நியாயப்படி, கடந்த ஆட்சியில பல கோடி ஊழல் செஞ்ச அரசியல்வாதிகளுக்கு தானே இந்த ஆட்சியில நடக்குற ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளை பார்த்து பயத்துல Panic attack வரனும்!! 🤔
அவர் கடந்த வருடங்களில் வேறுபல காரணங்களால் அதிக மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார்... அதிலிருந்து மீண்டு வந்தவர்.. இப்போது TVK ஆட்சியில் செயல்பாடுகளால் தான் தனக்கு Panic Attack வந்துள்ளது என்கிறார்..
TVK ஆட்சியின் செயல்பாடுகளால்தான் Panic Attack ஆச்சின்னு (கம்யூனிச பெண்ணியவாதின்னு சொல்லிக்கிற கொற்றவை) சொல்றது, ஒருவகையில் அவர் பலவீனமான மனநிலையில் இருக்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.
சர்வாதிகார பாசிச ஆட்சி நடப்பது போல கற்பனை செய்துகொண்டு மனஅழுத்தத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்.
பாட்டாளி வர்க்க விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தெருக்களில் இடதுசாரி கொள்கை பாடல்களை பாடிய பாவலர் சகோதரர் இளையராசா மீது மதுரை காம்ரேட் நிகழ்ததிய தீண்டாமை .....அவ்வளவுதான்
கம்யூனிசம் . "லால் சலாம்" (@Tndalitpanthers
சாதியத்தால் ஒடுக்கப்படும் தலித்துகள் என்னதான் சாதிக்கு எதிராக காலம் காலமாக போராடினாலும்.. சாதி ஒழிப்பு என்பது சாதி இந்துக்களின் கையில்தான் உள்ளது.
சாதியை ஒழிக்க மனமில்லாமல் சாதி எதிர்ப்பு தலித் அமைப்புகளை பார்த்து ஏன் சாதியை ஒழிக்கவில்லை என்று கேட்பது அபத்ததிலும் அபத்தம்.
சக மனிதர்களை உயிர் உணர்ச்சியற்ற கற்சிலைபோல் வேடமிட வைப்பது மனிதாபிமானமற்ற செயல். எளியோரை ஜடப்பொருளாக நினைக்கும் முதலாளித்துவ அதிகார மனப்பான்மையையே இது வெளிப்படுத்துகிறது.
திராவிட அரசியல் பேசும் குடும்பத்திலிருந்தே இது வெளிப்படுவதுதான் விமர்சனத்திற்குரியது. முகமூடிகள் அவிழ்கிறது
மிகத்தெளிவான விளக்கம் 👌
இப்ப புரியுது, ஏன் டாஸ்மாக் ஊழியர்கள் எல்லாம் புரட்சி மோடுக்கு போனாங்கன்னு.
இது மாதிரி தான் சின்ன சின்னதா கோடிக்கணக்கில கொள்ளையடிச்சுட்டு இருக்காங்க போல.
பேசாம சரக்கு விற்பனையை தனியார் மயமாக்குங்க.
@Arunan22 அரசு துறைகள் தான் மந்தமாக ஊழல் நிறைந்ததாக வருமான இழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது... முக்கிய துறைகளை தவிர மற்றதை (அரசால் முறையாக நடத்தமுடியாததை) தனியாருக்கு கொடுப்பதில் எந்த தவறும் இல்லை..
இத்தனை ஆண்டுகாலம் அரசு துறைகளை சரியாக பராமரிக்காதது யார் தவறு!
@sr69432243@Dam61187959 இல்லவே இல்லை.. நான் கூறிய எந்த மதக் கோட்பாட்டிலும் சாதி இல்லை... சாதிக்கு அடிப்படை இந்து மதத்தின் வர்ணாசிரம தர்மமே... குறைந்தபட்சம் அனைத்து மதங்களின் அடிப்படை கோட்பாடுகளை புரிந்துகொள்ளவும்..
மதம் மாறுவது என்பது சுயமரியாதையின் வெளிப்பாடு, எதிர்ப்பின் அடையாளம்
சோஷலிச புரட்சி தான் தீர்வு அது ஏற்படும்வரை சுயமரியாதை இழந்து சாக்கடையில் உருண்டு கிடங்கள் என்பதுதான் உங்களை போன்றவர்களது எண்ணம்போலும்
சாதி என்பது அவர்ணர்களுக்கு இல்லை - சவர்ணர்கள்தான் வர்ணத்தை கடைபிடிப்பவர்கள்.
சாதி ஒழிப்பு அரசியலைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, அரசியல் என்றால் என்னவென்றாவது புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கட்சியின் அலுவலகத்தில் எத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடந்தன என்பதைக் கணக்கிட்டு, அந்தக் கட்சிக்குச் சாதி ஒழிப்பு அரசியலில் தகுதியே இல்லை என்று முடிவெடுப்பதற்கு என்ன அரசியல் அறிவு தேவைப்படுகிறது?
சாதி என்பது திருமண உறவுகளில் மட்டும்தான் உயிர்வாழ்கிறதா? நிலம், அதிகாரம், பொருளாதாரம், கல்வி, சமூக உறவுகள், அரசியல் பிரதிநிதித்துவம் எனச் சாதி ஆதிக்கம் இயங்கும் அனைத்துத் தளங்களிலும் போராட வேண்டியிருக்கிறது.
அவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, ஒரு இயக்கத்தின் அலுவலகத்தில் திருமணம் நடத்தினார்களா இல்லையா என்ற கேலிக்கூத்தை அரசியல் விமர்சனமாக முன்வைப்பது அறிவார்ந்த விவாதமல்ல; விசிக மீதான அரசியல் வன்மத்தின் வெளிப்பாடு ( குத்தூசி போன்ற நாய்களுக்கு விசிகவின் மீது வன்மம் இல்லையென்றால் தான் ஆச்சர்யபடவேண்டும் )
விசிகவை விமர்சிக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதன் செயல்பாடுகளைக் கேள்வி கேளுங்கள். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். ஆனால் சாதி ஒழிப்புக்காகத் தொடர்ந்து களமாடும் ஓர் இயக்கத்தின் அரசியலையே சிறுமைப்படுத்திவிட்டு, தங்களை மட்டும் சாதி ஒழிப்பின் ஏகபோகக் குத்தகையாளர்களாகக் காட்டிக்கொள்ளாதீர்கள்.
சாதி ஒழிப்பு அரசியலைத் தங்களுடைய ஏகபோக உரிமையாகக் கருதிக்கொண்டு, அம்பேத்கரிய இயக்கங்களின் அரசியல் செயல்பாடுகளைத் தொடர்ந்து சிறுமைப்படுத்தும் இந்தப் போலி முற்போக்கு மனநிலையைத்தான் முதலில் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
விசிகவை விமர்சிக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் விசிகவைச் சிறுமைப்படுத்துவதன் மூலம் உங்கள் முற்போக்கு வேடத்தை நிரூபிக்க முடியாது. சாதி ஒழிப்புப் போராட்டத்தில் யார் உண்மையாகக் களத்தில் நிற்கிறார்கள் என்பதை உங்கள் கேலிச்சித்திரங்கள் தீர்மானிக்காது; அவரவர் அரசியல் செயல்பாடுகள்தான் தீர்மானிக்கும்!
சாதி ஒழிப்பு என்பது திருமணங்களை நடத்தி வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டு வேலை அல்ல. அது சாதிய அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும், ஒடுக்குமுறையையும் எதிர்த்து நடத்தப்படும் நீண்டகால அரசியல் போராட்டம்.
அந்த அரசியலைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், முதலில் தங்களுடைய அரசியல் புரிதலுக்கு ஒரு சுயவிமர்சனம் செய்துகொள்ளட்டும்!
#அறிவோம்போலிகம்யூனிஸ்ட்களை
#அறிவோம்போலிமுற்போக்கு
#ExposeFakeCommunists
இவ்வளவு வியாக்கியானம் பேசும் கம்யூனிஸ்ட்களிடம் இந்தியாவில் உள்ள சாதிய பிரச்சனைக்கு என்ன தீர்வு இருக்கிறது?
பொத்தாம் பொதுவாக எல்லா பிரச்சனைகளுக்கும் சோஷலிச புரட்சி ஒன்றே தீர்வு என்பார்கள்.. சரி சாதிகளாக பிரிந்திருக்கும் சமூகத்தில் சோஷலிச புரட்சி எப்படி சாத்தியம்!!
சாதியை கொண்ட மதத்தை விட்டு அவர்ணர்கள் வெளியேறி மதம் மாறினால் சவர்ணர்கள் நக்கலாக கேட்கிறார்கள் இதனால் சாதி ஒழிந்து விட்டதா என்று...
யார் சாதி பார்க்கிறார்களோ யாரிடம் சாதி உள்ளதோ அவன் தானே அதை விட்டொழிக்க வேண்டும்! சாதி ஒழிப்பு சவர்ணர்களிடமிருந்தே தொடங்க வேண்டும்..