மிலாது நபி : அனைத்துலக சகோதரத்துவ நாள்!
______________________
நபிகள் நாயகம் பிறந்த நாளான இந்த நன்னாளில் இசுலாமிய சொந்தங்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்ப��ல் மனமுவந்த 'மிலாது நபி நாள்' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மனிதகுலத்தை நல்வழிப்படுத்த��� மனித நேயத்தைச் செழிக்கச் செய்த மகத்தான பேராளுமை மிக்கவர் நபிகள் நாயகம்.
மனிதகுலத்தில் நிலவிய பாகுபாடுகள், வன்முறைகள், உழைப்புச் சுரண்டல் போன்ற சமூகத் தீமைகளை எதிர்த்துப் போராடியவர். இறைநம்பிக்கையும் அதனடிப்படையிலான இறையச்சமும் தனி மனித நல்லொழுக்க மேம்பாட்டுக்கு அடிப்படைகளாக அமையும் என்கிற நம்பிக்கையோடு போதனைகளை அருளியவர். பேரன்பும் பெருங்கருணையும் தாம் மக்களிடையே ந��்லுறவையும் நல்லிணக்கத்தையும் வளர்க்குமென்கிற உயரிய மாண்புகளைப் பரப்பியவர்.
அத்தகைய மாமனிதர் நபிகள் பெருமானின் நன்னெறிகளைப் பரப்பவும் அதன் சகோதரத்துவத்தை உலக மாந்தரிடையே நிலைபெற செய்யவும் இந்நாளில் உறுதியேற்போம்.
அனைவருக்கும் 'சகோதரத்துவ நாள்' வாழ்த்துகள்!
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
'பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும்' என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மண்ணின் மைந்தர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று (25.08.26) பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் சந்தித்து, விமான நிலைய திட்டத்துக்கு எதிரான போராட்ட களத்தில் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்களும், தலைவரின் வழிகாட்டுதலில் நாமும் நேரில் பங்கெடுத்து மக்களுக்கு துணை நின்றதை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தனர்.
@CMOTamilnadu@thirumaofficial
நேற்றைய மாலை முரசு “நெற்றிக்கண்” நிகழ்ச்சியில் போகிற போக்கில் நன��பர் கோட்டீஸ்வரனும் @arnoldkote4 தோழர் தம்பி தமிழரசனும் @T_Thamizarasan தலைவர் எழுச்சித் தமிழர் @thirumaofficial பரந்தூர் விமானநிலையம் அமைய எதிர்ப்பு தெரிவித்ததாக தெரியவில்லை என்றார்கள்
அவர்கள் பார்வைக்கு …
மலேசிய மாணவன் மெயில் அனுப்பியதாக கூறிய தேதிகள் ஏப்ரல் மாதமாகும் அந்த ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில்இருந்தது.
ஆனாலும் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் Model Code of Conduct (MCC) அமலுக்கு வருகிறது. இதனால் ஆளுங்கட்சி, முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் அரசு நிர்வாகப் பணிகளை முற்றிலும் நிறுத்த வேண்டியதில்லை. அப்படியென்றால் திமுக தான் அன்றைய தினத்தில் ஆளுங்கட்சி.
So மாணவர் கூறும் அந்த ஏப்ரல் மாத தேதியில் திமுக அந்த மாணவனை கைவிட்டு விட்டது என்பது தான் உண்மை. அப்படி இருக்கையில் திமுகவை முதன்மை குற்றவாளியாக கூறாமல் அண்ணன் வன்னியரசு அவர்களை மட்டும் கூறுகின்றார் என்றால், அந்த மாணவனுடைய நோக்கம் என்ன.?? அந்த மாணவனை யார் இயக்குகின்றார்.??
- இரா.இளம்பெருவழுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாடு.. ஏற்பாடுகள் தீவிரம்
Ulundurpet | VCK | VCK Conference
#Newstamil24x7#Thirumavalavan