"பாம்பு கடித்தால் உடனடியாக இதை செய்தால் போதும்.." கட்டுவிரியன் பாம்பு கடித்து ஸ்ரீபெரும்புதூரில் நேற்று வாலிபர் உ**ழந்த நிலையில், மருத்துவர் கொடுத்த தெளிவான விளக்கம்!
#SnakeBite | #Doctor | #Hospital | #PolimerNews
Tamilnadu Elections வணக்கம் தமிழ்நாடு.. காமராஜர் தோற்றார். மு. க. ஸ்டாலின் தோற்றிருக்கிறார். சமூகம் ரசிகர் மயமாகி இருக்கிறது. அரசியல் மயமாகவில்லை என்பது நிரூபணமாகிறது. அரசியல் விழிப்புணர்வு செய்பவர்களின் பணி என்பது எப்போதும் எதிர்க்கட்சி பணிதான். தொடர்ந்து பயணிப்போம். வெற்றி பெற்றவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.. #justasking
ஜனநாயக அரசியலில் தேர்தல் ஓர் அங்கம்தான். அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. @mkstalin அவர்கள் வெற்றியில் ஆர்ப்பரிப்பவரும் அல்ல. தோல்வியில் துவள்பவரும் அல்ல. மீண்டும் போராடுவார். மீண்டும் வெல்வார்.
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்ட தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
5 அடி ஒல்லியான உடல்வாகு , பழுப்பாகிப் போன திமுக கர வேட்டி , மஞ்சப்பையில் documents ஓட , Nokia 1100 போன்ல
"சரி சார் .. இதோ community certificate க்கு தேவையான documents கொண்டு வந்துருக்கேன் .. பாவம் sir , எப்படியாவது பண்ணி கொடுங்க “
நான் முதல் முறை அவரை சுமார் 15 வருடங்களுக்கு முன்னால் கவனித்தது ..
இந்த முறை இந்தியா vacation இல் , கண்டிப்பாக அவரை பார்த்து விட வேண்டும் என்ற முடிவோடு , அம்மாவும் நானும் ஏரல் நோக்கி பயணித்தேன் .
தாமிரபரணி ஆத்து வாய்க்கால் பின்னாடி அடர்த்தியான மரங்களோடூ அவர் வீடு இருந்த நியாபகம் ,இன்று முழுவதுமாக மாறிப் போயிருந்தது .
அவருடைய மாப்பிள்ளை வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு , வீட்டினுள் அழைத்து சென்றார் .
நான் இதற்கு முன்பு பார்த்ததை விட வீடு மிகவும் உடைந்து விடும் நிலையில் இருந்தது ..தண்ணி பட்டு உப்பிப் போன பலகைகள் ..
கிட்டத்தட்ட படுத்த படுக்கையா இருந்தார் , கர வேட்டிக்காரர் ..என்னையும் அம்மாவையும் பார்த்தவுடன் கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்து , "எப்படி இருக்கீங்க , என்ன பார்க்கிறதுக்காக மெனக்கெட்டு வந்தீங்களா என்றார் "..
அவர் மகளிடம் டீ போட சொல்லிட்டு , கொஞ்ச நாளா உடம்பு சரியில்ல 30 நாளா வெளிய வர மாட்டிக்கிது .. இரண்டு நாள் முன்னாடி கை நிறைய கல் கிட்டினில இருந்து எடுத்தாங்க என்றார் .
அம்மாவ அவரிடம் பேச சொல்லிட்டு , நான் அவர் மாப்பிள்ளையிடம் விசாரிக்க தொடங்கினேன் .
ரொம்ப active இருந்த மனுஷன் , அவர் மனைவி இறந்ததுக்கு அப்புறம் ரொம்ப உடைஞ்சிட்டார் .
திமுக வுல பதவில இருந்தவரு , சொத்து பத்து சேர்த்து வைக்கலையா ? அட நீங்க வேற இவரு கிட்ட bank balance இருப்பதே 300 ரூபாய் தான ..30 வருஷமா அதே வாடகை வீடு ..
தூக்கி வாரி போட்டது ..
இது வரைக்கும் ஒத்த பைசா யார்கிட்டேயும் வாங்கியதில்ல ..இவர் சிபாரிசுக்கு போய் வேல , வாங்கி settle ஆன வங்க பல பேர் ..
இப்ப வந்த தாமிரபரணி வெள்ளத்துல வீடு பாதி மூழ்கிடுச்சு , அப்ப கூட யார்கிட்டேயும் எதயும் கேட்கல ..
அவருக்கு இருக்கிற ஓரே வருத்தம் , எந்நேரமும்
அந்த phone ring ஆகிட்டே இருக்கும்
"எதாவது உதவினு யாராவது கேட்டுட்டு இருப்பாங்க " ..இப்ப பத்து நாளா போன் வர்றதில்ல .. மனுஷன் ரொம்ப உடைஞ்சிட்டார்..
அவரிடமிருந்து விடை பெறும் போது திமுக துணை செயலாளர் போர்ட்-
துணை செயலாளர் கண்டிப்பாக தலித்தாக இருக்க வேண்டும் என்ற
By-law எவ்வளவு தொலை நோக்கு சிந்தனை யில் அமைக்கப்பட்ட சட்டம் என்று புரிந்தது .
ஆம் .., ஒத்த பைசா வாங்காமல் மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த இந்த கரவேட்டிக்காரர் , தலித்களால் ஒடுக்கப்படும் “புதிரை வண்ணார் " சமூகத்தை சார்ந்தவர்.
DKV பெரும்பாண்மையாக வசிக்கும் பகுதியில் , அவருக்கு துணை செயலாளர் அதிகாரம் .திமுக வால் மட்டுமே முடியும்🔥
வீடு திரும்புகையில் .."அன்னைக்கு அந்த community certificate க்கு அவர் மஞ்சப்பையோடு சுத்தலனா , இன்னைக்கு சாதி சாக்கடையில் சிக்காமல் என் குடும்பம் வாழும் அமெரிக்க குடிமகன் வாழ்க்கை வெறும் பகல் கனவு ஆயிருக்கும்லா"
குற்ற உணர்ச்சியுடன்...
@Ranjith_Rayappa@VasanthanVellai@VijayRaghavavan@HansScholl412@rocket_isro
தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு!
எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான் இருப்பார்கள்! உணர்வால் மண்ணில் வேர்விட்டிருக்கும் இயக்கம் இது!
சக்திவேல் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ள @ARROffice-இடம் அறிவுறுத்தியிருக்கிறேன்.
நுழைவுத் தேர்வை நீக்கி கல்விப் புரட்சி செய்தவர். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை கட்டி அறிவுப் புரட்சி செய்தவர். குமரிமுனையில் வள்ளுவர் சிலை எழுப்பி பண்பாட்டுப் புரட்சி செய்தவர், டைடல் பார்க் அமைத்து தொழில்நுட்ப புரட்சி செய்தவர். சட்ட சிக்கலே வராமல் இடஒதுக்கீடுகள் வழங்கி சமூகநீதிப் புரட்சி செய்தவர். இந்தி சமஸ்கிருத லாபியை தாண்டி தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்று மொழிப் புரட்சி செய்தவர். ஆதிக்க வர்க்கமோ சமூகப் பின்புலமோ கருத்துருவாக்க படைபலமோ இன்றி, தானே எழுதி தானே பேசி தானே இயங்கி அரசியல் புரட்சி செய்தவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக!
#செம்மொழிநாள் #கலைஞர்102
#Kalaignar #KalaignarKarunanidhi
#KalaignarForever #Kalaignar102
#JUSTIN | உத்தரப் பிரதேச பாஜக அரசின் சர்ச்சைக்குரிய சட்டத்தின் கீழ் கைதான முதல் நபர், 5 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை
அரசுத் தரப்பு அடிப்படை உண்மையைக் கூட நிரூபிக்கவில்லை என நீதிமன்றம் கருத்து
#SunNews | #UttarPradesh | #LoveJihadCase
The Unreal Realities
~ Mrs Sonia Gandhi's letter
என் ராஜீவை திருப்பித் தாருங்கள், நான் திரும்பிப் போகிறேன். முடியாவிட்டால், என்னையும் இந்த மண்ணில் கலந்துவிடுங்கள். அவரின் பரந்த நெற்றி, ஆழமான கண்கள், உயரம், புன்னகை—முதல்முறை பார்த்தபோது, நான் அப்படியே நின்றேன்.
தோழர்களிடம் கேட்டேன், “யார் இந்த அழகான இளைஞன்?” நண்பர்கள் சொன்னார்கள், “இந்தியர், நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்.”
பல்கலை உணவகத்தில் மீண்டும் சந்தித்தோம். அவர் என்னைப் பார்த்தார், கண்கள் சந்தித்தன, இதயம் வேகமாகத் துடித்தது. மறுநாள் அங்கேயே இருந்தார். அது கணநேரக் காதல். நாங்கள் ஆறுகளோரம் நடந்தோம், காரில் பயணித்தோம், கைகோர்த்து தெருக்களில் உலாவினோம், திரைப்படம் பார்த்தோம். காதலை முன்மொழியவில்லை, தேவையில்லை. எல்லாம் இயற்கையாக நடந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் உருவாக்கப்பட்டோம்.
நிரந்தரமாக ஒன்றாக இருக்க விரும்பினோம்.
அவரது தாயார் பிரதமரானார். இங்கிலாந்துக்கு வந்தபோது, ராஜீவ் அவரைச் சந்தித்து திருமண அனுமதி கேட்டார். இந்தியாவுக்கு வரச் சொன்னார். உலகின் எந்த மூலையிலும் ராஜீவுடன் வாழத் தயாராக இருந்தேன். இந்தியா வந்தேன். இந்திராஜி தன் திருமணத்தில் அணிந்த இளஞ்சிவப்பு புடவையை எனக்கு பரிசளித்தார். அதை அணிந்து அவர்கள் குடும்பத்தின் ஒரு பகுதியானேன். ராஜீவுக்கு சொந்தமானேன், அவர் எனக்கு சொந்தமானார்.
நான் இந்த மண்ணைச் சேர்ந்தவளாக உணர்ந்தேன். ஆனால் ராஜீவின் தம்பி மறைந்தார். இந்திராஜிக்கு ஆதரவு தேவைப்பட்டது. ராஜீவ் அரசியலுக்கு வந்தார். எனக்குப் பிடிக்கவில்லை, வேண்டாமென்றேன். ஆனால் இந்தியாவில் தாய்க்கு முன் மனைவியின் சொல் எடுபடவில்லை. அவர் அரசியலுக்குச் சென்றார். என் மீதான அன்பு குறைந்ததாக உணர்ந்தேன். என் ராஜீவை இந்தியா பகிர்ந்து கொண்டது.
ஒரு நாள் இந்திராஜி வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு கேட்டது. ஓடிப்போய் பார்த்தேன், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மருத்துவமனைக்கு ஓடினேன், என் கைகளில் இறந்தார். அன்று என் வீட்டில் இருவர் குறைந்தனர். ராஜீவ் முழுதும் நாட்டைச் சேர்ந்தவரானார். நான் பொறுத்துக்கொண்டேன்.
ஆனால் எனக்கு என்ன கிடைத்தது? ஒரு நாள் ராஜீவின் உடல் திரும்பி வந்தது, துணியால் மூடப்பட்டு, சிரித்த முகம் கல்லாக மாறி. அந்த கடைசி முகத்தை மறக்க விரும்புகிறேன். உணவகத்தில் முதல் பார்வை, இனிய மாலைகள், அவரது சிரிப்பு—அதை மட்டும் நினைவில் வைக்க விரும்புகிறேன்.
ராஜீவுடன் கழித்த நேரத்தைவிட, அவரில்லாமல் இந்த நாட்டில் அதிக நாட்கள் வாழ்ந்தேன். இயந்திரமாக வேலை செய்தேன், இந்தியாவின் மரபைப் பாதுகாத்தேன், செழுமையான தருணங்களை வழங்கினேன். வீடு, நாடு—எல்லாம் கவனித்தேன். நிறைவான வாழ்க்கை வாழ்ந்தேன், ராஜீவின் வாக்குறுதிகளை நிறைவேற்றினேன்.
ஆனால் நீங்கள் என்னை வெறுக்கிறீர்கள். வெளிநாட்டவர், விதவை, உளவாளி என்றீர்கள். வருத்தப்படவில்லை, உங்களுக்காக பரிதாபப்படுகிறேன். டிவி, ட்விட்டர், பேஸ்புக் பேச்சுகள் என்னைக் காயப்படுத்தாது. நேசித்தவரின் சடலத்தைப் பார்த்த பின் வலி இல்லை, மனம் கல்லாக மாறிவிட்டது.
ராஜீவை திருப்பித் தாருங்கள், அவருடன் போய்விடுகிறேன். முடியாவிட்டால், இந்த மண்ணில் அமைதியாக கலந்துவிட அனுமதியுங்கள். இந்த நாட்டின் மருமகளுக்கு இந்த உரிமையாவது கிடைக்கட்டும்.
“Please, end the war”
“Please, end the war”
“Please, end the war”
🚨Heartbreaking cry of a devastated child who lost her father in the bombing and was forcibly displaced from eastern Khan Younis in southern Gaza following Israeli evacuation orders.
Horrified at arrest of distinguished scholar & academic Prof @Mahmudabad - has this bigoted govt & @police_haryana totally lost it? We are moving court asap.
இரயில்வே பட்ஜெட்டை ஒழித்தார்கள். பிங்க் புத்தகத்தை ஒழித்தார்கள் இப்பொழுது திட்ட விபரங்களையும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்.
தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்ட ஒதுக்கீட்டு விபரங்களே இல்லை.
பாஜக அரசின் மக்கள் விரோத செயலுக்கு கண்டனம்.
சு. வெங்கடேசன் எம் பி
பாஜக ஆட்சிக்கு வந்த பின் இரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக்கட்டினார்கள். இரயில்வே திட்ட விபரங்கள் அடங்கிய பிங்க் புத்தகத்தை
சென்ற ஆண்டு பொதுபட்ஜெட் முடியும் வரை வெளியிடப்படவில்லை. இதனை நாடாளுமன்றத்தில் நான் உள்பட பல உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி விமர்சித்தோம்.
தொடர்ந்து நாடு முழுவதும் விமர்சனம் எழுந்தது. பட்ஜெட் முடிந்தபின் தான் பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் முடிந்த பின்னும் பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பிங்க் புத்தகம் வெளியிடப்பட போவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஒவ்வொரு ரயில்வேக்கும் தொகுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது.
பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் வெளியானது. கடைசியாக நேற்று தான் தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப்பட்டியல் ஒவ்வொரு ரயில்வேக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பார்த்தால் அதில் முதலீட்டு திட்டங்கள் என்ற பெயரில் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்துக்கும் திட்ட மதிப்பீடு எவ்வளவு என்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பிங்க் புத்தகத்தில் இருந்த விவரங்களான திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டுக்கு எவ்வளவு ஒதுக்கீடு போன்ற விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இல்லை. திட்ட மதிப்பீடு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது 25 -26க்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை உருவாக்கியுள்ளார்கள். ஏற்கனவே பல ரயில்வே திட்டங்களுக்கு, குறிப்பாக புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியிருப்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டி இருந்தேன். எவ்வளவு ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள் என்கிற விவரம் வந்தால் தான் நம்மால் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களா அல்லது கூடுதலாக ஒதுக்கி இருக்கிறார்களா என்கிற விவரம் நமக்கு தெரிய வரும். அதை குறித்து விமர்சனங்களையும் முன்வைக்க முடியும். ஆனால் அந்த விவரங்கள் வழங்கப்படாமல் வெறும் திட்ட மதிப்பு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமல்ல தெற்கு ரயில்வேக்கு இந்த ஆண்டுக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு என்ற ஒரு சுருக்க அறிக்கை பிங்க் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த விவரம் இப்பொழுது முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் மொத்த திட்ட செலவுகள் ஒவ்வொரு திட்டத்துக்கும் தரப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு ரயில்வேக்கு அல்லது ஒவ்வொரு ரயில்வேக்கும் தனித்தனியாக எவ்வளவு ஒதுக்கீடு என்கிற விவரம் மறைக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்ல ஏற்கனவே சர்வே முடிந்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட ஆவடி- திருப்பெரும்புதூர் இருங்காட்டு கோட்டை புதிய பாதை திட்டம் பட்ஜெட்டில் இருந்து எடுக்கப்பட்டு சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஏற்கனவே சர்வே முடித்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இரட்டை பாதை திட்டங்கள் இப்போது மீண்டும் சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. காட்பாடி -விழுப்புரம் ;ஈரோடு- கரூர் -சேலம்; கரூர்- திண்டுக்கல் ஆகிய மூன்று திட்டங்களுக்கு இரண்டு கோடியும் 81 லட்சமும் 2 கோடியுமாக முறையே ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
இதைப் போல மற்ற புதிய பாதை திட்டங்களான அத்திப்பட்டு- புத்தூர்; திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; திண்டிவனம்- நகரி; ஈரோடு- பழனி;மொரப்பூர்- தர்மபுரி ஆகிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்கிற விவரம் இல்லாததால் நம்மால் அதன் உண்மை நிலையை அறிய முடியாத வகையில் மறைத்திருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை அகல பாதை திட்டம் இரட்டை பாதை திட்டம் புதிய பாதை திட்டம் ஆகியவற்றுக்கு இந்த தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப்பட்டியலிலும் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் இல்லாமல் தமிழக மக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். 2/3