இளைஞர்களின் நலன்,விளையாட்டு வளர்ச்சி, சமூக நீதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு,கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழியில் இளைஞர் அணி செயலாளராக தொடங்கிய பயணம் இன்று 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இளைஞர்களின் குரலாகவும், மாற்றத்தின் முகமாகவும், மக்கள் நலனுக்கான செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் @Udhaystalin அவர்களின் இந்த பயணம் மேலும் பல சாதனைகளை நோக்கியும் மீண்டும் கழக ஆட்சி அமைத்திடவும் நகரட்டும்.
சேலம் ஓமலூர் வடக்கு ஒன்றியம்-காமலாபுரம் ஊராட்சி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரு.ராஜா அவர்களின் தாயார் அண்மையில் மறைந்ததையொட்டி நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினேன்.
ஊடகத் துறையில் உண்மையையும் அறத்தையும் இலக்காகக் கொண்ட இளம் இதழாளர்களை உருவாக்கும் நோக்கில், கழகத் தலைவர் @mkstalin தலைமையிலான #திராவிடமாடல் அரசில், சென்னை இதழியல் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது.
இந்நிறுவனத்தில் 2025-2026 கல்வியாண்டில், இதழியல் முதுநிலைப் பட்டயப் படிப்பில் 60 மாணவர்கள் பயின்று தேர்ச்சி பெற்ற நிலையில், அவர்களில் சில மாணவர்கள் இன்றைய தினம் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
வளர்ந்துவரும் ஊடகத் துறையில் தங்களுக்கென தனித்த அடையாளத்துடன், திறமையான ஊடகவியலாளர்களாக உருவாக வேண்டுமென அவர்களை வாழ்த்திப் பாராட்டினோம்!
#ChennaiInstituteofJournalism
பத்திரிகைச் செய்தி
இன்று (20-06-2026), திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை – பல்லாவரத்தில் நடைபெற்ற, திரு. N. ஆனந்தன் அவர்களின் மகன் A. திருமலை (எ) திலீப் - M. வித்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி,
மற்றும் அரும்பாக்கத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் திரு. M. ஜீவானந்தம் அவர்களின் மகன் J. ரூபேஷ் – V. சரண்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஆகியவற்றில் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினார்.
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 17வது வட்டத்தைச் சேர்த்த அ.தி.மு.க வட்டச் செயலாளர் திரு.சிங்கமுத்து அவர்களின் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியில் இருந்துவிலகி, தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருச்சி(தெ) மாவட்ட தி.மு.க சார்பில் அவர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றோம்.
#Trichy_South_DMK
@arivalayam
நாள்தோறும் வருகை தரும் உடன்பிறப்புகள்!
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு நாள்தோறும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தரும் நிலையில், அவரை ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் நேரில் சந்தித்து தங்களது அன்பை பரிமாறிக்கொள்கின்றனர்.
#MKStalin#DMK#AnnaArivalayam #KalaignarSeithigal
பத்திரிகைச் செய்தி
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இன்று (18.06.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தேசிய இளைஞர் அணிச் செயலாளர் திருமதி ஸ்ரீநிதி மோகன் அவர்கள் தி.மு.க.வில் இணைந்தார்.
அதுபோது கழக துணைப் பொதுச்செயலாளர்கள் கனிமொழி கருணாநிதி, எம்.பி., ஆ.இராசா, எம்பி., எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கரூர் மாவட்டச் செயலாளர் வி.செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ., செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் துரை.செந்தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலக முகவரியில் என்னை சந்திக்கலாம்.
அலுவலக முகவரி :
வழக்கறிஞர் இ. பரந்தாமன், B.A.B.L., Ex MLA.
செட் காலனி 1வது தெரு,
எழும்பூர், சென்னை – 600 008.
044 - 49524350
9940666269
Address ;
I.PARANTHAMEN B.A.B.L.,Ex MLA.
Sait colony 1st Street, Egmore Chennai - 600 008.
044 - 49524350
994066626
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates
தமிழ்நாட்டுல இன்னைக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு பிரச்சனைகள், என்னென்ன பிரச்சனை நடந்தாலும், அவங்க கட்சியினுடைய விர்ச்சுவல் Virtual Abusers வைத்து ட்ரெண்ட் பண்ணிட்டு இருக்கார்.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
நினைவில் வாழும் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மகள் வழி பேத்தியும், திரு.மாணிக்கம் - பேராயர் கதிரொளி மாணிக்கம் இணையரின் மகளுமான மா.சுருதி சாரா சற்குணம் - திரு.ஆல்பர்ட் தேவதாசன் - திருமதி.ஃபீபி ஆல்பர்ட் ஆகியோரின் மகனுமான ஆ.பிலிப் ஆல்பர்ட் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா, சென்னை கீழ்ப்பாக்கம் CSI Lite Auditorium-இல் இன்று நடைபெற்ற போது, கழகத்தலைவர் @mkstalin அவர்களுடன், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு.@Udhaystalin அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தின் மீது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் உரை வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களே!
நம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க, முயற்சிக்கின்ற மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
அனுமதிக்கக் கூடாது
காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றம், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அனைத்திற்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கழக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்தான் முழுகாரணம். அதை, இந்த அவையில் இருக்கின்ற மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தித்தான், நாம் காவிரியின் மீதான நம் உரிமையைப் போராடிப் பெற்றிருக்கிறோம். ஆனால், அதனைப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த முயற்சியை அவர்கள் எடுத்தபோது, அந்தச் சமயத்தில், எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சி செய்தபோதிலும், அதனைப் பற்றிக் கவலைப்படாமல், மேகதாது அணைத் திட்டத்தை எங்களுடைய தலைவர், அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இன்றைக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக இந்த தீர்மானத்தை, இன்றைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேகதாது அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசிற்கு எதிராக, எங்கள் தலைவர், எங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்கும், அவைக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தீர்மானம் நிறைவேற்றினோம்!
2021-ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, அதாவது ஜூன் 17, 2021 அன்று `மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது’ என்று எங்கள் தலைவர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார். பிறகு, அதே கருத்தை வலியுறுத்தி, ஜூலை மாதத்தில், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சருக்கும் எங்கள் தலைவர் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். இதனையடுத்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, `மேகதாது அணையை எந்தக் காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம். ஜூலை மாதத்தில் அதையே ஒன்றிய அமைச்சரிடமும் நேரில் வலியுறுத்தினோம்.
கடந்த 2022-2023 நிதியாண்டில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த விஷயம் தெரிந்ததும், இதே அவையில் அதைக் கண்டித்து, அரசின் தனித் தீர்மானத்தையும் எங்கள் அரசு அன்று நிறைவேற்றியது. அன்று “தமிழ்நாட்டின் உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்” என்று எங்கள் தலைவர் பேசினார்கள்.
திருப்பி அனுப்பப்பட்டது
மேகதாது அணை கட்டுவது குறித்தான விரிவான திட்ட அறிக்கையை விவாதிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் வைத்த அஜெண்டாவை நீக்க, எங்கள் தலைவர் தலைமையிலான அரசு அன்றைக்குக் கடுமையாக வலியுறுத்தியது. இதற்காக, அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்கள் ஜூலை மாதம், 2022-ஆம் ஆண்டு பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழுவினர், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். இப்படி, நமது தொடர் எதிர்ப்பின் காரணமாக, மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report), பிப்ரவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.
மேலும், கழக அரசின் எதிர்ப்பால், மேகதாது அணையின் நிபந்தனை விவரங்களை (Terms of Reference-ஐ) தன்னுடைய `திட்டப் பட்டியலில்’ இருந்து, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீக்கியது. அதுமட்டுமில்லாமல், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் எங்கள் அரசின் நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தில், `இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்பட்ட பிறகுதான், Terms of Reference அனுமதி பற்றி ஆலோசிக்கப்படும்’ என்று சொல்லியிருந்தார்.
கழக அரசும், எங்கள் தலைவரும்
மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை’ (Detailed Project Report) சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் எங்கள் கழக அரசு இருந்த வரையிலான நிலை ஆகும். திராவிட முன்னேற்றக் கழக அரசும், எங்கள் தலைவரும் தைரியமாகத் தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்ததால்தான் இது சாத்தியமானது என்பதை இந்த மாமன்றத்தில் மீண்டும் பதியவைக்க விரும்புகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய நீர்வள ஆணையம் (Central Water Commission), 22-11-2018 தேதியிட்ட கடிதத்தின் மூலமாகக் கர்நாடக அரசுக்குச் சில முக்கியமான நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தது. அதில் முதலாவதாக, மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தனையற்ற அனுமதி எதுவும் கொடுக்கவில்லை. இரண்டாவதாக, அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் பல்வேறு ஆட்சேபணைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மூன்றாவதாக, மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கின்ற மத்திய நீர்வள ஆணையப் பிரிவிடமும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
ஒரு புதிய விவாதம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, `காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய’த்தின் (Cauvery Water Management Authority) முன் அனுமதியையும் பெற வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். எனவே, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு இவற்றைல்லாம் ஒன்றிய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேசி, காவிரியில் நம் தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் சேர்ந்து நிலைநாட்ட வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயத்தை, இங்கு நான் பதியவைக்க விரும்புகிறேன். மேகதாது பிரச்சினை தொடர்பாக, கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, 04.03.2026 அன்று அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை அரசுச் செயலாளர் ஒன்றிய ஜல் சக்தி துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், `கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணை கட்டும் பிரச்சினை ஒரு புதிய விவாதம் (New Dispute) என்பதால், நதிநீர் தாவா சட்டம்-1956-ன் படி (The Inter-State River Water Disputes Act, 1956) அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். ஆகவே, இந்த அரசு இப்போது கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்தில், `மேகதாது அணை கட்டுவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, மார்ச் 4, 2026 அன்று எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம்-1956, பிரிவு 4-ன் கீழ், அந்த அடிப்படையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்கிற திருத்தத்தைச் சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தடுத்து நிறுத்துவோம்
கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க, சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாகவும் இந்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக துணைநிற்கும். மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று கூறி, இந்தத் தீர்மானத்துக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதே மாதிரி இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்காததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து நடக்கவிருக்கின்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் (Cauvery Water Management Authority), இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நம் தரப்பு நியாயங்களையெல்லாம் எடுத்து வைத்து, நமக்குரிய நீரை விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக, எங்கள் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வைக்க விரும்புகிறேன்.
மிக முக்கியமான தீர்மானம்
இன்று நாம் நிறைவேற்றுகின்ற இந்தத் தீர்மானம் மிக முக்கியமான தீர்மானம். இந்த தீர்மானத்தைக் கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, ஒன்றிய அரசிடம் கொடுத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயல்பட இந்த அரசும் முன்வர வேண்டும் என்று எங்கள் தலைவரின் சார்பில் கேட்டுக்கொண்டு, தீர்மானத்தை முழுமனதாக ஆதரித்து அமைகிறேன்.
நன்றி, வணக்கம்.
#TNAssembly #MekedatuDam #Cauvery
📌தொடர் மின் வெட்டு
📌 சட்டம் ஒழுங்கு சீர்கேடு
📌 பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக பெருகும் பாலியல் வன்முறைகள்
📌#TVK நிர்வாகிகளின் வன்முறை வெறியாட்டங்கள்
தேர்தலுக்கு முன் “தூய சக்தி… தூய சக்தி” என்று கூவிய @TVKVijayHQ, தூய சக்தி அல்ல துயரசக்தி!
#வாயை_திறங்க_CM
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @SPK_TNCC அவர்களின் மகள் திரு. அக்ஷ்யா பிரியா - திரு. ஆர்ஜன் ராயர் இணையரின் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு.செல்வப்பெருந்தகை அவர்களின் அன்பு மகள் செ.அக்ஷயா பிரியா - ஆர்ஜன் ராயர் இணையரின் திருமண வரவேற்பு விழா சென்னை ஜமீன் பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற போது, கழகத்தலைவர் திரு.@mkstalin அவர்களுடன், கழக இளைஞரணி செயலாளரும் - மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு.@Udhaystalin அவர்கள் கலந்து கொண்டார்கள். @SPK_TNCC