உங்க Logic ல தீய வைக்க ;- 🤣
தேர்தலுக்கு முன்பு , விஜயின் மனைவி விவகாரத்து Apply பண்ணிய பொழுது இதுக்கு பின்னாடி திமுக சதி என்று சமூக வலைதளத்தில் "#TVK" ஆதரவாளர்கள் எல்லாம் Conspiracy Theory பேசினானுங்க right ah.?
அதை Political Benifits ஆக Use பண்ணிக்கிட்டீங்க..
இப்போ #உதயநிதி அவர்கள் , விஜய்யின் "அப்பாவ காணும் குட்டி ஸ்டோரிக்கு" பதிலடியாக "செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவியின் கதை" என்று சொல்லிய உடன் , எல்லாரும் கொந்தளிக்கிறார்கள் "இது விஜயின் Personal Matter" என்று.
தேர்தலுக்கு முன்பு தெரியவில்லையா இது விஜயின் Personal Matter இதில் #திமுக-வை இழுக்க கூடாது என்று..? திரு. உதயநிதி பேசும் போது இப்போ மட்டும் வலிக்குதா .?
@DMKITwing@mkstalin@TVKVijayHQ@Udhaystalin #CMJosephVijay #TVKVijayFails #TNAssembly #TN #Trending
ஜெயலலிதா வழியில் விஜய்!
2003 ஏப்ரலில் சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா உரையாற்ற, எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறிவிட்டார்கள். அதன்பிறகு முதல்வர் ஜெயலலிதா மிக ஆக்ரோஷமாகப் பேசினார். அப்போது தி இந்து ஆங்கில நாளிதழுக்குச் சட்டமன்றத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ராதா வெங்கடேசன், அடுத்த நாள் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில், பிரதான எதிர்க் கட்சியான திமுக இல்லாத அவையில் வெறும் நாற்காலிகளைப் பார்த்து முதல்வர் பேசிக் கொண்டிருந்தார். ’’காற்றோடு கத்திச் சண்டை போட்டார்’’ என்ற ரேஞ்சுக்கு எழுதிவிட்டார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோபமான அணுகுமுறை மற்றும் உரத்த தொனியில் பேசியதை அந்தக் கட்டுரை விமர்சித்தது. ஜெயலலிதா ஆற்றிய உரைகள் மற்றும் அவரது அரசின் செயல்பாடுகளை விமர்சித்து 'தி இந்து' நாளிதழில் "Rising Intolerance" (வளரும் சகிப்புத்தன்மையின்மை) என்ற தலைப்பில் ஒரு தலையங்கமும் வெளியிட்டார்கள்.
ஜெயலலிதாவுக்கு வந்ததே கோபம்! இந்தச் செய்திகள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழைக் கெடுக்கும் வகையிலும், அரசை அவமதிக்கும் வகையிலும் எழுதப்பட்டதாகக் கூறி, அப்போதைய சபாநாயகர் காளிமுத்து இந்த விவகாரத்தைச் சட்டமன்ற உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பினார். உரிமை மீறல் குழுவின் பரிந்துரையின் பேரில், 2003 நவம்பரில் தமிழகச் சட்டமன்றத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஜெயலலிதா அரசை விமர்சித்து செய்தி எழுதியதற்காக 'தி இந்து' நாளிதழின் 5 முக்கிய பத்திரிகையாளர்களுக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஐவரில் ராதா வெங்கடேசனும் ஒருவர். இவர்களுடன், இந்தச் செய்தியைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதற்காக திமுகவின் 'முரசொலி'யின் அப்போதைய ஆசிரியர் முரசொலி செல்வத்திற்கும் 15 நாட்கள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.
அடுத்த அரை மணி நேரத்திற்குள், சென்னை அண்ணா சாலையில் உள்ள 'தி இந்து' தலைமை அலுவலகத்திற்குள் நூற்றுக்கணக்கான போலீஸார் புகுந்து பத்திரிகையாளர்களைக் கைது செய்ய முயன்றனர். இந்த அதிரடி நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தலாகவும் பார்க்கப்பட்டு கடுமையான கண்டனங்களையும் எழுப்பியது. சட்டமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
அன்றைக்கு ஜெயலலிதா எப்படி எதிரில் இருந்த காலி இருக்கைகளைப் பார்த்துப் பேசினாரோ? அதே போல ஆக்ரோஷமாக இன்றைக்கு முதல்வர் விஜய் பேசினார். தான் எழுதிக் கொண்டு வந்ததை வாசிக்க விடாமல் இடைமறித்து விட்டார்களே… வெளிநடப்பு செய்து விட்டார்களே… என்ற ஆற்றாமை விஜயிடம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அதனால்தான் ஸ்கிரிப்ட் படியான தன்னுடைய இலக்கை அடைய வீணாக முயற்சித்தார். எதிரில் இல்லாத எதிரிகளோடு சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடுவது போல, சுவரில்லா சித்திரத்திற்கு வண்ணம் தீட்டுவது போல இருந்தது விஜயின் உரை. ஒரு கட்டத்தில் அவருடைய இயலாமை விஜய் வார்த்தையிலும் வெளிப்பட்டது.
’’அவங்க இருந்திருந்தா ஒரு ஆக்ஷன் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது, எல்லாரும் போய்விட்டார்கள்’’ எனச் சொல்லி, ஸ்டாலின் செய்தது போலக் கையை ஆட்டி ஆக்ஷன் காட்டினார் விஜய். திமுகவினரை வைத்துக் கொண்டு அந்தச் செயலைச் செய்து, ஸ்கோர் பண்ணலாம் என நினைத்த விஜயின் நினைப்பில் மண் விழுந்துவிட்டது. அதனால்தான், ‘’எல்லாரும் போய்விட்டார்கள்’’ என இயலாமையை வெளிக்காட்டினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை பொதுவாக ஆளும் கட்சி உறுப்பினர்தான் தொடங்கி வைப்பார். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற மரபுகளின்படி ஜனாதிபதி அல்லது ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை அத்தீர்மானத்தை முன்மொழியும் ஆளுங்கட்சி உறுப்பினர் முதலில் பேசி தொடங்குவது மரபு. பலர் பேசி முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவர் இறுதியாக அந்த விவாதத்தை முடித்து வைப்பார். அதன் பிறகு முதல்வர்தான் பதிலுரை அளிக்க வேண்டும். எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குக் கூட்டு அமைச்சரவையின் தலைமை அமைச்சர் என்ற வகையில் முதல்வர்தான் எல்லாத் துறைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளிப்பார். இதுதான் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மரபு.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பிறகு அவையின் அலுவல்கள் முடிந்துவிட்டது எனச் சொன்ன பிறகு அமைச்சர் ராஜ்மோகன் முதலமைச்சர் போலப் பதில் சொன்னார். அதற்குள் திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அவையை விட்டு வெளியேறிவிட்டார்கள். நேற்று நடந்து போலவே முதல்வர் விஜயும் திமுக உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு நீட்டி முழங்கியிருக்கிறார். ’’ஆளே இல்லாத கடையில யாருக்கு டீ ஆத்துற’’ எனச் சினிமா டயலாக்தான் நினைவுக்கு வருகிறது. 2003-ல் ஜெயலலிதாவுக்கு இருந்த கடமை உணர்ச்சிக்குக் கொஞ்சம் சளைத்ததில்லை விஜயின் கடமை உணர்ச்சி!
- எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி
பதில் தெரியல'ன்னா பரவல்ல
ஆனா எங்களுக்கு கேள்வியே புரியலையே
நாங்க என்ன பாஸ் பண்ணுவோம்
நேத்து பிளாக்ல டிக்கெட் வித்தவன் இன்று அமைச்சர்
அவரிடம் கேட்ட பாவம் அவரு என்ன செய்வாரு
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துவிட்டது. இத்திட்டத்திற்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 755 கோடி ஒதுக்குகிறது.
இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தலா 1 கிராம் மோதிரமாக வழங்கப்பட உள்ளது.
இன்றைய நாளில் 1 கிராம் தங்கத்தின் விலை 14,200 ரூபாய்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரு நாளில் சுமார் 1,230 குழந்தைகள் பிறக்கின்றனர். அதாவது, அரசு மருத்துவமனைகளில் மட்டுமே 60% குழந்தைகள் பிறக்கின்றன.
இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு ஆண்டில் சுமார் 4.5 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன.
ஆக, ஒரு குழந்தைக்கு 1 கிராம் தங்கம் கொடுத்தால், 4.5 லட்சம் குழந்தைகளுக்கு ஒரு ஆண்டில் 450 கிலோ தேவைப்படும்.
இதன் ஒட்டுமொத்த மதிப்பு 652 கோடி ரூபாய். இத்தங்கத்தை மோதிரமாக செய்ய வேண்டும் என்பதால் சேதாரம், செய்கூலி, GST உள்ளிட்டவற்றை சேர்த்து 700+ கோடி ரூபாய் ஆகிறது.
எல்லாம் சரி, பதவியேற்றபோது திமுக அரசு கஜானாவை காலி செய்துவிட்டு சென்றுவிட்டதாக சொன்னீர்களே...இப்போது மட்டும் ஆண்டுக்கு 755 கோடி நிதி எங்கிருந்து வருகிறது...?
இந்த செலவினங்களுக்கு வருமான மூலதனம் என்னவென்று சொல்ல முடியுமா...? அல்லது தமிழக அரசு இத்திட்டத்தை செயல்படுத்த கடன் பெறுமா...?
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி பேசி முடித்த அடுத்த நொடி அவை இத்துடன் முடிவடைந்ததுண்ணு சபாநாயகர் சொல்ல உயதநிதி கிளம்பியிருக்கிறார் . முன்னாள் பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்மோகன் கையத் தூக்க , சபாநாயகரும் சரி பேசுங்க என சொல்ல பட்டிமன்றத்தில் கடைசி ரவுண்டு பேசுவது போல ஒரு பிதற்றலான பேச்சை ராஜ்மோகன் பேசியிருக்கிறார் . நியாயமா பார்த்தா யாரும் இல்லாத கடையில யாருக்குப்பா டீ ஆத்துற ! என அவரை கலாய்க்குறதை விட்டுட்டு .. ராஜ்மோகனுக்கு பதில் சொல்ல முடியாம உதயநிதி பயந்து ஓடிட்டார்ண்ணு கலாய்ச்சுகிட்டு இருக்கானுங்க .. இவனுங்க எப்ப அரசியல் படிச்சு .. ஸ்ப்பா !
நான் கூட என்னவோ நினைச்சனேன்
பிராடு பையன் போல
திமுக அதிமுக பாமக தேமுதிக இப்படியான கட்சிகாரர்கள் விலகி வேறு கட்சியில் சேர்வார்கள்
ஆனா முதல்முறையா கம்யூனிஸ்ட்ல இருந்து வேற கட்சிக்கு ஏதோ இடிக்குது
#JustNow | "சி.மகேந்திரன் மோசடி பேர்வழிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமலே அவர் இருந்து வந்தார்"
-தவெகவில் இணைந்த சி.மகேந்திரன் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் அறிக்கை
#SunNews | #CMahendran | #CPI | #TVK