நாம் விருப்பினாலும் விரும்பாவிட்டாலும் போரட்டமே எமது வாழ்க்கையாகவும் வாழ்க்கையே எமது போரட்டமாகவும் மாறிவிட்டது...!!!
@thirumaofficial#hbd_thirumavalavan
எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.
கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார்என்பது
பெருந்துயரமளிக்கிறது.
பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.
அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை.
அம்மாவுக்கு எனது வீரவணக்கம்!
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் காவல்துறையினரின் கொலைவெறித் தாக்குதலில் படுகொலையான தம்பி அஜித்குமார் அவர்களின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கினேன்!
அஜித்குமார் அவர்களின் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்!
சாமி..🥹🙏
தமிழகம் முழுவதும்
மண்டல கூட்டத்தில்
பங்கேற்பற்காக
கடந்த 4,5 நாட்களில்
மட்டும் சுமார் 5000 கிலோமீட்டருக்கு
மேலாக தூக்கமின்றி பயணம்செய்ததால் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் கண்கள் மீண்டும் பாதிக்கப்படுள்ளது...
நாம் அனைவரும்
சற்று அவருக்கு
ஓய்வு கொடுப்போம்...
@Saattaidurai@tvkvijayhq ஆனால் நீங்கள் எங்கள் முன்னோர்கள், எங்க அப்பா, தாத்தா என்று சொன்னீர்கள் ஆனால் நீங்கள் நடத்துகின்ற எந்த ஒரு மாநாட்டிலும் ஒரு இப்படி வைத்தது இல்லையே.
ரிசர்வ் தொகுதிகளையும் ஒழிக்கப் போகிறார்களா?
EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒட்டுமொத்தமாக இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டுவதற்கான உச்சநீதி மன்றத்தின் முதல் தாக்குதல்.
தற்போது உள் ஒதுக்கீடு தொடர்பாக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இட ஒதுக்கீட்டின் மீதான உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது தாக்குதல்.
அசோக் குமார் ஜெயின் என்பவர் தொடர்ந்த வழக்கில் ‘ ரிசர்வ் தொகுதிகளை நீட்டிப்பது அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 334 க்கு உகந்ததுதானா? ‘ என்பதை ஆராய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளிக்கப்போகும் தீர்ப்பு இட ஒதுக்கீட்டை முற்றாக ஒழித்துக்கட்டும் இறுதித் தாக்குதலாக இருக்கப் போகிறது.
புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான பாஜகவின் திட்டத்தை முறியடிக்க புரட்சியாளர் வகுத்துத் தந்த பாதையில், தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போராடும்.
EWS இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விசிக வழக்கு நடத்தியது. இப்போது உள் ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்தும் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
விசிகவின் போராட்டம் இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானது. இட ஒதுக்கீட்டையே ஒழிக்க முயற்சிப்பவர்களின் தூண்டுதலில் விசிகவை எதிரியாகக் கட்டமைத்து அவதூறு செய்பவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: விசிகவின் போராட்டம் உங்களுடைய இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கானதும் தான் !
- ரவிக்குமார் எம்.பி