Well done, @TheAIDravidian! 🖤♥️
கருத்துகளைக் கலையாக மாற்றிடும் வாய்ப்பை வழங்கும் A.I. தொழில்நுட்பத்தின் வழியாக, சமூகத்துடன் Constructive-ஆக உரையாடும் trend-ஐ இளைஞர்கள் கைக்கொள்ள வேண்டும்.
https://t.co/g07GDGSmSx
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம்.
ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது.
அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது!
#KalaignarForever
#VishwanathAndSons
Sure shot Block Buster loading ✌️
@Suriya_offl வை இப்படி ரசிக்க தான் பலரும் காத்துட்டு இருக்காங்க.
செம்ம க்யூட்டா, ஜாலியா இருக்காப்ல.
டிரைலர் பாக்கவே ரொம்ப அழகா தெரியுது ❤️
@gvprakash இசை அதுக்கு இன்னும் கூடுதல் பலம் 👌
“எம்மாம் தண்ணிலயும் கூட பார்த்திருக்கேன் தெரியுமா அவர?” 🥺🙏
வெறும் மெஜாரிட்டி ஓட்டுகள் வாங்கி சிம்மாசனத்துல போயி உக்கார்றதுல இல்ல ஒரு CM க்கு பெருமை! துயரத்தின் போது மக்கள் கூட நிக்கறவன் தான் தலைவன்!
#KalaignarForever
தன் வாழ்க்கையை தமிழ்நாட்டின் வரலாற்றாக மாற்றிய மாபெரும் பெருந்தகை!
தன் ஒற்றைப் பேனாவின் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தத் தலையெழுத்தையும் மாற்றியமைத்துத் தமிழ்நாட்டைச் செதுக்கிய நவீன சிற்பி முத்தமிழறிஞர் அவர்கள். வரலாறு பேசும் திட்டங்களால் தமிழ்நாட்டு மக்கள் மனது என்ற அரியணையில் அமர்ந்திருக்கும், தமிழ்நாட்டின் ஓய்வறியாச் சூரியன் நம்மிடமிருந்து ஓய்வுபெற்ற நாள் இன்று.
தமிழுக்குச் செம்மொழியெனப் பெருமை சேர்த்த எம்மொழித் தலைவரே, எங்களின் இதயத்துடிப்பில் என்றென்றும் உங்களின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்! உங்களின் திராவிடப் பெருந்தீயை நெஞ்சிலேந்தி வீறுநடை கொண்டு பயணித்துக்கொண்டே இருப்போம்!
தமிழ்நாடும் தமிழினமும் உள்ளவரை தலைவரின் வரலாற்றை இவ்வையகம் போற்றிப் புகழும்!
பலருக்கும் இருக்கும்போது இவரோட அருமை தெரியல.. இறந்த பின்னாடி இவர் பின்னால் நின்றவர்கள் அதிகம்.
எப்பவும் சொல்றதுதான், தமிழ்நாட்டின் வரலாற்றை இவரில்லாமல் எழுத முடியாது.
#kalaignarforever#rememberingkalaignar
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்,
அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை!
இன்று தலைவர் கலைஞர் நினைவு நாள்..! 🥺
ஆனால் நன்றியுடன் அவரின் நினைவுகளை சுமந்துகொண்டிருக்கும் மக்களின் மனங்களில், அவரது சாதனைகளில், கலைஞர் என்றும் வாழ்கிறார் 🙏
#KalaignarForever 💙🖤♥️
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever
மக்களுக்கான திட்டங்கள் - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு என முக்கிய அம்சங்கள் ஏதுமின்றி, திருத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது #SofaModel அரசு.
மாற்றம் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்தவர்கள் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்குப் பெயர் மாற்றம் செய்வதையே முழுநேர வேலையாக செய்கிறார்கள் என்பதற்கு இந்த பட்ஜெட்டும் ஒரு சாட்சி.
100 நாள் ஆட்சி எப்படி பூஜ்ஜியமாக இருக்கிறதோ அதைப்போல இந்த திருத்திய பட்ஜெட்டும் மாபெரும் பூஜ்ஜிமயாகவே உள்ளது.
#Budget
வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026.
மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.
#DravidianModel அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?
குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!
இன்று சட்டமன்றத்தில் வாசிக்கப்பட்ட #TNBudget2026 பற்றி Reels CM-க்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
'Blast Blast'-ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு, ‘Waste Waste' எனச் சொல்லும்படிதான் இருக்கு!
அதுமட்டுமல்ல, இது #DravidianModel-அரசின் திட்டங்களின் Remake Version budget!
மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால்,
விவசாயிகள் பிரச்சினை, மின் கட்டணக் குளறுபடி பிரச்சினை, விலைவாசி உயர்வுப் பிரச்சினை என எதைப் பற்றியும் கவலையின்றி, மாநிலத்திற்குத் தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களையும் அறிவிக்காத பட்ஜெட்!
அதுமட்டுமல்ல,
- ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை,
- வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ. 4 ஆயிரம்,
- ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்,
- முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி, என முக்கிய வாக்குறுதிகள் எதைப் பற்றியும் மூச்சே விடாத பட்ஜெட்!
மொத்தத்தில்,
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
சுரத்தில்லாத - புஸ்வாண பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
விவசாயிகளின் துயர் துடைக்க வக்கற்ற #SofaModel அரசு, பிரச்சினைகளை திசைதிருப்புவதற்காக என்னை கைது செய்திருக்கிறது.
தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளை நான் பயன்படுத்தியதாக ஆளுங்கட்சியின் Abusive warriors-ஐ வைத்து என் மீது அவதூறு பரப்பினார்கள்.
பொய் வழக்குகளைப்பதிவுச் செய்து சென்னையில் இருந்து தஞ்சைக்கு அலைக்கழிப்பதாக நினைத்து, யாரையோ திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார்கள்.
என்னைக் கைது செய்ததும் மீடியாவைப் பார்த்து, இந்தக் கைதை காமடியாகப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டுத்தான் வந்தேன்.
போலீஸைப் பார்த்து பயந்து ஓடிப்போய் விடவில்லை.
ஆனால் இன்றைய முதலமைச்சர் கரூரில் 41 பேர் இறந்தபோதும் அவர்கள் குடும்பத்தாரையும் பார்க்காமல், மீடியாவையும் பார்க்காமல் கைது செய்து விடுவார்களோ என்று அச்சத்தில் தலைதெறிக்க ஓடியதை நாடறியும்.
கரூரில் அத்தனை உயிர்கள் பலியான போதும் - அடுத்த ஒரு மாதத்தில் பட விளம்பரத்துக்காக மலேசியா போய் குத்தாட்டம் போட்டவர்தான் இவர்.
முதலமைச்சர் வேண்டுமானால் கைதுக்கு பயப்படலாம். நான் அதற்கெல்லாம் அஞ்சமாட்டேன். நான் கலைஞரின் பேரன். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் மகன்.
விவசாயிகளுக்காகப் போராடி கைதாவது என்றால், ஒருமுறை அல்ல 100 முறை கூட கைதாவேன்.
விவசாயிகளின் நலனுக்காக 300 கிலோ மீட்டர் அல்ல 3000 கிலோமீட்டருக்கு மேல் அழைத்துச் சென்றாலும், நான் செல்லத்தயார்.
உங்கள் அடக்குமுறை எங்கள் மக்கள் பணிகளை ஒரு நாளும் தடுக்காது!
என்னுடைய கைதை கண்டித்த தோழமை இயக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் எனக்கு ஆதரவாக ஒற்றுமையை வெளிப்படுத்திய கழக உடன்பிறப்புகளுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@mkstalin@arivalayam