எல்லாவற்றையுமே தேர்ந்தெடுத்துப் பார்க்க முடிகிறது என்பதால் GenZ இளைஞர்கள் பழைய நல்ல படங்களைப் பார்ப்பதே இல்லை. புதிய படங்களோடு நிறுத்திக்கொள்கிறார்கள். தரத்தை மதிப்பிட வேண்டும் என்றால் நல்ல தராசு வேண்டும். பாக்யராஜ் நம்மிடையே வாழ்ந்த ஒரு நல்ல சினிமா தராசு. அவர் படங்களை, திரைக்கதைகளை, வசனங்களைப் பார்த்தால்தான் சினிமாக்களை எடைபோட முடியும். ரசனையை வளர்த்துக்கொள்ள முடியும். இல்லைன்னறால் கடைசிவரை சுமாரை சூப்பர் என்றே நம்பிக்கொண்டிருப்போம்!
இந்திய சினிமாவின் Greatest Of All Timeகளில் பாக்யராஜ் முதன்மையானவர். மிக முக்கியமானவர். அவரை ஒரு நாளும் நம்மால் மறக்க முடியாது. அவர் கண்ணாடியும், சேட்டை நிறைந்த அந்தப் பார்வையும், ’சமாச்சாரம்’ என அவர் பேசும் உடல்மொழியும் என்றும் நம்மிடையே வாழும்.
You made beautiful cinemas for us.
You made Cinemas beautiful for us.
We will always remember you.
We will always Love you பாக்யராஜ் சார்.
-டான் அசோக்
27-06-2026
பாடகர் வாய்ப்பு கேட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இளையராஜவை அணுகிய நடிகர் லிவிங்ஸ்டனை, அங்கிருப்பவர்கள் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியுள்ளனர். அனைவர் முன்னிலையில் அழுது கொண்டிருந்த லிவிங்ஸ்டனை பார்த்து பரிதாபப்பட்ட பாக்யராஜ், அவருக்கு உதவி இயக்குனர் வாய்ப்பு கொடுத்து மறுநாளே சேர்த்துக் கொண்டார்.
#Bhagyaraj #KBhagyaraj #RIPBhagyaraj #DirectorBhagyaraj #Thanthitv