இன்றும் தமிழர்களின் நினைவேக்கமாக மனங்களில் திகழும் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள். என்றும் அரசியல், நிர்வாக முன்னோடியாக நிலைப்பார். வாழ்க அவர்தம் புகழ்.
#கமல் சார் போல நட்புக்கு மரியாதை தரும் ஆளை பார்க்க முடியாது, ஆர்.சி. சக்தி இறந்த பின் அவரோட மருத்துவ செலவுகளை கமல் சார் தான் கட்டினார், கமல் சாரோட தாயார் இறந்த பின் அவரோட உடலை சுமக்கும் நான்கு பேரில் ஒருவராக ஆர்.சி. சக்தி இருந்தார் அதை யாரும் செய்யமாட்டார்கள் - கே. என். போஸ்👏
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
திரு.வி.க நகர் மநீம மாவட்டத்தில் கட்சிக் கொடியேற்று நிகழ்வு.
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களின் வழிகாட்டுதலின்படி,
திரு.வி.க. நகர் மநீம மாவட்டம், 73-வது வட்டத்திற்குட்பட்ட பகுதியில், கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G. மௌரியா @MouryaMNM அவர்கள் கட்சிக் கொடியேற்றி வைத்தார்.
நிகழ்வில் நற்பணி அணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. G.நாகராஜன் @GuruswamyNagar2, மாவட்டத் துணைச் செயலாளர் திரு. M.சின்னதுரை, நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை அமைப்பாளர் திரு. யுவராஜ், நகர செயலாளர் திரு. S.R.அமானுல்லா, நகர அமைப்பாளர்கள் திரு. சண்முகதாசன், திரு. தரம் கமல், திரு. ராஜ்குமார், வட்டச் செயலாளர் திருமதி. V. விமலாரோஸி, கிளை செயலாளர்கள் திரு. யூனிஸ், திரு. பரத் ஆகியோருடன் மாவட்ட, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
தமிழ் சினிமாவில் #கமல் சாரை யாராலும் எப்பவும் தாண்டவே முடியாது, அவர் எல்லா கதையும் எடுத்துட்டாரு நீங்க புதுசா எழுதவே முடியாது, சினிமாவில் என்ன பண்ணாலும் என்ன செஞ்சாலும் அவரோட ரெஃபரன்ஸ் இல்லாம யாராலும் எதுவும் பண்ண முடியாது, எடுக்க முடியாது - நடிகர் @ram_nishanth👏
#KamalHaasan
எப்பா இந்த அறநிலையத்துறை அமைச்சர் அப்படியென்று மானஸ்தன் ரமேஷ் இருந்தாரே யாராவது அவரை பார்த்தீர்களா..?
திமுக ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று மூன்று முறை தடுக்கப்பட்ட கோயில்நிலம் இப்போது #tvkfails ஆட்சியில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது..இது நியாயமா அமைச்சரே..?
இப்போ உங்கள் ஐம்புலன்களும் அடங்கி விட்டதா..மக்களை சிந்திக்கவிடாமல் ரீல்ஸ் போட்டு,போடவைத்து ஏமாற்றியே பழகி விட்டீர்கள் ..இதன் பெயர் ஊழல் இல்லையோ 110 கோடி இடத்தை 2கோடிக்கு பத்திரப்பதிவு செய்ய நீங்கள் எவ்வளவு பெற்றுகொண்டீர்கள்..
3085 ஏக்கர் நிலத்தின் பத்திர பதிவு தடையை நீக்கி ரூ 25000 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை தரை வார்த்த தமிழக வெற்றி கழக அரசு.
அறநிலையத்துறை அரசு ஆணையின் மூலம் அம்பலம்.
ஊழலை ஒழிக்க வந்த
த வெ க அரசு பதில் அளிக்க வேண்டும்.
@CMOTamilnadu#KamalHaasan@maiamofficial
நியாயமான கேள்வி.
5 நிமிஷம் பேசுனதுக்கே.. கொளத்தூர் கொத்து பரோட்டா ஆகிடுச்சி என பஞ்ச் பேசியவர்..
இதுபோன்ற மிக முக்கிய கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டார்.
Talk less. Work more ஆம்.
இதுதான் அந்த வொர்க்கா?
படத்துல இல்லாத பாட்டு...
ஆண்டவரே நீங்கள் படம் கொடுத்து இரண்டு வருஷம் ஆச்சு
7லு படங்கள் கையில் இருக்கு னு சொல்றாங்க
அடுத்த படத்தின் அப்டேட் எப்போது
#PAARAA 🔥🔥🔥
#2YearrsOfINDIAN2#KamalHaasan
பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா?
இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்.
#KamalHaasan sir is the core reason for my interest in dialogues, and he is my greatest inspiration. He introduced and found many dialogues.There is no one in Tamil cinema who can deliver dialogue with such modulation and power as he does. - @PariElavazaghan👏👏👏
#AnbeDiana
Hon'ble CM Vijay should understand the difference between an official meeting and a political platform.
His claims of eradicating corruption, as well as his allegations of corruption are not backed by credible evidence.
He should speak like a CM
#KamalHaasan@maiamofficial
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது, அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயலும், ஆபத்தான முன்னுதாரணமும் ஆகும்.
முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் அரசின் முடிவு, அரசுப் பணியை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு போட்டித் தேர்வுக்கும் இரவு பகலாக உழைத்து தயாராகி வரும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் கடும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்திற்கு, அரசின் நிரந்தர பணியிடங்களை இழப்பீடாக வழங்குவது ஏற்றுக்கொள்ள முடியாத அணுகுமுறையாகும். இதுபோன்ற முடிவுகள், "கூட்ட நெரிசலில் உயிரிழந்தால் குடும்பத்திற்கு அரசு வேலை" என்ற தவறான எண்ணத்தை சமூகத்தில் உருவாக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே சிறிய சொத்து தகராறுகளுக்குக் கூட குடும்பங்களுக்குள் மர்ம மரணங்கள் நிகழும் சூழலில், அரசு வேலை என்ற அரிய வாய்ப்பை தவறான முறையில் பெற வேண்டும் என்ற சிந்தனையை சிலரிடம் தூண்டக்கூடிய ஆபத்தான முன்னுதாரணமாக இது மாறிவிடக் கூடாது.
தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்திற்கு அந்தக் குறிப்பிட்ட அரசியல் கட்சியே முழுப் பொறுப்பேற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் உதவிகளும் வழங்க வேண்டும். ஆனால், அரசின் அதிகாரத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தால் இயங்கும் நிர்வாகத்தையும் பயன்படுத்தி, வரவிருக்கும் இடைத்தேர்தலை மனதில் கொண்டு இதுபோன்ற அரசு பணி நியமனங்களை வழங்குவது நிர்வாக நெறிமுறைகளுக்கும் சம வாய்ப்புக் கொள்கைக்கும் எதிரானதாகும்.
மேலும், எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் நடத்தும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் அல்லது எதிர்பாராத வகையில் நடைபெறும் பிற துயரச் சம்பவங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டால், அவற்றின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்கும் கொள்கையை அரசு பின்பற்றுமா? இல்லையெனில், இந்தச் சம்பவத்திற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது? என்ற நியாயமான கேள்விகளுக்கும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
அரசுப் பணி என்பது இரக்கத்தின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகை அல்ல; திறமை, தகுதி மற்றும் அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ள சம வாய்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பொது உரிமையாகும். எனவே, இந்த முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
‘கர்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விட முடியாது’ என்றும்,
‘நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை’ என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர், கர்நாடக அமைச்சரின் இந்தப்பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜுன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணைக் கட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தைத் தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப்பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜுன் மாதம் வழங்க வேண்டிய 9.91 TMC தண்ணீரை கர்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 TMC தண்ணீரையும் கர்நாடகம் தர மறுக்கிறது.
ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும்.
எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கர்நாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
#CauveryWater #TNFarmers