நீங்கள் சொல்லும் கதைக்கு இது தான் பதில்👇
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மூலமாக பாஜக நுழைவதைத் தடுக்கவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். - தோழர் @Shanmugamcpim#CPIM#tvk#cmotamilnadu
கும்மிடிப்பூண்டியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை!
பூந்தமல்லியில் ஏழு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!
தமிழகத்தில் பெண்கள் - குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
#CHE#Comrades#Madurai
சோசலிச கியூபாவைப் பாதுகாப்போம்! ஏகாதிபத்திய எதிர்ப்பு போர் குரல் எழுப்புவோம்!
புரட்சியாளர் சேகுவேராவின் பிறந்த தினத்தையொட்டி கியூபா ஆதரவு கருத்தரங்கம் மதுரையில் துவங்கியது
சேலத்தில் 50க்கும் மேற்பட்ட
பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
சமூக நீதி மற்றும் சமத்துவத்தைப் பற்றி நாம் அதிகம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நவீன காலத்திலும், சாதிய வெறி மனிதத்தன்மையற்ற முறையில் அரங்கேறி வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.
உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில் கேதன்லால் என்ற 18 வயது இளைஞர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மற்றொரு தலித் இளைஞர் என, சாதியக் கட்டமைப்புக்கு எதிராகத் தங்கள் காதலை முன்னிறுத்தியதற்காக இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சாதி என்பது ஒரு சமூக அடையாளம் மட்டுமல்ல, அது ஒருவரின் உயிரைப் பறிக்கும் ஆயுதமாகவும் மாறியிருப்பது ஆபத்தான போக்கு. இத்தகைய கொடூரங்கள் ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று கடந்து செல்லக் கூடியவை அல்ல; இவை சமூகத்தின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கும் சாதிய நஞ்சின் வெளிப்பாடுகள்.
சாதியற்ற, சமத்துவமான ஒரு சமூகத்தை உருவாக்குவதே இந்த இளைஞர்களின் மரணத்திற்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.
நீதியை நிலை நாட்டுவதிலும் சாதிய வன்முறையை வேரறுப்பதிலும் அரசும் காவல் துறையும் உறுதியாக இருக்கவேண்டும்.
கேரளத்தில் மீண்டும் நிபா வைரஸ் அச்சுறுத்தல் “அரசியல் கடந்து ஒன்றிணைவோம்”
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் ஆட்கொல்லி வைரஸான ‘நிபா’ வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதனால் கோழிக் கோடு கட்டுப்பாடு உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முந்தைய கால அனுபவங்களைக் கொண்டு அறி வியல் பூர்வமாக இந்நோயை எதிர் கொள்ள வேண்டும் என்றும், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெறுவதை விட உயிர்களைக் காப்பதே முக்கியம்.
“தற்போதைய சுகா தாரத்துறை அமைச்சராக இருக்கும் கே.முரளிதரன், கடந்த அரசாங்கத்தின் போது (வீணா ஜார்ஜ் அமைச்சராக இருந்தபோது) நிபா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆற்றிய விமர்சன உரைகளைச் சுட்டிக்காட்டி பலரும் தனக்கு செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
இதைப் பற்றி நான் இங்கு எதுவும் எழுதப் போவதில்லை. காலம் உண்மையை நிரூபிக்கட்டும். நோய்களின் நெருக்கடிகள் மற்றும் சவால்களில் மக்களை அரவணைத்து, சிறந்த அறிவியல் ரீதியான பாதுகாப்பை வழங்குவது அவசியமாகும். அதற்காக ஒன்றுபட்டு நிற்பதே இடதுசாரிகளின் அணுகுமுறையாகும்.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியின் நுண்ணுயிரியல் ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆர்டிபி சிஆர் (RTPCR) பரிசோதனையில் நிபா நோய் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோயாளிக்கு முறையான சிகிச்சை அளிப்பதுடன், நோய் பரவாமல் தடுக்கவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வேண்டும்.
புனே தேசிய நச்சுயிரி நிறுவனம் (NIV) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துவதற்கு முன்பாகவே, மாநில ஆய்வக முடிவுகளின் அடிப்படையில் அவசர தடுப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
கேரள மாநிலம் ஏற்கெனவே நிபா வைரஸை பலமுறை கையாண்டுள்ளதால், அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அறிவியல் பூர்வமான சிகிச்சை நெறிமுறைகளும் தடுப்பு வழிகாட்டுதல்களும் உள்ளன. அவற்றை உடனடியாகப் பின்பற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து தனிமைப் படுத்துவது மற்றும் பரவலைத் தடுப்பது மிக முக்கியம்”.
தோழர் வீணா ஜார்ஜ், முன்னாள் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் #CPIM #KeralaHealth #LeftApproach #PublicHealthFirst #NipahVirus
அமலாக்கத்துறைக்கும் மோடி அரசுக்கும் உதவியாளராகச் செயல்படுவதை நிறுத்துங்கள்!
"யாரும் ராகுல் காந்தியை பினராயி விஜயனை கட்டியணைக்கச் சொல்லவில்லை. மாறாக, பினராயி விஜயன் மற்றும் பிற எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்யக் கோருவதன் மூலம், அவர் அமலாக்கத்துறைக்கும் மோடி அரசுக்கும் ஒரு உதவியாளராகச் செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். அது எதிர்க்கட்சித் தலைவரின் வேலை அல்ல." - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #ED #ராகுல்காந்தி #ModiGovt
"தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கும் போது, தமிழ்நாடு அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி, தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து, முதலாளிகளுக்குச் சாதகமாக தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் தொகுப்பை அப்படியே தமிழ்நாட்டில் அமல்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்." - தோழர் @Shanmugamcpim , மாநிலச் செயலாளர் #CPIM #June19Protest #SaveLabourRights #WorkersRights #100DaysWork More: https://t.co/hqQAaoZH2s
மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இருக்கிறது!
தொழிலாளர் நலன்களைப் பறிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பைத் தமிழ்நாட்டில் அமல்படுத்த #CPIM அனுமதிக்க மாட்டோம்!
"தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கும் போது, தமிழ்நாடு அரசு தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசி, தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றை உருவாக்க வேண்டும். அதைவிடுத்து, முதலாளிகளுக்குச் சாதகமாக தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் வகையில் மோடி அரசு நிறைவேற்றியுள்ள சட்டத் தொகுப்பை அப்படியே தமிழ்நாட்டில் அமல்படுத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்." #CPIM #June19Protest #SaveLabourRights #WorkersRights #100DaysWork More: https://t.co/YCQuEHhEio
கேள்வி கேட்க நாங்க தயங்கியதும் இல்லை, தாமதித்ததும் இல்லை. எக்ஸ்பிரஸ் வேகத்தில் எங்களின் குரல் ஒலித்தது ஊரறிந்த உண்மை.
அப்படி இருக்க, உங்களுக்கு மட்டும் ஏன் இன்னும் தெரியவில்லை?
உங்களால் உண்மையை மறைக்க முடியாது சாரே!
நெட்டூர்க்கு தென்காசி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஏன் செல்லவில்லை?
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற திருக்குறளைப் பெருமையாகப் பேசுகிறோம். எல்லா உயிரும் சமம்தான் என்று பேசுவது உண்மையானால், பெருமைப்படுவது உண்மையானால், பட்டியலின சாதி மக்களும் பழங்குடியின மக்களும் இத்தகைய கொடுமையான தாக்குதலுக்கு உள்ளாவதை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்?
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்குரிய பல்வேறு நல்ல ஆலோசனைகளை, நீதியரசர் சந்துரு தலைமையிலான ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு வழங்கியிருக்கிறது. ஏற்கனவே இருந்த தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!
மக்களின் வாழ்க்கையை நெரிக்கும் எரிபொருள் விலை உயர்வு!
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே தவித்து வரும் சூழலில், வணிக சிலிண்டர் விலை 3,500 ரூபாய் உயர்த்தப்பட்டும் சந்தையில் தட்டுப்பாடு நிலவுகிறது. 5,000 முதல் 6,000 ரூபாய் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதால், உணவகங்களில் 10 முதல் 15 விழுக்காடு வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை விலையைக் காரணம் காட்டி ஒன்றிய ஆட்சியாளர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். ஒன்றிய, மாநில அரசுகள் போட்டி போட்டுக்கொண்டு வரிகளை உயர்த்தி மக்களின் வாழ்க்கையை நெரித்து வருகின்றன.
அமெரிக்க - இஸ்ரேல் யுத்தமும் கியூபா ஒருமைப்பாடும்!
உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டிற்கு ஈரான் மீது அமெரி க்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள யுத்தமே முதன்மை காரணமாகும். 90 நாட் களைக் கடந்தும் போர் நிறுத்த வாய்ப்பு காணப்படவில்லை. அமெரிக்க நாடா ளுமன்றத்தின் கீழவையில் டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அவருக்குப் பெருத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கியூபா மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார நெருக்கடி களை ஏவி வருகிறது. அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் அராஜக நடவடிக்கை களைக் கண்டித்தும், கியூப மக்களுக்கு ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் வித மாகவும், சேகுவேரா பிறந்த தினமான ஜூன் 14-ஆம் தேதி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய ஐந்து முக்கியத் நகரங்களில் மாபெரும் கண்டன நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம்.
ஒன்றிய அரசின் தோல்வியும் இளைஞர் கொந்தளிப்பும்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நாட்டின் இளைஞர்களைக் ‘கரப்பான் பூச்சிகள்’, ‘ஒட்டுண்ணிகள்’ என விமர்சித்ததால் நாடு முழுவதும் கடுமை யான கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உருவான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ எனும் அரசியல் எதிர்ப்பியக்கத்தில் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு வருகிறார்கள். கியூட், நீட், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்துத் தேர்வுகளிலும் ஒன்றிய அரசு மிகப்பெரிய முறைகேடுகளில் ஈடு பட்டுள்ளது. இத்தகைய கல்வித் துறை தோல்விகளுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜி னாமா செய்ய வேண்டும். இதனை வலி யுறுத்தி தில்லியில் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பும் பங்கேற்றுள்ளது.
பாராட்டுக்குரியது
'திருப்பரங்குன்றம் மலைமேல் தீபம் ஏற்றும் விவகாரத்தில், கடந்த ஆட்சி யின் நிலைப்பாடே தொடரும் என்ற சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்தை வரவேற்கிறோம். நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவது நியாய மில்லை என்பதை மாநில அரசு உணர்ந்துள்ளது பாராட்டுக்குரியது.
@Shanmugamcpim
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்துக்கு இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்து உறுதியான நிலையை அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். #திருப்பரங்குன்றம்
நார்வே செஸ் 2026 தொடரில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தாவுக்கும், ஆசிய தனி நபர் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று 2027 FIDE உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள வீராங்கனை சவிதா ஸ்ரீ பாஸ்கருக்கும் சிபிஐ(எம்) சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
தங்கள் அசாத்திய திறமையால் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள இரு இளம் சாதனையாளர்களும் மேலும் பல சிகரங்களைத் தொட வாழ்த்துகிறேன்!
#Praggnanandhaa #SavithaShri #ChessChampions #CPIM
மனிதநேயத்தையும் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் பேசும் ‘ஹபீபி’ திரைப்படம் காலத்தின் கட்டாயம்!
இயக்குநர் தோழர் மீரா கதிரவன் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவாகியிருக்கும் ‘ஹபீபி’ திரைப்படத்தைப் இன்று பார்த்தேன். ‘ஹபீபி’ என்ற அரபுச் சொல்லுக்கு தமிழில் ‘’என் அன்பே’ என்று பொருள். அந்தப் பெயருக்கேற்ப, மனிதர்களுக்கிடையேயான பேரன்பையும் எளிய மக்களின் வாழ்வாதாரப் போராட்டத்தையும் இப்படம் மிக யதார்த்தமாகப் பேசியுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்ட தமிழ் இஸ்லாமியக் குடும்பங்களின் அன்றாட உழைப்பு, அழகான காதல், நெகிழ்ச்சியான குடும்ப உறவுகள் மற்றும் அண்டை வீட்டாருடனான சமூக நல்லிணக்கம் எனப் பல எதார்த்தமான வாழ்வியல் கூறுகள் நெஞ்சைத் தொடும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில், குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்த வளைகுடா நாடுகள் (வெளிநாடு) நோக்கிப் பயணிக்கும் உழைக்கும் வர்க்கத்தின் வலிகளையும் தியாகங்களையும் திரையில் மிக நேர்த்தியாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.
ஆண்கள் குடும்பத்திற்காக வெளிநாடு சென்றுவிடும் சூழலில், இங்குள்ள பெண்களே ஒட்டுமொத்தக் குடும்பச் சுமையையும் தாங்கி நிற்கிறார்கள். நான்கு சுவர்களுக்குள்ளேயே சுருங்கிப்போகும் அவர்களது வாழ்வியலையும், அவர்கள் எதிர்கொள்ளும் மனப் போராட்டங்களையும் இப்படம் மிகத் துல்லியமாகப் பேசியுள்ளது.
வெறுப்பு அரசியலும் பிரிவினைவாதமும் திட்டமிட்டு விதைக்கப்படும் இன்றைய சூழலில், மனிதத்தையும் உழைப்பையும் பேசும் இத்தகைய கலைப் படைப்புகள் சமூகத்திற்கு மிகவும் அவசியமானவை.
எளிய மக்களின் வாழ்வியலையும் வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தையும் மிகச் சிறந்த படைப்பாகத் தந்துள்ள இயக்குநர் மீரா கதிரவன் மற்றும் ஒட்டுமொத்தப் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்!
மக்களுக்கான கலை என்றும் வெல்லட்டும்!
பெயர் மாற்றம், தமிழகத்தில் பா.ஜ.க-வின் புதிய உத்தி!
ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே 2500 அமைப்புகளை வழி நடத்துகிறது. அண்ணாமலை தொடங்கும் அமைப்பு 2501 அவ்வளவுதான்.
பாஜக என்ற கட்சி தமிழக மக்களிடம் எடுபடவில்லை. எனவே, பெயரை மாற்றி வியாபாரத்தை வெற்றிகரமாக்க முடியுமா என்று மோடி - அமித்ஷா ஆசியுடன் முயற்சிக்கிறார் அண்ணாமலை.
ஆரம்பித்த இரண்டு மணி நேரத்தில் 2.50 லட்சம் பேர் சேர்ந்து இருப்பதாக கூறுவதெல்லாம் பாஜக கட்சியினர் இதில் இணைக்கப்படுகிறார்கள் என்பதே, @annamalai_k போடுவது "மாரீச மான் வேடம்" என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
#CPIM மாநிலச் செயலாளர் தோழர் @Shanmugamcpim பதிவு