நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam
படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் எனச் சொல்லிவிட்டு, மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களே,
இன்று மதுராந்தகம் Shooting-இல் உங்களின் Dialogue Delivery-யைப் பார்த்தேன். உங்களுக்குச் சில கேள்விகள்.
அ.தி.மு.க.வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சியின் வேட்பாளராக நிறுத்தி இருக்கும் மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க. தூய சக்தி, தி.மு.க. தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?
வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி MLA-க்களைத் தூக்குவதுதான் தூயசக்தியா? போகும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்கள் பெறும் வரவேற்பைப் பார்த்தீர்களா? “த.வெ.க.விடம் எவ்வளவு வாங்குனீங்க?” எனக் கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?
அடுத்து, தி.மு.க.வும் பா.ஜ.க.வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் ’பா.ஜ.க.’ என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராகவே இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யாரென Live-இல் பார்க்கும் மக்களுக்குத் தெரியாதா?
கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டம் நடத்தி இருக்கிறீர்கள்? பா.ஜ.க.வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?
“தி.மு.க. மாதிரி படிப்படியா, தகுதி வாய்ந்தவங்களுக்கு எனச் சொல்ல மாட்டேன். நடைமுறைக்குச் சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கேன்”- என அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ‘கஜானா காலி’ என அம்பி Mode-இல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றும் இலட்சணமா?
உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சி மட்டுமே!
நீங்களாகக் கொண்டு வந்த புதுமையான திட்டமெல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம்,
வெற்றி அரிவாள் வெட்டு திட்டம்,
வெற்றி விலைவாசி உயர்வு திட்டம்,
வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம்,
வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம்
இவ்வளவுதான்!
பெண்களைத் தி.மு.க.வினர் அவதூறாகப் பேசுகிறார்கள் எனப் பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ எடுத்துப் பாருங்கள்.
“ஜெம் வீரமணி வழக்கைப் பத்தி வாய திறங்க ஸ்டாலின் சார்”- என high pitch-இல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா என்ன? நான் விளக்கமாகப் பேசிவிட்டேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியைப் பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்!
இந்த வழக்கை அரசியல் ஆக்க கூடாது என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைக் கூடவா உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை?
கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக் கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, “எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்”- என்றுதான் நான் சொன்னேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ தி.மு.க.வோ முயலவில்லை.
ஆனால் நீங்கள் எந்த அளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதைச் சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள்.
அதனால், “முதலமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?” என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள் CM Sir.
1. VB-G Ram G திட்ட ஒப்புதல்
2. ஜல்சக்தியில் தனியாருக்கு குடிநீர் விநியோக உரிமை
3. வேந்தராக ஆளுநரே தொடர ஒப்புதல்
4. துணைவேந்தர் தேடுதல் குழுவில் UGC உறுப்பினருக்கு ஒப்புதல்
5. தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை நிராகரிப்பு
6. NEETக்கு எதிரான போராட்டத்தில் கள்ள மௌனம்
7. போராடிய மாணவர்களை கல்வி வளாகங்களுக்குள் புகுந்து அடித்து கைது செய்தது
8. விவசாயிகள் போராட்டத்தை அலட்சியப்படுத்துதல்
9. காவிரியில் தண்ணீர் இல்லை, கவலையும் இல்லை
10. 717 மதுபான கடைகள் மூடியதாக பச்சை பொய்
11. அரசு மதுபான கடைகளை தனியாருக்கு தாரை வார்த்தல்
12. மின் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்தி மக்களை முட்டாளாக்கியது
13. தொடர் லாக்அப் மரணங்கள், எண்ணிலடங்காத பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்…..
மூனு மாசம் தான் ஆச்சுங்க! இதெல்லாம் ஒரு பக்கம் கெடக்கட்டும். காலால நடக்குறாரு, cuteஆ இருக்குறாரு…எவ்வளவு முக்கியமில்ல? 😡💦
#வேசிஊடகங்கள்
#கதாநாயகவழிபாடு
#நாசமாகும்தமிழ்நாடு
ஏன் திமுக தமிழ்நாட்டிற்கு தேவை? 👇
தொடக்கப்பள்ளி முடிச்சுட்டு ஆறாம் வகுப்பு சேர பஸ் புடிச்சு போற மாதிரி இருந்தா மாணவர்கள் வர்றது கஷ்டம்
அப்போ எல்லா மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் கொடு.
ஐயா.. எட்டாம் வகுப்புக்குள் மாணவர்களை fail ஆக்குறனால இடைநிற்றல் அதிகமாகுதுங்கய்யா
அப்படியா அப்போ எட்டாவது வரைக்கும் all pass போடு.
பத்தாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்பு fail ஆகுற மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாம போகுது
சரி அப்படின்னா fail ஆகுற மாணவர்களுக்கு ஜூன், அக்டோபர் ல மறு தேர்வு நடத்து fail ஆன பாடத்த மட்டும் திரும்ப எழுதலாம்னு ரூல்ஸ் போடு.
பத்தாம் வகுப்பு முடிக்கிற மாணவர்கள் மேல்நிலை பள்ளில சேர கொஞ்சம் தூரம் போற மாதிரி இருக்குங்க
11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி கொடு.
12 ஆம் வகுப்பு முடிக்கிற மாணவர்கள் வறுமை காரணமா கல்லூரில சேர்க்கை விகிதம் குறைவா இருக்கு
அப்படின்னா கலை அறிவியல் கல்லூரியை ரெண்டு ஷிப்டா நடத்து அரை நாள் வேலை பாக்குறவன் அரை நாள் கல்லூரி வந்து படிக்கட்டும்.
மருத்துவம் பொறியியல் படிப்புகள்ல நுழைவுத்தேர்வு இருக்குறதால பின்தங்கிய குடும்ப மாணவர்கள் சேர்க்கை குறைவா இருக்கு
சரி நுழைவுத்தேர்வ ரத்து பண்ணு. 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படைல சேர்க்கை நடத்து.
அரசு கல்லூரில இடம் கிடைக்காம போற ஏழை மாணவர்கள் அதிக கட்டணம் இருக்கதால தனியார் கல்லூரிக்கு போக மாட்டேங்குறாங்க.
SC / ST மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணத்தையும் BC/MBC மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரியா இருந்தா பாதி கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்கும்னு சட்டம் போடு.. அதோட தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் அரசு ஸ்காலர்ஷிப் கொடுக்கும்னு சொல்லு.
தொழிற்கல்வி முடிச்சுட்டு வர்ற மாணவர்கள் மறுபடி பொறியியல் முதலாம் ஆண்டுல சேர்றதால ஒரு ஆண்டு வீணா போகுது.
சரி. தொழிற்கல்வி முடிச்சுட்டு வர்றவன் நேரடி இரண்டாம் ஆண்டு சேரலாம்னு திட்டம் போடு.
இவ்ளோ செஞ்சும் இன்னும் சிலர் உயர்கல்விக்கு வரல..
அப்படியா அப்போ புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் எல்லாம் கொண்டு வந்து மாதம் ஆயிரம் ரூபாய் கொடு..
எல்லோருமே படிக்குறாங்க.. ஆனா சரியா வேலை வாய்ப்பு கிடைக்கலையாம்..
அப்படியா அப்போ நான் முதல்வன்னு திட்டம் கொண்டு வா.. எல்லோரையும் தொழில் வாய்ப்புக்கு தயார் செய்வோம்..
எந்தெந்த துறைகளில் வேலை வாய்ப்புன்னு தெரியாம படிச்சதா சொல்றாங்க..
அப்படியா அப்போ கல்லூரி கனவு திட்டம் கொண்டு வா.. +2 முடுச்சுட்டு என்ன படிப்பு படிக்கணும்ன்னு அவனே முடிவு பன்னட்டும்..
தமிழ்நாட்டோட கல்வி கட்டமைப்பு பாத்து பாத்து கட்டமைக்கப்பட்டது அதோட முக்கிய சிற்பி திமுக..
இன்றைக்கு தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சியின் முழு காரணம் திமுக...
அவனுங்க படம் நல்லா இல்லைனாலே accept பண்ணிக்க மாட்டானுங்க ஆட்சி நல்லா இல்லைனு சொன்னா மட்டும் accept பண்ணிப்பானுங்களா
நம்ம இவன expose பண்றது தற்குறிகள் அல்லாத common audienceக்கு
பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும் வாழ்த்துகள்! 💐
95.2% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். @Anbil_Mahesh அவர்கள் தொடர்புகொண்டு, சென்ற ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று பெருமிதத்தோடு கூறியபோது, பெருமகிழ்ச்சி அடைந்தேன்.
மாணவச் செல்வங்கள், வாழ்வில் மேன்மையடைய மேற்படிப்புகளில் மேலும் கவனம் செலுத்திப் படியுங்கள். இத்தேர்வில் இம்முறை தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம்; உங்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுங்கள்!
கல்வியே வாழ்வின் வெற்றிக்குத் துணை!
#12thResults #ExamResult
இனி ஒரு உயிரும் போக வேண்டாம்!
இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தின்போது உணர்ச்சிவயப்பட்டு இரயில் முன் பாய்ந்த சகோதரர் திரு. சிவா திலீபன் அவர்கள் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது மனதைக் கனக்கச் செய்கிறது.
மொழிப்போரில் நாம் ஈந்த உயிர்ப்பலிகள் போதும்! இனி ஒரு உயிரும் போகக் கூடாது! தொழில்நுட்பத்தின் உதவியால் பல புதுமையான, அமைதியான, பெரும் வீச்சு கொண்ட போராட்ட வழிமுறைகளைப் பெற்றிருக்கிறோம்!
இந்தித் திணிப்பை நம் மதிநுட்பத்தாலும் மனவுறுதியாலும் தமிழ்ப்பற்றாலும்தான் வீழ்த்த வேண்டும்! இப்போரில் நம் உயிர் வீழக்கூடாது. நம்மைப் போன்ற தமிழ் மறவர்கள் வீழ்ந்துபோனால் தாய்த்தமிழ் எங்ஙனம் வாழும் எனச் சிந்தியுங்கள். நம் உணர்ச்சிகளைக் காட்ட வேறு வழிகள் உள்ளன, உயிர்த்தியாகம் வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
சகோதரர் சிவா திலீபன் அவர்களை இழந்து வாடும் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட மே 17 இயக்கத்தினருக்கும் - தமிழுணர்வு கொண்ட அவரது இரண்டு மகள்கள் மற்றும் துணைவியார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்குகிறேன்.
#StopHindiImposition #SaveTamilLives
இந்தியாவுக்கே முன்னோடியாக "முதன் முதலாக" தி.மு.க அரசு செயல்படுத்திய திட்டங்கள்!
🖤❤️
1969 / பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 🔽
1969 = தமிழ்நாடு = மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
1993 = இந்தியா = தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
1969 / மாநில - ஒன்றிய அரசு அதிகாரப் பகிர்வு குறித்த ஆய்வு 🔽
1969 = தமிழ்நாடு = மாநில - ஒன்றிய அரசு அதிகாரப் பகிர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு
1983 = இந்தியா = மாநில - ஒன்றிய அரசு அதிகாரப் பகிர்வு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சர்க்காரியா ஆணைக்குழு
1970 / குடியிருப்பு திட்டம் 🔽
1970 = தமிழ்நாடு = நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்)
1985 = இந்தியா = இந்திரா வீட்டு வசதித் திட்டம் (Indira Awas Yojana)
1971 / பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு 🔽
1971 = தமிழ்நாடு = பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
2021 = இந்தியா = பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
1989 / பெண்கள் வாரிசுரிமை சட்டம் 🔽
1989 = தமிழ்நாடு = இந்து பெண்கள் வாரிசுரிமை சட்டம்
2005 = இந்தியா = இந்து பெண்கள் வாரிசுரிமை சட்டம்
1989 / அரசு வேலைகளில் பெண்கள் இட ஒதுக்கீடு 🔽
1989 = தமிழ்நாடு = அரசு வேலைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
2021 = இந்தியா = அரசு வேலைகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
1989 / மகளிர் சுய உதவிக் குழு 🔽
1989 = தமிழ்நாடு = மகளிர் சுய உதவிக் குழுக்கள்
1992 = இந்தியா = மகளிர் சுய உதவிக் குழுக்கள்
1996 / உள்ளாட்சி யில் பெண்கள் இட ஒதுக்கீடு 🔽
1996 = தமிழ்நாடு = உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
2009 = இந்தியா = உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு
1998 / பெண்கள் பாதுகாப்பு சட்டம் 🔽
1998 = தமிழ்நாடு = பெண்கள் பாதுகாப்பு சட்டம் (Tamil Nadu Prohibition of Eve-Teasing Act)
2013 = இந்தியா = பெண்கள் பாதுகாப்பு சட்டம் (Sexual Harassment of Women at Workplace Act)
2007 / எரிவாயு திட்டம் 🔽
2007 = தமிழ்நாடு = இலவச எரிவாயு அடுப்பு மற்றும் இலவச எரிவாயு இணைப்பு திட்டம்
2016 = இந்தியா = இலவச எரிவாயு இணைப்பு திட்டம் (Pradhan Mantri Ujjwala Yojana)
2008 / திருநங்கையர் நலன் 🔽
2008 = தமிழ்நாடு = திருநங்கையர் நல வாரியம்
2020 = இந்தியா = திருநங்கைகள் தேசிய கவுன்சில்
2009 / மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 🔽
2009 = தமிழ்நாடு = கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்
2018 = இந்தியா = மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Jan Arogya Yojana)
2026 / கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி 🔽
27 ஜனவரி 2026 = தமிழ்நாடு = கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
28 பிப்ரவரி 2026 = இந்தியா = கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி
எங்களுக்கு மோதிலால்நேருவைத் தெரியும்!
ஜவகர்லால் நேருவைத் தெரியும்! இந்திராகாந்தி, இராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன்சிங், காமராசர் இவர்களையெல்லாம் தெரியும்!
இவன் யார் கிரீஷ் சோரம்போனவன்... சாரி... கிரீஷ் சோடங்கர்!
தொண்டர்கள் மேலே ஏறிவிடாமல், கம்பிகளில் கீரீஸ் தடவிய கட்சியிடம் சோரம்போன பொறுக்கியைப் போலவே, பிதற்றிக்கொண்டேயிருக்கின்றானே இவன் யார்?
இவனைப் போன்றவர்களால்தான் காங்கிரஸ் அதளபாதாளத்தில் அமிழ்ந்து கிடக்கிறது!
"ஆதரித்தாலும் உறுதியாக ஆதரிப்பார்கள்; எதிர்த்தாலும் உறுதியாக எதிர்ப்பார்கள்" என்று திமுகவின் அரசியல் காத்திரத் தன்மையை வியந்து இந்திரா காந்தியே மெச்சி பேசிய வரலாறு தெரியுமா இவனுக்கு?
காங்கிரசிற்குள்ளேயே சோனியா பிரதமராக எதிர்ப்பு எழுந்தபோதும், சோனியாதான் பிரதமர் என்று முதன்முதல் கை உயர்த்தியது திமுகதான் என்பதாவது தெரியுமா இவனுக்கு?
பப்பு ராகுல் என்று பாஜக பரிகாசம் பேசிய போது, குமரி முனையிலிருந்து பேரணியை துவக்கி வைத்து, ராகுலுக்கு அரசியல் லுக்கை அளித்தது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதாவது தெரியுமா இவனுக்கு?
ரொம்ப ஓவரா ஆடுராண்டா இந்த சோடங்கர்....!
டப்பாடி பழனிசாமி தன் மாநாடு ல பாஜக சொன்ன ஒரே காரணத்துக்காக பெரியார் படத்த எடுத்தாங்க இப்போவர அதிமுக கூட்டணி னு சொல்ல முடில அந்த அளவுக்கு தான் அடிமையா இருக்காங்க
அப்டியே திமுக பக்கம் பாத்தா சமரசம் இல்லாம ஒன்றிய அரசு கிட்ட சண்ட செஞ்சிட்டு தான் ஆட்சி நடத்துறாங்க INDIA கூட்டணி னு தேசிய கூட்டணி இருந்தாலும் தமிழ்நாட்டுல திமுக தலைமையிலான கூட்டணி தான் வச்சிருகாங்க
இதான் இரண்டு கட்சிக்கும் ஏன் அடிமைக்கும் ஆளுமைக்கும் உள்ள வித்தியாசம் னு சொல்லலாம்
திமுக ஆட்சில தான் ஒன்றிய அரசுகிட்ட மாநிலத்தை அடகு வைக்காம கல்வி, விவசாயம், வேலைன்னு நம்ம வாழ்வாதாரத்துல மாநில சுயாட்சி உரிமையை கடைப்பிடிச்சி காட்டிருகாங்க.
இதுவே போதும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தா அடுத்த தலைமுறைக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு உருவாகும். அதனால்.
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#வெல்வோம்_ஒன்றாக
தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்!
அவற்றைக் காப்பது நம் கடமை!
உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.
தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.
அந்த உறுதியோடுதான், #DravidianModel-இல் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.
கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!
தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது!
சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன்.
இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!
ஒபிஎஸ் வருகையால் என்ன பயன் என சிலர் கேட்கிறார்கள்.
இவரால் இரண்டு பலன்கள் கிடைக்கலாம்.
முதல் பலன்:
பிஜேபியோடு கூட்டணி சேர்ந்தாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட இவருக்கு பாலப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்ட பதினைந்தே நாட்களில் ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ராமநாதபுரம் நாடளுமன்ற தொகுதி முழுவதும் சேர்த்து கிட்டத்தட்ட 3,50,000 வாக்குகளுக்கு மேல் பெற்றவர் ஒபிஎஸ்... இவர் எப்படி இவ்வளவு வாக்குகளை பெற்றார் என்பதில் இருப்பதுன் அரசியல் சூட்சமம்.
அதாவது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு சுமார் 50,000 வாக்குகளை பெற்றவர் ஒபிஎஸ். அதுவும் தனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ராமநாதபுரம் நாடளுமன்ற தொகுதியில் இவ்வளவு வாக்குகளை பெற்றிருக்கிறார் இவர்.
இரண்டாவது பலன்.
இவரை வைத்து இன்னொரு மறைமுக ஆட்முமும் திமுக ஆடலாம். நீட் தேர்வு, மின் கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்தில் கையெழூத்திட்டது,
வட மாநிலத்தவர்க்கும் தமிழ்நாடு அரசு பணி செய்ய தேர்வு எழுத அனுமதித்தது..என அப்போதைய இத்தனை தவறுகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் யார் காரணம் என ஒபிஎஸ் வாயலேயே இனி சொல்ல வைக்கலாம்..
மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.
நல்வரவு ஒபிஎஸ்...🙏