(6 வருடங்களுக்கு முன்)
நான் பணிபுரியும் நிறுவனம் ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்டது . அங்கு பணிபுரியும் ஜார்கண்டை சேர்ந்த ஒருவர் சக பணியாளாராக சில மாதங்களுக்கு முன் சிங்கை அலுவலகம் வந்திருந்தார் . உணவு இடைவேளையின் போது பேச்சு இயல்பாகவே அரசியலில் போய் நின்றது .
வடமாநிலங்களை வாரி சுருட்டிய மோடி தமிழகத்தில் முட்டை வாங்கியது பற்றி பேச்சு வந்தது . நண்பர் தீவிர பாஜக ஆதரவாளர் இல்லையென்றாலும் ஒப்பீட்டளவில் மோடியை ஆதரிப்பவராகவே தென்பட்டார் . அங்குள்ள சாமான்ய மக்களின் மனநிலையையும் ஏன் அவர்கள் பாஜகவை ஆதரிக்கிறார்கள் என்பது பற்றி வெளிப்படையாக பேசினார் . மதம் , சாதி , நாட்டுப்பற்று போன்ற பிம்பங்களை தாண்டி மக்களின் நாளைய தேவையாக எதை நினைக்கிறார்கள் என கேட்டேன் . சாமான்ய மக்களுக்கு வயிறாற உணவு கிடைத்தாலே பெரிய விஷயம் . இப்போது பல இடங்களில் கழிவறை கட்டிக்கொடுக்கிறார்கள் .. கிராமங்களில் கூட மின்சாரம் கொண்டு வருவதற்கு திட்டங்கள் தீட்டியிருக்கிறார்கள் . உணவு , கழிவறை , மின்சாரம் , ரோடு போன்றவையே கிராமப்புற சாமான்ய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது , இவைகளைப் பற்றி தான் மக்கள் பேசுகிறார்கள் என்றார் .
தமிழ்நாட்டில் சாமான்ய மக்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் தெரியுமா ? NEET பற்றி பேசுகிறார்கள் என்றேன் . அவருக்கு புரியவில்லை .. மீண்டும் நான் சொன்னேன் . தமிழ்நாட்டு மக்களின் objective என்ன தெரியுமா ? மகளுக்கு டாக்டர் படிக்க சீட் கிடைக்குமா ? மகனுக்கு இன்சினியருக்கு சீட் கிடைக்குமா ? பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்குமா ? படிக்க சரியான இடம் கிடைக்குமா ? .. இவைகளைத் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் .. ஏனென்றால் நீங்கள் வடநாட்டில் சாமான்ய மக்களின் objective வாக எதையெல்லாம் சொன்னீர்களோ அதையெல்லாம் அவர்கள் எப்போதோ தாண்டி வந்து விட்டார்கள் . உணவு , மின்சாரம் , கழிப்பறை எல்லாம் இங்கு எப்போதோ பூர்த்தியாகி விட்டவை . தமிழ்நாட்டில் கிட்டதட்ட எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் வந்து 40 வருடங்களாகி விட்டது . போக்குவரத்தை நாட்டுடமையாக்கி பஸ் போகாத கிராமங்களே இல்லை என்ற நிலையாகி 40 வருடங்களாச்சு . படி ! உனக்கு எல்லாம் கிடைக்கும்ண்ணு சொல்லி படிக்க வச்சு ரெண்டு தலைமுறையாச்சு . கிராமம் வரைக்கும் இலவச சுகாதார வசதி எப்பவோ வந்துடுச்சு . வீட்டுக்கு மின்சாரம் என்ன டிவி வந்தே பலகாலமாச்சு .. இப்ப அவங்க வேற கட்டத்துல நிக்குறாங்க . அவங்க அடுத்த எதிர்பார்ப்பே வேற .. எனவே தான் மக்கள் எதை வைத்து வாக்களிக்கிறார்கள் என்பதிலும் பெரும் வேறுபாடு இருக்கிறது . Objectives ஒட்டவே இல்லை ..என நான் சொல்லச்சொல்ல அவர் கொஞ்சம் அசந்து தான் போனார் .
ஒருவாறு சமாளித்து .. இல்லை .. தமிழ்நாடு நல்ல முன்னேற்றம் கண்ட மாநிலம் என எனக்குத் தெரியும் என்றார் . சரி .. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்து இதன் கட்டுமானத்தை விரிவுபடுத்தியவர்கள் யார் என நினைக்கிறீர்கள் ? என கேட்டு நானே சொன்னேன் .. கருணாநிதியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் .. ஆனால் கருணாநிதியை ஏதோ பாமரனாகவோ , ஊழல்வாதியாகவோ , கொள்ளைக்காரனாகவோ , மொழி வெறியனாகவோ தான் உங்களுக்கு சொல்லிக்கொடுத்து பதிய வைத்திருப்பார்கள் என எனக்குத் தெரியும் .. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காமராஜர் தொடங்கி எல்லோரின் பங்களிப்பு இருந்தாலும் தமிழகத்தின் சமூக , தொழில்வள , போக்குவரத்து , கல்வி , எல்லோரையும் உள்ளடக்கிய சமூக நீதி என்ற ஒட்டுமொத்த கட்டமைப்பை உருவாக்கிய நவீன தமிழகத்தின் வடிவமைப்பாளர் சாட்சாத் அந்த கருணாநிதியே தான் !
#FatherOfModernTamilnadu
#HBDkalainjar103
கத்துக்கனும்யா நம்ம @writersamas கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்
காலாண்டு விடுமுறைல இருந்து கடைசியா தேர்தலுக்கு ஓட்டு போட்டு திரும்ப வரும் போதெல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசலா இருந்தது
விஜிண்ணா ஆட்சி வந்ததும் 10 கிமீ தூரத்துக்கு அணிவகுத்து செல்லும் வாகனங்கள் ஆகிடுச்சு 👌
வீடு மற்றும் தோட்ட பகுதியில் ஜோராக நடைபெறும் சட்டவிரோத மதுவிற்பனை.. தமிழக அரசு எச்சரித்த பின்பும் காலையிலேயே தொடங்கும் மது விற்பனை
#TNGovernment | #Alcohol | #IllegalSale | #PolimerNews
தற்போதைய ஆளும் கட்சி நிர்வகித்து வரும் 34,000 வாட்ஸ்அப் குழுக்களில் துணை நடிகைகளை வைத்து வீடுகளில் உண்மையாக நடப்பது போல் எடுக்கப்படும் இது போன்ற அனுதாபம் ஏற்படுத்தும் வீடியோக்களை உண்மை என்று நம்பி தமிழ்நாடே ஏமாந்த தினம் இன்று.
💥 // அரசியல் தெரியாது/ அரசியல் சார்ந்து இல்லை என்று சொல்வது பெருமை இல்லை அசிங்கம்// 💯💯💯 உண்மையான வார்த்தைகள் @idonashok உடன் பிறப்பே 🙏
ஆனால் நீங்கள் சொல்வது எதுவும் தற்குறிகளுக்கு புரியாது அவர்கள் அரசியல் பேசும் மொழி
ப்ளாஸ்டு ப்ளாஸ்டு, கதறு கதறு, 😂😂
24 வயது மருத்துவர்.. கொளத்தூர் தொகுதி.. திமுகவுக்கு தான் வாக்களித்தேன் என்று பேச ஆரமித்தார் பிரமிப்பாக இருந்தது,மருத்துவ துறையில் legend ஆக இருக்கும் பல வயதான மருத்துவர்கள் தவெக வுக்கு குடும்பத்தோடு வாக்களித்தனர்..திமுக வெறுப்பு ஆழமானது.. மருந்து பெரியாரிடம், அம்பேத்கரிடம். read