சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், ஒதியத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாபாசாகேப் அம்பேத்கர் சிலை விவகாரம்
–நீலம் பண்பாட்டு மையத்தின் கள
ஆய்வு அறிக்கை; @beemji@TVKVijayHQ@CMOTamilnadu
Check this job out on Naukri!
Job title: Vmc Operator And Programming
Salary: ₹400000-₹500000/year
Company: I Tech Moulds
Apply now
https://t.co/sVoXvp3jlq
Shocking and Shameful!
Dalit student Chinnadurai, already a victim of caste violence, has been attacked again by unidentified gang. How has the government failed to protect him? This reflects how deeply caste prejudice is ingrained, even among children. I urge the Hon'ble Tamil Nadu Chief Minister to take immediate action against the culprits and implement the Justice Chandru Committee recommendations without delay. Schools must educate, not perpetuate discrimination. Enough is enough!
@CMOTamilnadu
Lights, camera, revolution! 🎥
The P.K. Rosy Film Festival kicks off with SEMBENE!—a tribute to the father of African cinema, Ousmane Sembene.
📅 April 2, 2025
⏰ 9 AM
📍 Prasad Digital Film Lab, Saligramam
Join us at Vaanam Art Festival 2025—where stories challenge, inspire, and liberate! 🎬✨
🔗 Register now (Free Entry): [ https://t.co/iF7FdXWn4Z ]
#VaanamArtFestival2025 #PKRosyFilmFestival #DalitHistoryMonth #NeelamCulturalCentre
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், இந்த வீணாகும் உணவு, கால்நடைப் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும், இன்றைய @dinamalarweb நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு, அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்றும், மேலும், குறித்த நேரத்தில் மாணவர்கள் வரவில்லை என்றால், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர். சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது எனத் தெரிகிறது.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024 - 25 ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருகின்றனர். மானிய கோரிக்கையின்படி இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், உணவுப் படி ஒருவருக்கு ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள். உணவுப் படி ஒரு நாளைக்கு ரூ. 50 என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. இந்தத் தொகையில் மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்?
தமிழகத்தில் மொத்தம் 1,138 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட மொத்த தொகை, ரூ. 2 லட்சம். சராசரியாக, ஒரு பள்ளிக்கு, ரூ. 175. இந்தத் தொகையில் என்ன விளையாட்டுக் கருவிகள் வாங்க முடியும் என்பதைத் திமுக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைதான் கூற வேண்டும்.
இதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 - 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 - 25 நடப்பாண்டில் விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த, நடப்பாண்டில் ரு.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில், விடுதிகள் மேம்பாட்டுக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, நடப்பாண்டில் ரூ. 7.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுடன் முடியும் நிதியாண்டில், அதில் 10 சதவீத நிதியைக் கூட, திமுக அரசு செலவிடவில்லை.
வெறும் வாய்வார்த்தையில் சமூகநீதி பேசி, காலம் காலமாக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக குறியாக இருக்கிறது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி இருப்பது குறித்து, தமிழக பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. தற்போது, தரமான உணவும் வழங்கப்படாமல், உண்மையில் எதற்காக இந்த மாணவர் விடுதிகளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக என்ற கேள்வி எழுகிறது.
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது திமுக அரசு?
உடனடியாக, ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான, சுவையான உணவு, மூன்று வேளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர் விடுதிகளை மேம்படுத்தி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இந்திய ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் @arjunrammeghwal அவர்களை நாடாளுமன்ற வளாகத்தில் நானும் தோழர் @WriterRavikumar அவர்களும் சற்றுமுன் சந்தித்தோம்.
பீகார் மாநிலம் புத்தகயா என்னுமிடத்திலுள்ள "மகாபோதி புத்தவிகாரினை" முழுமையாக பௌத்தர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.
பௌத்தர்கள் அல்லாதவர்களே அதன் நிர்வாகக் குழுவில் பெரும்பான்மையாக உள்ளனர். அதற்கு இடமளிக்கும் வகையிலான "புத்தகயா கோயில் சட்டம்-1949" -இனை முழுமையாக நீக்க வேண்டுமென கேட்டுக் கொண்டோம்.
ஓரிரு வாரங்களில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற ஆவன செய்யப்படுமென்று அமைச்சர் உறுதியளித்தார்.
பௌத்தத்தையும், அம்பேத்கரியத்தையும் எளிய மக்களிடையே சமரசமின்றி பரப்பிய பேரன்பு கொண்ட சமத்துவ தலைவர் அண்ணன் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பிறந்த நாளில் அவர் விரும்பிய எண்ணங்கள் ஈடேற உறுதி கொள்வோம்!
Miss you Anna ❤️ #jaibhim
7. ஆதிக்க வர்க்கத்தாரே! எங்களின் சுயமரியாதையின் பொருட்டு நாங்கள் கிளெர்ந்தெழுவதை ரவுடித்தனம் என்கிறீர்கள். வருவோருக்கெல்லாம் லட்சக்கணக்கான புத்தகங்களை அன்பளிப்பாய் கொடுத்தவர், தம்மமே மானுட சமூகத்தின் விடுதலையை தரும் என்று பாபாசாகேப் வழியில் பௌத்தத்தை முன்னெடுத்தவருக்கு எதிராய் இத்தகைய கதைகளை உருவாக்குவதின் மூலம் உங்களை நீங்களே திருப்திப்படுத்திக் கொள்ளலாம். ஆனால், எங்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும், ஒடுக்குதலுக்கு எதிராக அண்ணன் ஆர்ம்ஸ்ட்ராங் போல கிளெர்ந்தெழுகிறவர்களால் நாங்கள் பெற்ற எழுச்சி வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை.
முடிவாக, சிறுவயது முதலே அண்ணனின் அன்பில் ஈர்க்கபட்டவன் நான். திரைத்துரையில் நான் வந்த பிறகு என் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் எந்நாளும் அக்கறை கொண்டு என்னை பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தவர். பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியல் பாதையில் எவ்வித சமரசமுமின்றி தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அண்ணனை இழப்பது என்பது என் வாழ்வில் மிகப்பெரிய பின்னடைவாகவே நான் கருதுகிறேன். இதை சரி செய்ய அவரின் பேச்சுகளும் சிந்தனைகளுமே என்னை (எங்களை)வழிநடத்தும்.
ஜெய்பீம்!
கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!
இதனையொட்டி திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும், சமூக வலைத்தள ஊடகங்களில் வன்மத்தை பரப்பிக் கொண்டிருப்பவர்களிடம் சில கேள்விகள்:
1. சென்னை மாநகரில் செம்பியம் காவல் நிலையத்திற்கு மிக அருகாமையிலேயே படுகொலை நடந்திருக்கிறது. இதை வைத்தே தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து கொலையாளிகளுக்கு எத்தகைய பயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். எனவே, சட்ட ஒழுங்கை சீர் செய்ய, இனியும் இப்படி ஒரு சம்பவம் நிகழாமல் இருப்பதற்கு என்ன செயல் திட்டம் உருவாக்க போகிறீர்கள்?
2. படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டு சரணடைந்த கயவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆற்காடு சுரேஷின் படுகொலைக்கு பழிவாங்கவே இதை செய்திருப்பதாக காவல் துறையினரும் அறிவித்திருக்கிறார்கள். சரணடைந்தவர்கள் சொல்வதையே வழிமொழிந்து இந்த வழக்கை முடித்துவிடவே காவல் துறையினர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை திட்டமிட்டு ஏவியவர்கள் யார்? அவர்களை இயக்கியவர்கள் யார்? இதற்கு வேறு பின்னணி இல்லை என்கிற முடிவுக்கு காவல் துறை வந்து விட்டதா? இதற்குப் பின்னால் ஆருத்ரா இருக்கிறதென்பது குறித்த பார்வையில் காவல்துறையின் நிலைப்பாடென்ன? பல செய்திகளை உலவ அனுமதித்து இதில் எது உண்மை எது பொய் என்று தெரியாத அளவு அலட்சியமாக இருப்பது ஏன்? ஊடகங்களும் இதுகுறித்து கேள்வி எழுப்ப மறுப்பது ஏன்?
3. சமீப காலமாக தலித் மக்களுக்கும் தலித் தலைவர்களுக்கும் இருக்கும் அச்சுறுத்தலை அரசு எப்போது கவனிக்கப் போகிறது? அவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது?, தலைநகரில் தலித் மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய மாபெரும் தலைவரையே மிக சுலபமாக கொல்லக் கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி வைத்திருக்கிறது என்றால், தமிழ்நாட்டிலுள்ள மற்ற கிராம நகரங்களை நினைக்கும் போது அச்சம் ஏற்படுகிறது. இந்த பதற்றத்தையும் அச்சுறுத்தலையும் களைய தமிழக அரசிடம் என்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.
4. பெரம்பூரில் அண்ணனது உடலை அடக்கம் செய்யக் கூடாது என திட்டமிட்டே தடுக்கப்பட்டதாக தெரிகிறது. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நிகழ்த்தப்பட்ட நாடகத்தின் முடிவில் விருப்பம் இல்லாமல், சென்னைக்கு வெளியே புறநகர் கிராம பொத்தூர் பகுதியில் அடக்கம் செய்ய நிர்பந்திக்கப்பட்டோம். திமுக அரசிடம் அதிகாரம் இருந்தும், நீதிமன்றத்தை நாடச்செய்து, அதில் சட்ட ஒழுங்கு முறைக்குள் இந்த பகுதி அடங்காது என்று, அவர் வாழ்ந்த பெரம்பூரில் அவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் மிகப்பெரிய வஞ்சக செயலை செய்து இருக்கிறது இந்த அரசு. உண்மையிலேயே உங்களுக்கு தலித் மக்கள் மீதும், தலித் தலைவர்கள் மீதும் அக்கறை இருக்கிறதா என்கிற கேள்வி எழவே செய்யும்.
5. திமுக அரசு, ஆட்சியில் அமர மிக முக்கிய காரணமாக அமைந்தது கணிசமான தலித் மக்களின் வாக்குகள் என்பது வரலாறு. உங்கள் ஆட்சிக்கு மிகப்பெரிய ஆதரவைக் கொடுத்தது தலித்துகள் என்பதை நீங்கள் அறியாமல் இருக்கிறீர்களா? அல்லது அறிந்தும் அக்கறையின்றி இருக்கிறீர்களா? உங்களை ஆட்சியில் அமர்த்தவே என் வாக்கையும் செலுத்தினேன். அந்த ஆதங்கத்திலேயே இந்த கேள்விகளை முன் வைக்கிறேன். வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா?
6. அண்ணனின் படுகொலையையொட்டி எழுந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையை கையாளத் தெரியாமல், மாற்றுக் கதையை வலைத்தளங்களில் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள் வலைத்தள சமூகநீதி காவலர்களும் சில ஊடகங்களும்!. ‘அவரே ஒரு ரவுடி’, ‘ஒரு ரவுடியை கொல்வது எப்படி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக பார்க்க முடியும்’, ‘கட்டப்பஞ்சாயத்து செய்பவர்’, ‘பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்’ என ஆளாளுக்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். கொலை நடந்த நடுக்கம் குறைவதற்கு முன்பே இத்தகைய கருத்துருவாக்ககங்களை பேசுவதற்கு பின்னே இருப்பது யார்? என்ன?
Deeply shocked by the brutal and abhorrent killing of Thiru Armstrong, the Tamil Nadu Chief of the Bahujan Samaj Party.
My heartfelt condolences go out to his family, friends and followers.
Tamil Nadu Congress leaders are in constant touch with the Government of Tamil Nadu, and I am confident that the Government will ensure that the culprits are brought to justice expeditiously.
வானம் கலைத் திருவிழா! 2024
தலித் வரலாற்று மாதக் கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக தலித் வரலாற்று மாதக் கண்காட்சி & துவக்கவிழா!
நாள்: ஏப்ரல் 5 வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணிக்கு.
இடம்: நீலம் புக்ஸ், திரு காம்ப்ளக்ஸ், மிடில்டன் தெரு, எழும்பூர், சென்னை.
அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.
@beemji@Vaanam_Art@Neelam_Culture@NeelamSocial
சிதம்பரம் விசிக வெற்றி வேட்பாளர் “திருமாவளவன். தொல்” அவர்களின் சின்னம் ‘பானை’.
5-ம் வரிசை எண்ணில் இடம்பெறுகிறது அவரின் பெயர்.
அனைவரிடமும் இச்செய்தியைப் பகிர்ந்திடுவோம்! வாக்காளர்களுக்கு தெளிவாய் உரைத்து அவர்களின் குழப்பங்களைத் தீர்ப்பதும் நம் கடமை!
#Vote4INDIA
அன்பின் பெருக்கம் அருள்.
அன்பின் பேராழம் காதல்.
காதல் ஓய்வதில்லை.
காதல் முறிவதில்லை.
காதல் வீழ்வதில்லை.
காதல் சாவதில்லை.
காதல் பொய்ப்பதில்லை.
ஆதலால்,
காதலர் தோற்பதில்லை.
#HappyValentinesDay
நீதிக்காக போராடிய சேரி மக்கள் மீது போலிஸ் அராஜகம்:
மரக்காணம் நடுக்குப்பம் கிராமத்தில் பட்டியலின மாணவர்கள் மீது கார் ஏற்றி கொலைமுயற்சி செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறை தடியடி வன்மையாக கண்டிக்கின்றோம்.@mkstalin@beemji@thirumaofficial
#விழுப்புரம்_மரக்காணம்
நடுக்குப்பம் சேர்ந்த பட்டியல் சமூகத்து இளைஞர்கள் மீது சாதிய தீண்டாமை தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை
#நீலம்பண்பாட்டுமையம் வன்மையாக கண்டிக்கிறது.
விழுப்புரம் மாவட்டம்,
மரக்காணம் ஒன்றியம்
நடுகுப்பம் கிராமத்தில் நீண்ட நெடுங்காலமாக தொடர்ந்து
பட்டியல் சமூகம் சாதிய தீண்டாமைக்கு பாதிக்கப்பட்டு வந்த நிலையில் மீண்டும் சாதிவெறியர்களின் தொடர் அட்டூழியம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நடுகுப்பம் பகுதியில் உள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்த 3 சாதிவெறியர்கள்
மதுபோதையில் காரை ஒட்டி வந்துள்ளனர், அப்போது பட்டியல் பறையர் சமூகத்து இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதே வழியில் செல்லும்போது
சாதி திமிராக பேசி காரை அவர்கள் மீது
மோதிய போது கீழே விழுந்துள்ளனர்,
பிறகு முன்று முறை இவர்கள் காரை இளைஞர்கள் மீது ஏற்றி கொடூரமான முறையில் கொலை முயற்சி தாக்குதல் நடந்து கால் முறிவு ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விவரம்:
பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மரக்காணம் வடகிழக்கு
மாவட்டம் நடுகுப்பம்
கிராமம் விசிகவை சேர்ந்த
1.கீர்த்திகாசன் த/பெ சுப்பிரமணி
வயது-27
2.அருண் த/பெ சண்முகம்
வயது-21
3. அதிதீரன் த/பெ பாளையத்தான்
வயது-20
4.அனீஷ்குமார் த/பெ ஆறுமுகம்
வயது-18
தாக்குதல் நடத்தியவர்கள்:
1.ராஜ.மாரிமுத்து
முன்னால் பா.ம.க
மரக்காணம் கிழக்கு
ஒன்றி செயலாளர்
2.ஐயப்பன்
தி.மு.க பிரதிநிதி
3.சுகு
தையல் கடைக்காரர்.
மாவட்ட ஆட்சியர்,காவல்துறை விரைந்து இந்த மூன்று சாதிவெறிப் பிடித்த குற்றவாளிகளை உடனடியாக SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்!
@DistrictColVpm
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் வேலைசெய்த இளம்பெண்ணை அவரது மகன் மறுமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் கொடும் சித்திரவதைக்குள்ளாகிய செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கொடூர செயலை புரிந்தவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி தமிழக அரசு கடூம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும் நிவாரணமும் தாமதமின்றி கிடைத்திட துணை நிற்ப்போம்!
#WATCH | "தணிக்கைக் குழு (CBFC) அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுந்தங்களால் OTTல் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது" - வெற்றிமாறன்
#SunNews | #Annapoorani | #Vetrimaaran