ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் கட்டாயம் என்று நாம் எதிர்பார்ப்பதே முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை வெளியே கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். இந்த ஆட்சியில் ஊழல் நடந்தால் அதை அடுத்த ஆட்சி வெளியே கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது ஒரு சுழற்சி. இதை வரவேற்பதை விட்டுவிட்டு சிக்கியவர்களை மறைமுகமாக புனிதப்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது?