தலைமைக்கு எது செய்தால் பிடிக்கும் என்பதை 60 ஆண்டுகளாக அதிகாரி வட்டங்கள்தான் தீர்மானிக்கும். அந்தப் போக்கு மாறப்போவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன !
தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடந்த இலக்கிய நிகழ்வில் நானும் இருந்தேன். மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் கலைஞர் 100 நிகழ்வை நினைவு கூர்ந்ததில் அன்பும் மரியாதையும் இருந்ததே தவிர அரசியல் இல்லை ! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அரசியலிலேயே இல்லை ! கலைஞர் படம் 'யாராலோ' அகற்றப்பட்ட போது பதிப்பாளர் வேடியப்பன்தான் ஆட்சேபம் செய்து மீண்டும் நிறுவச் செய்தார். அரசியலில் நாகரீகம் நுழைவது ' யாருக்கோ ' பொறுக்கவில்லை போலும் ! அவர்கள் நிச்சயம் அரசியல்வாதிகள் இல்லை , அரசாங்கம் மாறும் போதெல்லாம் ஜால்ராக்களை கைமாற்றிக் கொள்ளும் அதிகாரிகள் வர்க்கமா இல்லை டிஆர்பி பசியில் எதிலும் அரசியல் செய்யும் ஒரு சில ஊதுகுழல்களா ? ஆக பிரபலங்கள் உண்மைப் பின்னணியை ஆராய்ந்து கொந்தளிக்கவும் !
( பி.கு :- நான் அரசியல் பேசவில்லை, அரசியல் பற்றி பேசுகிறேன் என்பதை கவனத்தில் கொள்க )
கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி 2026 ! சென்ற வருடமும் இந்த வருடமும் என் ஹைக்கூ தேர்வு பெற்றது ஒரு அங்கீகாரம் ! நண்பர் லிங்குசாமியின் பகீரத தவம் இது. துணை தவம் விஷ்ணு அசோசியேட் சிவகுமார் அவர்கள். மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் மந்திரிகர்வம் இல்லாமல் எளிமையாக பழகியதும் புழங்கியதும் ஒரு சோற்று பதம் ! AR முருகதாஸ் , புகாரி அதிபர்,வெண்ணிலா, வேடியப்பன் முக்கியமாக பிருந்தாசாரதி கூட்டணியில் லிங்குவின் ஹைக்கூ ஆட்சி தொடர்கிறது !
வாழ்க கவிக்கோ புகழ் !
Happy to announce the winner's of kaviko Abdul Rehman haiku contest 2026.
Top three will be announced on June 2 at the event. Location will be announced later.
Wishing my Favourite #vidyasagar sir, who gave me one of my favourite albums through #RUN & #JI, a happy birthday. Have a great year with all good health sir.
காலாண்டிதழாக வெளிவரும்
‘மகாகவி’
வைரமுத்து சிறப்பிதழாக
மலர்ந்திருக்கிறது
ஆசிரியர் குழுவைச் சார்ந்த
வதிலை பிரபா, பிரேமா கிறிஸ்டி
ஜாஃபர், கவிஞர் பிருந்தா சாரதி
கூடிவந்து கொடுத்தார்கள்
அட்டைப்படம் வரைந்த
வெண்ணிலாவுக்குப்
பத்தாயிரம் ரூபாய் பரிசளித்தேன்
இது படித்து வீசும்
பத்திரிகை அல்ல;
பாதுகாப்புக்குரிய ஆவணம்
இதழ் பார்த்ததும்
இதழ் பூத்தது
ஒரு மெல்லிய மகிழ்ச்சி
மனதுக்குள் மர்மமாக
ஓடி ஒளிந்ததை
மறைக்க முடியவில்லை
வாழும்போதே
படைப்பாளிகளை
வாழ்த்திவிடு சமூகமே;
செத்தபிறகு
எதற்குச் சிம்மாசனம்?
பாரதிக்குச் செய்ய மறந்ததை
வாழும் கவிஞனுக்குச்
செய்திருக்கிறீர்கள்
நன்றி தோழர்களே!