எங்க ஏரியா கிராமம் நாங்களும் தோட்டத்துல இருக்கோம் மூத்த தலைமுறை அண்ணண் தம்பின்னு அவங்க பசங்கன்னு அடுத்ததுத்து இருக்காங்க வேத்தாளுங்க ஐஸ் விக்க போர்வன்னு வந்தாளுமே பயம்தா நோட்டம் விட வாராங்களோன்னு வேண்டாம்ன்னு சொல்லிருவோம் சமீபமா சாமியார் வேசம் போட்டு வந்து திருடிட்டு போய்ட்டாங்க அது போக நாய் நரி காட்டு பன்னி சிறுத்தபுலி யானை முள்ளம்பன்றின்னு ஏதன்னு நினைக்க தூக்கிட்டு போட்டாங்களோன்னு போய்ட்டான்னு பயம் வேர மனசெல்லாம் போன் வந்ததே அது பக்கத்து காட்டுகாரங்க என் பையன் என்ன பண்ணிருக்கான் என் வீட்டுக்காரர தேடி வாழக்காட்டு தடத்துல போய்ருக்கான் அது ஒரு 1அரை ஏக்கரு தென்ன தோப்புல புகுந்து அனைக்கட்டு ஏரி கிணத்த தாண்டி போய்ருக்கான் பக்கத்து காட்டுகாரங்க என்வீட்டுகாரர் கூட வர்ராரு போலன்னு பாத்துருக்காங்க இல்ல இங்க வான்னு கூப்ருக்காங்க நல்ல வேள அங்க போய்ட்டான் போயி அம்மாவ எங்க காணோம்ன்னுருக்கான் நாங்க போய் பாத்தா கைல இரண்டு பிஸ்கட்ட வச்சிட்டு சிரிச்சிட்டு இருக்கான் . என்னிய ஒரு வார்த்த கூட யாருமே சொல்லல இதுநாள் வர நா அவன எப்டி பாத்தேன்னு எல்லாருக்கும் தெரியும் கொஞ்ச நேரம் ஆஸ்வாசம் ஆனதும் எப்டி போனன்னு கேட்டா போன தடத்துலயே 100ல ஓடுரான் LEFTங்குரான் RIGHTங்குரான் இத்தனைக்கும் நாங்க அவன அந்த பக்கமே கூட்டிட்டு போனதில்ல இந்தநாள் போல இன்னொரு நாள் ஜென்மத்துக்கும் எனக்கும் இல்ல யாருக்குமே வரகூடாது. அவன் விசயத்துல நா அவ்ளோ அஜாக்கிரதயானவ கிடையாது. ஆனா நா தப்பு பண்ணிட்டே அந்த 2நிமிசம் அவன விட்ட தனியாருந்திருக்கூடாது .