என் நெஞ்சில் குடியிருக்கும்
அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முதன்மை சக்தியாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அரசியல் வரலாற்றின் முதல் வெற்றி அத்தியாயம் தொடங்கியிருக்கிறது.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் சின்னத்திற்காக நாம் விண்ணப்பித்திருந்த சின்னங்களில் ஒன்றுதான் விசில்.
தற்போது தேர்தல் ஆணையம் நமக்கு அந்த விசில் சின்னத்தையே ஒதுக்கீடு செய்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். இதற்காகத்
தேர்தல் ஆணையத்திற்குக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
விசில் என்பது மனிதர்களின் ஆனந்த ஆர்ப்பரிப்பின் வெளிப்பாடாக எழும் ஒலி.
ஓய்வறியாமல் இலக்கை நோக்கி உழைப்பவர்கள், அவ்விலக்கை அடைந்ததும் குதூகலத்தில் எழுப்பும் பேரொலி.
இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், மக்களின் பாதுகாவலர்கள் கையில் இருப்பதுதான் விசில். அந்த வகையில், விசிலைப் பாதுகாப்பின் அடையாளம் என்றும் குறிப்பிடலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள், பெண்கள் என அனைவரின் உள்ளங்களிலும் உதடுகளிலும் எழும் விசில் ஒலி நேர்மறை நிகழ்வின் குறியீடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம் ஈட்டப்போகும் வெற்றியை முன்கூட்டியே கணித்துக் கட்டியம் கூறும் வெகுஜன மக்களுக்கு நெருங்கிய சின்னமான விசில் நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதே நமக்கான ஊக்கமும் உத்வேகமும் என்பதே இயற்கையும் இறைவனும் நமக்கு அளித்திருக்கும் பரிசு.
நமது சின்னம் விசில்.
நல்லவர்கள் சின்னம் விசில்.
நாடு காப்பவர்கள் சின்னம் விசில்.
ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில்.
வெற்றிச் சின்னம் விசில்.
வருகிற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்.
விசில் போடுவோம்.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.
செந்தில் பாலாஜி வழியில் சிக்கும் நேரு... இளைஞர்களின் வாழ்வோடு விளையாடும் ஊழல் மாடல் அரசு!
அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர், ஓட்டுனர் உள்ளிட்டப் பணியிடங்களுக்கு தேர்வு எழுதி தகுதியானவர்கள் பலர் இருந்தாலும், லஞ்சம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு அளித்ததால்... தகுதி வாய்ந்த பல்வேறு இளைஞர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியானது.
இது குறித்த வழக்கு முன்னாள் அமைச்சர் திரு @V_Senthilbalaji மீது நடந்து கொண்டிருக்கும் நிலையி, தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை மறுத்து, பணம் கொடுத்தவர்களுக்கே வேலை என்ற லஞ்ச வேட்டை, முதல்வர் திரு ஸ்டாலின் தலைமையிலான ‘தகிடு தத்த மாடல்’ அரசின் இன்னொரு முக்கிய துறையிலும் அரங்கேறி இருக்கிறது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,538 பணியிடங்களுக்கு முதலமைச்சர் திரு ஸ்டாலின் கையால் பணி ஆணைகள் வழங்கப்பட்ட நிலையில், இதில் சுமார் 150 பணியிடங்களுக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் வரை லஞ்சம் வசூலிக்க பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தாகவும் கூறியுள்ளது அமலாக்கத் துறை.
ஏற்கனவே தகுதி வாய்ந்த இளைஞர்களின் வாழ்வாதாரத்தை பறித்த செந்தில்பாலாஜியை உச்சி முகர்ந்து மெச்சிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின்… இப்போது அதே வழியில் தகுதி வாய்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் லஞ்சம் கொடுத்தவர்களுக்கே வேலை என்று செயல்பட்டிருக்கிற திரு @KN_NEHRU அவர்களையும் உச்சி முகர்வாரா?
ஸ்டாலினின் ஊழல் மாடல் அரசு அமலாக்கத் துறையின் கடிதத்துக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
மாநில உரிமை என்ற உருட்டுகளை விரித்து தன் ஊழலை மூடி மறைப்பாரா? அல்லது தைரியமாக வழக்குப் பதிவு செய்து விசாரிப்பாரா?
தமிழக காவல்துறை இவ்வழக்கில் எப்போது FIR பதிவு செய்வார்கள்? அவ்வாறு பதிவு செய்தாலும் தகுந்த குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்படுமா?
தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் முதல்வர் திரு @mkstalin அவர்களே..!
மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ரவிக்குமார் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.
மாநில செயற்க்குழு கூட்டத்தில் இதை எதிர்த்து எங்கள் தலைவர் அண்ணன் விஜய் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்.
இந்த தீர்மானத்தை நான்தான் வாசித்தேன் நாடாளுமன்ற உறுப்பினரே!
@CheGuevaraOffi1 ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் தான் இந்த விசாரணை நடக்க போகுது. அத விமர்சனம் பண்றீனா, கோர்ட் தீர்ப்புல உள்நோக்கம் இருக்கிறதா நீ சொல்ல வர அதான.. இது contempt of court.. இவானா புடிச்சு உள்ள போடுங்க சார் @tnpoliceoffl
Dr. Shalini’s Fb post!💔
விஜய் இந்த வஞ்சகத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார். மனிதர்கள் எவ்வளவு சுயநலவாதிகள், தங்களின் சிறு ஆதாயத்திற்காக எவ்வளவு பெரிய அநீதிகளையும் கொஞ்சமும் தயங்காமல் செய்யும் கொடூரம் கொண்டவர்கள் என்பதை காலம் அவருக்கு காட்டி இருக்கிறது.
In all probability, he might be reeling in severe trauma response. அதுவும் அவர் மீது நடத்தப்படும் இந்த blame game, எப்பேற்பட்ட வீரனையும் freeze modeடுக்குள் தள்ளி விடும்!
இந்த ஆட்டமே உங்களை முடக்கத்தான் விஜய். நீங்கள் முடங்கினால், அது எதிராளிக்கு வெற்றி. உங்களுக்கு வலிக்க வலிக்க எங்களுக்காக வந்து தலையை காட்டி விடுங்கள் என்று மக்கள் கேட்பது கூட அவர்கள் சுயநலம் தான். மக்களுக்கு தேவை ஒரு saviour.
எல்லா saviourகளுக்கும் கதி ஒன்று தான்: புரட்சி ->நம்பிக்கை-> மக்கள் ஆதரவு-> துரோகம்-> சூழ்ச்சி ->வீழ்ச்சி -> மீட்டுருவாக்கம் -> மேல் நிலையாக்கம் -> தெய்வத்துள் வைத்தல்
இன்று நீர் சிலுவையில் அறையப்பட்டு உள்ளீர்.
நாளை என்ன நடக்கும் எனும் காட்சி மாறுதலுக்காக வழக்கம் போல மக்கள் காத்திருக்கிறார்கள். அந்த மந்தைக்கு ஒரு நல்ல மேய்ப்பன் அமையட்டும்.😭