ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காகப் போராடிய திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாள் இன்று.
தீண்டாமைக் கொடுமைகளை உலகிற்கு உணர்த்த முதலாம் வட்ட மேசை மாநாட்டில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கே கைக்கொடுக்க மறுத்தத் துணிச்சலுக்குச் சொந்தக்காரர்.
தன் வாழ்நாள் எல்லாம் ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்துக்காகவும் – சம வாழ்வுக்காகவும் உழைத்த இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பணிகளைப் போற்றும் வகையில், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஓட்டேரி பகுதியில், ‘இரட்டைமலை சீனிவாசன் சாலை’ என்று நம்முடைய தலைவர் @mkstalin அவர்கள் பெயர் சூட்டினார்கள்.
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ் ஓங்கட்டும். அவர் லட்சியங்களை வென்றெடுக்க அயராது உழைப்போம்.
#RettamalaiSeenivasan
தான் நினைப்பதுதான் சரி என பிடிவாதம் பிடிப்பது ஆய்வின் பணி அல்ல! அமைச்சரின் பணியும் அதுவல்ல!
மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். ஆசிரியப் பெருமக்களை ஊக்கப்படுத்த வேண்டும். அதை விடுத்து Last Bench என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிகளுக்குள் செல்லாதீர்கள். மாணவச் செல்வங்களிடம் தாழ்வு மனப்பான்மையை வளர்க்காதீர்கள்.
தப்போ சரியோ தைரியமாக பதில் சொன்ன அன்பு மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் அன்பும் வாழ்த்துகளும் 💐❤️
முன்னாள் அமைச்சர் அண்ணன் @ARROffice அவர்களை காவல்துறை கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ்நாடெங்கும் சீர்கெட்டு போயிருக்கும் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்கக் காட்டாத வேகத்தை, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரை கைது செய்வதில் காட்டியிருக்கிறது #SofaModel அரசு.
அவதூறு பேசி - பொய் பழிகளை அள்ளி வீசுவது மட்டும் தான் அரசியல் என்று செயல்படும் ஆளுங்கட்சியின் இந்த அராஜகப் போக்கை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பொய் வழக்காலும் - கைது நடவடிக்கைகளாலும் கழகத்தை முடக்கலாம் என்று நினைக்கும் இந்த Reels அரசின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
@mkstalin என்றும் பின் நிற்போம். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் ஒழியும் விரைவில் . தெளிவான திராவிட சிந்தாந்த கொள்கைகளால்கட்டமைக்கப்பட்டது திமுக . முத்தமிழறிஞர் சொன்னதைப் போல இது வெறும் சொற்த் தொடரல்ல அது உணர்வின் வெளிப்படும் கூட . இரும்பு இயக்கம் .
ஆரூர் பாலா . கத்தார் அயலக அணி.
“நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” - இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல்.
நாள்தோறும் அறிவாலயத்திற்கு வரும் நூற்றுக்கணக்கான உடன்பிறப்புகள் புது உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றனர்.
உடன்பிறப்புகளின் உணர்வுகளை உள்வாங்கி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த நூறாண்டுகளுக்கான பயணத்தைத் திட்டமிடும் பணிகளைத் தொடங்கியுள்ள நிலையில், இருவாரப் பயணமாக நாளை அயலகம் செல்கிறேன்.
அயலகத்தில் இருந்தாலும் அறிவாலயத்தில்தான் என் மனம் இருக்கும்!
#LetterToBrethren
Heartfelt birthday wishes to @samajwadiparty President, dear brother @yadavakhilesh.
Your unwavering commitment to safeguard the Constitution, democracy, and social justice continues to inspire across the nation.
Wishing you good health, happiness, and continued success in all your endeavors.
ஊழல் சக்திகளை தூய சக்திகளாக மாற்றித் தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் மட்டுமே காட்டும் அக்கறையை, சீர்கெட்டுள்ள சட்டம் ஒழுங்கை சரிசெய்வதிலும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள் CM சார் @TVKPartyHQ!
#CrimesToday#TVKFails#TVKAtrocities
தமிழ்நாட்டின் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வுத் துறையில் தனது வாழ்நாள் பங்களிப்பை வழங்கிய மூத்த கல்வெட்டாய்வாளர் முனைவர் திரு. எஸ். ராஜகோபால் அவர்கள் காலமான செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழர் வரலாறு, பண்பாட்டு மரபு மற்றும் கல்வெட்டுகளை ஆராய்ந்து, அவற்றைத் தமிழ்ச் சமூகத்திடம் கொண்டு சேர்ப்பதில் அவர் ஆற்றிய பணி அளப்பரியது. அவரது ஆய்வுகளும் வழிகாட்டுதல்களும் தமிழக வரலாற்று ஆய்வுத் துறைக்கு மிகப்பெரும் பங்களிப்பாக விளங்கும்.
மதுரையில் செயல்பட்டு வரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் பொருளாளராக 2011-ஆம் ஆண்டு முதல் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அவர், கல்வெட்டாய்வில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். அன்னாரை இழந்து துயருறும் குடும்பத்தினர், நண்பர்கள், மாணவர்கள் மற்றும் தொல்லியல், கல்வெட்டியல் ஆய்வாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
சட்டமன்றம் என்பது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைப் விவாதிக்கும் மாண்புமிகுந்த இடம். அங்கே மிக மலிவாக, சட்டமன்றத்தின் கண்ணியத்தையே குழிதோண்டிப் புதைத்திருகிறார் இந்த 'இன்ஸ்டா அரசன்'!
எதிர்க்கட்சிகளை நக்கல் செய்கிறேன் பேர்வழி என அடுத்தவர் அப்பாவைத் தேடும் C.M சார், நாங்க நேரடியாகவே உங்களுக்கும் உங்க Virtual Abusersக்கும் புரியும் மொழியிலேயே கேட்கிறோம்,
உங்க குடும்பம் எங்கே சார்?
அவர்களை ஏன் இப்படி நடுத்தெருவில் கைவிட்டீர்கள்?
உங்கள் சொந்தப் பிள்ளைகளின் நண்பர்கள் இன்று, "உங்க அப்பா எங்கடா?" என்று கேட்டால், அந்தப் பிள்ளைகள் என்ன பதில் சொல்வார்கள் என உங்களுக்கு என்றாவது உறைத்திருக்கிறதா?
உங்களது சொந்த மனைவியே, "என் கணவன் இன்னொரு நடிகையோடு தொடர்பில் இருக்கிறார்" என்று கூறி நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்கும் அளவுக்குக் கேவலமான நிலையில் உங்களது தனிமனித வாழ்க்கை இருக்கிறதே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
இப்படிப்பட்ட அசிங்கமான பின்னணியை வைத்துக் கொண்டு, எந்த முகத்தோடு சட்டமன்றத்தில் நின்று அடுத்தவர்கள் குடும்பத்தைப் பற்றிக் குட்டிக்கதை சொல்கிறீர்கள்?
மேடைக்கு மேடை 'தனிமனித ஒழுக்கம்' என்று ஊருக்கு உபதேசம் செய்யும் 'சோஃபா மாடல்' முதலமைச்சரே, முதலில் உங்கறது சொந்தக் குடும்பத்தின் வண்டவாளங்களைச் சரிசெய்துவிட்டு, அப்புறம் சட்டமன்றத்தில் வந்து வாய் கிழியப் பேசுங்கள்!
#TVKFails
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
தனி மனித ஒழுக்கம் குறித்து பேச முதலில் Truculent Vitriol Kazhaga தலைவருக்கு அருகதை இருக்கிறதா?
"தனி மனித ஒழுக்கம் இருந்தால் சமூகம் தன்னால் மாறும்" என்று மேடையில் மைக் பிடித்து தவெக தலைவர் தத்துவம் பேசுவது என்பது அப்பட்டமான Gaslighting! Script படித்து கேமராவுக்கு முன் Acting பண்ணுவது வேறு, கள எதார்த்தம் வேறு.
சொந்தக் கட்சி நிர்வாகிகளுக்கும், இணையத்தில் வசைபாடும் Abusive Warriorsகளுக்கும் குறைந்தபட்ச ஒழுக்கத்தைக் கூட கற்றுத் தராத ஒரு தலைவர், சமூகத்திற்கு வகுப்பெடுப்பது Pure Cringe மற்றும் Main Character Syndromeன் உச்சம்! கொஞ்சம் எதார்த்தத்தைப் பாருங்க, Pls Touch Grass!
பெண்கள் பாதுகாப்பிற்க்கு ஏற்கனவே உள்ள முன்னெடுப்பின் மீது 'சிங்கப்பெண் படை' என Sticker ஒட்டி ஒரு வெற்று PR Stunt. ஆனால் நிஜத்தில் நடப்பது என்ன?
தூத்துக்குடியில் வேலை தேடி வந்த பெண்ணுக்குப் போதை மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததும், சென்னையில் சிறுமியைச் சிதைத்த POCSO வழக்கில் கைதானதும் உங்களது சொந்த தவெக நிர்வாகிகள்தான்!
சொந்த கட்சியிலேயே Predatorsஐ பாதுகாத்துக்கொண்டு Women Safety பற்றிப் பேசுவது எவ்வளவு பெரிய Audacity?
களத்தில் இந்த லட்சணம் என்றால், இணையத்தில் உங்களது Abusive Warriors பெண்களை குறி வைத்து செய்வது முழுமையான Cyberbullying and Online harassment!
உங்களை நோக்கி நியாயமான ஒரு விமர்சனம் வைத்தால் உடனே Trigger ஆகி, அப்பெண்களின் குடும்பத்தாரை ஆபாசமாக வசைபாடுவது, Doxxing செய்வது, மற்றும் Character Assassination செய்வதுதான் உங்களது Online Mafiaவின் வேலையா?
இதைத் தட்டிக்கேட்கத் திராணியின்றி வேடிக்கை பார்க்கும் உங்களின் Two faced Leadership பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
You are just enabling an Echo Chamber of abuse!
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், தங்களை மாற்று அரசியல் என்று சொல்லிக்கொள்வது அப்பட்டமான Delusional மனநிலை.
உங்களிடம் எந்தவொரு Accountability இல்லை என்பதை ஒட்டுமொத்த தமிழ்நாடும் Clock செய்துவிட்டது. 🤏🏼
#TVKVijayFails
மின்வெட்டும், நமது 'விர்ச்சுவல் வாரியர்ஸ்'களும்!
நாள் 1: மின்வெட்டுக்குக் காரணம் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊடுருவியிருக்கும் 'கறுப்பு ஆடுகள்' தான்! (அடடா, என்ன ஒரு கண்டுபிடிப்பு!)
நாள் 2: அதிர்ச்சி..! 18 ஹார்ட் டிஸ்க்குகள் மர்மமான முறையில் திருடு போய்விட்டன! (அதனால்தான் கரெண்ட் கட் ஆகிவிட்டதோ?)
நாள் 3: அற்புதம்..! காணாமல் போன அந்த 18 ஹார்ட் டிஸ்க்குகள் திடீரென குட்டி போட்டு, இப்போது 32 ஹார்ட் டிஸ்க்குகளாகத் திரும்பக் கிடைத்துவிட்டன! (அறிவியல் அற்புதம்டா சாமி!)
நாள் 4: முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 416 பொறியாளர்களுக்கான பதவி உயர்வுப் பட்டியலில், ஏதோ கணக்கு வழக்கே இல்லாமல் 116 பேரைத் தூக்கிவிட்டு, 300 பேருக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டதாம். (ஃப்ளாஷ்பேக் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை!)
நாள் 5: இறுதியாக, உலக மகா உண்மை கண்டுபிடிப்பு... மின் கம்பியில் 'அணில்கள்' ஓடியதால் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மின்வெட்டு ஏற்படுகிறது!
நாள் 6 : இன்றைய உருட்டு
#TVKFails